Ads Right Header

12th 50 + 50 - Polity Questions!


12th POLITICAL  SCIENCE

வினாக்கள்.

1.குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டத்தின் அதிகபட்ச செல்லுபடியாகும் காலம் -------------ஆகும்?
 A.ஆறு மாதங்கள்
 B.ஆறு வாரங்கள்
 C.ஆறு மாதங்கள் மற்றும் ஆறு வாரங்கள்
 D.நிர்ணயிக்கப்படவில்லை

2. பின்வருபவர்கள் யார் பாராளுமன்றத்தின் இரண்டு அவையிலும் பங்கேற்க மற்றும் உரையாற்றும் உரிமையை கொண்டவர்கள்?
 
I.மத்திய அமைச்சர்
II.பிரதமர்
III.இந்திய அரசு தலைமை வழக்கறிஞர
IV.இந்தியதலைமைகணக்குத் தணிக்கையாளர்
 குறியீடுகள்:
A.I மற்றும் II
B.I மற்றும் III
C.I, II மற்றும் III
D.I, III மற்றும் IV

3. பின்வரும் அம்சங்களில் எது 2003 ஆம் ஆண்டின் 91 வது சட்டத்திருத்தச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்டது?
 A.அமைச்சரவை அல்லது மாநிலங்களவையின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது. 
B. அமைச்சரவை அல்லது பாராளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது.
C.அமைச்சரவையானது மக்களவையின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது. 
D அமைச்சரவை அல்லது ஆளும் கட்சி கூட்டணி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது.

 4.பின்வருபவர்கள் யார் குடியரசுத்தலைவரின் தேர்தலில் பங்கு கொள்ள மாட்டார்கள்?
 A.மக்களவையின் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்
 B.மாநிலங்களவையின் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்
 C.மாநில சட்டமன்றத்தில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்
 D சமீபத்தில் கலைக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
குறியீடுகள்:
A.I மற்றும்II
B.I ,IIமற்றும் III
C.II மற்றும் III
D. மேற்கண்ட அனைவரும்

5. பி. ஆர். அம்பேத்கர் அவரது மத்திய அமைச்சர் பதவியை ----------ஆண்டு ராஜினாமா செய்தார்?
 A.1950
 B 1953
 C.1955
 D.1956

6. சுதந்திர இந்தியாவுக்கான காந்திய வரைவு அரசியல் அமைப்பினை வெளியிட்டவர் யார்?
 
 A.ஜவகர்லால் நேரு
 B.ஜே சி குமரப்பா
 C.ஸ்ரீமன் நாராயணன்
 D.அம்பேத்கர்

7. பின்வரும் குழுக்களில் எது மத்திய உள்துறை அமைச்சர் அவர்களால் தலைமை தாங்கபடுகிறது?
 A.நியமன குழு
 B.பொருளாதார விவகாரங்கள் குழு
 C பாராளுமன்ற விவகாரங்கள் குழு
 D அரசியல் விவகாரங்கள் குழு

8. 1870ஆம் ஆண்டில் நிதி அதிகாரப்பகிர்வு ஆணையை தீர்மான வடிவில் வழங்கியவர் யார்?
 
 A.ரிப்பன் பிரபு
 B.மேயோ பிரபு
 C. டல்ஹௌசி பிரபு
 D. கானிங் பிரபு

 9.மாநில அமைச்சரவையின் அளவு----------ஆல் தீர்மானிக்கப்படுகிறது?
 A.ஆளுநர்
 B.அமைச்சரவை
 C. முதலமைச்சர்
 D.A மற்றும் B இரண்டும்

10. இந்தியாவில் பாராளுமன்ற நடைமுறைகளைப் பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறியவும்?
 
A.கேள்வி நேரமானது செயல்பாட்டு நடைமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
B.பூஜ்ஜிய  நேரமானது இந்திய பாராளுமன்ற நடைமுறையில் 1962 ஆம் ஆண்டிலிருந்து வருகிறது.
 C.கவன ஈர்ப்பு தீர்மானம் என்பது பாராளுமன்ற நடைமுறையில் ஒரு இந்திய கண்டுபிடிப்பாகும். இது 1954 இல் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
 D.நொண்டி வாத்து அமர்வு என்பது புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவையின் முதல் அமர்வாகும்.

11. பஞ்சாயத்து நிதி நிர்வாகம் தொடர்பான ஆய்வு குழு கே. சந்தானத்தின் தலைமையின் கீழ் --------ஆண்டு அமைக்கப்பட்டது?
 
 A. 1961
 B. 1963
 C. 1971
 D. 1973

12. பின்வரும் திருத்தங்களில் எது கேபினேட் என்ற சொல்லை அரசியலமைப்பில் சேர்த்தது?
 A.7 ஆவது திருத்தச் சட்டம் 1956
 B 42 ஆவது திருத்தச் சட்டம் 1976
 C.44 ஆவது திருத்தச் சட்டம் 1978
 D.52 வது திருத்தச் சட்டம் 1956

13. பிரதமரின் ஊதியம் மற்றும் சலுகைகள்------ ஆல் தீர்மானிக்கப்படுகிறது?
 
 A.குடியரசுத் தலைவர்
 B.பாராளுமன்றம்
 C. கேபினட்
 D.நிதிக்குழு

14. மாவட்ட ஆட்சியர் பதவி -----------ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
 A.1778
 B.1751
 C.1772
 D.1784

15. குடியரசுத் தலைவர் அவர்கள் அவசர சட்டத்தை---------- படி மட்டுமே திரும்பப் பெற முடியும்?
 
A பாராளுமன்றத்தில் தீர்மானம்
B.பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் ஆலோசனை
C.சட்ட அமைச்சர்களின் பரிந்துரை
D.உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்

16. பொருத்துக
1. கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம்-1986
2. ரவி மற்றும் பியாஸ் நதி நீர் தீர்ப்பாயம்-1990
3. காவிரி நதிநீர் தீர்ப்பாயம்-1969
4. மாகாத்தாயி நதி நீர் தீர்ப்பாயம்-2010
A 1342
B.3421
C.3214
D.3124

17. வி.எஸ். மலிமத் குழு 2000 ம் ஆண்டில் ............ தொடர்பாக அமைக்கப்பட்டது.
A. தேர்தல் சீர்திருத்தங்கள்
B. கிராம நீதிமன்றத்தை நிறுவுதல்
C. புதிய அனைத்து இந்திய குடிமைப் பணிகளைப் உருவாக்குதல்
D. குற்றவியல் நீதி முறையை புதுப்பித்தல்

18.44 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தால் ஆயுதக் கிளர்ச்சியை மாற்றிய பின்வரும் சொல் எது?
A. உள்நாட்டு அவசரநிலை
B. உள்நாட்டு குழப்பம்
C. உள்நாட்டு வன்முறை
D. உள்நாட்டு கிளர்ச்சி

19. அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் யாரால் அறிமுகப்படுத்த முடியும்?
A. அமைச்சர்
B. இந்திய அரசு தலைமை வழக்குரைஞர்
C. தனி உறுப்பினர்
D. A அல்லது C

20. உச்சநீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பின் கீழ் முதல் வழக்கு 1961 இல் மத்திய அரசுக்கு எதிராக எந்த மாநிலத்தில் கொண்டு வரப்பட்டது
A. பஞ்சாப்
B. ஜம்மு மற்றும் காஷ்மீர்
C. தமிழ்நாடு
D. மேற்கு வங்காளம்

21.இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் ஒற்றை அமைப்பு முறை......... லிருந்து பெறப்பட்டது?
A. ஜெர்மனி
B. அமெரிக்கா
C. இந்திய அரசு சட்டம் 1935
D. பிரிட்டன் 

22. சட்ட பணியாளர் ஆணையக்குழு சட்டம்( legal services authority act)......... இல் நடைமுறைக்கு வந்தது
A.1987
B.1989
C.1991
D.1995

23. தவறாக பொருந்தியுள்ள இணையை காண்க.
A. பகுதி XI -மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள்
B. பகுதி XVIII-நெருக்கடி நிலை ஏற்பாடுகள்
C. பகுதி XIX-மத்திய மற்றும் மாநிலங்களின் கீழ் உள்ள சேவைகள்
D. பகுதி XX -அரசியலமைப்பு சட்டத் திருத்தம்

24. பொருத்துக
1. அரைகுறை கூட்டாட்சி-ஐவர் ஜென்னிங்ஸ
2. வலுவான கூட்டாட்சி-கிரான் வில்  ஆஸ்டின்
3. பேரம்பேசும் கூட்டாட்சி-K.C. வியோர்
4. வலிமையான மையப்படுத்தப்பட்ட அரசுடன் கூடிய கூட்டாட்சி-அலெக்சாண்டர் ரோவிச்
5. நடைமுறையில் தனித்துவம்-பால் ஆப்பில்பி
6. கூட்டுறவு கூட்டாட்சி-மேரிஸ் ஜோன்ஸ்
A.412653
B.356142
C.124365
D.541236

25. கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் ஒரே நேரத்தில் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்த குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளித்தது?
A.42 ஆவது திருத்த சட்டம் 1976
B.38 ஆவது திருத்த சட்டம் 1975
C.24 ஆவது திருத்தச் சட்டம் 1971
D.44 ஆவது திருத்த சட்டம் 1978

26........... உடன் கலந்தாலோசித்து மாநில அரசானது கிராம நியாயலயங்களை (கிராம நீதிமன்றம்) நிறுவ முடியும்?
A. உச்சநீதிமன்றம்
B. மத்திய சட்ட அமைச்சகம்
C. உரிய உயர் நீதிமன்றம்
D. மாநில ஆளுநர்

27.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றத்தை நிறுவலாம் என கூறும் ஷரத்து.....?
A. சரத்து 231
B. சரத்து 225
C. சரத்து 223
D. சரத்து 222

28.''உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள வேறு எந்த உச்ச நீதிமன்றத்தையும் விட இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் உள்ளன"என்று குறிப்பிட்டவர்?
A. H. J கனியா
B. பி. ஆர் அம்பேத்கர்
C. ஏ. வி டைசி
D. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்

29.அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய சட்ட திருத்தம் எது? 
A.7 ஆவது திருத்த சட்டம் 1956
B.24 ஆவது திருத்த சட்டம்1971
C.38 ஆவது திருத்த சட்டம் 1975
D.52 ஆவது திருத்த சட்டம் 1985

30. பொருத்துக
1. சத்தீஷ்கர் உயர்நீதிமன்றம்-நைனிடால்
2. கேரள உயர்நீதிமன்றம்-ஜோத்பூர்
3. மத்தியபிரதேசம் உயர்நீதிமன்றம்-ஜபல்பூர்
4. ஒரிசா உயர் நீதிமன்றம்-கட்டாக்
5. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்-பிலாஸ்பூர்
6. உத்தரகண்ட் உயர்நீதிமன்றம்-எர்ணாகுளம்
A.352461
B.145632
C.563421
D.461523

31. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.
A. முதலாவது நீதிபதிகள் வழக்கு-1972
B. இரண்டாவது நீதிபதிகள் வழக்கு-1993
C. மூன்றாவது நீதிபதிகள் வழக்கு-1998
D. நான்காவது நீதிபதிகள் வழக்கு-2015

32. பின்வரும் வழக்குகளில் எது அடிப்படை உரிமைகள் வழக்கு என்றும் அழைக்கப்படுகிறது?
A. தி கிஹோட்டோ ஹோலோ ஹோன் வழக்கு -1993
B. இந்திரா சாஹ்னி வழக்கு-1992
C. கேசவானந்த பாரதி வழக்கு-1973
D. எஸ் ஆர் பொம்மை வழக்கு-1994

33. நீதிபதிகள் விசாரணை சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
A.1950
B.1956
C.1968
D.1973

34. லோக் அதாலத் பற்றிய தவறான கூற்றை காண்க.
A. இதன் பொருள் மக்கள் நீதிமன்றம் என்பதாகும்
B. இந்த அமைப்பு காந்திய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது
C.சுதந்திர இந்தியாவின் முதல் லோக் அதாலத் முகாம் குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது
D. இதற்கு 1982 இல் சட்டரீதியாக அந்தஸ்து வழங்கப்பட்டது

35.பிரிட்டிஷ் மேலவை கவுன்சிலின் இடத்தில் அகில இந்திய இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நிறுவுவதன் அவசியத்தை உணர்ந்த இந்திய சட்ட வரலாற்றில் முதல் நபர் யார்?
A. பி ஆர் அம்பேத்கர்
B. சர் ஹரி சிங் கௌர்
C. சத்தியேந்திர நாத் தாகூர்
D. ராஜேந்திர பிரசாத்

36. அடிப்படை உரிமைகளின் தேசிய நெருக்கடி நிலையின் நிலையை விவரிக்கும் சரத்தை எது?
A. சரத்து 358
B. சரத்து 359
C. சரத்து 360
D. A மற்றும் B

37. கூட்டமைப்பு என்ற சொல் லத்தீன் வார்த்தையான ஃபோடஸ் என்பதிலிருந்து உருவானது.ஃபோடஸ் என்பது ....….. ஆகும்?
A. அனைத்தும்
B. ஒப்பந்தம்
C. சேர்க்கை
D. கொள்கை

38.42 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்படாத துறை எது
A. கல்வி
B. வனங்கள்
C. எடைகள் மற்றும் அளவுகள்
D. மின்சாரம்

39.மாநிலங்கள் அவையில் ஒரு மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை....... பொறுத்து அமையும்?
A. ஆட்சிப்பகுதி
B. எழுத்தறிவு
C. மக்கள் தொகை
D. அரசியல் கட்சி

40. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்...... ஆண்டு இயற்றப்பட்டது?
A.1991
B.1971
C.1981
D.1961

41. நீதித்துறை செயல்முறை என்ற சொல்லை 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் யார்?
A. ஜான் மார்ஷல்
B. பி என் பசுபதி
C. ஆர்தர் செலஸ்சிங்கர் ஜூனியர்
D. கே எம் முன்சி

42. பின்வருவனவற்றுள் எது அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களாக கருதப்படவில்லை?
A. சட்டத்தின் ஆட்சி
B. நீதித்துறை சீராய்வு
C. அரசமைப்பின் கூட்டாட்சி பண்பு
D.அரசியலமைப்பை சீர்திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அளவில்லா அதிகாரம்

43.2015 ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆனது தேசிய நீதிபதிகள் நியமன குழுவை அரசமைப்பிற்க்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது ஏனென்றால் இது.......... ஐ பாதிக்கும்?
A. மாவட்ட நீதிமன்ற அமைப்பு
B. நீதித்துறையின் சுதந்திரம்
C. நாட்டின் ஒருமைப்பாடு
D. குடிமக்களின் அடிப்படை உரிமை

44. ஒரு உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை யார் தீர்மானிப்பது?
A. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
B. நாடாளுமன்றம்
C. குடியரசுத் தலைவர்
D. மூத்த நீதிபதிகள் குழு

45. மாவட்ட நீதிபதி பற்றிய பின்வரும் வாக்கியங்களை கவனிக்கவும்.
I. அவர் குடிமை வழக்குகளை கையாளும் போது அவர் 'மாவட்ட நீதிபதி' என்று அறியப்படுகிறார்
II. அவர் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் போது அவர் 'அமர்வு நீதிபதி' என்று அழைக்கப்படுகிறார்
A.I மட்டும் தவறு
B.II மட்டும் தவறு
C. இரண்டும் தவறு
D. இரண்டும் சரி

46. பொருத்துக.
1. சரத்து 126-பொறுப்பு இந்திய தலைமை நீதிபதியின் நியமனம்
2. சரத்து 127-தற்காலிக நீதிபதிகளின் நியமனம்
3. சரத்து 130-உச்சநீதிமன்றத்தின் அமர்விடம் 
4. சரத்து 143-உச்சநீதிமன்றத்துடன் கலந்தாய்வு செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம்
A.1234
B.4321
C.1243
D.4312

47. எந்த சரத்து புதிய அனைத்து இந்திய பணியை உருவாக்குவதற்கு மாநிலங்களவைக்கு அதிகாரம் அளித்துள்ளது?
A. சரத்து 312
B. சரக்கு 321
C. சரத்து 213
D. சரத்து 123

48. பின்வரும் நீதித்துறை கருத்துகளுள் எது அமெரிக்காவில் தோன்றியது?
I. நீதித்துறை சீராய்வு
II. பொதுநல வழக்கு
III. நீதித்துறை செயல்முறை
IV. உச்சநீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு
A.I மற்றும் II
B.I,II மற்றும் III
C.I,III மற்றும் IV
D. மேற்கண்ட அனைத்தும்

49. எந்த நாடு நவீன உலகின் முதல் கூட்டாட்சி அரசாக ஆனது?
A. ஐக்கிய ராஜ்யம்
B. அமெரிக்கா
C. இந்தியா
D. ரஷ்யா

50. மாநிலங்களுக்கிடையேயான குழு பற்றிய தவறான வாக்கியத்தைக் கண்டறிக
A. இது அப்போதைய பிரதமர் விபி சிங் அவர்களால் 1992 இல் உருவாக்கப்பட்டது
B. சர்க்காரியா குழுவானது சரத்து 263 ன் கீழ் நிரந்தர மாநிலங்களுக்கிடையேயான குழுவை உருவாக்க முன்மொழிந்தது
C. இக்குழுவானது வருடத்தில் குறைந்த பட்சம் மூன்று முறையாவது சந்திக்கலாம்
D. இக்குழுவினர் 1996 எல் நிலைக்குழுவும் அமைக்கப்பட்டது

51. இந்திய கூட்டாட்சி அமைப்பு........ கூட்டு மாதிரியின் அடிப்படையில் ஆனது?
A. அமெரிக்கா
B. கனடா
C. ஐக்கிய ராஜ்யம்
D. கியூபா

52. மண்டலக் குழு பற்றிய தவறான வாக்கியத்தைக் கண்டறிக.
A. இவை சட்ட அமைப்புகள் ஆகும்
B. இவை மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ன் மூலம் உருவாக்கப்பட்டது
C. மத்திய மண்டல குழுவின் தலைமையகம் புதுடில்லியில் அமைக்கப்பட்டுள்ளது
D மத்திய உள்துறை அமைச்சர் அவரே மண்டல குழுவின் பொது தலைவராவார்

53. எந்த நீதிமன்றம் கூட்டாட்சி அமைப்பில் நடுவராக செயல்படுகிறது?
A. உயர் நீதிமன்றம்
B. குடும்ப நல நீதிமன்றம்
C. உச்சநீதிமன்றம்
D. A மற்றும் C

54. தேசிய அவசர நிலை பிரகடனம் பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறி.
A. இது சீன ஆக்கிரமிப்பு காரணமாக 1962 ஆம் ஆண்டு முதல் முதலாக அறிவிக்கப்பட்டது
B. பாகிஸ்தானின் தாக்குதலை அடுத்து இது 1971 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது
C . இது உள்நாட்டு குழப்பத்தின் காரணமாக 1975 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டது
D. இது இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு 1984 ஆம் ஆண்டு நான்காவது முறையாக அறிவிக்கப்பட்டது

55.உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் வாக்கியங்களை கவனி.
I. அரசியலமைப்பின் பகுதி V உள்ள 124 லிருந்து 147 வரையிலான சரத்துகள் உச்சநீதிமன்றம் தொடர்புடையதாகும்
II. உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பானது அதன் முந்தைய அமைப்பான கூட்டாட்சி நீதிமன்றத்தை விட குறைவாகும்.
மேற்கூறியவற்றை சரியானது எது அல்லது எவை?
A.I மட்டும்
B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை

56. பின்வரும் மாநிலங்களில் எது முன்பு இந்தியாவின் இணை மாநிலம் என்று அழைக்கப்பட்டது?
A. ஜம்மு மற்றும் காஷ்மீர்
B. சிக்கிம்
C. தெலுங்கானா
D. தமிழ்நாடு

57. உச்சநீதிமன்ற நீதிபதி தகுதி பற்றிய சரியான வாக்கியத்தைக் கண்டறிக.
A. இந்திய தலைமை நீதிபதியின் கருத்துப்படி அவர் ஒரு சிறந்த நிதியியல் வல்லுனராக இருத்தல் வேண்டும்
B. இவர் ஐந்து வருடங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்
C.இவர் ஐந்து வருடங்களுக்கு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்திருக்க வேண்டும்
D. அரசியல் அமைப்பில் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது குறிப்பிடப்படவில்லை

58. பின்வரும் சாசனங்களில் எது சென்னையில் மாநகராட்சி அமைப்பதற்கு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது
A.1793 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டம்
B.1687 ஆம் ஆண்டு சாசன சட்டம்
C.1833 ஆம் ஆண்டு சாசன சட்டம்
D.1793 ஆம் ஆண்டு சாசன சட்டம்

59.1975-1977 ஆம் ஆண்டுகளில் அவசரகால நிலையின் போது இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் யார்?
A. ரங்கநாத் மிஸ்ரா
B. லலித் மோகன் சர்மா
C. மிர்சா ஹமீதுல்லா பிக்
D. ஜெயந்திலால் சோட்டா லால் ஷா

60. உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்?
A. எம் பதஞ்சலி சாஸ்திரி
B. ஹரிலால் ஜே கனியா
C. எஸ் ஆர் தாஸ்
D சையது பசே அலி

61. இந்திய தண்டனை சட்டம் ஆனது....... ன் பரிந்துரையின் பேரில் 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது?
A. இந்திய அரசு சட்டம் 1857
B. சாசன சட்டம் 1853
C. முதல் சட்ட ஆணையம்
D மக்கலேயின் குறிப்புகள்

62.பின்வரும் வருடங்களில் எந்த ஆண்டு தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது?
I.1976
II.1980
III.1988
IV.1999
A.I மட்டும்
B.I மற்றும் II
C.I,II மற்றும் III
D. மேற்கண்ட அனைத்தும்

63. எந்த சரத்து நிதி உதவி தேவைகளில் இருக்கின்ற மாநிலங்களுக்கு நிதி அளிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது
A. சரத்து 275
B. சரத்து 280
C. சரத்து 265
D. சரத்து 267

64. பின்வருவனவற்றுள் யார் ஆணையத்தின் குழுவின் உறுப்பினர் அல்ல?
A. பகலோ வெங்கட்ராமன் ராவ் ராஜமன்னார்
B. ஏ லட்சுமணசாமி
C. புஷாலா வெங்கட்ட ராஜமன்னார்
D. பி சந்திர ரெட்டி

65. எந்த ஆணையும் அனைத்திந்திய பணிகளை (IAS,IPS,IFS) நீக்க வேண்டும் என்ற பரிந்துரை செய்தது?
A. வெங்கட செல்லையா குழு
B. ராஜமன்னார் ஆணையம்
C. சர்க்காரியா ஆணையம்
D. மண்டல ஆணையம்

66. எந்த வழக்கின் பொழுது உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பானது மாநிலங்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் அற்ற முறையில் கலைக்கப்படுவதை தடுக்கிறது?
A. கோலக்நாத் வழக்கு 1967
B. எஸ் ஆர் பொம்மை வழக்கு 1994
C. கேசவானந்த பாரதி வழக்கு 1973
D. மினர்வா மில்ஸ் வழக்கு 1980

67. நிதி ஆணையம் பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறி.
A. இது குடியரசு தலைவரால் 6 வருடத்திற்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது.
B. சரத்து 280 நிதிக்குழுவின் அமைப்பை விவரிக்கிறது
C.இது ஒரு தலைவரையும் நான்கு பிற உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்
D.தலைவரானவர் பொது நடவடிக்கைகளில் அனுபவம் வாய்ந்த நபராகவே இருப்பார்

68.பின்வரும் திருத்தச் சட்டங்கள் எது நில சீர்திருத்தம் மற்றும் அதிலுள்ள சட்டங்களை நீதித்துறை சீராய்விலிருந்து பாதுகாக்க 9 ஆவது அட்டவணையை சேர்ந்தது.
A. பத்தாவது சீர்திருத்த சட்டம் 1961
B. முதலாவது சீர்திருத்த சட்டம் 1951
C. நான்காவது சீர்திருத்த சட்டம் 1955
D. ஏழாவது சீர்திருத்த சட்டம் 1956

69.நிர்வாக சீர்திருத்தம் குழு பற்றிய பின்வரும் வாக்கியங்களை கவனி
I.முதலாவது நிர்வாக சீர்திருத்தங்கள் குழு ஆனது தொடக்கத்தில் மொரார்ஜி தேசாய் அவர்களது தலைமையிலும் பிறகு கே அனுமத்தையா தலைமையிலும் 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
II.இரண்டாவது நிர்வாக சீர்திருத்தங்கள் குழுவானது தொடக்கத்தில் இராமச்சந்திரன் தலைமையிலும் பின்னர் வீரப்ப மௌலி தலைமையிலும் 2005 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
மேற்கூறியவற்றை சரியானது எது?
A.I மட்டும்
B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை

70. பின்வரும் திருத்த சட்டங்களில் எது சுதேச அரசுகளின் முன்னாள் ஆட்சியாளர்களின் தனி சிறப்பு மற்றும் சலுகைகளை அகற்றியது?
A.21 ஆவது திருத்த சட்டம் 1962
B.12 ஆவது திருத்த சட்டம் 1967
C.24 ஆவது திருத்த சட்டம் 1971
D.26 ஆவது திருத்த சட்டம் 1971

71. பின்வரும் திருத்தச் சட்டங்களும் எது மக்களவை இடங்களில் எண்ணிக்கையை 525 ல் இருந்து 545 ஆக அதிகரித்தது?
A.31 ஆவது திருத்த சட்டம் 1972
B.42 ஆவது திருத்த சட்டம் 1976
C.44 ஆவது திருத்த சட்டம் 1978
D.50 ஆவது திருத்த சட்டம் 1984

72. பின்வரும் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டதை கால முறைப்படி வரிசைப்படுத்துக
I. பாட்னா உயர் நீதிமன்றம்
II. கௌகாத்தி உயர் நீதிமன்றம்
III. ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றம்
IV. அலகாபாத் உயர்நீதிமன்றம்
A.IV,I,III,II
B.II,III,I,IV
C.III,II,IV,I
D.IV,III,I,II

73.தேசிய அவசர நிலையானது அதிகபட்சமாக அமலில் இருக்கும் காலம் என்ன?
A. ஆறு மாதங்கள்
B. ஒரு வருடம்
C. மூன்று மாதங்கள்
D. காலவரையின்றி

74.எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆனது "உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டின் நீதிப்பேராணை அதிகாரமானது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாக அமைகிறது" என தீர்ப்பளித்தது?
A. குல்தீப் நாயர் வழக்கு 2006
B. எஸ் ஆர் பொம்மை வழக்கு 1994
C. பி சம்பமூர்த்தி வழக்கு 1987
D. சந்திரகுமார் வழக்கு 1997

75. பின்வரும் திருத்த சட்டங்கள் எது 'சிறிய அரசியலமைப்பு' என அறியப்படுகிறது?
A.42 ஆவது திருத்த சட்டம் 1976
B.44 ஆவது திருத்த சட்டம் 1978
C.73 ஆவது திருத்த சட்டம் 1992
D.74 ஆவது திருத்த சட்டம் 1992

76. மாவட்ட நீதிபதி அவர்கள் ஆளுநரால் யாருடைய கலந்தாலோசனை செய்தபிறகு நியமிக்கப்படுகிறார்?
A. குடியரசுத் தலைவர்
B. மாநில அரசு
C. உயர் நீதிமன்றம்
D. மூத்த நீதிபதிகள் குழு

77.உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி அதிகபட்சமாக எத்தனை காலம் தற்காலிகமாக பதவி வகிக்க முடியும்?
A. ஆறு மாதம்
B. ஒரு வருடம்
C. இரண்டு வருடம்
D. மூன்று வருடம்

78. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பற்றி குறிப்பிடும் சரத்து எது?
A. சரத்து 352
B. சரத்து 356
C. சரத்து 365
D. B மற்றும் C

79. ஆங்கிலேயர் ஆட்சியின் பொழுது சென்னையில் உச்சநீதிமன்றம் எப்போது நிறுவப்பட்டது?
A.1774
B.1801
C.1824
D.1862

80. கீழ்காணும் உயர்நீதிமன்றங்களில் எது 2000 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்படவில்லை?
A. உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்
B. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்
C. திரிபுரா உயர் நீதிமன்றம்
D. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்

81.மக்களவையில் சபாநாயகர் அவர்கள்----------- நாட்கள் முன் அறிவிக்கையுடன் அவையின் தீர்மானத்தின் மூலம் பதிவி விலக்கப்படலாம்?
A.1 மாதம்
B.14 நாட்கள்
C.6மாதம்
D.7நாட்கள்

82. தமிழ்நாட்டில் மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக எவ்வளவு வரை இருக்க முடியும்?
 
 A.15
 B.30
 C.34
 D.39

83. எந்த சரத்து குறிப்பாக முதலமைச்சரின் செயல்பாட்டை குறிக்கிறது?
 A.சரத்து 160
 B.சரத்து 161
 C.சரத்து 165
 D.சரத்து 167

84. உள்ளாட்சியின் மத்திய குழு-----------ல் அமைக்கப்பட்டது?
 
 A.1950
 B.1954
 C.1959
 D.1993

85. இந்திய கிராமங்களை சிறிய குடியரசு என்று அழைத்தவர் யார்?
 
 A.பி ஆர் அம்பேத்கர்
 B.ரிப்பன் பிரபு
 C.ராஜேந்திர பிரசாத்
 D.மகாத்மா காந்தி

 86.இந்திய குடியரசு துணைத் தலைவர் பற்றிய சரியான வாக்கியத்தை தேர்வு செய்க.
 I.அரசியல் அமைப்பானது குடியரசு துணைத் தலைவருக்கு ஊதியத்தை நிர்ணயிக்கவில்லை
 II.இவர் குடியரசுத் தலைவராக ஆறு மாதங்கள் மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்
 III.குடியரசுத் துணைத் தலைவர் பதவியானது பிரிட்டன் குடியரசுத் துணைத் தலைவர் வழியில் பின்பற்றி உருவாக்கப்பட்டது.
 IV.இவரின் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் முன் இவரை பதவியிலிருந்து நீக்க முடியாது.
A.I II
B.I II III
C.I II IV
D.II III

87. எப்பொழுது மக்களவை மற்றும் மாநிலங்களவையானது  அவற்றின் இந்தி பெயர்களான லோக் சபா மற்றும் ராஜ்ய சபா என்ற பெயர்களை ஏற்றுக்கொண்டது?
A.1950
B.1952
C.1954
D.1963

88. எவ்வளவு நாட்கள் பண மசோதாவானது மாநில சட்ட மேலவையில் நிறுத்தி வைக்கப்படலாம்?
 
 A.60 நாட்கள்
 B.30 நாட்கள்
 C.50 நாட்கள்
 D.14 நாட்கள்

89. ஊராட்சி நிர்வாகம் முறை யாரால் முதன்முறையாக ராஜஸ்தானில் தொடங்கி வைக்கப்பட்டது?
 A.ராஜீவ் காந்தி
 B.நரசிம்மராவ்
 C.ஜவகர்லால் நேரு
 D.இந்திரா காந்தி

90. குடியரசுத் தலைவர் அவர்களை அவரது பகுதியிலிருந்து ---------என்ற குற்றச்சாட்டின் பெயரில் பதவி விலக்க முடியும்?
 
A.மறுப்புரிமை அதிகாரம் பயன்படுத்தியதற்காக
 B.அரசியலமைப்பை மீறியதற்காக
 C.மசோதாவிற்கு அவரது ஒப்புதலை நிறுத்தி வைத்ததற்காக
 D.தன் விருப்ப உரிமை அதிகாரத்தை பயன்படுத்தியமைக்காக

91. இளையோர் பாராளுமன்ற திட்டமானது--------- ன் பரிந்துரையின்பேரில் தொடங்கப்பட்டது?
 A.இரண்டாம் நிர்வாக சீர்திருத்த ஆணையம்
 B.சந்தானம் குழு
 C.நான்காவது அனைத்திந்திய கொறடாக்கள் மாநாடு
 D.சர்க்காரியா குழு

92. பின்வரும் மசோதாக்களில் எது சரத்து 117 உடன் தொடர்புடையது?
 I.பணமசோதா
 II.நிதி மசோதாக்கள்(I)
 III.நிதி மசோதாதாக்கள்(II)
 IV.நிதி மசோதாதாக்கள்(III)
A.II 
B.I II
C.II III 
D. மேற்கண்ட அனைத்தும்

93. மாநிலப் பட்டியலில் உள்ள துறையை தேர்ந்தெடுக்கவும்?
 A.தத்தெடுப்பு
 B.கல்வி
 C.திருமணம்
 D.பாசனம்

94. சட்டப்பிரிவு 120 ன் கீழ் அவைத்தலைவர் எந்த ஒரு உறுப்பினரும் கீழ்காணும் எந்த மொழியில் பேச அனுமதிக்க இயலும்?
 A.மத்திய அரசின் எந்த ஒரு அலுவல்மொழியிலும்
 B.ஹிந்தி
 C.அவரது தாய் மொழி
 D.ஆங்கிலம்

 95.கீழ்காணும் நபர்களில் அவரது பதவிக்காக மாத வருமானம் பெற இயலாதவர் யார்?
 
 A.குடியரசு தலைவர்
 B.துணை குடியரசுத் தலைவர்
 C.மாநில ஆளுநர்
 D.இந்திய தலைமை நீதிபதி

96. கீழ்க்காணும் பகுதிகளை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக. (அதிகார வரிசை)
 I.சார்புச் செயலாளர்
 II.உதவியாளர்கள்
 III.உதவிப் பிரிவு அலுவலர்
 IV.இணைச் செயலர்
 V.துணைச் செயலர்
A.II III I V IV
B.III II I V IV
C.III II IV V I
D.II III I IV V

97. 64 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதனுடன் தொடர்புடையது?
 A.மாநில சட்டமன்ற உறுப்பினரின் தகுதி
 B.அமைச்சரவை
 C.குடியரசுத் துணைத் தலைவர்
 D.பஞ்சாயத்து

98. முதலமைச்சர் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்க.
 I.எந்த ஒரு கட்சியும் சரியான பெரும்பான்மை கிடைக்காத போது ஆளுநர் முதலமைச்சரை நியமித்து 6 மாதத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க கோருவார்.
 II.முதலமைச்சராக நியமிக்கப்பட்ட நபர் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாதவர் எனில் ஒரு மாதத்திற்குள் சட்டப்பேரவை சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
மேற்கண்டவற்றில் சரியானது எது /எவை?
A.I மட்டும்
B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை

 99.அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு எத்தனை மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்? (குறைந்தபட்சம்)
A.282 உறுப்பினர்கள்
B.100 உறுப்பினர்கள்
C. 50 உறுப்பினர்கள்
D.150 உறுப்பினர்கள்

100. பத்திரிகைகளை தவிர்த்து விற்பனை அல்லது கொள்முதல் செய்யும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் வர்த்தக மற்றும் வாணிபத்திற்கான விதிக்கப்படும் வரிகள் குறித்து குறிப்பிடும் திருத்தச்சட்டம் எது?
A.6th Amendment 1956
B.8th Amendment 1959
C.13th Amendment1962
D.16th Amendment1963
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY