Ads Right Header

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3. முக்கிய வினாவிடை!

 


1."தீர்வனவும் தீராதத்திறத்தனவும் செய்ம்மருந்தின் ஊர்வன வும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்"இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது? 

a) நீலகேசி

b) குண்டலகேசி

c) சீவக சிந்தாமணி

d) வளையாபதி


2.நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை சருக்கங்களை கொண்டுள்ளது? 

a) ஒன்பது

b) ஏழு

c) எட்டு

d) பத்து

3.சமண சமய கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் எது? 

a) வளையாபதி

b) குண்டலகேசி

c) சீவக சிந்தாமணி

d) நீலகேசி


4."தீர்வனவும் தீராதத்திறத்தனவும்.. "எனத் தொடங்கும் பாடலில் நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை? 

a) இரண்டு

b) மூன்று

c) நான்கு

d) ஐந்து


5."உறுதி உடையவேர  உலகில் இன்பம் உடையவராம்" இவ்வரிகளை இயற்றியவர் யார்? 

a) தாராபாரதி

b) நாமக்கல் கவிஞர்

c) கவிமணி

d) வாணிதாசன்


6."காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டு கும்பிட்டு காலன் ஓடிப் போவான்" இவ்வரிகளை இடம் பெற்ற நூல் எது? 

a) மருமக்கள் வழி மானமியம்

b) ஆசிய ஜோதி

c) கதர் பிறந்த கதை

d) மலரும் மாலையும்


7.கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது? 

1. கவிமணி எனப் போற்றப்படுபவர் தேசிய விநாயகம்

2. கவிமணி குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.

3. இவர் 34 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர்.


a) மேற்கண்ட எதுவுமில்லை

b) 2 மட்டும்

c) 3 மட்டும்

d) 1 மட்டும்


8. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது எதன் நீட்சி யாக உள்ளது?

a) மருந்து

b) வாழ்வு

c) உடற்பயிற்சி

d) உணவு


9.மனித மூளையை மேம்போக்காக எத்தனை பாகமாக பிரிக்கின்றனர்? 

a) இரண்டு

b) ஐந்து

c) மூன்று

d) நான்கு 


10.நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி எது? 

a) நடுமூளை

b) உள்மூளை

c) பின்மூளை

d) சிறு மூளை


11.மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது? 

a) 600 மி.லி

b) 900 மி லி

c) 700 மி.லி

d) 800 மி.லி


12.கீழ்கண்டவற்றுள் தவறானது எது? 

1. மூளை உடம்பின் எடையில் ஐந்தில் ஒரு பங்கு

2. மூளைக்கு குருதி,  உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் ஐம்பதில் ஒரு பங்கை எடுத்து கொள்கிறது.


a) 1 மட்டும்

b) இரண்டும்

c) 2 மட்டும்

d) எதுமில்லை


13.மனிதர்கள் சுமார் எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை மனநிலை மாறுகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்?

a) 40 நிமிடங்கள்

b) 90 நிமிடங்கள்

c) 60 நிமிடங்கள்

d) 70 நிமிடங்கள் 


14.சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எவ்வளவு காலம் தூங்குகின்றான்? 

a) இருபது வருடம்

b) முப்பது வருடம்

c) பதினைந்து வருடம்

d) பத்து வருடம்


15.சுஜாதாவின் இயற்பெயர் என்ன? 

a) சுந்தராஜன்

b) ரங்கராஜன்

c) ராமராஜன்

d) பாண்டிய ராஜன்


16.'இவையுண்டார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? 

a) இ + யுண்டார்

b) இவ் + உண்டார்

c) இவை + உண்டார்

d) இ + உண்டார்


17.'தாம்+இனி' என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்? 

a) தாம்மினி

b) தாமனி

c) தாம்இனி

d) தாமினி


18.ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று?

a) வளையாபதி

b) சிலப்பதிகாரம்

c) நீலகேசி

d) குண்டலகேசி


19.நீலகேசி எந்த சமய கருத்துக்களை கூறுகிறது? 

a) இந்து

b) சமணம்

c) பௌத்தம்

d) கிறிஸ்துவம்


20.'போலாதும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

a) போ + தும்

b) போல் + அனதும்

c) போல் + ஆதும்

d) போல் + தும்


21.'உய்ப்பனவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

a) உய் + பனவும்

b) உய்ப்பன + உம்

c) உய்ப்பன + அம்

d) உய்ப் + பனவும்


22.'கூற்றவா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? 

a) கூ + அவா

b) கூற்று + அவா

c) கூற்று + ஆவா

d) கூறி + அவா


23.'ஐம்பெரும்காப்பியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

a) ஐந்து + காப்பியம்

b) ஐந்து + பெருமை + காப்பியம்

c) ஐம்பெருங் + காப்பியம்

d) ஐந்து + பெரு + காப்பியம்


24.'அரும்பிணி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? 

a) அரும் + பணி

b) அருமை + பிணி

c) அரு + பிணி 

d) அரும் + பிணி


25.'அ+பிணி' என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்? 

a) அபிணி

b) அதுபிணி

c) அம்மிணி

d) அப்பிணி


26.'தெளிவு+ஓடு' என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்? 

a) தெளிவோடு

b) தெளிவு ஓடு

c) தெளிவூடு

d) தெளிவாடு


27.'இன்பம்+உற்றே' என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்? 

a) இன்பமுற்று

b) இன்பமற்றே

c) இன்பமுற்றே

d) இன்பம் உற்றோ


28.'நலமெல்லாம்' என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?

a) நலன் + எல்லாம்

b) நலம் + எல்லாம்

c) நலன் + எலாம்

d) நலம் + எலாம்


29.'வருமுன் காப்போம்' பாடலைப் பாடியவர்? 

a) கவிமணி 

b) திரூமுலர்

c) ஔவையார்

d) பாரதியார் 


30.கவிமணி எனப் போற்றப்படுபவர்? 

a) கம்பர்

b) பாரதியார்

c) பாரதிதாசன்

d) தேசிய விநாயகனார் 


31.கவிமணி பிறந்த ஊர்?

a) நெல்லை

b) செஙகை

c) திரூவாரூர்

d) தேரூர்


32.கவிமணி எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்? 

a) 36

b) 35

c) 34 

d) 26


33.ஆசியஜோதி நூலின் ஆசிரியர்?

a) கம்பர்

b) கவிமணி

c) பாரதியார்

d) அறிவழகன்


34.கதர் பிறந்த கதையின் ஆசிரியர்?

a) கவிமணி

b) காந்தி

c) நேரு

d) பகத்சிங்


35.கவி மொழிபெயர்ப்பு செய்த நூல்?

a) கதர் பிறந்த கதை

b) உமர்க்காய்யாம் பாடல்கள்

c) மலரும் மாலையும்

d) ஆசிய ஜோதி


36.மலரும் மாலையும் நூலின் ஆசிரியர்?

a) சுரதா 

b) பாரதியார்

c) வாணிதாசன்

d) கவிமணி


37.'உடையவராம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? 

a) உடை + யவராம்

b) உடையவர் + ராம்

c) உடையவர் + யாம்

d) உடையவர் + ஆம்


38.'நன்மை+நீர்' என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்? 

a) நன்மை நீர் 

b) நல்ல நீர் 

c) நன்நீர் 

d) நன்னீர்


39.தமிழர் மருத்துவம் என்னவென்று அழைக்கப்படுகிறது? 

a) சித்த மருத்துவம்

b) ஹோமியோபதி

c) அக்குபஞ்சர்

d) அல்லோபதி


40.'நோய்நாடி நோய் முதல் நாடி' என்று கூறியவர்?

a) திரூமுலர் 

b) ஔவையார்

c) கம்பர்

d) வள்ளுவர்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY