Ads Right Header

முக்கிய தலைவர்கள் - அயோத்திதாசர்!!



1.பிறப்பு:

  • மே 20 – 1845
  • பிறந்த இடம் – சென்னையில் பிறந்தார்.
  • இயற்பெயர் – காத்தவராயன்
  • ஆசிரியர் – வல்லக்காளத்தி அயோத்திதாசப் பண்டிதர்
  1. இறப்பு:
  • மே 5 – 1914
  • அறிந்திருந்த மொழிகள்:
  • தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி, வடமொழி
  1. கல்வி:
  • தமிழ், சித்த மருத்துவம், தத்துவம், இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத்தத்துவம் ஆகியவற்றை பயின்றார்.
  • அயோத்திதாசப் பண்டிதர் என்பவரிடம் கல்வியும் சித்தமருத்துவமும் பயின்றார்.
  • நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, பாராட்டத்தக்க உழைப்பு ஆகிய ஐந்து பண்புகளையும் ஒருசேரப்பெற்ற சிந்தனையாளர்தான் அயோத்திதாசர்
  • தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றுவர்.
  1. அயோத்திதாசர் எழுதிய நூல்கள்:
  • புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாப விளக்கம், புத்தர் சரித்திரப்பா
  • திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.
  1. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள்:
  • போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்திரனச் சுருக்கம், பாலவாகடம்
  • 1. சமூகப் பணிகள்:
  • தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கென பல பள்ளிகள் உருவாக்கப்படுவதற்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தார்.
  • பிரம்மஞான சபையை நிறுவியவர்களில் ஒருவரான கர்னல் H.S,ஆல்காட் ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாக 1898 ல் இலங்கை சென்று அங்கே பௌத்தத்தைத் தழுவினார்.
  • பிராமணியத்தால் ஒடுக்கப்பட்டவர்களே உண்மையான பௌத்தர்கள் என வாதிட்டார்.
  • பௌத்தசமய நிலைப்பாட்டிலிருந்து தமிழ் இலக்கியங்களுக்கும் நாட்டார் வழக்காற்றியல் மரபுக்கும் புதிய விளக்கங்கள் கொடுத்த அவர் ஒரு மாற்று வரலாற்றைக் கட்டமைத்தார்.
  • ஒடுக்கப்பட்டவர்களை சாதி பேதமற்ற திராவிடர் என அழைத்த அயோத்திதாசர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது அவர்களைச் சாதியற்ற திராவிடர்கள் என பதிவுசெய்யுமாறு வற்புறுத்தினார்.
  • நீலகிரிக்கு சென்று அங்கு வாழ்ந்த அயோத்திதாசர், திருமணத்திற்கு பிறகு பர்மாவுக்கு சென்றார். அங்கு கூலித் தொழிலாளர்களாக வேலை செய்துவந்த தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.
  • பின்னர் தமிழ்நாட்டுக்குத் திரும்பி ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார்.
  • சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஆவர். இவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாசர்
  • இதழ் பணி:
  • 1907 ல் இராயப்பேட்டையைத் தலைமையிடமாக கொண்டு அன்றைய காலணா மதிப்பில் ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் ஒரு வாராந்திரப் பத்திரிகையை தொடங்கி அதை 1914 ல் அவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார்.
  • ஒரு பைசாத் தமிழன் செய்தித்தாள் 1908 ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழன் என்ற பெயரோடு வெளிவந்தது.
  • உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை அகியவற்றைத் தெளிவுப்படுத்துவதே இவ்விதழின் நோக்கம் என்று அயோத்திதாசர் குறிப்பிட்டார்.
  • தமிழன் இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.

 

 

  1. அயோத்திதாசர் தொடங்கிய அமைப்புகள்:
  • தமிழ் பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்தவர்
  • ஒடுக்கப்பட்டோரின் கோவில்நுழைவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவினார்.
  • 1882 ல் அயோத்தி தாசரும் ஜான் திரவியம் என்பவரும் “திராவிடர்க் கழகம் “எனும் அமைப்பை நிறுவினார்.
  • 1885 – திராவிட பாண்டியன் இதழை தொடங்கினார்.
  • 1891 ல் திராவிட மகாஜனசபை என்ற அமைப்பை நிறுவினார்.
  • திராவிட மகாஜனசபை அமைப்பு சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் பராமரித்தல், குடிகளின் பாதுகாப்புக்கு காவல்துறையினரை நியமித்தல், பொதுமருத்துவமனைகள் அமைத்தல், சிற்றூர்கள் தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காகவும் போராடியது.
  • திராவிட மகாஜனசபையின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்.
  • 1898 – சாக்கிய பௌத்த சங்கம் எனும் அமைப்பை சென்னையில் நிறுவினார்.
  1. கல்விச் சிந்தனைகள்:
  • ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிபெற வேண்டுமானால் கல்வி அறிவு அவசியம் என்று அயோத்திதாசர் கருதினார்.
  • நிலவு நாளும் வளர்ந்து முழுநிலவாகி ஒளிவீசுவதுபோல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
  • கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம் வளர்த்தல் போன்றவற்றையும் கற்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
  • சங்ககாலப் பெண்களைப்போலவே, இக்கால பெண்களும் கல்விகற்று தம் வாழ்க்கையை தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையை பெற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
  1. வாழும் முறை:
  • மக்கள் வாழவேண்டிய முறை பற்றி அயோத்திதாசரின் சிந்தனைகள் சிறப்பானவையாகும்.
  • மக்கள் அனைவரும் அன்புக்கொண்டு வாழவேண்டும்; கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்விலிருந்து நீக்கி வாழ வேண்டும்.
  • பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக்கூடாது.
  • மதியை அழிக்கும் போதைப்பொருள்களை கையாலும் தொடுதல் கூடாது.
  • ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் நிறைந்தால், அக்குடும்பம் வாழும் ஊர் முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும்.
  • ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்று திகழும்.
  • இத்தகைய நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும் என்பவை அயோத்திதாசர் கருத்துகள்
  • தலைமை தகுதி:
  • ஒரு நாட்டுக்கு வழிகாட்டும் தலைவர் எத்தகையவராக இருக்கவேண்டும் என்பதை அயோத்திதாசர் விளக்குகிறார்.
  • மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கனவாக இருக்கவேண்டுமானால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி அமைய வேண்டும்.
  • அவர் மக்களுள் மாமனிதராக அறிவாற்றல் பெற்றவராக, நன்னெறியைக் கடைபிடிப்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைவரை வணக்கத்திற்கு உரியவராக மக்கள் ஏற்பார்கள்; கடவுளென துதிப்பார்கள்.
  • மக்களும் மழையும்:
  • மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி அயோத்திதாசர் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கதாகும்.
  • வானம் பொய்ப்பதற்கு காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே.
  • ஞானிகள் இல்லாமைக்கு காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையாகும்.
  • அறிவாளிகள் இல்லாமைக்கு காரணம் ஆட்சித்திறனும் அன்பும் உடைய அரசர்கள் இல்லாமையே.
  • அத்தகைய அரசர்கள் இல்லாமைக்கு காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை ஆகியன உடைய குடிகள் இல்லாமையே என்று கூறுவதன்மூலம் நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது என்கிறார்.
  • சமத்துவம்:
  • மக்கள் அனைவரும் சமஉரிமை பெற்றுச் சமத்துவமாக வாழவேண்டும் என்று விரும்பினார்.
  • கல்வி, வேளாண்மை, காவல்துறை, போன்ற அனைத்துத் துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.
  • ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றிலும் எல்லா வகுப்பினருக்குமு; உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்; இவற்றில் இந்து, பௌத்தர், கிறித்துவர், இசுலாமியர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் போன்ற அனைவருக்குமு; வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

 

 

 

  1. அரசியல் விடுதலையும் மக்கள் உரிமையும்:
  • விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என்பது அயோத்திதாசரின் கருத்து
  • சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது; மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமைய வேண்டும்.
  • மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது என்று ஆணித்தரமாகக் கூறினார் அயோத்திதாசர்
  • தனித்தன்மை:
  • அயோத்திதாசர் காலத்தில் பண்டிதர், புலவர், நாவலர், பேச்சாளர், எழுத்தாளர் என பலர் இருந்தனர்.
  • பகுதிதறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறைக்கொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் அயோத்திதாசர்
  • என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் – தந்தை பெரியார்
  • சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY