Ads Right Header

காடுகள் குறித்து முக்கிய குறிப்புகள்!

 


*காடுகள்*

🌳 காடு என்ற சொல் ஃபாரிஸ் என்ற இலத்தீன் மொழியில் இருந்து வந்தது.

*🌳 காடுகளின் வகைகள்:-*


1. வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்

2. வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்

3. குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்

4. பாலைவனத் தாவரம்

5. மாங்ரோவ் காடுகள்

6. மலைக்காடுகள்.


1. வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள்:

🌳 ஆண்டிற்கு மழைபொழிவு 200 செ.மீ. அதிகமாக இருக்கும்

🌳 60 மீ உயரம் வரை வளரக் கூடியவை

🌳 காணப்படும் மரங்கள் - ரோஸ், எபானி, மகோகனி, ரப்பர், சின்கோனா, மூங்கில், லயானாஸ்

🌳 காணப்படும் இடங்கள் - அந்தமான் நிக்கோபார், மேற்கு தொடர்ச்சி மலைகள், அஸ்ஸாம், ஒடிசா

2. வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்:

🌳ஆண்டிற்கு மழை அளவு 70 செ.மீ. முதல் 200 செ.மீ. வரை

🌳 கோடைகாலத்தில் சுமார் 6 முதல் 8 வாரங்கள் வரை இலைகளை உதிர்த்து விடுகிறது

🌳 இதனால் இதற்கு இலையுதிர் காடுகள் என்று வேறு பெயரும் உண்டு.

🌳 காணப்படும் மரங்கள் - தேக்கு, சால், சந்தனம், சிகம், வேட்டில், வேப்பமரம்

🌳 காணப்படும் பகுதிகள் - இமயமலை அடிவாரத்தில், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்கு தொடர்ச்சி மலைகள், ஒடிசா

🌳 வறண்ட பருவகாற்று காடுகள் காணப்படும் பகுதி - பீகார், உத்திர பிரதேசம்

3. குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்:

🌳 ஆண்டிற்கு மழை அளவு - 75 செ.மீ. குறைவாக இருக்கும்

🌳 காணப்படும் மரங்கள் - அக்கேசியா, பனை, கள்ளி, கயிர், பாபூல், பலாஸ், கக்ரி, கஜீரி

🌳 காணப்படும் பகுதிகள் - குஜராத், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா

4. பாலைவனத் தாவரம்:

🌳ஆண்டிற்கு மழை அளவு - 25 செ.மீ. குறைவாக இருக்கும்

🌳 காணப்படும் மரங்கள் - அக்கேசியா, ஈச்சமரம், பாபுல்

🌳 இவ்வகையான மரங்கள் உயரம் - 6 லிருந்து 10 மீ உயரம் வரை மட்டுமே இருக்கும்

🌳 பாபுல் மரங்கள் கோந்து பொருட்கள் அதன் பட்டைகள் தோல் பதனிடுவதற்கு பயன்படுகிறது.

🌳 காணப்படும் பகுதிகள் - ராஜஸ்தான், கட்ச் பகுதி, குஜராத் தில் உள்ள சௌராஷ்டிரா, தென் மேற்கு பஞ்சாப்

*5. மாங்குரோவ் காடுகள்:*

🌳 இவ்வகையான காடுகளுக்கு வேறு பெயர்கள் - சதுப்பு நில காடுகள், ஓதக் காடுகள், ஹலோபைட் படைகள்

🌳 காணப்படும் மரங்கள் - சுந்தரி மரங்கள்

🌳 காணப்படும் பகுதிகள் - கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி டெல்டா பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள்

🌳 மேற்கு வங்காளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது - சுந்தரவனம்.


*6-மலைக்காடுகள்:-*


🌳 இரண்டு வகை:

1. இமயமலைத்தொடர் மலைக்காடுகள்

2. தீபகற்ப பீடபூமி மலைக்காடுகள்.


1. இமயமலைத்தொடர் மலைக்காடுகள்:-

🌳 1000 மீ முதல் 2000 மீ வரை காணப்படும் மரங்கள் - ஓக், செஸ்நெட்

🌳 1500 மீ முதல் 3000 மீ வரை காணப்படும் மரங்கள் - பைன், டியோடர், சில்வர், பீர், ஸ்பூருஸ், செடர்

🌳 3600 மீ மேல் பகுதியில் வளரும் மரங்கள் - சில்வர்ஃபிர், ஜுனிபெர்ஸ், பைன், பிர்ச்சஸ், மோசஸ், லிச்சன்ஸ்.


*2.தீபகற்ப மலை காடுகள்:மூன்று வகை படும்.*

1. மேற்கு தொடர்ச்சி மலைகள்

2. விந்திய மலைப்பகுதி

3. நீலகிரி மலைப்பகுதி


🌳 நீலகிரியிலுள்ள வெப்பமண்டல காடுகள் வேறுபெயர் - சோலாஸ்

🌳 சோலாஸ் வகை தாவரங்கள் சாத்பூரா மற்றும் மைக்கலா மலைதொடரில் காணப்படும்

🌳 காணப்படும் மரங்கள் - மேக்னோலியா, லாரல், சின்கோனா, வேட்டில்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY