Ads Right Header

இந்திய அரசியலமைப்பின் முகவுரை!

 


  • முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும்.
  • முகவுரை அரசியலமைப்பின் தொகுப்பாகவும் அதன் சாரமாகவும் உள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, பண்டித ஜவஹர்லால் நேருவால் டிசம்பர், 13 1946-ல் முன்மொழியப்பட்டு, ஜனவரி 22, 1947-இல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘குறிக்கோள் தீர்மானத்தை’ அடிப்படையாகக் கொண்டு எடுத்தாளப் பெற்ற ஒன்றாகும்.
  • இந்திய அரசியலமைப்பு முகவுரையைக் கொண்டே தொடங்குகிறது.
  • அமெரிக்க அரசியலமைப்புச் சட்டமே முதன் முதலில் முகப்புரையைக் கொண்டு தொடங்கியது.
முகப்புரை
  • இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும்
  • சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும்,
  • சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும்,
  • தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும்,
  • உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிக்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு,

1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசியலைப்புக் பேரவையில்,ஈங்கிதனால், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.

 முகவுரையின் முக்கிய கலைச் சொற்கள் 
  • Sovereign – இறையாண்மை – முழவதும் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, யாருக்கும் உட்படாத தன்மை; மேலும் இதற்கு மேல் உயர்ந்த அமைப்பு இல்லை.
  • Socialist – சமதர்மம் – இவ்வாசகம் 1976-ஆம் ஆண்டு 42-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் வாயிலாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
  • Secular – மதச்சார்பின்மை – 42-ஆவது சட்டத் திருத்தம் (1976) மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்டது. (பிரிவு 25 – 28)
  • Democratic – மக்களாட்சி – மார்க்சியம் மற்றும் காந்திய சமதர்ம கொள்கைகளை கொண்டது.
  • Justice – நீதி – சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதி
  • Liberty – உரிமை, சுதந்திரம் – சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம் மற்றும் வழிபாடு
  • Equality – சமத்துவம் – தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில்
  • Fraternity – சகோததரத்துவம் – தனி ஒருவரின் மாண்பிற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும்.
முகவுரையின் முக்கியத்துவம்
  • அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் எந்நோக்கத்திற்காக அதனை இயற்றினார்கள், அதன் மூலம் அடைய விரும்புகிற அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார சூழல்கள் பற்றிய குறிப்புகளை முகவுரை பகிர்கிறது.
  • யு. பால்கிவாலா- அரசியலமைப்பின் அடையாள அட்டை
  • மு.ஆ. முன்ஷி – நம் இறையாண்மையுடைய மக்களாட்சிக் குடியரசின் ஜாதகம்.
  • சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் – எங்கள் நீண்ட நாள் சிந்தமையும் கனவையும் உள்ளடக்கியது.
அரசியலமைப்பின் ஒரு பகுதி – முகவுரை 
  • அரசியலமைப்பு வரலாற்றில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியா என்பது குறித்த சிக்கல்கள் எழுந்தன.
  • பெரும்வாரி வழக்கில் (1960), உச்சநீதிமன்றம், முகவுரை, அரசிலமைப்பின் பகுதி அல்ல என்று தீர்ப்பளித்தது.
  • ஆனால் பின்னால் வந்த கேசவனந்த பாரதி வழக்கில் (1973), முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என்று தீர்ப்பளித்தது.
  • பின்னால் நடந்த எல்.ஐ.சி. வழக்கிலும் (1995) இதே தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
  • அரசியல் நிர்ணய சபையின் தலைவரும் இதே கருத்தைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஆனால் இரண்டு விஷயங்கள் குறிப்படத்தக்கன
  • முகவுரை சட்டமியற்றுவதற்கான அதிகார மூலம் அல்ல் மேலும், சட்டமியற்றுவதை தடை செய்யும் சாரத்தையும் உள்ளடக்கியதல்ல.
  • இது நீதி மன்றங்கள் மூலம் நிறைவேற்றப்படக்கூடிய சட்டம் அல்ல.
முகவுரையும் சட்டத்திருத்தமும்
  • கேசவானந்த பாரதி வழக்கில் (1973) முகவுரையை திருத்தம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
  • உச்சநீதிமன்றம் முகவுரையை திருத்தம் செய்ய முடியுமென்றும், மேலும் அவ்வாறு திருத்தம் செய்கையில் அரசியலமைப்பின் ‘அடிப்படைக் கூறுகளுக்கு (டியளiஉ கநயவரசநள) பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியது.
  • இதைப் பின்பற்றி 1976-ஆம் ஆண்டு 42-ஆவது சட்டத் திருத்தம்,“சமதர்மம், சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு” ஆகிய மூன்று சொற்களை முகவுரையில் சேர்த்தது.

 

 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY