Ads Right Header

ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 1.1. இன்பத்தமிழ்.


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஏற்றத் தாழ்வற்ற …………….. அமைய வேண்டும்.
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
Answer:
(விடை: அ) சமூகம்)

Question 2.
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ………….. ஆக இருக்கும்.
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
Answer:
(விடை : ஈ) அசதி)

Question 3.
நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
Answer:
(விடை: ஆ) நிலவென்று)

Question 4.
தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ் எங்கள்
Answer:
[விடை: ஆ) தமிழெங்கள்)

Question 5.
‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
Answer:
(விடை: ஆ) அமுது + என்ற)

Question 6.
‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
Answer:
(விடை: அ) செம்மை + பயிர்)

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக
அ) விளைவுக்கு – பால்
ஆ) அறிவுக்கு – வேல்
இ) இளமைக்கு – நீர்
ஈ) புலவர்க்கு – தோள்
விடை:
அ) விளைவுக்கு – நீர்
ஆ) வாழ்வுக்கு – ஊர்
இ) இளமைக்கு – பால்
ஈ) புலவர்க்கு – வேல்

ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக
(எ.கா.) பேர் –நேர்
விடை :
பேர் – நேர் அமுதென்று – நிலவென்று
பேர் – நீர் உயிருக்கு – விளைவுக்கு
பேர் – ஊர் இளமைக்கு – புலவர்க்கு
பால் – வேல் தமிழுக்கு – வாழ்வுக்கு
வான் – தேன் உயர்வுக்கு – அசதிக்கு
தோள்- வாள் அறிவுக்கு – கவிதைக்கு

குறுவினா 

Question 1.
பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
Answer:
அமுதம், நிலவு, மணம்.

Question 2.
நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
Answer:
தேன், தங்கம், கரும்பு, சந்தனம், அமுதசுரபி, நவமணிகள் போன்றவற்றோடு தமிழை ஒப்பிடுவேன்.

சிறுவினா

Question 1.
இன்பத் தமிழ் – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.
Answer:
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

Question 2.
விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
Answer:
(விளைவு – விளைச்சல்)
(i) நீரின்றி வேளாண்தொழில் (விளைச்சல்) நிகழாது.
(ii) நீர் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் போன்றது.
(iii) நீரினால் விளையும் விளைச்சலினால் மக்கள் பயன் பெறுவர்.

சிந்தனை வினா

Question 1.
வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது?
Answer:
(i) வேல் கூர்மையான ஆயுதம் அதைப்போல தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள் கூர்மையான கருத்துகளைக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துகிறது.
(ii) ஆகவே தமிழ், வேலுடன் ஒப்பிடப்படுகிறது. அதேபோல் கத்தியின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது என்ற பழமொழியும் இதனையே விளக்கும்.

கூடுதல் வினாக்கள்

பொருள் தருக :

வான் – வானம்
இணை – சமம்
சுடர் – ஒளி

எதிர்சொல் தருக:

இளமை × முதுமை
புகழ் × இகழ்
அசதி × சுறுசுறுப்பு
ஒளி × இருள்
இன்பம் × துன்பம்
அமுதம் × விடம்

வினாக்கள் :

Question 1.
பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
Answer:
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்

Question 2.
பாரதிதாசனின் பெற்றோர் யாவர்?
Answer:
பாரதிதாசனின் பெற்றோர்
தந்தையார் – கனகசபை
தாயார் – இலக்குமி.

Question 3.
பாரதிதாசனார் புரட்சிக்கவி ‘ என்று போற்றப்படக் காரணம் யாது?
Answer:
பாரதிதாசனார் தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு ஆகியவை குறித்த புரட்சிகரமான கருத்துகளைப் பாடியுள்ளமையால் ‘புரட்சிக்கவி’ என்று போபோற்றப்படுகிறார்.

Question 4.
பாரதிதாசனாரின் சிறப்புப் பெயர்கள் யாவை?
Answer:
பாரதிதாசனாரின் சிறப்புப் பெயர்கள் : புரட்சிக் கவி, பாவேந்தர்.

Question 5.
பாரதிதாசன் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : பாரதிதாசன்
இயற்பெயர் : சுப்புரத்தினம்
பிறந்த ஊர் : புதுச்சேரி
பெற்றோர் : கனகசபை – இலக்குமி அம்மையார்
பணி : தமிழாசிரியர்
சிறப்புப்பெயர் : பாவேந்தர்,புரட்சிக் கவிஞர்
காலம் : 29-04-1891 முதல் 21-04-1964 வரை
இயற்றிய நூல்கள் : குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, பிசிராந்தையார், அழகின் சிரிப்பு

நூல் வெளி
இப்பாடல் “பாரதிதாசன் கவிதைகள்’ தொகுப்பில் “இன்பத்தமிழ்” என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

பொருளுரை
இனிக்கும் அமுதத்தை ஒத்திருப்பதால் தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது. தமிழுக்கு நிலவென்றும் பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றதாகும்.
தமிழுக்கு மணம் என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் வாழ்க்கைக்கெனவே உருவாக்கப்பட்ட ஊராகும். தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. சிறந்த புகழ்மிக்க புலவர்களுக்கு இன்பத்தமிழே கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
தமிழ் எங்கள் உயர்வின் எல்லையாகிய வான் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிர்விடச் செய்யும் தேனாகும். தமிழ் எங்கள் அறிவுக்குத் துணையாகும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.

விளக்கவுரை
தமிழ், அமுதம் எவ்வாறு இனிமையாக இருக்குமோ அதைப்போல இனிமையான மொழியாக இருப்பதால் தமிழைஅமுதம் என்கிறார். மேலும் தமிழைமனித உயிருக்கு நிகராக ஒப்புமைப்படுத்துகின்றார். சமூகம் (சமுதாயம்) சிறப்புடன் வளர்வதற்குத் தமிழ்மொழி நீராகப் பயன்படுகிறது. தமிழ்மொழி நறுமணம் உடையது என்றும் கூறுகிறார். இன்பத்தமிழானது மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கெனவே உருவாக்கப்பட்ட ஊராகும்.
மனிதர்கள் பொலிவுடனும் இளமையுடனும் இருப்பதற்குப் பால் எப்படிப் பயன்படுகிறதோ! அதனைப் போன்று வளமும் சுவையும் நிறைந்தது தமிழ்மொழி. இந்தத்தமிழ் சிறந்த புகழ்மிக்க தமிழ்ப்புலவர்களின் புலமையை அறிவிக்கின்ற கூர்மையான வேலாகும். தமிழ்மொழி எங்கள் உயர்வுக்கு வானமாகும். தமிழ்மொழி எங்கள் அறிவுக்குத் தோள்கொடுக்கும். தமிழ்மொழி எங்கள் கவிதையின் கவித்துவத்திற்கு வாளாகும்.

சொல்லும் பொருளும்

1. நிருமித்த – உருவாக்கிய
2. விளைவு – விளைச்சல்
3. சமூகம் – மக்கள் குழு
4. அசதி – சோர்வு.


தினமும் இலவச தேர்வெழுத

டெலகிராமில் இணைந்திட

Touch Here

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY