Ads Right Header

ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 9.

 


9.1 ஆசிய ஜோதி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்
அ) ஜீவ ஜோதி
ஆ) ஆசிய ஜோதி
இ) நவ ஜோதி
ஈ) ஜீவன் ஜோதி
Answer:
ஆ) ஆசிய ஜோதி

Question 2.
நேர்மையான வாழ்வை வாழ்பவர்
அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்
இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்
Answer:
அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

Question 3.
ஒருவர் செய்யக் கூடாதது
அ) நல்வினை
ஆ) தீவினை
இ) பிறவினை
ஈ) தன்வினை
Answer:
ஆ) தீவினை

Question 4.
எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) எளிது + தாகும்
ஆ) எளி + தாகும்
இ) எளிது + ஆகும்
ஈ) எளிதா + ஆகும்
Answer:
இ) எளிது + ஆகும்

Question 5.
பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பாலை + யெல்லாம்
ஆ) பாலை + எல்லாம்
இ) பாலை + எலாம்
ஈ) பா + எல்லாம்
Answer:
ஆ) பாலை + எல்லாம்

Question 6.
இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) இன்உயிர்
ஆ) இனிய உயிர்
இ) இன்னுயிர்
ஈ) இனிமைஉயிர்
Answer:
இ) இன்னுயிர்

Question 7.
மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மலை எலாம்
ஆ) மலையெலாம்
இ) மலையெல்லாம்
ஈ) மலை எல்லாம்
Answer:
ஆ) மலையெலாம்

குறுவினா

Question 1.
அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?
Answer:
அரசனாலும் செய்ய முடியாத செயல் :
இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது அரசனாலும் செய்ய முடியாத செயல்.

Question 2.
எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?
Answer:
எறும்பு தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுகிறது. .

Question 3.
ஒருநாளும் விட்டுச் செல்லாதது எது?
Answer:
ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.

Question 4.
உலகம் முழுமையையும் எப்போது ஆளமுடியும்?
Answer:
நேர்மையான, இரக்க மனம் கொண்டிருக்கும் ஒருவராலேயே இந்தப் பரந்த உலகத்தை ஆள முடியும்.

சிறுவினா

Question 1.
எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் யாவை?
Answer:
எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் :
(i) தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள்.

(ii) இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி
செய்யுங்கள்.

நிரப்புக :
1. தலைசிறந்த பண்புகளுள் ஒன்று ………………………..
2. உலக உயிர்கள் இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர்களுள் ஒருவர் ……………..
3. அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் …………………….
4. ………….. மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.
5. வலியால் துடித்த ஆட்டுக்குட்டியைத் தோளில் சுமந்து சென்றவர் ……………
6. புத்தர் நாடெங்கும் …………….. தடுத்து நிறுத்தினார்.
7. தேசிக விநாயகனார் பெற்ற பட்டம் ……………………
8. ‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் நூலை ஆங்கில மொழியில் எழுதியவர் …………….
9. ஆசிய ஜோதி ………………..’ என்னும் ஆங்கில மொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது.
10. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ……………….
11. ‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் ஆங்கில மொழி நூலைத் தமிழில் எழுதியவர் ……………………
Answer:
1. இரக்கம்
2. புத்தர்
3. புத்தர் பிரான்
4. பிம்பிசாரர்
5. புத்தர்
6. உயிர்க்கொலையைத்
7. கவிமணி
8. எட்வின் அர்னால்டு
9. லைட் ஆஃப் ஆசியா
10. ஆசிய ஜோதி
11. கவிமணி தேசிக விநாயகனார்

விடையளி :

Question 1.
நேர்மையான வாழ்வு பற்றி புத்தர் கூறிய உரை யாது?
Answer:
எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர்.

Question 2.
“தீயசெயல் என்று கருதுகிறீர்களா?” என்று புத்தர் வினவும் செயல் யாது?
Answer:
“ஆடு காடு, மலை எல்லாம் மேய்ந்து வருகிறது. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை அவற்றிற்குக் கொடுப்பதை விடுத்து மக்களுக்குத் தருகிறது. இச்செயல் தீயசெயல் என்று கருதுகிறீர்களா?” என்று புத்தர் வினவுகிறார்.

நூல் வெளி
தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.

ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


9.2 மனிதநேயம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
அ) மனித வாழ்க்கை
ஆ) மனித உரிமை
இ) மனித நேயம்
ஈ) மனித உடைமை
Answer:
இ) மனித நேயம்

Question 2.
தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் …………….. காட்டியவர் வள்ளலார்.
அ) கோபம்
ஆ) வெறுப்பு
இ) கவலை
ஈ) அன்பு
Answer:
ஈ) அன்பு

Question 3.
அன்னை தெரசாவிற்கு ………….. க்கான நோபல் பரிசு’ கிடைத்தது
அ) பொருளாதாரம்
ஆ) இயற்பியல்
இ) மருத்துவம்
ஈ) அமைதி
Answer:
ஈ) அமைதி

Question 4.
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்
ஆ) குழந்தைகளை நேசிப்போம்
இ) குழந்தைகளை வளர்ப்போம்
ஈ) குழந்தைகள் உதவி மையம்
Answer:
அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்

பொருத்துக

1. வள்ளலார் – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி – பசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெரசா – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
Answer:
1. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
3. அன்னை தெரசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனிதநேயம் – காந்தியடிகள், மனிதநேயமே சிறந்தது என்று கூறியுள்ளார்.
2. உரிமை – நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை உரிமையுடனும் மகிழ்வுடனும் வாழ வேண்டும்.
3. அமைதி – அமைதியான சூழலில்தான் நம் சிந்தனை புத்துணர்ச்சி பெறும்.
4. அன்புசெய்தல் – அனைத்து உயிர்களிடத்திலும் நாம் அன்பு செய்தல் வேண்டும்.

குறுவினா

Question 1.
யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?
Answer:
மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

Question 2.
வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?
Answer:
வள்ளலார் மக்களின் பசிப்பிணியை நீக்க தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார். இவரின் மனிதநேயச் செயல் வடலூரில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Question 3.
அன்னை தெரசா கண்ணீர் விடக் காரணம் யாது?
Answer:
(i) சாலையோரத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரை அன்னை தெரசா பார்த்தார். தன் முகத்தைத் துணியால் மூடியபடியும், ஒரு கையில் பூனைக் குட்டியையும் வைத்திருந்தாள். அம்மூதாட்டியின் கைகளில் விரல்கள் இல்லை.

(ii) மனம் கலங்கியவராய் அம்மூதாட்டியைத் தொட்டுத் தூக்கினார். “சாலை ஓரத்தில் படுத்திருப்பது ஏன்?” எனக் கேட்டார்.

(iii) “என்னைத் தொடாதீர்கள், என் நோய் உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். என் உறவினர்களே என்னை வெறுத்து விலக்கிவிட்டனர். என்னுடன் பேசுவதில்லை. என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனர். இந்தப் பூனை மட்டுமே என்னுடன் இருக்கிறது” என அழுதார் மூதாட்டி. இதைக்கேட்ட அன்னை தெரசா கண்ணீர் விட்டார்.

சிறுவினா

Question 1.
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு யாது?
Answer:
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக் கால நிகழ்வு:
(i) இவர் சிறுவயதில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது சாலையோரத்தில் ஒரு சிறுவனைக் காண்பார். அவன் தன் தந்தையுடன் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பான். ஏன் அந்தச் சிறுவன் தன்னைப் போல் பள்ளிக்கு வரவில்லை என்ற கேள்வி அவர் உள்ளத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது.

(ii) தன் ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் இக்கேள்வியைக் கேட்டார். “பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை. வீட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான்.” என்ற பதில் கிடைத்தது. அந்தப் பதில் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது.

(iii) அவருடைய மனிதநேயம் பிற்காலத்தில் அவரைப் பள்ளி செல்லாத குழந்தைகள் மேல் பரிவு கொள்ள வைத்தது. இந்த இளமைக்கால நிகழ்வு கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்தது.

நிரப்புக :

1. இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழ்வதே ……………….
2. பசி என்று வந்தவர்க்கு …………………. உணவிட வேண்டும்.
3. தீமை செய்தவர்க்கும் …………….. செய்ய வேண்டும்.
4. ஆதரவற்றவர்களை அன்புடன் ……………….. வேண்டும்.
5. ‘தமக்கென முயலா நோன்றாள்’ – இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ………………
6. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் ………………
7. “வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல” என்று கூறியவர் …………………
8. “உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது” எனக் கூறியவர் ………………….
9. குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றியவர் ………………….
10. வள்ளலார் சத்திய தருமச்சாலையைத் தொடங்கிய இடம் …………………
11. அன்பு இருக்கும் இடத்தில் ………………… இருக்கும்.
Answer:
1. ஈகை
2. வயிறார
3. நன்மை
4. அரவணைக்க
5. புறநானூற
6. வள்ளலார்
7. அன்னை தெரசா
8. கைலாஷ் சத்யார்த்தி
9. கைலாஷ் சத்யார்த்தி
10. வடலூர்
11. மனிதநேயம்

வினாக்கள் :

Question 1.
மனிதநேயம் என்றால் என்ன?
Answer:
மனிதன் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வதற்கு அருள், பொறுமை, பரிவு, நன்றி உணர்வு, இன்சொல் பேசுதல் போன்றவை தேவை. எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும்.

Question 2.
மனிதநேயம் பற்றிக் கூறும் புறநானூற்று வரிகளை எழுதுக.
Answer:
“தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென
முயலுநர் உண்மையானே”
இப்புறநானூற்று வரிகள் உணர்த்தும் பொருள் : மனித நேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” – வள்ளலார்

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை. – அன்னை தெரசா

குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது. – கைலாஷ் சத்யார்த்தி.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


9.3 முடிவில் ஒரு தொடக்கம்

சிறுவினா

Question 1.
“முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.
Answer:
‘முடிவில் ஒரு தொடக்கம்’ என்ற தலைப்பின் காரணம் :
(i) உலகில் தோன்றுகின்ற எல்லாவற்றிற்கும் மறைவு என்பது உண்டு. தாவரங்கள்கூட தன் அழிவினால் நமக்கு நன்மையைத் தருகின்ற மரங்களை வெட்டுகிறோம். அதன் வேர் முதல் நுனி வரை நாம் பயன்படுத்துகிறோம்.

(ii) ஆனால் மனிதர்கள் இறந்தால் எதற்கும் பயன்படுவதில்லை . இதற்கு மாறாக இப்பாடத்தில் ஹிதேந்திரனின் இறப்பு ஒரு சிறுமியின் வாழ்வைக் காப்பாற்றியுள்ளது.

(iii) ஹிதேந்திரனின் இறப்பு ஒரு முடிவாகும். அச்சிறுமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தைப் பொருந்தியதால் அந்த இதயம் உயிர்பெற்று தன் இயக்கத்தைத் தொடங்குகிறது.

(iv) ஹிதேந்திரனின் உடலில் நின்றுபோன இதயத்தின் செயல்பாடு அச்சிறுமியின் உடலில் தொடங்கிற்று. எனவே முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பு சரியாகப் பொருந்துகிறது.

Question 2.
இக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக.
Answer:
தொடரும் இயக்கம்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


9.4 அணி இலக்கணம்

Question 1.
பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக.
ஆறு சக்கரம் நூறு வண்டி
அழகான ரயிலு வண்டி
மாடு கன்னு இல்லாமத்தான்
மாயமாத்தான் ஓடுது
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப் பாளையம் போகும் வண்டி.
Answer:
இயல்பு நவிற்சி அணி.

மதிப்பீடு

குறுவினா

Question 1.
உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் யாது?
Answer:
உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் இயல்பு நவிற்சியணி.

Question 2.
உயர்வு நவிற்சி அணி என்பது யாது?
Answer:
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

தமிழ் எண்கள்












Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY