Ads Right Header

ஆறாம் வகுப்பு தமிழ் இயல் -1.5. தமிழ் எழுத்துகளின் வகை தொகை.



Question 1.

கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக.
Answer:
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் ………….
(விடை: அது]
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் …………………..
[விடை : தீ]
3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் ……..
[விடை: அஃது]

கலைச்சொல் அறிவோம்

1. வலஞ்சுழி – Clockwise
2. இடஞ்சுழி – Anti Clockwise
3. இணையம் – Internet
4. குரல்தேடல் – Voice Search
5. தேடுபொறி – Search engine
6. தொடுதிரை – Touch Screen
7. முகநூல் – Facebook
8. செயலி – App
9. புலனம் – Whatapp
10. மின்ன ஞ்சல் – E-mail.

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் ஆரோக்கியமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது. –
Questions.
1. பழமொழியின் சிறப்பு …………….. சொல்வது
அ) விரிவாகச்
ஆ) சுருங்கச்
இ) பழமையைச்
ஈ) பல மொழிகளில்

2. நோயற்ற வாழ்வைத் தருவது ………….

3. உடல் ஆரோக்கியமே ………………… அடிப்படை.

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?

5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
Answers:
1. (விடை: ஆ) சுருங்கச்)
2. (விடை: சுத்தம்)
3. (விடை: உழைப்புக்கு)
4. (விடை: உணவு, உடை. உறைவிடம்)
5. (விடை: சுத்தம்)

நிரப்புக.

அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, அன்பு
அ – _____ தருவது தமிழ்
ஆ – _______ தருவது தமிழ்
இ – _______ தருவது தமிழ்
ஈ – ________இல்லாதது தமிழ்
உ – ________ தருவது தமிழ்
ஊ – ________ தருவது தமிழ்
எ – __________வேண்டும் தமிழ்
ஏ – _________ தருவது தமிழ்
Answer:
அன்பு தருவது தமிழ்
ஆற்றல் தருவது தமிழ்
இன்பம் தருவது தமிழ்
ஈடு இல்லாதது தமிழ்
உவகை தருவது தமிழ்
ஊக்கம் தருவது தமிழ்
என்றும் வேண்டும் தமிழ்
ஏற்றம் தருவது தமிழ்

கூடுதல் வினாக்கள்

Question 1.
இலக்கணம் என்றால் என்ன?
Answer:
(i) உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்று நோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்துகொண்டான் இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான்.
(ii) மொழியை எவ்வாறு பேசவும், எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்தான். அந்த வரையறைகளே இலக்கணம் எனப்படும்.

Question 2.
தமிழ்மொழியின் இலக்கண வகைகள் எத்தனை வகைப்படும்?
Answer:
தமிழ்மொழியின் இலக்கண வகைகள் ஐந்து வகைப்படும்.

Question 3.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் யாவை?
Answer:
(i) எழுத்து இலக்கணம்
(ii) சொல் இலக்கணம்
(iii) பொருள் இலக்கணம்
(iv) யாப்பு இலக்கணம்
(v) அணி இலக்கணம்

Question 4.
எழுத்து என்றால் என்ன?
Answer:
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும், வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.

Question 5.
உயிர் எழுத்துகள் என்றால் என்ன?
Answer:
உயிருக்கு முதன்மையானது காற்று. காற்றைப் பயன்படுத்தி வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளினால் வெளிப்படும் “அ முதல் ஔ வரை” உள்ள எழுத்துகள் உயிர் எழுத்துகள் எனப்படும்.


Question 6.
உயிர் எழுத்துகள் எத்தனை அவற்றை எடுத்து எழுதுக.
Answer:
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு . அவை – அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஓள ஆகும்.

Question 7.
குறில் எழுத்துக்கள் என்றால் என்ன?
Answer:
குறுகி ஒலிக்கும் எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப்படும்.

Question 8.
நெடில் எழுத்துகள் என்றால் என்ன?
Answer:
நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும்.

Question 9.
உயிர்க் குறில் எழுத்துக்களை எழுதுக.
Answer:
அ, இ, உ, எ, ஒ என ஐந்து எழுத்துகளும் உயிர்க்குறில் எழுத்துகளாகும்.

Question 10.
உயிர் நெடில் எழுத்துகள் யாது?
Answer:
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என ஏழு எழுத்துகளும் உயிர் நெடில் எழுத்துகளாகும்.

Question 11.
மெய் எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
(i) மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது.
(ii) க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.

Question 12.
மெய்யெழுத்துகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது? அவை யாவை?
Answer:
மெய் எழுத்துக்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.
அவை 1. வல்லினம், 2. மெல்லினம், 3. இடையினம் ஆகும்.

Question 13.
வல்லினம் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
வன்மையாக ஒலிக்கும் எழுத்துகள் வல்லினம் எனப்படும்.
அவை – க், ச், ட், த், ப், ற்

Question 14.
மெல்லினம் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
மென்மையாக ஒலிக்கும் எழுத்துகள் மெல்லினம் எனப்படும்.
அவை – ங், ஞ், ண், ந், ம், ன்

Question 15.
இடையினம் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்ற எழுத்துகள் இடையினம் எனப்படும்.
அவை – ய், ர், ல், வ், ழ், ள்

Question 16.
மாத்திரை என்பது யாது?
Answer:
மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ, ஒருமுறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவு ஆகும்.

குறுவினா

Question 1.
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
(i) தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை,
(ii) எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்.

Question 2.
மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.
Answer:
(i) வல்லினம் : க், ச், ட், த், ப், ற்.
(ii) மெல்லினம் : ங், ஞ், ண், ந், ம், ன்
(iii) இடையினம் : ய், ர், ல், வ், ழ், ள்

Question 3.
தமிழ் எழுத்துக்களுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
Answer:
(i) குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு :1 மாத்திரை
(ii) நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு : 2 மாத்திரை
(iii) மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு : 1/2 மாத்திரை
(iv) ஆய்த எழுத்து ஒலிக்கும் கால அளவு : 2 மாத்திரை.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY