Ads Right Header

வினாக்கள் - ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 1.


ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 1. 

வினாக்கள்.

1.கொல்லாமையைக் குறிக்கோளாகவும் எதை கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவுகிறது?
 
a) பொய்யாமை
b) பொறுமை
c) ஆன்மிகம்
d) கொல்லாமை

2. காந்தியக் கவிஞர்” என அழைக்கப்படுவர்யார்?
a) கவிமணி
b) நாமக்கல் கவிஞர்
c) விவேகான்ந்தர்
d) பாரதியார்

3. “ கத்தியின்றி ரத்தமின்றி
    யுத்த மொன்று வருகுது………”என்னும் பாடலை இயற்றியவர்யார்:
 
a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) கவிமணி
d) வெ. இராமலிங்கனார்

4. சரியானதை தேர்வு செய்க.
 
a) ஒப்புமை – ஒப்புதல்
b) முகில் – மோதிரம்
c) அற்புதம் – வியப்பு
d) உபகாரி – உதவி

5. முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான் முகிலினும் பகழ்படைத்த உபகாரி…..” என்னும் வரிகளுக்கு சொந்தகாரர்யார்?

a) உடுமலை நாராயணக்கவி
b) மருதகாசி
c) கல்யாணசுந்தரம்
d) பாரதிதாசன்

6. பின் வருவனவற்றுள் எது இசைப்பாடல்?
 
a) திருக்குறள்
b) பரணி
c) பரிபாடல்
d) அகநானூறு

7. பகுத்தறிவுக் கவிராயர் ” என்று புகழப்படுபவர் யார்?
 
a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) உடுமலைநாராயணக்கவி
d) கல்யாணசுந்தரம்
 
8. ஒப்புமை + இல்லாத என்பதைச் சேர்த்து தெழுதுக
 
a) ஒப்புமை இல்லாத
b) ஒப்பில்லாத
c) ஒப்புமையில்லாத
d) ஒப்பு இல்லாத
 
9. எதன் மூலமனிதர்களின் சிந்தனை ஒருதலை முறையிலிருந்து அடுத்தத்தலை முறைக்கு கொண்டு செல்லப்படுகிறது?
 
a) ஓலைச்சுவடி
b) இலக்கியங்கள்
c) மொழி
d) நூலகம்

10. தமிழ்மொழி எத்தனைக் கூறுகளைக் கொண்டது?
 
a) 2
b) 3
c) 4
d) 5

11. மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமானது எது?
 
a) மொழி
b) பேச்சுமொழி
c) இலக்கியம்
d) எழுத்துமொழி
 
12. மொழியின் முதல்நிலை எனப்படுவது எது?
 
a) கேட்பது
b) பேசுவது
c) எழுதுவதும், படிப்பதும்
d) பேசுவதும், கேட்பதும்

13. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமிழ் சிறிது உளவாகும்”             என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
 
a) புறநானூறு
b) திருக்குறள்
c) அகநானூறு
d) நன்னூல்

14. பேச்சுவழக்கில் மாறுபடக்கூடிய ஒரேமொழியின் வெவ்வேறு வடிவங்கள் 
எவ்வாறு அழைக்கப்படும்?
 
a) கிளைமொழி
b) வட்டாரமொழி
c) எழுத்துமொழி
d) அமற்றும்ஆ

15. வாழும் இடத்தின் நிலஅமைப்பு, இயற்கை தடைகள் போன்றவற்றால் பேசும் மொழியில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டு புதிய மொழி உருவாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
 
a) கிளைமொழி
b) வட்டாரமொழி
c) மூலமொழி
d) எழுத்துமொழி

16. தமிழின் கிளைமொழிகளில் பொருந்தாதது எது?
 
a) மலையாளம்
b) கன்னடம்
c) தெலுங்கு
d) மராத்தி

 17. இரட்டை வழக்கு மொழியை, “உலகவழக்கு” எனக்கூறியவர் யார்?
 
a) தொல்காப்பியர்
b) அகத்தியர்
c) திருவள்ளுவர்
d) நக்கீர்ர்

18. பேச்சுமொழியில் ‘இ’ என்பது எவ்வாறு மாற்றி ஒலிக்கப்படுகிறது?
 
a) ஈ
b) ஐ
c) எ
d) ஈ மற்றும் ஐ
 
19. தமிழ் எவ்வகை மொழி?
 
a) இரட்டைவழக்குமொழி
b) உலகவழக்குமொழி
c) செய்யுள்வழக்குமொழி
d) அனைத்தும்

20. எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்பது யாருடைய ஆசை?
 
a) பாரதியார்
b) பாவேந்தர் பாரதிதாசன்
c) முடியரசன்
d) வாணிதாசன்

21. சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சுவழக்கில் வழங்கிவருபவை எவை?
 
a) கிளைமொழிகள்
b) எழுத்துமொழிகள்
c) பேச்சுமொழி
d) சொலவடைகள்

22. குற்றியலுகரம் – பிரித்தெழுதுக.
 
a) குற்றம் + இகரம்
b) குறுமை + உஅகரம்
c) குறுமை + இயல் + உகரம் 
d) குறுமை + உகரம்

23. தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு எத்தனை எழுத்துச் சாரியைப் பயன்படுத்தலாம்?
 
a) 3
b) 2
c) 4
d) 7

24. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
 
a) 4
b) 2
c) 5
d) 6

25. முப்பாற்புள்ளியைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படும்?
 
a) உயிர்தொடர் குற்றியலுகரம்
b) ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
c) வன்தொடர் குற்றியலுகரம்   
d) இடைத் தொடர்குற்றியலுகரம்

26. தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வருவது எது?
 
a) உயிர்தொடர் குற்றியலுகரம்
b) நெடில்தொடர் குற்றியலுகரம்
c) இடைத்தொடர் குற்றியலுகரம்
d) மென்தொடர் குற்றியலுகரம்

27. க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய 6 மெய்எழுத்தைத் தொடர்ந்து வருவது எது?
 
a) மென்தொடர் குற்றியலுகரம்
b) வன்தொடர் குற்றியலுகரம்
c) இடைத்தொடர் குற்றியலுகரம்
d) ஆய்த்த்தொடர் குற்றியலுகரம்

28. மென்தொடர் குற்றியலுகரத்தில் வரும் மெய்யெழுத்துக்கள் எவை?
 
a)க்,ச்,ட்,த்,ப்,ற்
b)கு,சு,டு,து,பு,று
c)ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
d)ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

29. எந்த எழுத்துகள் இறுதியாக அமையும் இடைத் தொடர்குற்றியலுகரச் சொற்கள் இல்லை?
 
a) கு,சு,டு
b) து,பு,று
c) சு,டு,று
d) சு,டு,கு
 
30. பிரித்து எழுதுக – வரகியாது
 
a) வர + கியாது
b) வரகி + யாது
c) வரம் + யாது
d) வரகு + யாது

31. குற்றியலுகரம் தனது ஒரு மாத்திரையிலிருந்து எத்தனை மாத்திரையாக மாறி ஒலிக்கும்?
 
a) 2 மாத்திரை
b) ஒன்றரை மாத்திரை
c) அரை மாத்திரை 
d) 1 மாத்திரை

32. எந்த சார்பெழுத்து தற்போது உரைநடைவழக்கிலில்லை. ஆனால் இலக்கியங்களில் மட்டுமே
 உள்ளது?
 
a) குற்றியலிகரம்
b) குற்றியலுகரம்
c) ஐகாரக்குறுக்கம்
d) ஒளகாரக்குறுக்கம்

33. எனப்படுவது + யாது என்பது எவ்வாறு புணரும்?
 
a) எனப்படுவதுயாது  
b) எனப்படுவதியாது
c) எனப்படுவதாது
d) எனப்படுவதுதியாது

34. பொருந்தாததைத் தேர்வு செய்க .
 
a) முத்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், பைந்தமிழ்
b) நாற்றிசை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
c) ஐவகைநிலம் – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை
d) அறுசுவை – இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, கசப்பு; துவர்ப்பு

35. சரியான விடையை தேர்ந்தெடு
 1.வ என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
2. ந் என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
 
a) 1 சரி
b) 2 சரி
c) இரண்டும்தவறு
d) இரண்டும்சரி

36. பொருத்தமற்றைத் தேர்வு செய்க.
 
a) ஒன்பது
b) வரலாறு
c) உப்பு
d) கயிறு

37. தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வருவது எது?
 
a) உயிர்தொடர் குற்றியலுகரம்
b) நெடில்தொடர் குற்றியலுகரம்
c) இடைத்தொடர் குற்றியலுகரம்
d) மென்தொடர் குற்றியலுகரம்

38. முப்பாற்புள்ளியைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படும்?
 
a) உயிர்தொடர் குற்றியலுகரம்
b) ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
c) வன்தொடர் குற்றியலுகரம்   
d) இடைத் தொடர்குற்றியலுகரம்

39. ஒலியியல் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் எது?
 
a) Journalism
b) Puppetry
c) Orthography
d) Phonology

40. “Linguistics” என்பதன் பொருள் என்ன?
 
a) ஊடகம்
b) பருவஇதழ்
c) உரையாடல்
d) மொழியியல்

41. பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.
 
a) அரசு
b) எய்து
c) மூழ்கு
d) மார்பு
 
42. “பொருள் பெறயாரையும் புகழாதுமொழி
போற்றாதரையும் இகழாது” என்னும் வரிகள் எந்த தலைப்பின் கீழ் இயற்றப்பட்டது?

a) மலைக்கள்ளன்
b) இன்பத்தமிழ்
c) எங்கதை
d) எங்கள்தமிழ்

43. நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்யார்?
 
a) முடியரசன்
b) சி. மணி
c) சி. சு. செல்லப்பா
d) உடுமலைநாராயணக்கவி

 44. “தந்துதவும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
 
a) தந்து + உதவும்
b) தா + உதவும்
c) தந்து + தவும்
d) தந்தூ + உதவும்

45. எழுத்து மொழியில் காலம், இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப சொற்கள்  சிதைவதில்லை ஆனால் எது மாறுபடும்?
 
a) பேச்சுவழக்கு
b) கருத்து
c) சொல்
d) வரிவடிவம்

46. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காண்பது ஆகியனவும் மொழியே என கூறியவர் யார்?

A) சி.சு.செல்லப்பா
B) துரைராசு
C) நா.பிச்சமூர்த்தி
D) மு. வரதராசனார்

47. திணை எத்தனை வகைப்படும்?

A) 2
B) 3
C) 4
D) 6

48. உலக மொழிகளில் தொன்மையான நம் தமிழ்மொழி வாழ்வுக்கு தேவையான
 எவற்றை கூறுவதாக எங்கள் தமிழ் செய்யுள் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது? 

A) அறநெறி
B) நல்லொழுக்கம்
C) அன்பு
D) அன்பு மற்றும் அறம்

49) இன்பம் பொழிகிற வானொலியாம் 
எங்கள் தமிழென்னும் தேன்மொழியாம் என்னும் பாடல் வரிகளை இயற்றியவர் யார் ?

A) நாமக்கல் கவிஞர் 
வெ.ராமலிங்கனார்
B) கவிமணி தேசிய விநாயகனார்
C) மீனாட்சி சுந்தரனார்
D) பாரதியார்

50) மொழியின் உயிர்நாடியாக விளங்குவது?

A) எழுத்து
B) கருத்து
C) பேச்சுமொழி
D) எழுத்துமொழி




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY