Ads Right Header

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்!!



  1. தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் எனும் புதிய பொருளாதாரக் கொள்கை  (LPG) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1991
  2. உலகமயமாக்கல் என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் யார்? பேராசிரியர் தியோடர் டெவிட்.
  3. சுமர் மற்றும் சிந்து சமவெளி நாகரீகத்தின் இடையேயான வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளில் உருவாக்கியது என்று கூறியவர் யார்? ஆன்ட்ரோ குந்தர் பிராங்க்.
  4. பட்டு சாலையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்திய பேரரசுகள் யாவை? ரோம் பார்த்தியா மற்றும் ஹன் பேரரசு
  5. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு எது? 1600
  6. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு எது? 1602
  7. பதினாறாம் நூற்றாண்டில் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் பிரேசில் வரை வர்த்தக நிறுவனங்களை நிறுவியவர்கள் யார்? போர்ச்சுகீசியர்கள்
  8. சிவப்பு வண்ண கல் அலங்கார பொருட்களை வர்த்தகத்திற்கு கொண்டுவந்தவர்? கலிங்க வர்த்தகர்கள் AD 1053
  9. ஆலய வளாகத்தில் மட்டும் சந்தித்து வர்த்தகத்தை மேற்கொண்டு வர்த்தகக் குழுவினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? தொகராஸ் மற்றும் கோவாரஸ்
  10. ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதையை கண்டுபிடித்தவர் யார்? வாஸ்கோடகாமா
  11. வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் வந்து இறங்கிய ஆண்டு எது? கிபி 1498 மே 17
  12. கிபி 1500 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்? பெட்ரோ ஆல்வாரோஸ்
  13. வாஸ்கோடகாமா இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்த ஆண்டு எது? கிபி.1502
  14. இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் தலைநகரம் எது? கொச்சின்
  15.  மசூலிப்பட்டினம் நிஜாம் பட்டினம் தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தை நிறுவியவர் யார்? அட்மிரல் வான் டெர் ஹகேன்
  16. கிபி 1610 ஆம் ஆண்டு சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி புலி காட்டில் தொழிற்சாலையை நிறுவியவர் யார்? அட்மிரல் வான் டெர் ஹகேன்
  17. இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடம் எது? புலிகாட்
  18. டச்சுக்காரர்கள் போர்ச்சுகீசியர்களிடமிருந்து நாகப்பட்டினத்தை  கைப்பற்றிய ஆண்டு எது? கி.பி1659
  19. ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் ஃபயர் மேன் என்ற பட்டத்தை வழங்கிய இந்திய மன்னர் யார்? கோல்கொண்டா சுல்தான்
  20. சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு எது? கிபி 1639
  21. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் தலைமையகமாக இருந்தது எது? மசூலிப்பட்டினம்
  22. டேனிஷ்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு எது? கிபி 1616
  23. டேனிஷ்காரர்களின் தலைமையிடமாக அமைந்த இடம் எது? டிராங்குபார்
  24. டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை கைப்பற்றிய ஆண்டு எது? கிபி.1693
  25. எந்த ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் தலைமை இடமாக மாற்றப்பட்டது? கிபி 1701
  26. தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன? நாங்குநேரி எண்ணூர் கோயம்புத்தூர்
  27. டங்கல் வரைவு கையெழுத்திடப்பட்ட ஆண்டு எது? 1994 ஏப்ரல் 15
  28. இந்தியா தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய ஆண்டு எது? 1991 ஜூலை
  29. அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் எது? 1974 ஜனவரி 1
  30. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 1999
  31. சுங்கவரி வாணிபம் குறித்த பொது உடன்பாடு (காட் ஒப்பந்தம்) கையெழுத்திடப்பட்ட ஆண்டு எது? 1947
  32. காட்டின் GATT முதலாவது சுற்று எங்கு நடைபெற்றது? ஜெனீவா ஸ்விட்சர்லாந்து 1947
  33. காட் இரண்டாவது சுற்று எங்கு நடைபெற்றது? அன்னிசி பிரான்ஸ்
  34. காட் ஒப்பந்தத்தின் மூன்றாவது சுற்று எங்கு நடைபெற்றது? டார்க்குவே  இங்கிலாந்து
  35. காட் ஒப்பந்தத்தின் ஏழாவது சுற்று எங்கு நடைபெற்றது? டோக்கியோ ஜப்பான்
  36. காட் ஒப்பந்தத்தின் எட்டாவது மற்றும் இறுதிச்சுற்று எங்கு நடைபெற்றது? பண்டாடெல் எஸ் டீ , உருகுவே. இது உருகுவே சுற்று என்றும் அழைக்கப்படுகிறது.
  37. உலக வர்த்தக அமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது? 1995 ஜனவரி 1
  38. உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? ஜெனீவா சுவிட்சர்லாந்து
  39. ஜி7 நாடுகள் என்று அழைக்கப்படுபவை எவை? கனடா பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஜப்பான் இங்கிலாந்து அமெரிக்கா
  40. உலக வர்த்தக அமைப்பில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? 5 பேர்(4+1)

 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY