Ads Right Header

ஒருவர் அரசுப்பணியில் அமர்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

 


#58வயதுவரை பணிப் பாதுகாப்பு.


#வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை.


#மேலும் அரசு விடுமுறை நாட்கள்.


#வருடத்திற்கு 12நாட்கள் தற்செயல் விடுப்பு. 3நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை.


#நாட்டில் என்ன நடந்தாலும் 31ம் தேதி டாண்ணு சம்பளம்.


#ஒவ்வொரு வருடமும் (6மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி... ஒரு வருடாந்திர ஊதிய உயர்வு)


#பணியில் சேர்ந்த 4....5வருடங்கள் கழித்து பதவி உயர்வு.


#பணியில் சேர்ந்த 4வருடம் முடித்து விட்டால் வீடு கட்ட...வீடு வாங்க எந்த விதமான ஜாமீனும் இல்லாமல் 40லட்சம் வரையிலான கடன்.


#சுமார் 10முதல் 15 வருடங்களில் பச்சை மை கையெழுத்து.


#பணியில் இருக்கும் போது இறந்து விட்டால்...வாரிசு ஒருவருக்கு வேலை.

இறந்த அன்று 5லட்சம் உடனடியாக விடுவிப்பு.


#10வருடத்திற்கு ஒருமுறை சம்பளம் மாற்றி அமைப்பு.


#ஓய்வு பெற்ற பின் பல லட்சங்களில் கிடைக்கும் பணபலன்கள்.


இவ்வளவு நன்மைகள் இருக்கும் ஒரு அரசுப் பணியை பெற நாம் என்ன செய்ய வேண்டும்.???


1.முதலில் மனநிலையை தயார் படுத்த வேண்டும்.


2.பல லட்சம் பேர்கள் தேர்வு எழுதினாலும்...

உண்மையான போட்டி என்பது சில ஆயிரம் பேருக்குள்தான்.


3.10லட்சம் பேர் தேர்வு எழுதினால் 30ஆயிரம் பேருக்குள்தான் போட்டி இருக்கும்.


4.பெரும்பாலோர்  தேர்வுக்கு முந்தைய 10நாட்கள் அல்லது ஒரு மாதம் மட்டுமே படித்து விட்டு தேர்வெழுத வருவார்கள்.


5.முறைப்படி படிக்காமலும்....

முழுமையான தயாரிப்பு இல்லாமலும்தான் 80%பேர் வருவார்கள்.


6.எனவே தேர்வு எழுத வருபவர்களின் எண்ணிக்கையை பார்த்து கவலைப்பட... பயப்பட வேண்டாம்.


7.எந்த தேர்வுக்கு தயாராகிறீர்களோ...அந்தத் தேர்வின் கடந்த 5வருட வினாத்தாள்களை தேடி எடுத்து.. நிதானமாக படித்து பார்த்து தேர்வு பற்றிய தீர்க்கமான.. தெளிவான நிலைப்பாட்டிற்கு வாருங்கள்.


8.தேர்வு தொடர்பான பாடத்திட்டங்களை சேகரித்து.. ஆய்வு செய்யுங்கள்.


9.தேர்வு தொடர்பான புத்தகங்களை சேகரியுங்கள். புத்தகங்களுக்கான செலவு என்பது சிறு முதலீடு என்று புரிந்து கொள்ளுங்கள்.


10.எழுதப் போகும் தேர்வு தரும் பதவியில்  நிச்சயமாக அமர்வேன் என்ற எண்ணத்துடன் படிக்கத் தொடங்குங்கள்.

தினசரி 7மணி நேரத்திலிருந்து 8மணிநேரம் வரை அவசியம் படியுங்கள். தொடர்ச்சியாக படிக்காமல் 8மணிநேரத்தை நான்கு பகுதிகளாக பிரித்து கொண்டு படியுங்கள்.


11.ஏதாவது ஒருநாள் படிக்கவில்லை என்றால்,

    "வாசிக்காத நாட்கள்

      சுவாசிக்காத நாட்கள்"...!

 என நினையுங்கள்.


12.வருடம் முழுவதும் உங்கள் உறவுகளில் ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சிகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

அரசுப்பணியில் அமர்ந்த பின்புதான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்ற வைராக்கியத்தை வளர்த்து கொள்ளுங்கள்.


13.தினமும் ஒரு நல்ல செய்தி தாட்களை படிக்கவும். அதில் உள்ள நல்ல விசயங்களை குறிப்பு எடுக்கவும்.


14.நிறைவாக படித்து அரசுப்பணியில் சேர்வது என்று முடிவெடுத்து விட்டால் அதற்கான பணியை இன்றே தொடருங்கள்.


#AllTheBest 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY