Ads Right Header

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1. முக்கிய வினாவிடை!


1. மொழிக்குரிய ஒழுங்குமுறைகள் ?
a) ஒழுக்கம்
b) பண்பாடு
c) மரபு
d) கலாச்சாரம்

2. " வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழ்க வாழியவே " என தமிழை வாழ்த்தியவர் யார்?
a) பாவலரேறு பெருஞ்ச்சித்தரனார்
b) பாரதியார்
c) பாரதிதாசன்
d) தேவநேய பாவனார்

3. 'ஏழ்கடல்' என்னும் பிரித்து எழுத கிடைப்பது?
a) ஏழ்மை + கடல்
b) ஏழ் + கடல்
c) ஏழு + கடல்
d) எளிமை + கடல்

4. பாரதியாரை பாரதிதாசன் கூறியவற்றுள் தவறானது எது?
1) சிந்திக்கும் தந்தை
2) செந்தமிழ்த் தேனீ
3) புதிய அறம் பாட வந்த அறிஞன்
4) மறம் பாட வந்த மறவன்
a) 1 மட்டும்
b) மேற்கூறிய எதுமில்லை
c) 2 மடடும்
d) 3 மட்டும்

5. தமிழ் எழுத்துகளில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை செய்தவர் ?
a) கம்பர்
b) பெரியார்
c) பாரதியார்
d) வீரமாமுனிவர்
6. மொழியை எத்தனை வகையாக பிரிப்பர் ?
a) ஐந்து
b) நான்கு
c) இரண்டு
d) மூன்று

7. கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறன ?
a) கல்வெட்டுகள்
b) ஓவியங்கள்
c) குடவோலை
d) செப்பேடுகள் 

8. "வண்மொழி" என்னும்  சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?
a) வண் + மொழி
b) வண்மை + மொழி
c) வளமை + மொழி
d) வாண் + மொழி

9. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" இவ்வரிகள் இடம்பெற்ற
 நூல் எது?
a) வளையாபதி 
b) மணிமேகலை
c) சிலப்பதிகாரம்
d) சீவகசிந்தாமணி

10. தமிழில் நமக்கு கிடைத்த மிகப் பழைமையான இலக்கண  நூல் எது?
a) தொல்காப்பியம்
b) நன்னூள்
c) திருக்குறள்
d) சிலப்பதிகாரம்

11. தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் ?
a) சுரதா
b) வாணிதாசன்
c) பாரதிதாசன்
d) காந்தி

12.ஒளி மரபை பொருத்து தவறான இணை எது
a) யானை - பிளிறும்
b) புலி - முழங்கும்
c) பசு - கதறும்
d) கரடி - கத்தும்

13. பால் எத்தனை வகைப்படும் ?
a) ஐந்து
b) இரண்டு
c) மூன்று
d) ஆறு

14. விஜயா, இந்தியா இதழ்களை நடத்தியவர்?
a) பாரதிதாசன்
b) பாரதியார்
c) சுரதா
d) வாணிதாசன் 

15.தமிழ் எழுத்து சீர்த்திருத்த பணியில் ஈடுபட்டனர்?
a) பெருஞ்சித்திரனார்
b) வ.உ.சிதம்பரனார்
c) பாரதிதாசன்
d) தந்தை பெரியார்

16. கருத்தை அளக்கும் கருவி _________ ஆகும்?
a) மாநிலம்
b) ஊர்
c) மொழி
d) நாடு

17. கண்ணெழுத்துகள் பற்றி குறிப்பிடும் நூல்?
a) திருக்குறள்
b) மணிமேகலை 
c) சீவகசிந்தாமணி
d) சிலப்பதிகாரம்

18. 'இருத்திணை' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?
a) இருவர் + திணை
b) இரு + திணை
c) இருந்து + திணை
d) இரண்டு + திணை

19. செய்யுளுக்கும் மரபுக்கு உள்ள தொடர்பு பற்றி எது கூறுகிறது?
a) குறுந்தொகை
b) சங்கநூல்
c) நற்றினை
d) தொல்காப்பியம்

20. "எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே" எனக் கூறுபவர் யார்?
a) தொல்காப்பியர்
b) பவனந்தி முனிவர்
c) அகத்தியர்
d) வீரமாமுனிவர் 

21. கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறன ?
a) செப்பேடுகள்
b) ஓவியங்கள்
c) கல்வெட்டுகள்
d) எழுத்துகள்

22. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் ஆதலின்" இவ்வரிகள் பெற்ற நூல் எது?
a) நன்னூல்
b) புறநானூறு 
c) அகநானுறு
d) தொல்காப்பியம்

23. தொல்காப்பியத்தின் ஆசிரியர்?
a) கம்பர்
b) பரணர்
c) பவனந்தி முனிவர்
d) தொல்காப்பியர்

24.தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்து. இவ்வடிவம் எவ்வாறு அழைக்கப்படும்?
a) கண்ணெழுத்து
b) ஓவிய எழுத்து
c) வட்டெழுத்து
d) ஒலியெழுத்து

25."வானம் + அறிந்த " என்னும் சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது?
a) வான்மறிந்த
b) வானமறிந்த
c) வான் அறிந்த
d) வானம் அறிந்து

26. 'இசை என்பதன் பொருள்?
a) கருவி
b) புகழ்
c) பொறுமை
d) சிறுமை

27. நன்னூலார் கூறும் கூற்றுகளுள் தவறானது?
a) த.ப.ன எழும் வரிசைகளில் ஐந்து எழுத்துகள்
b) உயிர் வரிசையில் ஆறு எழுத்துகள் ஓர் எழுத்து ஒரு மொழியாக வரும்
c) ம வரிசையில் ஆறு எழுத்துகள் ஓர் எழுத்து மொழியாக வரும்
d) க, ச, வ என்னும் வரிசையில் மூன்று எழுத்துக்கள் 

28. இருபதாம் நூற்றாண்டில் எழுத்து சீர்திருத்தம் செய்தவர்?
a) பாரதியார்
b) பெரியார்
c) வீரமாமுனிவர்
d) காந்தி

29. 'ஐம்பால் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?
a) ஐந்து + பால்
b) ஐ + பால்
c) ஐம் + பால்
d) ஐம்பது + பால் 

30. "வானமளந்து" என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
a) வான + மளந்தது
b) வான் + அளந்தது
c) வானம் + அளந்தது
d) வான் + மளந்தது

31. அகர வரிசை உயிர் மெய் குறில் எழுத்துகளை பக்க இடப்பட்டவை என்னவாக கருதப்பட்டன?
a) குறில்
b) நெடில்
c) குற்றியலுகரம்
d) குற்றியலிகரம்

32. " முந்தைய மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே எழில் மகளே எந்தன் உயிர்" இப்பாடல் வரிகளை இயற்றியவர்?
a) து.அரங்கன்
b) பாரதியார்
c) பாரதிதாசன்
d) தேவநேயப் பாவணர் 

33 . என்றென்றும் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?
a) என் + என்றும்
b) என் + றென்றும்
c) என்று + என்றும்
d) என்றும் + என்றும்

34. சீட்டு + கவி என்னும் சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது ?
a) சீட்கவி
b) சீட்டுக்கவி
c) சீட்டுகவி
d) சீடைகவி

35. எழுத்துகள் நீண்டு ஒலிப்பது?
a) ஆயுதம்
b) உயிர்மெய்
c) குறில்
d) அளபெடை

36. சேர மண்டலம் பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகள் இடம் பெற்றுள்ளன?
a) பத்தாம் நூற்றாண்டு
b) பதினாறாம் நூற்றாண்டு 
c) ஒன்பதாம் நூற்றாண்டு
d) பன்னிரண்டாம் நூற்றாண்டு

37.இரா.இளங்குமரானார் திருச்சியில் உள்ள எந்த ஊரில் திருவள்ளுவர் தவசாலையும் பாவணர் நூலகமும் அமைத்துள்ளார்?
a) நாவலூர்
b) நெல்லூர்
c) அல்லூர்
d) நல்லூர்

38. பாரதியின் நூல்களுள் உரைநடை நூல் எது?
a) குயில் பாட்டு
b) பாஞ்சாலி சபதம்
c) சந்திரிகையின் கதை
d) கண்ணன் பாட்டு

39.இரா.இளங்குமரனார் தொகுதி நூல் எது?
a) இலக்கண வரலாறு
b) தமிழ்இசை இயக்கம்
c) தேவநேயம்
d) தனித்தமிழ் இயக்கம்

40. வளர் + மொழி என்பதனை சேர்த்து எழுதுக?
a) வளர்ந்த மொழி
b) வளமொழி
c) வளமை மொழி
d) வளர்மொழி ?

41. இளமைப் பெயர்கள் பொருத்து தவறான இணை எது?
a) புலி - குருளை
b) யானை - கன்று
c) பசு - கன்று
d) கரடி - குட்டி 

42. "சிந்தனை + ஆளர்" என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது?
a) சிந்து ஆளர்
b) சிந்தனையாளர்
c) சிந்தனைஎளர்
d) சிந்தனை ஆளர்

43. செந்தமிழ் அந்தணர் என அழைக்கப்படுபவர் யார்?
a) இரா இளங்குமரனார்
b) பரிதிமாற் கலைஞர்
c) திரு.வி.க
d) மறைமலை அடிகள் 

44. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
a) ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என குறிப்பிடுவர்
b) கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.எகரகலவெட்டுகள் செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து தமிழகத்து என இரு வகையாக பிரிக்கலாம்.
d) செப்பேடுகள் கி.பி எட்டாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

45. எகர ஒகர குறில் எழுத்துகளை குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் எந்த காலம் முதல் இருந்து வந்துள்ளது.?
a) வள்ளுவர்
b) சாத்தானார்
c) தொல்காப்பியர் 
d) இளங்கோவடிகள்

46. சந்திரிகாவின் கதை நூலின் ஆசிரியர்
a) பாரதிதாசன்
b) பாரதியார் 
c) தமிழண்ணல் 
d) கு.பா.ரா

47  வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) வட்டெழுத்து
b) கோட்டெழுத்து
c) சித்திர எழுத்து 
d) ஓவிய எழுத்து

48. மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல்?
a) ஆழி
b) பரவை
c) கடல்
d) வைப்பு

49. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை ________ வகையாகப் பிரிக்கலாம்.
a) நான்கு 
b) இரண்டு
c) ஐந்து
d) மூன்று

50. 'சிந்துக்கு தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர் ' என்றெல்லாம் அழைக்கப்படுபவர்
a) தமிழண்ணல்
b) பாரதிதாசன்
c) குமரகுருபரர்
d) பாரதியார்

51. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
a) தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் 
b) ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்து இயல்களை கொண்டுள்ளது
c) தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் தொல்காப்பியம்
d) தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என மூன்று அதிகாரங்களை கொண்டது.

52. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்து என அறிய எந்த கல்வெட்டு சான்றாகும்.
a) கொடுமணல் கலவெட்டு
b) ஈரோடு கல்வெட்டு
c) அரச்சலூர் கல்வெட்டு
d) ஆனைக்கல்வெட்டு

53. 'எ' என்னும் எழுத்திற்கு கீழ்க்கண்ட 'ஏ' எனச் சீர்த்திருத்தம் செய்தவர் ?
a) பாரதிதாசன்
b) வீரமாமூனிவர்
c) பெரியார்
d) கம்பர்

54. 'அறிந்தது + அனைத்தும்' என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
a) அறிந்தது அனைத்தும்
b) அறிந்தனைத்தும்
c) அறிந்ததனைத்தும்
d) அறிந்துனைத்தும்

55. திணை எத்தனை வகைப்படும்?
a) மூன்று
b) இரண்டு
c)  நான்கு
d) ஐந்து

56. தமிழ் எழுத்துகளில் இப்போது உள்ள நிலையான வடிவத்தை பெற காரணமாக அமைந்தது ?
a) ஓவியக்கலை
b) இசைக்கலை
c) அச்சுக்கலை
d) நுண்கலை

57.தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
a) நான்கு
b) ஆறு 
c) மூன்று
d) ஐந்து

விடைகள் நாளை பதிவிடப்படும்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY