Ads Right Header

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற திருக்குறள் முக்கிய குறிப்புகள்!




திருக்குறள் தொடர்பான செய்திகள் 

1 ) திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள் . 
2 ) திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள்  
3 ) திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக்கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் . 
4 ) திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர் . 
5 ) திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர் . 
6 ) திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு . 
7 ) திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு . 
8 ) திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு . 
9 ) திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர் . 
10 ) திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர் . 
11 ) திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் . 
12 ) குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான் . 
13 ) குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி . 
14 ) நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் . 
15 ) சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம் . 
16 ) திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது . 
17 ) திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது .
18 ) திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய் . 
19 ) திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர் . 
20 ) திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா . சாரங்கபாணி . 
21 ) நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு சிரோன்மணி . 
22 ) திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள்ளார் . 
23 ) வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால் , திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக்கனி என்பர் . 
24 ) திருக்குறளை 1812 ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன் . 
25 ) வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார் . 
26 ) வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதிதாசன் . 
27 ) திருக்குறளின் முதற்பெயர் முப்பால் . 28 ) திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன . 
29 ) திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன . 
30 ) திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன . 
31 ) திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுது ஒள 
32 ) திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது 33 ) திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார் . 
34 ) திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை . 
35 ) திருக்குறளில் உயிரினும் மேலானதாகப் போற்றப்படுவது ஒழுக்கம் 36 ) காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம் . 37 ) திருக்குறளை அனைத்துச் சமயங்களும் ஏற்றுப் போற்றுகின்றன . 
38 ) திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி . 
39 ) திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை . 
40 ) திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது . 
41 ) திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம் . 
42 ) அரபி மொழியில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் ஜாகிர் உசேன் .





( Note: We do not create any study materials, we just sharing this material from the internet to students. All the credits go to the respective creators. please help to students who preparing for TNPSC, RRB, POLICE exams... )








Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY