Ads Right Header

இந்திய பாராளுமன்றம் பாராளுமன்றம்!

 



அரசியலமைப்பு சட்டம் சரத்து 79 முதல் 122 வரை பாராளுமன்றத்தின் அமைப்பு, ஒன்று சேர்த்தல், பணிக்காலம், அலுவலர்கள், கோட்பாடுகள், சிறப்புரிமைகள், அதிகாரம் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. இது பகுதி – ஏ ல் அமைந்துள்ளது.
அமைப்பு
அரசியலமைப்பின் படி பாராளுமன்றமானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
1. குடியரசுத்தலைவர்
2. மக்களவை
3. மாநிலங்களவை

  • குடியரசுத்தலைவர் பாராளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கமாவார். ஏனெனில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அது சட்டமாகும்.
  • குடியரசுத் தலைவரின் பாராளுமன்றம் தொடர்பான செயல்பாடுகளில் இரு அவைகளையும் கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது மக்களவையை கலைப்பது, இரு அவைகளிலும் உரையாற்றுவது மற்றும் அவைகள் கூடாதபோது அவசரச் சட்டங்களை பிறப்பிப்பது போன்றவை அடங்கும்.
  • மக்களவை மற்றும் மாநிலங்களவையும் ஒருங்கிணைந்து பாராளுமன்றமாக செயல்படுகிறது.
மாநிலங்களவை
  • அரசியலமைப்பின் நான்காவாது அட்டவணையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
  • நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை – 250
  • தற்போதைய எண்ணிக்கை – 245
  • மாநிலங்கள் – 29
  • யூனியன் பிரதேச உறுப்பினர்கள் – 4
  • நியமன உறுப்பினர்கள் – 12
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவம்
  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மறைமுக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • சரத்து 80(3)ன்படி குடியரசுத் தலைவர் இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பான அறிவும் அனுபவமும் கொண்ட 12 உறுப்பினர்களை நியமிக்கின்றார் என்று ஷரத்து 80(3) கூறுகிறது.
  • 7 யூனியன் பிரதேசங்களில் இரண்டில் மட்டும் (டெல்லி மற்றும் பாண்டிச்சேரி) மாநிலங்களவைக்கு பிரதிநிதித்துவம் உள்ளது.
  • இதர 5 யூனியன் பிரதேசங்களில் மக்கள்தொகை மிக குறைவாக இருப்பதால் அவற்றிற்கு மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை.
மக்களவை (சரத்து 81)
  • அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 550 + 2 = 552.
  • இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • சரத்து 331-ன் படி ஆங்கிலோ இந்தியன் சமூகத்தைச் சார்ந்த 2 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
மக்களவை தேர்தல் முறை
  • மக்களவை உறுப்பினர்கள் மாநிலங்களில் மற்றும் யூனியன் பகுதிகளில் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட தொகுதிகளில் உள்ள 18-வயது பூர்த்தியான குடிமக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • அறுபத்தி ஒன்றாவது அரசியலமைப்பு சீர்த்திருத்தச் சட்டம் 1988 வயது வந்தோர் வாக்குரிமையை 21ல் இருந்து 18ஆக குறைத்தது.
நில அடிப்படையிலான தொகுதிகள்
  • மக்களவை உறுப்பினர்களை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக மாநிலங்களை நில அடிப்படையிலான தொகுதிகளாக அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
  • மேலும் ஒவ்வொரு மாநிலங்களும் அதன் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட தொகுதிகளை கொண்டுள்ளன.
  • ஒவ்வொரு மாநிலமும் நில அடிப்படையில் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களின் தொகுதிகளுக்கு இடையேயும் மக்கள் தொகை விகிதாச்சாரம் சீராக இருக்குமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
  •  ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்பும் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்றவாறு தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
  • அதன் அடிப்படையில் 1952, 1962, 1972, 2002ல் மறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
  • 1976-ல் 42-வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மக்களவை தொகுதியை 1971-ம் ஆண்டு மக்கள் தொகையின் படி 2000-ம் ஆண்டுகளை மாற்ற இயலாது என்று கூறியது.
  • ஆனால் 2001-ல் 84 வது அரசியலமைப்பு திருத்தம் 1991-ம் ஆண்டு மக்கள் தொகைப்படி உள்ள மக்களவை தொகுதிகளை 2026 ஆண்டு வரை மாற்ற இயலாது என்றது.
  • இதில் 2003-ம் ஆண்டில் 87-வது திருத்தம் மூலம் 1991-ம் ஆண்டு மக்கள் தொகை என்பதிற்கு பதிலாக 2001-ம் ஆண்டு மக்கள் தொகை என மாற்றப்பட்டது.
உறுப்பினராவதற்கான தகுதிகள்
  • நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உறுப்பினர் ஆவதற்குரிய தகுதிகளை ஷரத்து 83 கூறுகிறது.
  • ஒரு நபர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • மாநிலங்களவைக்கு உறுப்பினராக வேண்டுமானால் 30 வயது நிறைந்தவராகவும், மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட 25 வயது நிறைந்தவராகவும் இருக்க வேண்டும்.
  •  கூடுதல் தகுதிகள் பிற சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப்படலாம்.
உறுப்பினர் தகுதியிழப்பு
  • ஒருவர் இந்தியக் குடிமகனாக இல்லை என்றாலும் அல்லது ஏதேனும் வெளிநாட்டுக்கு விசுவாசியாக இருந்தாலும், அமைச்சர் பதவி அல்லது சட்டத்தால் விலக்களிக்கப்பட்ட பதவியைத் தவிர மத்திய அரசிலோ, மாநில அரசிலோ ஊதியம் பெறும் ஒரு பதவியை வகிப்பவராக இருந்தாலும், வாங்கிய கடனைத் தீர்க்காமல் திவாலாகிப் போனவராக இருந்தாலும், நீதிமன்றத்தால் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டாத்தால் வேறுவகையில் தகுதியிழப்பு செய்யப்பட்டு இருந்தாலும் அந்த நபர் நாடாளுமன்றத்தின் எந்தவோர் அவைக்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இதர தகுதி இழப்புகள்.
  • உறுப்பினர்களின் தகுதி இழப்பு தொடர்பாக இறுதி முடிவு எடுப்பது குடியரசுத்தலைவரே ஆவார். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையை கேட்பார்.
கட்சித்தாவல் மூலம் தகுதி இழப்பு செய்தல்
  • அரசியலமைப்பின் படி பாராளுமன்ற உறுப்பினர் ஆன பின்பு கட்சித் தாவலில் ஈடுபட்டால் உறுப்பினர் தகுதி இழப்பர். இதனை அட்டவணை பத்து (ஓ) விவரிக்கிறது.
  • கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் படி தகுதி இழப்பிற்கு உள்ளாகும் உறுப்பினர்களாவோர்:
  • உறுப்பினர் தன் விருப்பத்துடன் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியுடன் சேர்ந்தால்,
  • அரசியல் கட்சியின் விருப்பத்திற்கு மாறாக ஓர் உறுப்பினர் வாக்களிக்காமல் இருந்தாலோ அல்லது எதிராக வாக்களித்தாலோ,
  • சுயேட்சை உறுப்பினரும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தாலோ,
  • எந்த ஒரு நியமன உறுபபினர் 6 மாதத்திற்கு பின்பு ஏதேனும் ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்தாலோ,
  • 10-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்சித்தாவல் தடுப்புத் தகுதி இழப்புகளை மாநிலங்களவையில் அதன் தலைவரும் மக்களவையில் மக்களவைத் தலைவரும் முடிவு செய்வர். (குடியரசுத்தலைவர் முடிவு செய்ய இயலாது).
  • 1992-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மக்களவைத் தலைவர் ஃ மாநிலங்களவைத் தலைவர்களால் மேற்கொள்ளப்படும் கட்சித் தாவல் உறுப்பினர் தகுதி இழப்பு நீதி புனராய்வுக்கு உட்படும் என்கிறது.
உறுப்பினர்கள் இடம் காலியாதல்
  1. ஷரத்து 101-ன்படி உறுப்பினர் இடம் காலியாதல்களாவன:
  2. இரண்டு இடங்களில் உறுப்பினராதல்: ஒருவர் பாராளுமன்றத்தில் இரு சபைகளிலும் அல்லது பாராளுமன்றத்திலும், மாநிலச் சட்டமன்றத்திலும் ஒரே நேரத்தில் உறுப்பினராக இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவர் ஏதேனும் ஓர் இடத்தை விட்டுவிட வேண்டும்.
  3. தகுதியிழத்தல்: ஷரத்து 102-ன் படி சில காரணங்களுக்காக தகுதி இழப்பு செய்யப்படும். எ.கா. உறுப்பினர் ஆன பின்பு மனநிலை பாதிப்பட்டால் தகுதி இழப்பு செய்யப்படும்.
  4. பதவியிழத்தல்: பாராளுமன்ற உறுப்பினர் தாமே முன்வந்து, தாம் சார்ந்திருக்கும் சபையின் தலைவருக்கு பதவியை விட்டு விலக விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதினாலும் அவரது பதவி காலியாகி விடும்.
  5. அனுமதியின்றி விடுப்பெடுத்தல்: உறுப்பினர் எவரேனும் தாம் சார்ந்துள்ள சபையின் முன் அனுமதியின்றி அறுபது நாட்களுக்கு மேல் அவை நடவடிக்கைகளில் பங்கு பெறாமல் இருந்தாலும் அவருடைய இடம் காலியானதாக அறிவிக்கப்படும்.
  6.  இதர இனங்கள் :
  • உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால்,
  • அவையினரால் வெளியேற்றப்பட்டால்,
  • குடியரசுத்தலைவர், குடியரசுத்துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டால்,
  • மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டால் உறுப்பினர் பதவி இழக்க நேரிடும்.

மக்களவை சபாநாயகர்

  1. அரசியலமைப்பின் சரத்து 93-ன் படி மக்களவைக்கு சபாநாயகர் ஒருவர் இருக்க வேண்டும். அவர் மக்களவை உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  2. அவரது இடம் காலியானால் உடனடியாக வேறொரு உறுப்பினரை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தேர்தல் தேதியை குடியரசுத்தலைவர் அறிவிப்பார்.
  3.  பொதுவாக சபாநாயகரின் பதவி மக்களவை பதவிகாலம் முடியும் வரை தொடரும்.
    எனினும் அவரது பதவி காலியாவதற்கான சில காரணங்கள் உள்ளன.
  • சபாநாயகரின், உறுப்பினர் தகுதி நீக்கப்படல்,
  • சபாநாயகரே பதவி விலக விரும்பி துணை சபாநாயருக்கு பதவி விலகல் கடிதத்தை அளித்தல்,
  • மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்தல், போன்ற காரணங்களாலும் பதவி காலியாகும்.
  1. சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும்போது, 14 நாளுக்கு முன்பு தகவல் அளிக்க வேண்டும். பதவி நீக்க தீர்மானம் மக்களவையில் கொண்டுவரும் போது அவை நடவடிக்கைக்கு அவர் தலைமை தாங்க முடியாது.
  2. ஆனால் அவை உறுப்பினராக அவையின் நடவடிக்கைகளில் பங்கு பெறலாம். எப்போதெல்லாம் மக்களவை கலைக்கப்படுகிறதோ அப்போது சபாநாயகர் பதவி காலியாகாது. அடுத்த பொதுத்தேர்தல் நடந்து புதிய அரசாங்கத்தின் சபாநாயகர் பதவியேற்கும் வரை அவரது பதவி தொடரும்.
சபாநாயகரின் பங்கு, அதிகாரம் மற்றும் பணிகள்
  1.  மக்களவையின் தலைவராகவும் அதன் பிரதிநிதியாகவும் திகழ்கிறார்.
  2. மக்களவை உறுப்பினர்களின் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள், ஒட்டுமொத்த அவை மற்றும் அதன் குழுக்கள் அனைத்திற்கும் பாதுகாவலராக திகழ்கிறார்.
  3. அவையின் பொறுப்பாளரான சபாநாயகருக்கு உயர்ந்த மரியாதையும், கௌவரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
  4. மக்களவையில் சபாநாயகர் மூன்றுவித அதிகாரங்களை பெற்றுள்ளார்.
  • அவையின் நடவடிக்கைகளில் சமவாக்கு ஏற்படும் போது சபாநாயகர் தனது வாக்கை செலுத்தி தேக்கநிலையை நீக்குவார்.
  • அவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களில் எவை பண மசோதா (அ) பண மசோதா அல்ல என சபாநாயகரே முடிவு செய்து குடியரசுத்தலைவரின் முன் அனுமதிக்கு அனுப்புவார்.
  • 10-வது அட்டவணையில் உள்ளவாறு ஒரு உறுப்பினர் தகுதி இழப்பு பற்றி சபாநாயகர் தான் முடிவு செய்வார்.
துணை சபாநாயகர்
  1. சபாநாயகர் போன்று துணை சபாநாயகர் மக்களவை உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  2. சபாநாயகர் தேர்வுக்கு பின்பு துணைசபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
  3. இத்தேர்தலுக்கான தேதியை சபாநாயகர் அறிவிப்பார்.
  4. எப்பொழுது எல்லாம் துணை சபாநாயகர் பதவி காலியாகிறதோ, மக்களவை வேறொரு உறுப்பினரை துணை சபாநாயகராக நியமிக்கிறது.
  5. சபாநாயகர் பதவி காலியாகும் போது துணை சபாநாயகர் அப்பதவியை வகிக்கிறார். அப்போது சபாநாயகரின் அனைத்து அதிகாரங்களையும் அவர் பெறுகிறார்.
  6. மேலும் இச்சமயத்தில் நடைபெறும் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமையேற்கிறார். (சபாநாயகர் இல்லாத போது) துணை சபாநாயகர் சபாநாயகருக்கு கீழானவர் அல்லது இவர் மக்களவைக்கு நேரடி பொறுப்பாளர் ஆவார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரின் நிறுவனங்கள்
  1. 1921-ஆம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. 1919-ம் ஆண்டு சட்டத்தின்படி இந்தியாவின் முதல் சபாநாயகர் பியூரிக் ஒயிட் முதல் துணை சபாநாயகர் சச்சிதானந்த சின்கா ஆகியோர் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டனர்.
  2. 1925-ஆம் ஆண்டில் வித்தல்பாய் பட்டேல் மத்திய சட்டமன்றத்தில் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சபாநாயகராக திகழ்ந்தார்.
  3. சுதந்திரத்திற்கு பின்பு பு.ஏ. மௌலாங்கர் சபாநாயகராகவும் அனந்தசயனம் அய்யங்கார் துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  4. பு.ஏ. மௌலாங்கர் அரசியலமைப்பு மன்றம் மற்றும் பாராளுமன்றம் ஆகிய இரண்டிற்கும் சபாநாயகராக திகழ்ந்தார். இவரது பணிக்காலம் சுமார் 10 ஆண்டுகள் (1946 முதல் 1956 வரை) தொடர்ந்தது.
  5. தற்காலிக சபாநாயகர்  அரசியலமைப்பின்படி சபாநாயகரின் பதவிக்காலமானது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் கூட்டத்துடன் முடிவடைகிறது.
  6. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையின் உறுப்பினர்களில் வயதில் மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக குடியரசுத்தலைவர் நியமிப்பது மரபாக பின்பற்றப்படுகிறது. மேலும் அவருக்கான பதவி பிரமாணத்தையும் குடியரசுத்தலைவரே செய்து வைக்கிறார்.
  7. சபாநாயகருக்கு உரிய அனைத்து அதிகாரங்களும் இவருக்கும் உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையின் முதல் கூட்டத்தை இவர் வழிநடத்துவார்.
  8. இவரின் முக்கிய கடமை புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிராமாணம் செய்துவைத்தல் ஆகும்.
  9. மக்களவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டவுடன் இவரது பதவி காலியாகிவிடும். ஆகையால் இவரது பதவிக்காலம் மிகவும் குறுகிறது.

 

 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY