Ads Right Header

ஆறாம் வகுப்பு இயல் - 1. Test batch Questions!

 

(1)ஆறாம் வகுப்பு இயல் 1 


1.பின்வருவனவற்றில் எவர் தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை,பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடியுள்ளார்?

அ. பாரதியார்
ஆ. பாரதிதாசன்
இ.  கண்ணதாசன்
 ஈ. கருணாநிதி

2. “தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா ” என்ற பாடலை இயற்றியவர் யார்?

 காசி ஆனந்தன்
 கவிமணி
 பாரதியார்
 பாரதிதாசன்

3. “தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! ” என்ற பாடலின் ஆசிரியர்?

 பாரதியார்
 பாரதிதாசன்
 கவிமணி
 கருணாநிதி

4. “செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

 செம்மை+ பயிர்
 செம் + பயிர்
 செமை + பயிர்
 செம்பு + பயிர்

5. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

 பொய் + அகற்றும்
 பொய் + கற்றும்
 பொய்ய + கற்றும்
 பொய் + யகற்றும்

6. நெல், வரகு இவற்றின் இலைப்பெயர் என்ன?

 தழை
 ஓலை
 தோகை
 தாள்

7. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் —— சுருங்கிவிட்டது.

 மேதினி
 நிலா
 வானம்
 காற்று

8. சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_________

 சீர் + இளமை
 சீர்மை + இளமை
 சீரி + இளமை
 சீற் + இளமை

9. பொருத்துக

1) எண்ணத்தை வெளிப்படுத்துவது -அ) நாடகத்தமிழ்
2) உள்ளத்தை மகிழ்விப்பது -ஆ) இயல்தமிழ்
3) உணர்வில் கலந்து வாழ்வை வழிப்படுத்துவது -இ) இசைத்தமிழ்
 1-ஆ, 2-இ, 3-அ
 1-அ, 2-இ, 3-ஆ
 1-இ, 2-ஆ, 3-அ
 1-இ, 2-அ, 3-ஆ

10. கனிச்சாறு , கொய்யாக்கனி -ஆகிய நூற்களை இயற்றியவர்

 பாவலரேறு பெருஞ்சித்திரனார்
 முத்துவடுகநாதர்
 பாரதிதாசன்
 பாரதியார்

11. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?

 4
 5
 6
 7

12. உலகில் ___க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.

 5000
 10000
 8000
 6000

13. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை , நரம்பினால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல்

 திருக்குறள்
 நற்றிணை
 பதிற்றுப்பத்து
 புறநானூறு

14. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

 செந் + தமிழ்
 செம் + தமிழ்
 சென்மை + தமிழ்
 செம்மை + தமிழ்

15. பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளவர்?

 பாவேந்தர்
 கண்ணதாசன்
 சாலை இளந்திரையன்
 பாவலரேறு

16. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ” என்று பாடியவர்?

 கண்ணதாசன்
 பாரதிதாசன்
 பாரதியார்
 வாணிதாசன்

17. “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி” என்ற பாடல் வரிகளை இயற்றியவர்?

 ஔவையார்
 திருவள்ளுவர்
 பாரதியார்
 பாரதிதாசன்

18. “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?

 கார்நாற்பது
 பதிற்றுப்பத்து
 நற்றிணை
 தொல்காப்பியம்

19. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்?

 தொல்காப்பியம்
 திருக்குறள்
 கொன்றை வேந்தன்
 குண்டலகேசி

20. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது __________

 மொழி
 வினை
 செயல்
 அறிவு

21. “பாவலரேறு” என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்

 பெருஞ்சித்திரனார்
 வாணிதாசன்
 பாரதியார்
 பாரதிதாசன்

22. தமிழ்க்கும்மி- பாடலின் ஆசிரியர்?

 பாரதிதாசன்
 பாரதியார்
 பெருஞ்சித்திரனார்
 கண்ணதாசன்

23. தாய் மொழியில் படித்தால் _____அடையலாம்
 பன்மை
 மேன்மை
 பொறுமை
 சிறுமை

24. “கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

 ஐங்குறுநூறு
 குறுந்தொகை
 நற்றிணை
 பதிற்றுப்பத்து

25. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ________ ஆகஇருக்கும்

 மகிழ்ச்சி
 கோபம்
 வருத்தம்
 அசதி

26. ‘மா’ என்னும் சொல்லின் பொருள்________

 மாடம்
 வானம்
 விலங்கு
 அம்மா

27. ‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______

 இட+புறம்
 இடப்+புறம்
 இடது+புறம்
 இடை+புறம்

28. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது _______ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

 வரி
 எண்கள்
 ஒலி
 சைகை

29. பொருள் தருக -“விளைவு”

 வினவுதல்
 நெருங்கு
 விளைச்சல்
 தேவை

30. “அமுதென்று” என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?

 அமுது + தென்று
 அமுது + என்று
 அமுது + ஒன்று
 அமு + தென்று

31. பொருத்துக

1) ஆழிப் பெருக்கு – அ)கடல் கோள்
2) ஊழி – ஆ)நீண்டதொருகாலப்பகுதி
3) மேதினி – இ)உலகம்
4) உள்ளப்பூட்டு – ஈ)அறிய விரும்பாமை

 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ
 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

32. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே ” என்ற மேற்கோள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

 வளையாபதி
 குண்டலகேசி
 திருக்குறள்
 தொல்காப்பியம்

33. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற பாடல்வரிகளை இயற்றியவர்?

 கபிலர்
 ஔவையார்
 திருவள்ளுவர்
 கம்பர்

34. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________

 புதுமை
 பழமை
 பெருமை
 சீர்மை

35. “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்.” -என்று பாடியவர்?

 கம்பர்
 பெருஞ்சித்திரனார்
 கவிமணி
 பாரதியார்

36. “கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி ” -என்ற பாடலை இயற்றியவர்?

 வாணிதாசன்
 பாவேந்தர் பாரதிதாசன்
 பெருஞ்சித்திரனார்
 கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

37. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர்?

 பாவலரேறு பெருஞசித்திரனார்
 பாரதியார்
 வாணிதாசன்
 சாலை இளந்திரையன்

38. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் _____ எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

 இடஞ்சுழி
 வலஞ்சுழி
 குற்றெழுத்து
 சதுர வடிவ எழுத்து

39. பொருள் தருக -“நிருமித்த”

 ஒருமித்த
 உருவாக்கிய
 பாலைவனம்
 சோர்வு

40. “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை ஆயின்” -இந்த வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

 சிலப்பதிகாரம்
 மணிமேகலை
 தொல்காப்பியம்
 திருவள்ளுவமாலை

41தமிழ் + எங்கள் =__________

 தமிழங்கள்
 தமிழெங்கள்
 தமிழுங்கள்
 தமிழ்எங்கள்

42. உணர்வில் கலந்து வாழ்வை வழிப்படுத்துவது_________

 இயல்தமிழ்
 இசைத்தமிழ்
 நாடகத்தமிழ்
 அனைத்தும்

43. போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல்?

 அகநானூறு
 புறநானூறு
 பதிற்றுப்பத்து
 சிலப்பதிகாரம்

44. பாரதிதாசனின் இயற்பெயர் _________.

 சுப்புரத்தினம்
 இராமலிங்கம்
 முத்துவடுகநாதர்
 அரங்கநாதன்

45. “கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி….” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள இடம் எது?

 கார்நாற்பது
 ஐந்திணை ஐம்பது
 திருவருட்பா
 நாலாயிரத்திவ்யபிரபந்தம்

46. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

 சிலம்பதிகாரம்
 சிலப்பதிகாரம்
 சிலம்புதிகாரம்
 சில பதிகாரம்

47. “நிலவு + என்று” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______

 நிலயென்று
 நிலவென்று
 நிலவன்று
 நிலவுஎன்று

48. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

அ) விளைவுக்கு – 1) பால்
ஆ) அறிவுக்கு – 2) வேல்
இ) இளமைக்கு – 3) நீர்
ஈ) புலவர்க்கு – 4) தோள்
 அ-3 , ஆ-4, இ-1, ஈ-2
 அ-1 , ஆ-2, இ-3, ஈ-4
 அ-2 , ஆ-4, இ-3, ஈ-1
 அ-3 , ஆ-1, இ-2, ஈ-4

49. அருகு, கோரை போன்றவற்றின் இலைப்பெயர்?

 தழை
 மடல்
 புல்
 ஓலை

50. கமுகு மரத்தின் இலைப்பெயர்?

 தோகை
 கூந்தல்
 ஓலை
 தழை

51. பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________

 பாட்டிருக்கும்
 பாட்டுருக்கும்
 பாடிருக்கும்
 பாடியிருக்கும்

52. நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்! என்ற பிறந்த நாள் வாழ்த்துப்பாடலை இயற்றியவர்?

 கவிஞர் அறிவுமதி                 இளந்திரையன்
 கவிஞர் வாலி
 கவிஞர் கண்ணதாசன்

53. ஏற்றத் தாழ்வற்ற _______ அமைய வேண்டும்?

 சமூகம்
 நாடு
 வீடு
 தெரு

54. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

 தொல்காப்பியம்
 சீவகசிந்தாமணி
 திருவள்ளுவமாலை
 கம்பராமாயணம்

55. புரட்சிக்கவி என்று அழைக்கப்பவர்?

 பாரதியார்
 பாரதிதாசன்
 கண்ணதாசன்
 ஸ்டாலின்

57. கரும்பு, நாணல் போன்றவற்றின் இலைப்பெயர்?

 தோகை
 கூந்தல்
 புல்
 மடல்

58. சப்பாத்திக் கள்ளி, தாழை போன்றவற்றின் இலைப்பெயர்?

 மடல்
 தழை
 இலை
 தோகை

59. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ________?

 மாணிக்கம்
 முத்துவேல்
 வேலாயுதம்
 இவற்றில் எதுவும் இல்லை

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY