Ads Right Header

விடைகள் - ஏழாம் வகுப்பு இயல் - 4.

 


ஏழாம் வகுப்பு இயல் - 4 .

1 ) கீழ்க்கண்டவற்றுள் பத்துப்பாட்டு நூலில் இடம் பெறாத நூல் எது ? 

A ) பொருநராற்றுப்படை 
B ) மதுரைக்காஞ்சி 
C ) மலைபடுகடாம் 
D ) பரிபாடல் 👍

2 ) ' தூண்'- என்னும் பொருள் 
தரும் சொல் ? 

A ) ஞெகிழி 
B ) சென்னி 
C ) ஏணி 
D } மதலை 👍

3 ) "உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் " என்னும் பாடல்வரி இடம்பெற்ற நூல்?

A ) பெரும்பாணாற்றுப்படை 
B ) அகநானூறு 👍
c ) பொருநராற்றுப்படை 
D ) புறநானூறு 

4 ) கலித்தொகையின் மருதத் திணையில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கை? 

A ) 35 👍
B ) 33 
C ) 34 
D ) 38 

5 ) எந்நூலில் பல வகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?

A ) அகநானூறு 
B ) சேந்தன் திவாகரம் 👍
C ) திருக்குறள் 
D ) பட்டினப்பாலை 

6 ) ' முந்நீர் வழக்கம் ' என்று கடற் பயணத்தைக் குறிப்பிடும் நூல் எது ? 

A ) புறநானூறு 
B ) சேந்தன் திவாகரம் 
C ) பட்டினப்பாலை 
D ) தொல்காப்பியம்👍


7 ) தமிழர்கள் கடற்பயணத்திற்கு வழிகாட்டியாக பயன்படுத்திய 
உயிரினம் எது? 

A ) தவளை 
B ) ஆமை 👍
C ) திமிங்கலம் 
D ) சுறா 

8 ) " நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோ இடம் பெற்ற நூல் எது ? 

A ) அகநானூறு 
B ) பரிபாடல் 
C ) நற்றிணை 
D ) புறநானூறு 👍

9 ) இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும் ? 

A ) 3 
B ) 4 👍
C ) 5 
D ) 10 

10 ) பொருத்துக . 

1 ) மாநகர் - ( 1 ) பெயர் இயற்சொல் 
2 ) பொன் - ( 2 ) வினை இயற்சொல் 
3 ) வந்தான்- ( 3 ) இடை இயற்சொல் 
4 ) அவனால்- ( 4 ) உரிச்சொல் 

A ) 1-4,2-1,3-3,4-2 
B ) 1-4,2-2,3-3,4-1 
C ) 1-4,2-3,3-1,4-2 
D ) 1-4,2-1,3-2,4-3 👍

11 ) தமிழில் வழங்கு வட சொற்களை எத்தனை வகையாகப் பிரிப்பர்?

A ) 3
B ) 2 👍
C ) 4
D ) 5 

12 ) காலம் எத்தனை வகைப்படும் ? 

A ) 3 👍
B ) 4
C ) 5 
D ) 2

13 ) பொருத்துக . 

1 ) புயல் - ( 1 ) storm 
2 ) மாலுமி- ( 2 ) sailor 
3 ) கப்பல் தளம் - ( 3 ) shipyard 
4 ) நங்கூரம்- ( 4 ) anchor

A ) 1-1,2-4,3-2,4-3 
B ) 1-1,2-3,3-4,4-2 
C ) 1-1,2-2,3-3,4-4 👍
D ) 1-1,2-3,3-2,4-4 

14 ) மாறுபட்ட ஒன்றை தேர்ந்தெடு . 

A ) பார்த்தான் 
B ) காண்பான் 👍
C ) ஆடினாள் 
D ) பறந்தது 

15 ) ' நெகிழி ' என்னும் சொல்லின் பொருள் ? 

A ) கடல் 
B ) உச்சி 
C ) தீச்சுடர் 👍
D ) தூண் 

16 ) உருத்திரங்கண்ணனார் 
வாழ்ந்த ஊர் ? 

A ) கூடலூர் 
B ) கடியலூர் 👍
C ) குன்றத்தூர் 
D ) குன்னூர் 

17 ) பத்துப்பாட்டில் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல்கள் எத்தனை? 

A ) 2 👍
B ) 1 
C ) 3 
D ) 4 

18 ) தொண்டைமான் இளந்திரையனை பாட்டுடைத் தலைவனாகக் 
கொண்டு எழுதப்பட்ட நூல் எது ? 

A ) பட்டிணப்பாலை
B ) மதுரைக்காஞ்சி 
C ) மலைபடுகடாம் 
D ) பெரும்பாணாற்றுப்படை 👍

19 ) ' நெடுந்தொகை ' -என்று அழைக்கப்படும் நூல் எது ? 

A ) கலித்தொகை 
B ) அகநானூறு 👍
C ) புறநானூறு 
D ) பதிற்றுப்பத்து

20 ) ' நீகான் ' - என்னும் சொல்லின் பொருள் ? 

A ) காற்று 
B ) பகல் 
C ) நாவாய் ஓட்டுபவன் 👍
D ) கப்பல் 

21 ) எதுகை இடம் பெறாத இணை எது ? 

A ) இரவு- இயற்கை 👍
B ) வங்கம் - சங்கம் 
C ) உலவு -புலவு 
D ) அசைவு - இசைவு 

22 ) " அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம் " -என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 

A ) சேந்தன் திவாகரம் 
B ) பதிற்றுப்பத்து 👍
C ) பரிபாடல் 
D ) பட்டினப்பாலை 

23 ) பழங்காலத்தில் தமிழ்நாட்டில் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று எந்த நாட்டின் வெலிங்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது ? 

A ) நியூசிலாந்து 👍
B ) ஆஸ்திரேலியா 
C ) இங்கிலாந்து 
D ) பிரான்ஸ் 

24 ) சிறிய நீர்நிலையை கடக்க தமிழர்கள் பயன்படுத்தியது எது ? 

A ) கலம் 
B ) வங்கம் 
C ) நாவாய் 
D ) தோணி👍

25 ) "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய் " -பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

A ) பெரும்பாணாற்றுப்படை 
B ) மணிமேகலை 👍
C ) பட்டினப்பாலை 
D ) பரிபாடல் 

26 ) கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் 
முதன்மையான கருவி எது?

A ) சமுக்கு 
B ) எரா 
C ) சுக்கான் 👍
D ) கம்மியர்

27 ) ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்.ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை " -என்று கூறிய ஆங்கிலேயர் யார் ? 

A ) ஜான் ஸ்மித் 
B ) வாக்கர் 👍
C ) வாட்சன் 
D ) அலெக்சாண்டர் 

28 ) " கலம் தந்த பொற்பரிசம் கழித் தோணியால் கரை சேர்க்குந்து " - என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 

A ) பரிபாடல் 
B ) பெரும்பாணாற்றுப்படை 
C ) புறநானூறு 👍
D ) அகநானூறு 

29 ) ' அழுவம் ' -
என்பது எவ்வகைச் சொல் ? 

A ) இயற்சொல் 
B ) திரிசொல் 👍
C ) திசைச்சொல் 
D ) வடசொல் 

30 ) " பெற்றம் " - என்பதன் பொருள் ? 

A ) கிணறு 
B ) ரத்தம் 
C ) சோறு 
D ) பசு 👍

31 ) சொல் -என்னும் பொருள் தராத 
சொல் எது ?

A ) மொழி 
B ) பதம்  
C ) அணி👍
D ) கிளவி

32 ) இலக்கிய வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும் ? 

A ) 2 
B ) 3
C ) 4 👍
D ) 5

33 ) திசைச்சொல் அல்லாதது எது ? 

A ) சாவி     
B ) வருடம் 👍
C ) சன்னல்
D ) பண்டிகை 

34 ) திரி சொற்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ? 

A ) 4 
B ) 2 👍
C ) 3 
D ) பிரிக்க இயலாது 

35 ) பலபொருள் தரும் ஒரு சொல் எது ? 

A ) இயற்சொல் 
B ) திரிசொல் 👍
C ) திசைச்சொல் 
D ) வடசொல் 

36 ) வேயாமாடம் எனப்படுவது ..........

A ) வைக்கோலால் வேயப்படுவது 
B ) சாந்தினால் பூசப்படுவது 👍
c ) ஓலையால் வேயப்படுவது 
D ) துணியால் மூடப்படுவது 

37 ) பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?

A ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்👍 
B ) தொண்டைமான் இளந்திரையன் 
C ) முடத்தாமக் கண்ணியார் 
D ) நக்கீரர் 

38 ) இன்று + ஆகி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ? 

A ) இன்றுஆகி 
B ) இன்றிஆகி 
C ) இன்றாகி 👍
D ) இன்னஆகி 

39 ) கலித்தொகையில் மருதத்திணைப் பாடல்களைப் பாடிய புலவர் 

A ) மருதன் இளநாகனார்👍
B ) கபிலர் 
C ) பரணர் 
D ) நல்லத்துவனார் 

40 ) " எல் " என்னும் சொல்லின் பொருள் ? 
 
A ) அழகு 
B ) பகல் 👍
C ) பிளக்க 
D ) கரை

41 ) பொருத்துக . 

1 ) உரு - ( 1 ) பிளக்க 
2 ) பேழ - ( 2 ) அழகு 
3 ) வங்கூழ்- ( 3 ) கரை உயர்ந்த 
4 ) கோடுஉயர் - ( 4 ) காற்று 

A ) 1-2,2-1,3-4,4-3 👍
B ) 1-2,2-3,3-4,4-1 
C ) 1-2,2-4,3-1,4-3 
D ) 1-3,2-1,3-2,4-4 

42 ) பூம்புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டதைக் கூறும் நூல் எது ? 

A ) திருக்குறள் 
B ) பட்டினப்பாலை 👍
C ) பதிற்றுப்பத்து 
D ) சேந்தன் திவாகரம் 

43 ) பண்டைக்காலத்தில் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மரத்தினால் ஆன ஆணியின் பெயர் என்ன ? 

A ) தச்சுமுழம் 
B ) தொகுதி கண்ணடை 👍
c ) கண்ணடை 
D ) தூண் 

44 ) ' உரவு நீர்'- எனும் சொல்லுக்குப் பொருள் ? 

A ) பெருநீர்ப்பரப்பு 👍
B ) தீச்சுடர் 
C ) உச்சி 
D ) தூண் 

45 ) ' பெருங்கடல் ' -என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ? 

A ) பெரு + கடல் 
B ) பெருமை + கடல் 👍
c ) பெரிய + கடல் 
D ) பெருங் + கடல் 

46 ) ' உரு ' - என்பதன் பொருள் ? 

A ) கப்பல்ஓட்டுபவன் 
B ) கப்பல் 
C ) கரைஉயர்ந்த 
D ) அழகு👍

47 ) தமிழர்கள் பயன்பாட்டில் உருவான கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைத்தன.இம்முறையை கண்டு வியந்தவர் யார் ? 

A ) மார்க்கோபோலோ 👍
B ) ஆம்ஸ்ட்ராங் 
C ) லிலியன் வாட்சன் 
D ) கலிலியோ 

48 ) கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் .........

A ) எரா 👍
B ) பருமல் 
C ) சுக்கன் 
D ) வங்கு  

49 ) வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர் , பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசுபெற பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ..............

A ) வழிப்போக்கு இலக்கியம் 
B ) ஆற்றுப்படை இலக்கியம் 👍
C ) சிற்றிலக்கியம் 
D ) உலா 

50 ) பண்டைக்காலத்தில் கப்பல் கட்டும் கலைஞர்கள் எவ்வாறு அழை மணிமேகலை என்னும் நூல் குறிப்பிடுகிறது ? 

A ) நீகான் 
B ) கம்மியர் 👍
C ) சமுக்கு 
D ) சுக்கான் 


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY