Ads Right Header

Breaking News - PGTRB தேர்வு தேதிகள் அறிவிப்பு!


பத்திரிகைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரியம் ,            சென்னை 600 006 .  

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 - 2020-21 - காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 

12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்தப்படும் என 12.01.2022 பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது . 

12.02.2022 முதல் 15.02.2022 வரை 4 நாட்களுக்குரிய கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 28.01.2022 வெளியிடப்படுகின்றது .

இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி அறிவிக்கப்படும் . ஆங்கிலம் , கணிதம் , கணினி அறிவியல் பாடங்களுக்குரிய அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் . 

இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது . இணைப்பு : கால அட்டவணை . 

நாள் : 28.01.2022 . 

ஆசிரியர் தேர்வு வாரியம்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY