Ads Right Header

Nov 2021 - Current Affairs ( Shankar IAS Academy )


 TNPSC துளிகள் 

நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அவர்களின் பதவிக் காலத்தினை மேலும் 3 ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்வதற்கு வேண்டி தனது ஒப்புதலை அளித்துள்ளது .

சூடான் நாட்டில் இருந்து குடிமைசார் ஆட்சிக்கு எதிராக சூடான் இராணுவம் சதிப் புரட்சி நடத்தியதையடுத்து சூடானுக்கு வழங்கும் தனது உதவிகளை உலக வங்கி நிறுத்தியுள்ளது . 

இந்தியத் தொல்லியல் துறையானது புவனேஷ்வரின் பழைய நகரப் பகுதியில் உள்ள சுகா சாரி ஆலயத்தின் வளாகத்தில் மற்றொரு ஆலயத்தின் அடித்தளம் இருப்பதைக் கண்டறிந்தது . கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சிதிலங்களானது 9 வது முதல் 12 வது நூற்றாண்டு வரையிலான சோமவம்சி காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப் படுகின்றன . 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விமானப் படை ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீண்டதூர வரம்புடைய வெடிகுண்டுகளை வான்வழித் தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தன . 

A.Y.4.2 என்ற கொரோனா வைரசின் புதிய மாற்றுருவானது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது . தற்போது இந்தியாவில் இந்தப் புதிய மாற்றுருவினால் அதிக பாதிப்புகள் பதிவாகி வருகிறது . 

தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் மியான்மர் அன்றி தனது வருடாந்திர உச்சி மாநாட்டினைத் தொடங்கி உள்ளனர் . தென்கிழக்காசிய நாடுகள் சங்கமானது அதன் சந்திப்புகளில் தனது உயர்நிலை அதிகாரியை விலக்கியதையடுத்து அதன் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை மியான்மர் தவிர்த்தது . 

முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண் குழந்தைகளின் பெற்றோர்களின் வயது வரம்பினை உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது . அதன் படி வயது வரம்பானது 35 வயதிலிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது . 

மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் நிறுவனமானது ஆப்பிள் நிறுவனத்தை விஞ்சி சந்தை மூலதனத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஒரு பொது வர்த்தக நிறுவனமாக மாறி உள்ளது .

மத்திய அமைச்சர் டாக்டர் . ஜிதேந்திர சிங் உத்தரகாண்டின் முசௌரியிலுள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகப் பயிற்சி நிறுவனத்தில் சர்தார் படேல் தலைமைத்துவ மையத்தினைத் திறந்து வைத்தார் . இந்த வசதி மையமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று நடைபெற்ற ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் அன்று திறந்து வைக்கப் பட்டது . 

ஆசிய மேம்பாட்டு வங்கியானது இந்தியாவின் தேசியத் தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்திற்கு உதவி வழங்குவதற்காக 250 மில்லியன் டாலர் கடனுக்கு ( ரூ .1575 கோடி ) ஒப்புதல் வழங்கியுள்ளது .

முழுமையாக படித்திட

Touch Here

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY