Ads Right Header

TNPSC தேர்வுகளில் கடந்த 10 ஆண்டுகளில் தேர்வர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள்!

 



1. முறையாக பின்பற்றாத PSTM ACT 2010


2. பெண்களுக்கு அளிக்கப்பட்ட 30% பாலின ரீதியான இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட பாதிப்புகள்


3. காலதாமதமாக வெளியிட்ட தேர்வு அறிவிப்புகள் ,தேர்வு முடிவுகள்


4. கடந்த பத்தாண்டுகளில் ஆறு முறை மட்டுமே நடைபெற்ற குரூப் 1 தேர்வு


5. வருடம்தோறும் வெளியிடப்படாத ஆண்டு அட்டவணை Annual planner


6. வருடந்தோறும் அறிவிக்கப்படாத குரூப்2  தேர்வுகள்


7.குரூப் 1 ,2 முதன்மைத் தேர்வுகள் ஆங்கில வழியில் எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை அளிப்பது போல அதிக மதிப்பெண்கள் அளித்தது. தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சொற்ப மதிப்பெண்கள் மட்டும் வழங்கி பெரிய பதவிகளுக்கு ஆசைப்பட வேண்டாம் என்று சோலியை முடித்து அனுப்பியது.


8. Final Answer Keys உடனடியாக வழங்காதது


9. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் போட்டித் தேர்வர்களின் நம்பிக்கையை நிலைகுலையச் செய்த குரூப் 4 விடைத்தாள் முறைகேடு, குரூப் 1 தேர்வு முறைகேடு, குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்


10. குரூப் 2 தேர்வை பொருத்தவரையில் நிலையான தேர்வு முறை பின்பற்றாதது.


2012-Objective Mains


2013-Prelims,Mains(objective+Descriptive)


From

2015- Prelims+Mains(Descriptive only)


2019-20

New Group2 syllabus and New pattern


மீண்டும் தேர்வர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு

மீண்டும் தேர்வு முறை  மாற்றம்.


உண்மையை சொல்லப்போனால் தற்போதுவரை குரூப் 2 தேர்விற்கு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை எப்படி செயல்படுத்த உள்ளது என்பது பற்றிய தெளிவான அறிவிப்பு இல்லை.


மேற்சொன்ன பாதிப்புகளால் பல திறமையான மாணவர்கள் திறமையும் தகுதியும் இருந்தும் காலத்தின் கொடுமையால் சூழ்நிலையால் பெரிய பதவியில் அமர வாய்ப்பில்லாமல் போனது.


ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள பாதிப்புகளில் அரசு சிறிதுசிறிதாக கவனம் செலுத்தி பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்துள்ளது. ஆனால் அதற்கு அரசு எடுத்துக்கொண்ட காலமோ சுமார் பத்தாண்டுகள்.


தற்போது ஒரு சில குறைகளைத் தவிர தேர்வாணையத்தின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளது.


மேலும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை ,அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி மாணவர்களுக்கு முன்னுரிமை, மருத்துவம் ,பொறியியல் என தொழில் கல்வி படிப்புகளில் முன்னுரிமை என அரசு பல்வேறு திட்டங்களை சட்டங்களை இயற்றி சமூக நீதியை நிலை நாட்டுகிறது.


கீழே குறிப்பிடக்கூடிய இந்தக் குறைகளை மட்டும் நிவர்த்தி செய்து தமிழ்நாடு அரசு மற்றும் தேர்வாணையம்  மாணவர்களின் குறைகளை விரைந்து போக்கும் என்று நம்புகிறேன்.


1.Equal Justice for Men In Tnpsc

2. Equal Justice for Tamil Medium students 


1. முறையாக பின்பற்றாத PSTM ACT 2010 பற்றி பார்ப்போம்


தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை

அரசின் கீழ் வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம்(Person Studied in Tamil Medium Act) 2010ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசால் இயற்றப்பட்டது.


இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் கிராமப்புறங்களில் ஆங்கில வழியில் கல்வி பயில முடியாத ஏழை எளிய மாணவர்களுக்கு அரசு பணிகளில் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதாகும்.


ஆனால் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப்2 தேர்வுகளில் இந்த பத்தாண்டு கால கட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் முழுவதும் ஆங்கில வழியில் பயின்று இந்த இட ஒதுக்கீடு சலுகை பெறுவதற்காக தொலைதூரக் கல்வியில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை பயின்றோ அல்லது பட்டத்தை காசு கொடுத்து வாங்கியோ பல நபர்கள் அரசு பணியில் அமர்ந்துள்ளனர்.


கடந்த 10 ஆண்டு காலமாக இதனால் உண்மையான ஏழை எளிய தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்பு அடைந்தனர்.


இதனை அரசின் கவனத்திற்கு போட்டித் தேர்வு மாணவர்கள் கொண்டு சென்று போராடி  தற்போது தான் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு சட்டத்தில் தமிழ்நாடு  அரசனது திருத்தம் கொண்டுவந்து சமூகநீதியை காத்துள்ளது.


 இந்த சட்டத்திருத்தம் கொண்டுவர போட்டித்தேர்வு ஆசிரியராக மாணவராக போட்டித் தேர்வர்களின் நண்பராக எங்களது பங்களிப்பும் இருந்தது என்பதில் பெருமை கொள்கிறோம்.


எனவே போட்டித் தேர்வு மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் தேர்வாணையத்தின் 99%குறைகள் களையப்பட்டு விட்டன. தற்போது உள்ள மாணவர்களின் குறைகளும் அரசு மற்றும் தேர்வாணையம் கவனத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் என்று கருதுகிறேன்.


எனவே பெண்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ள அரசின் அறிவிப்பால் ஆண் தேர்வர்களுக்கு ஏற்படும் பாதிப்பை  தற்போது சமூக வலைதளம் ,டிவி விவாதம் என பல்வேறு ஊடகங்களின் மூலம் அரசு மற்றும்  தேர்வாணையம் பார்வைக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.


எனவே பெண்களுக்கான இட ஒதுக்கீடு உயர்வு அறிவிப்பை கண்டிப்பாக அரசு திரும்ப பெறும் என்று நம்புகிறேன்.


போட்டித் தேர்வு மாணவர்கள் எந்தவிதமான கவலையும் இன்றி பயமும் இன்றி தேர்விற்கு தயாராகும் படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நல்லதே நடக்கும்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY