Ads Right Header

(Official key) 22-1-2022 நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வின் விடைத்தாள்!


22-1-2022 நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வின் விடைத்தாள் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது.


Official Answer key

Download here

 எட்டாம் வகுப்பு தமிழ் முழுவதும்...

விடைகள்
                     
1) இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்?
அ) இ,ஈ
ஆ)உ,ஊ👍
இ)எ,ஏ
ஈ)அ,ஆ

2) வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்?
அ)தலை 
ஆ)மார்பு 👍
இ)மூக்கு
ஈ) கழுத்து

3)எழுத்துகளின் பிறப்பினை _______ வகைகளாகப் பிரிப்பர்
அ)2 👍
ஆ)3
இ) 4 
ஈ)5 

4) தமிழகத்தின் "வேர்ட்ஸ் வொர்த்" என புகழப்படுபவர்?
அ) பாரதியார் 
ஆ)பாரதிதாசன் 
இ)வாணிதாசன் 👍
ஈ)வண்ணதாசன்

5)"செத்திறந்த" எனும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
அ)செ+திறந்த
ஆ)செத்+திறந்த 
இ)செ+இறந்த  
ஈ) செத்து+இறந்த👍

6)"நீரானது" எனும்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது? 
அ)நீ+ரானது 
ஆ)நீர்+அனது 
இ)நீர்+ஆனது👍
ஈ) நீரா+னது

7)பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்று எது?
அ) செல்க 
ஆ)ஓடு 👍
இ)வாழ்க 
ஈ)வாழிய 

8)காலத்தை வெளிப்படையாய்க் காட்டாது செய்பவரை மட்டும் காட்டும் வினைமுற்று?
அ)தெரிநிலை வினைமுற்று 
ஆ)குறிப்பு வினைமுற்று 👍
இ)ஏவல் வினைமுற்று 
ஈ)வியங்கோள் வினைமுற்று

9) புகழாலும், பழியாளும் அறியப்படுவது?
அ) அடக்கமுடைமை 
ஆ)நாணுடைமை 
இ)நடுவுநிலைமை 👍
ஈ)பொருளுடைமை

10) திருக்குறளில் பொருட்பால்_____ இயல்களைக் கொண்டது.
அ) 2 
ஆ)3 
இ)4👍
ஈ) 5 

11)நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக_____ சருக்கங்கள் உள்ளன.
அ) 8
ஆ) 9 
இ)10👍
ஈ) 11 

12)கவிமணி பிறந்த ஊர்?
அ) மூதூர்
ஆ) படூர் 
இ)தேரூர்👍
ஈ) கரூர்

13)" நோய்நாடி நோய்முதல் நாடி" எனக் கூறியவர்? 
அ)கம்பர்
ஆ)வள்ளுவர் 👍
இ)ஒளவையார்
 ஈ)திருமூலர்

14)எச்சம்_____வகைபடும்.
அ) 2👍
ஆ) 3 
இ)4 
ஈ)5

15) இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) கம்பராமாயணம் 👍
ஆ)பெரியபுராணம் 
இ)கலித்தொகை 
ஈ)பத்துப்பாட்டு

16)" அறத்தான் வருவதே இன்பம்"  இத்தொடரில் வேற்றுமையணி பயின்று வந்துள்ளது?
அ) இரண்டாம் 
ஆ)மூன்றாம்👍
இ) ஆறாம்
ஈ) ஏழாம்

17)" புகை மனிதனுக்குப் பகை" இதிலுள்ள நான்காம் வேற்றுமை பொருள்?
அ) தகுதி
ஆ) நட்பு 
இ)பகை👍
ஈ) முறை 

18)உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை?
அ) முதல் வேற்றுமை 
ஆ)ஐந்தாம் வேற்றுமை 
இ)ஆறாம் வேற்றுமை 👍
ஈ)ஏழாம் வேற்றுமை

19) தேவாரத்தை தொகுத்தவர்?
அ) நம்பியாண்டார் நம்பி 👍ஆ)திருநாவுக்கரசர் 
இ)சுந்தரர் 
ஈ)நாதமுனி

20) கலித்தொகையை தொகுத்தவர்?
அ) ஓரம்போகியார் 
ஆ)அம்மூவனார் 
இ)பெருங்கடுங்கோ 
ஈ)நல்லந்தூவனார்👍

21) கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை_____
அ) 406
ஆ) 156
இ) 150 👍
ஈ)120 

22)"மட்டுமல்ல" எனும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
அ) மட்டும்+மல்ல
ஆ) மட்டம்+அல்ல 
இ)மட்டு+அல்ல
ஈ) மட்டும்+அல்ல👍

23) முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள தமிழக இடம்?
அ)சிந்துவெளி 
ஆ)ஆதிச்சநல்லூர் 👍
இ)செம்பியன் கண்டியூர் 
ஈ)கீழடி 

24)"கலாமஸ் ரொடாங்" எனும் தாவரவியல் பெயர் கொண்டது?
அ) பிரம்பு 👍
ஆ)மூங்கில் 
இ)பனை
ஈ) தென்னை 

25)'கம்பர் பாடல்' இதில் இடம்பெற்றுள்ள வேற்றுமையுருபு?
அ) கு 
ஆ)இன் 
இ)அது 👍
ஈ)கண்     

26) கதிர்+ஈன என்பதைச் சேர்த்து எழுத கிடைப்பது?

அ) கதிரென 
ஆ)கதியீன
இ) கதிரீன👍
ஈ) கதிரின்ன

27) தர்மபுரியின் பழைய பெயர்?

அ) மாமண்டூர் 
ஆ)வடுவூர் 
இ)தகடூர் 👍
ஈ)குரும்பூர் 

28)பழங்காலத்தில் விலையை கணக்கிட அடிப்படையாய் அமைந்தது?

அ) புல்
ஆ) நெல்👍
இ) உப்பு
ஈ) மிளகு

29) சுங்குடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர்?

அ) குடநாடு
ஆ) வஞ்சி 
இ)சின்னாளபட்டி👍
 ஈ)ஆரணி

30) விகாரப் புணர்ச்சி_____ வகைப்படும்?

அ). 5
ஆ) 4 
இ). 3 👍
ஈ).   2 

31)கலிங்கத்துப்பரணி____ வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ?

அ). 96 👍
ஆ). 24
இ) 66
ஈ) 86 

32)"தென்தமிழ் தெய்வப் பரணி" என கலிங்கத்துப் பரணியை புகழ்ந்தவர்?

அ) புகழேந்தி
ஆ) ஒட்டக்கூத்தர்👍
இ)பலபட்டை சொக்கநாதப் புலவர்
 ஈ)முதலாம் குலோத்துங்கன்

 33)ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?

அ) திருச்சி 
ஆ)சென்னை 
இ)மதுரை👍
ஈ) கோவை

34) இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ____எனும் பட்டத்தை எம்ஜிஆருக்கு வழங்கியது?

அ)புரட்சி நடிகர்
ஆ) பாரத்👍
இ) பாரத மாமணி 
ஈ)புரட்சி கலைஞர் 

35)எம்ஜிஆர் பிறந்த ஆண்டு?

அ) 1916
ஆ)1917👍
இ)1918
ஈ)1919

36)எம்ஜிஆர் எங்கு பிறந்தார்?

அ) பொலநருவே
ஆ) யாழ் 
இ)கண்டி 👍
ஈ)கும்பகோணம்

37)" தமிழ் மூவாயிரம்" என அழைக்கப்படும் நூல்?

அ) திருக்குறள்
ஆ) திருமந்திரம் 👍
இ)திருப்பாவை
 ஈ)திருவெம்பாவை

38) அயோத்திதாசர்___ சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்?

அ) தமிழக
ஆ) இந்திய 
இ)தென்னிந்திய👍
 ஈ)ஆசிய 

39)"ஒரு பைசா தமிழன்" இதழ் ஓராண்டிற்கு பிறகு அடைந்த பெயர் மாற்றம்___?

அ) திராவிடன்
ஆ) தேசபக்தன்
 இ)ஒரு பைசா
 ஈ)தமிழன்👍
 
40)அசை__ வகைப்படும்

அ)2👍
ஆ)6
இ)9
ஈ)4

41) "செப்பல் ஓசை "உடைய பா எது?

அ) வெண்பா 👍
ஆ)ஆசிரியப்பா
இ) கலிப்பா 
ஈ)வஞ்சிப்பா

42) நிரையசை அல்லாதது எது?

அ) கட
ஆ) கடல்
இ) கடா 
ஈ)நாம் 👍

43)தளை__ வகைப்படும்

அ) 6
ஆ)8
இ) 9
ஈ)7👍

44) யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களின் வகை?

அ)2
ஆ)3👍
இ)4
ஈ)5 

45)"கான முயல்எய்த அம்பினில் யானை" என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

அ) பிறிது மொழிதல் அணி 👍
ஆ)உவமை அணி 
இ)வேற்றுமை அணி
ஈ) இல்பொருள் உவமையணி 

46)திருப்பாவை என்னும் நூலை இயற்றியவர் யார்?

அ) ஆண்டாள் 👍
ஆ)மாணிக்கவாசகர் 
இ)சேசுராசா 
ஈ)இறையரசன்

47) சாகித்திய அகாதெமி விருது பெற்ற மேத்தாவின் நூல்__.

அ) மகுட நிலா
ஆ) கண்ணீர் பூக்கள் 
இ)ஊர்வலம்
ஈ) ஆகாயத்துக்கு அடுத்த வீடு👍

48) பிறிது மொழிதல் அணியில்____ மட்டும் இடம்பெறும்.

அ) உவமை👍
ஆ) உவமேயம்
இ) தொடை
ஈ) சந்தம் 

49)திரு.வி.க எழுதாத நூல் எது ?

அ)பெண்ணின் பெருமை 
ஆ))பொதுமை வேட்டல்
இ) முருகன் அல்லது அழகு 
ஈ)வா இந்தப் பக்கம்👍

50) தமிழ் மக்களிடம்___ வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்தன?

அ) 16
ஆ)19
இ)36👍
ஈ)7

51) அம்பேத்கர் பிறந்த ஊர்?

அ) அம்பவாதே 👍
ஆ)அகமதாபாத் 
இ)காந்திநகர்
ஈ)அலகாபாத்

52) அம்பேத்கர் பண்டையகால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலை பட்டம் பெற்ற ஆண்டு?

அ) 1910
ஆ) 1907
இ )1912
ஈ) 1915👍

53)"வெரிஇ" என்பதன் பொருள்?

அ) ஓசை 
ஆ)வருவாய்
இ) அஞ்சி 👍
ஈ)புது வருவாய்

54)பாரதிதாசன் யாரை "செந்தமிழ் தேனீ" என புகழ்ந்தார்?

அ) மீரா 
ஆ)பாரதியார் 👍
இ)முடியரசன் 
ஈ)து. அரங்கன்

55)"நிலம், தீ, நீர், வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"- என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ?

அ)பெரியபுராணம் 
ஆ)தொல்காப்பியம் 👍
இ)திருப்பாவை 
ஈ)திருவாசகம்

56) பொருத்துக.

1. புலி - 1) கன்று
2. யானை -2) குட்டி
3. சிங்கம் -3)குருளை
4. ஆடு -4) பறழ்

அ)1-2,2-2,3-3,4-4
ஆ)1-4,2-1,3-2,4-3
இ)1-4,2-3,3-1,4-2
ஈ)1-4,2-1,3-3,4-2👍

57)ஓரெழுத்து மொழி அல்லாதது எது ?

அ)சா 
ஆ)சீ 
இ)சௌ 👍
ஈ)சோ

58)இரா. இளங்குமரனார் எழுதாத நூல் எது?

அ)இலக்கண வரலாறு 
ஆ)தமிழிசை இயக்கம் 
இ)தனித்தமிழ் இயக்கம் ஈ)இலக்கணவிளக்கம்👍

59) சரியானதை தேர்ந்தெடு?

அ) ற், ன் -ஆகிய இரு மெய்களும் மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன .👍

ஆ)ள்-இது மேல்வாய் பல்லை கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது 

இ) வ்-இது மேல்வாய் நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுவதால் பிறக்கின்றன

 ஈ)ப்,ம் -இது நான்கின் அடிப்பகுதி மேல் வாயின் அடிப்பகுதியை பொருந்துவதால் பிறக்கிறது

60) பஞ்சக்கும்மிகள் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?

அ) வெங்கம்பூர் சாமிநாதன்
ஆ)செ. ராசு 👍
இ)ந.வானமாமலை
ஈ)வ. கீதா

61)ஏவல் வினைமுற்று பற்றியவைகளில் தவறானது எது?

அ) முன்னிலையில் வரும்
ஆ) ஒருமை பன்மை வேறுபாடு 
இல்லை 👍
இ) கட்டளை பொருளை மட்டும் உணர்த்தும்
ஈ) விகுதி பெற்றும் பெறாமலும் வரும் 

62)"வலியில் நிலைமையாள்
வல்லுருவம் பெற்றம்"- என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி?

அ) உவமை அணி
ஆ) வேற்றுமை அணி
இ) இல்பொருள் உவமை அணி 👍
ஈ)வஞ்சப்புகழ்ச்சி அணி

63) திருக்குறளின் அறத்துப்பாலில் இல்லாத இயல் எது?

அ)பாயிரவியல்
ஆ) இல்லறவியல் 👍
இ)ஒழிபியல்
ஈ) ஊழியல்

64)" கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்"- என்னும் குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்?

அ) குற்றங்கடிதல் 
ஆ)கல்லாமை 
இ)இடனறிதல் 👍
ஈ)கூடாஒழுக்கம்

65) குமரகுருபரர் வாழ்ந்த காலம்?

அ)16ம் நூற்றாண்டு
ஆ) 17ம் நூற்றாண்டு 👍
இ)18ம் நூற்றாண்டு 
ஈ)15ம் நூற்றாண்டு

66) நீதிநெறிவிளக்கம் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்களைக் கொண்டது?

அ) 102 
ஆ)100 
இ)103 
ஈ)101 👍

67)"ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்"- என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ) வ.கீதா
ஆ) இரா. இளங்குமரன் 
இ) சுஜாதா 
ஈ ) பி.ச. குப்புசாமி 👍

68)நான்காம் வேற்றுமை உருபு எது?

அ) அ 
ஆ) கு 👍
இ)இல்
ஈ) ஒடு 

69)பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையில் ஆசிரியர் யார்?

அ) திருஞானசம்பந்தர் 
ஆ) திருநாவுக்கரசர் 
இ) சுந்தரர்👍
ஈ) நம்பியாண்டார் நம்பி

 70)கலித்தொகை___பா வகையால் ஆனது.

அ) வஞ்சிப்பா 
ஆ)வெண்பா 
இ)கலிப்பா👍
ஈ)ஆசிரியப்பா

71)தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

அ) வேப்ப மரம்
ஆ) புன்னை மரம்
இ) அரச மரம்
ஈ) பனைமரம் 👍

72)"சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையான்"- என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

அ) திருப்பாவை👍
ஆ) திருக்குறள்
இ) பெரிய புராணம் ஈ)திருவாசகம் 

73) "கலைஉணக் கிழந்த முழவு மருள் பெரும் பழம்"- என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

அ) அகநானூறு 
ஆ)புறநானூறு 👍
இ)நற்றிணை 
ஈ)பரிபாடல் 

74)"தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகக் குறிப்பிடும் நூல் எது?

அ) சிலப்பதிகாரம்👍
ஆ) புறநானூறு
இ) பெரியபுராணம்
ஈ) மதுரைகாஞ்சி

75) வேற்றுமையின் வகை___?

அ) 6
ஆ) 7
இ) 8 👍
ஈ)  3

76) ஒன்றுக்கு மேற்பட்ட உம் என்னும் உருபு வெளிப்பட வருவது ____எனப்படும்.

அ) அன்மொழித் தொகை
ஆ) உவமைத் தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) எண்ணும்மை👍

77) தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
அ) 6
ஆ)7
இ)9 👍
ஈ)10 

78)கீழ்க்கண்டவற்றில் இடைச்சொற்றொடர் எது?

அ) வரைந்த ஓவியம் 
ஆ) மற்றுப்பிற 👍
இ) நண்பா படி
ஈ) சாலவும் நன்று

79)'சடங்கு 'என்னும் கலைச் சொல்லுக்குரிய ஆங்கிலச்சொல்?

அ) basketry
ஆ) Rite👍
இ) Kite
ஈ) Horn

 80)'பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்'- என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?

அ) செசுராசு
ஆ) வ.கீதா
இ) அ.கௌரன் 👍
ஈ) மீரா

 81)தொல்காப்பியம் "போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்"- என மன்னரை கூறுகிறது?

அ) சோழர் 
ஆ)களப்பிரர்
இ) சேரர் 👍
ஈ)பாண்டியர்

82) கலைந்த பொற்பரிசம் கழிந்தோணியால் கரைசேர்க்குது" என்னும் வரி இடம் பெற்ற நூல் எது?

அ) அகநானூறு 
ஆ)பரிபாடல்
இ) மதுரைக்காஞ்சி
ஈ) புறநானூறு 👍

83)"காங்கேயம்" காளைகளுக்கு பெயர் பெற்ற மாவட்டம் எது?

அ) ஈரோடு
ஆ) திருப்பூர் 👍
இ) நாமக்கல் 
ஈ) திண்டுக்கல் 

84)"அன்னம் விடு தூது" என்னும் இதழை நடத்தியவர் யார்?

அ) புதுமைப்பித்தன் 
ஆ) மீ.இராஜேந்திரன்👍
இ) பாரதியார்
ஈ) வாணிதாசன்

85)"என் பகுத்தறிவுப் பிரச்சாரம் சீர்திருத்தக் கருத்துக்களும் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசர் தங்கவயல் அப்பாதுரையாரும்  ஆவார்கள் "-எனக் கூறியவர்?

அ) அம்பேத்கர்
ஆ) பாரதியார் 
இ) பெரியார் 👍
ஈ)எம்ஜிஆர்

86) புதுமைப்பித்தன் எழுதாத நூல்?

அ) கடவுளும் கந்தசாமி பிள்ளையும்
ஆ) சாபவிமோசனம் 
இ)பொன்னகரம்
ஈ)இரு நாள் கழிந்தது👍

87)" பா" எத்தனை வகைப்படும்?

அ) 7
ஆ)8
இ)4 👍
ஈ)6

88)கலித்தொகை ____ஓசை உடையது.

அ)தூங்கல்
ஆ)துள்ளல் 👍
இ)அகவல் 
ஈ)செப்பல் 

89)"ஒடுக்கப்பட்ட பாரதம்" எனும் இதழை அம்பேத்கர் தொடங்கிய ஆண்டு?

அ) 1926
ஆ) 1935 
இ) 1927 👍
ஈ). 1930 

90)அம்பேத்கர் புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஆண்டு ?

அ)1957 
ஆ)1956👍
இ) 1948 
ஈ)1954

91)சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் யார்?

அ) பாரதிதாசன் 
ஆ)பாரதியார் 👍
இ)வாணிதாசன்
ஈ) புதுமைப்பித்தன்

92) மொழிக்குரிய ஒழுங்குமுறைகள்____ எனப்படும்.

அ) மரபு👍
ஆ) கலாச்சாரம் 
இ) பண்பாடு 
ஈ) ஒழுக்கம் 

93) திணை ____வகைப்படும்

அ) 3
ஆ)2👍
இ)4
ஈ)5 

94)செய்யுளுக்கு மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி____ கூறுகிறது.

அ) நற்றிணை 
ஆ)குறுந்தொகை 
இ)சிலப்பதிகாரம் 
ஈ)தொல்காப்பியம்👍

95) தொல்காப்பியம்___ அதிகாரங்களை கொண்டுள்ளது.

அ) 5 
ஆ)6
இ)3👍
ஈ)9 

96)தமிழ் எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர்?

அ)பெரியார் 
ஆ)வீரமாமுனிவர் 👍
இ)பாரதிதாசன்
ஈ) பெருஞ்சித்திரனார்

97) _____கிபி 7ம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. 

அ)செப்பேடுகள்👍
ஆ) கல்வெட்டுகள் 
இ)குடவோலை
ஈ)ஓவியங்கள்

98)கண்ணெழுத்துகள் பற்றி குறிப்பிடும் நூல்___

அ) திருக்குறள் 
ஆ)மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) சிலப்பதிகாரம்👍

99)தமிழ் மொழியை எழுத இரு வகை எழுத்துக்கள் வழக்கில் இருந்தன என்பதை அறிய உதவும் கல்வெட்டுச் சான்று?

அ) ஆதிச்சநல்லூர்
ஆ) அரச்சலூர் 👍
இ)மானூர்
ஈ) உத்திரமேரூர்

100) 'எ' என்னும் எழுத்து கீழ்க் கோடிட்டு 'ஏ'என சீர்திருத்தம் செய்தவர் யார்?

அ) பெரியார் 
ஆ)வீரமாமுனிவர்👍
இ) பாரதிதாசன்
ஈ) கம்பர்




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY