Ads Right Header

6 லட்சம் அரசு பணியிடங்கள் காலி: நிதியமைச்சர் அறிவிப்பு!


தமிழக நிதி மற்றும் மனிதவள துறை அமைச்சர் பேட்டி...

தமிழகத்தில் அரசு துறைகளில்,     14 லட்சம் முதல் 15 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.ஆனால், ஒன்பது லட்சம் பேர் தான் பணியில் உள்ளனர். நிறைய இடங்கள் காலியாக உள்ளன; அவற்றை நிரப்ப போதுமான நிதி இல்லை.தமிழ் மொழித்தாள் தேர்ச்சி கட்டாயமாக்கப் பட்டதால், அரசு பள்ளி மாணவர்கள், அரசு பணிக்கு செல்வது அதிகரிக்கும்.பணியாளர்களின் பணி தரத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.


தமிழர் அல்லாதவர்கள் எவ்வளவு பேர் பணியில் உள்ளனர் என்ற புள்ளி விபரம் இல்லை. கோப்புகள் தாமதமாவதற்கும், ஊழியர்கள் வயதுக்கும் சம்பந்தம் கிடையாது. கடந்த ஆட்சியில், ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதற்கு காரணம் தெரியவில்லை.அறிவியல் முன்னேற்றம் காரணமாக, வாழக்கூடிய வயது அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, வளர்ந்த நாடுகளில் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படுகிறது.தமிழகத்தில் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால், பணியாளர் காலியிடங்கள் குறைவாக உள்ளது.

நம் பங்கேற்பு



முதல்வருடன் ஆலோசித்து, பணியாளர் தேர்வு, பதவி உயர்வு என பல முடிவுகளை எடுக்க உள்ளோம். ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம் வரலாம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை, மத்திய தேர்வு வாரியங்கள் நடத்திய தேர்வுகள், மண்டல அளவில் நடத்தப்பட்டன. அது தேசிய மயமான பின், நம் பங்கேற்பு மிகவும் குறைந்து விட்டது. மண்டல அளவிலான தேர்வு நடத்தப்பட்ட போது, 500 முதல் 800 பேர் ஆண்டுதோறும், மத்திய அரசு பணிகளுக்கு சென்றனர். தேசிய மயமான பின் 100 பேர் கூட செல்வதில்லை.
இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY