Ads Right Header

50 + 50 - ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழுவதும் முக்கிய வினாவிடை!


ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழுவதும்
100 வினாவிடை.

1. தொடை என்பதன் பொருள் யாது?
அ) எடுத்தல்
ஆ) தொடுத்தல்👍
இ) முடித்தல்
ஈ) எழுதுதல்

2. சீர் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு👍
ஈ) ஐந்து

3. ஓதம் – சரியான ஒன்றை தேர்க
அ) குதிரை
ஆ) ஆடு
இ) ஈரம்👍
ஈ) முயல்

4. யசோதர காவியம் ………….. நூல்களில் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) ஐம்பெருங்காப்பியம்
ஈ) ஐஞ்சிறுகாப்பியம்👍

5. “புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலை எழுதியவர் ……………
அ) நெல்லைக்கண்ணன்
ஆ)வல்லிக்கண்ணன்👍
இ) ஈரோடு தமிழன்பன்
ஈ) ந. பிச்சமூர்த்தி

6. " தம் மக்கள் மெய் தீண்டல் உயிருக்கு இன்பம் " எனக் கூறியவர் யார் ? 
A ) ஔவையார் 
B ) பாரதியார் 
c ) பெரியார் 
D ) திருவள்ளுவர் 👍

7.  " இணைகின்றன " -என்பதை பகுபத உறுப்பிலக்கணம் படி பிரித்து எழுதுக ? 
A ) இணை + கிறு + அன் + அ 
B ) இணை + கின்று + அன் + அ 👍
C ) இணை + கின்று + அன 
D ) இணை + கிறு + அன 

8. " திங்கள்முடி சூடுமலை 
தென்றல் விளையாடுமலை " - என்று பாடியவர் யார் ? 
A ) பாரதிதாசன் 
B ) தாயுமானவர் 
C ) குமரகுருபரர் 👍
D ) புலவர் குழந்தை 

9. தளை எத்தனை வகைப்படும் ? 
A ) 2 
B ) 7 👍
C ) 8 
D ) 10 

10. யாப்பிலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை?
A ) 2 
B ) 3 👍
C ) 4 
D ) 5 

11. " தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டை சுரப்பை உலகு தொழும் " என பெரியாரை பற்றிப் பாடியவர் யார் ? 
A ) அண்ணா 
B ) மூ.வ 
C ) பாரதிதாசன் 👍
D ) வல்லிக்கண்ணன்

12. “ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
அ) விமலையார்
ஆ) சுரமஞ்சரி
இ) காந்தருவதத்தை
ஈ) நாமகள்👍

13. சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?
அ) நரிவெண்பா
ஆ) நரிவிருத்தம்👍
இ) சிந்தாமணிமாலை
ஈ) காவடிச்சிந்து

14. சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?
அ) பதினான்கு
ஆ) பதினைந்து
இ) பதினாறு
ஈ) பதின்மூன்று👍

15. "இந்திய தேசிய ராணுவம் - தமிழர் பங்கு"  என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ) ராசையா 
ஆ) மோகன்சிங் 
இ) மா.சு. அண்ணாமலை🌹
ஈ) முத்துராமலிங்கம்

16. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட தமிழின் முதல் காப்பியம் எது?
அ)  நரிவிருத்தம்
ஆ) சீவகசிந்தாமணி🌹
இ) சிலப்பதிகாரம்
ஈ) முத்தொள்ளாயிரம்

 17. "அங்காடி" - என்பதைக் குறிக்கக்கூடிய சொல் எது?
அ) கயம்
ஆ) அணங்கு 
இ) நியமம்🌹
ஈ) அகமாணம்

18. "மகிழ்ந்தோர்"-என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை 
ஆ) வினையாலணையும் பெயர்🌹
இ) வினைத்தொகை 
ஈ) பெயரெச்சம்

19. மாங்குடி மருதனார் பாடிய எத்தனை பாடல்கள் எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ளன?
அ) 8 
ஆ) 11
இ) 10
ஈ) 13🌹

20. "புரிசை" என்னும் சொல்லின் பொருள் யாது?
அ) அங்காடி 
ஆ) மதில் 🌹
இ) மேடை 
ஈ) காடு

21. அணங்கு
அ) சாளரம்
ஆ) தெய்வம்👍
இ) நீர்நிலை
ஈ) முரசு
 
22. "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" - என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ) கி. வா ஜகந்நாதன் 
ஆ) மு மேத்தா🌹
இ)  ச. தமிழ்ச்செல்வன்
 ஈ) மூ.வ

23. நிலைமொழி ஈற்றில் இ, ஈ, ஐ வரும் போது இடம்பெறும் உடம்படுமெய் …………..
அ) யகர உடம்படுமெய்👍
ஆ)வகர உடம்படுமெய்
இ) இரண்டும் வரும்
ஈ) இரண்டும் வராது

24. மரவேர் என்பது ……………. புணர்ச்சி
அ) இயல்பு
ஆ) திரிதல்
இ) தோன்றல்
ஈ) கெடுதல்👍

25. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு …………….. ஆகும்.
அ) பெரிய புராணம்
ஆ) நாலாயிரதிவ்ய பிரபந்தம்👍
இ) நளவெண்பா
ஈ) பூதத்தாழ்வார்

26. அப்பாவின் சினேகிதர்" நூலின் ஆசிரியர் யார்?
அ) அகிலன் 
ஆ) அசோகமித்திரன்👍
இ) ஆதவன் 
ஈ) நாஞ்சில்நாடன்

27. காஞ்சியும், வஞ்சியும் பூக்கும் நிலம்_____
அ) குறிஞ்சி 
ஆ) முல்லை 
இ) மருதம்👍
ஈ) நெய்தல்

28. விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடத்தப்படுவது எது?
அ) மைல்கள் 
ஆ) சுடுகள்
இ) நடுகல் 👍
ஈ) கருங்கல்

29. "நட்புக்காலம்"- என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ) கிருபானந்தவாரியார்                            ஆ) அறிவுமதி 👍
இ) சுரேஷ்
 ஈ) சுரதா
 
30. "சங்கீத இரத்னாகரம்" எனும் நூல் இயற்றப்பட்ட காலம்?
அ) 16 -ம் நூற்றாண்டு 
ஆ) 10 -ம் நூற்றாண்டு 
இ) 12 -ம் நூற்றாண்டு 
ஈ) 13 -ம் நூற்றாண்டு👍

31. கு. அழகிரிசாமி சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு என்ன?
அ) 1970👍
ஆ) 1980
இ) 1990
ஈ) 1970
 
32. 'தாமம்' - என்னும் சொல்லின் பொருள்?
அ) நடனம் 
ஆ) மாலை 👍
இ) விளக்கு 
ஈ) அசைவு 

33. "மைவனம்"
அ) ஈரநிலா
ஆ) மழைநெல் 👍
இ) சந்தனம் 
ஈ) இறகு

34. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)_____" என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது?
அ) உருவக அணி 
ஆ) உவமை அணி 
இ) வேற்றுமை அணி 
ஈ) ஏகதேச உருவக அணி👍

35. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?
அ) நன்னூலார்👍
ஆ) தொல்காப்பியர்
இ) இறையனார்
ஈ) வீரமா முனிவர்

36. மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.
அ) உரிச்சொற்கள்
ஆ) பெயர்ச்சொற்கள்
இ) வினைச்சொற்கள்
ஈ) இடைச்சொற்கள்👍
 
37. "நசை" என்பது குறிக்கும் 
சொற்கள் எவை?
அ) அறிவு, அழகு, நன்மை 
ஆ) காடு, மணம், வாய்க்கால்
இ) ஆசை, குற்றம், ஈரம்👍
ஈ) மேன்மை, இசை, வீரம்

38. “பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்?
அ) இராஜேஸ்வரி அம்மையார்
ஆ) காரைக்கால் அம்மையார்
இ) நீலாம்பிகை அம்மையார்👍
ஈ) சிவகாமி அம்மையார்

39. "ஆ" -என்பது எவ்வகை இடைநிலை?
அ) பெயர் இடைநிலை
ஆ) எதிர்மறை இடைநிலை🌹 
இ) நிகழ்கால இடைநிலை 
ஈ) இறந்தகால இடைநிலை

40. பதம் எத்தனை வகைப்படும்?
அ) 2 🌹
ஆ) 3
இ) 4
 ஈ) 5

41. "பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோவென" பாடியவர் யார்? 
அ) பெரியார் 
ஆ) பாரதியார் 
இ) பாரதிதாசன் 🌹
ஈ) மூவலூர் இராமாமிர்தம்

42. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலைத் தரப்படவேண்டும் எனக் கூறியவர் யார்?
அ)  கதே 
ஆ)  மூ.வ
இ) ஆபிரகாம் லிங்கன் 
ஈ) அண்ணா🌹

43. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?
அ) நக்கீரர் 
ஆ) மாக்காயனார்
இ) நல்லத்துவனார்
 ஈ) காரியாசான்🌹

44. அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை நடுவன் அரசு வெளியிட்ட ஆண்டு?
அ) 2009🌹
ஆ) 2005
இ) 2010
ஈ) 2002

45. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?
அ) சரஸ்வதி மகால் நூலகம் 
ஆ) கன்னிமாரா நூலகம் 
இ) திருவனந்தபுரம் நூலகம்🌹 
ஈ) கீழ்த்திசை சுவடிகள் நூலகம்

46. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
அ) 5 
ஆ) 6🌹
இ) 7
ஈ) 2 

47. முதன் முதலில் பெண் கல்வியை ஹண்டர் குழு பரிந்துரை செய்த ஆண்டு?
அ) 1881
ஆ) 1882🌹
இ) 1884
ஈ) 1885

48. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?
A ) நுகர்தல்
B ) தொடு உணர்வு👍
C ) கேட்டல்
D ) காணல்

49. புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் - என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?
A ) சிலப்பதிகாரம்
B ) புறநானூறு👍
C ) கலித்தொகை
D ) தொல்காப்பியம்

50. அருணன் சுப்பையா பிறந்த ஊர்?
A ) வேளச்சேரி
B ) களியக்காவிளை
C ) கோதைசேரி👍
D ) மதுரை

51. கடற்பயண செயலி?
A ) ரோவர்
B ) சித்தாரா
C ) நேவிக்👍
D ) புளூடாட்

52. பறவை
A ) ஈரறிவு
B ) மூவறிவு
C ) நான்கறிவு
D ) ஐந்தறிவு👍

53. 2015 - ஆண்டு தமிழக அரசின் அப்துல்கலாம் விருது பெற்றவர் யார் ? 
A ) அருணன் சுப்பையா 
B ) வளர்மதி 👍
C ) சிவன் 
D ) மயில்சாமி அண்ணாதுரை

54. " தும்பி " என்பது ........
A ) ஈரறிவு 
B ) மூவறிவு 
C ) நான்கறிவு 👍
D ) ஐந்தறிவு 

55. தொல்காப்பியத்தில் இடம்பெறும் இயல்கள் எத்தனை ? 
A ) 20 
B ) 27 👍
C ) 28 
D ) 9 
 
56. " pendrive " - என்பதற்கான 
Kதமிழ்ச் சொல் ? 
A ) சேமிப்பு 
B ) கோப்புஅறை 
C ) உறை 
D ) விறலி 👍
 
57. " கள்ளிக்காட்டு இதிகாசம் " - என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங் ஆண்டு ? 
A ) 2003 👍
B ) 2002 
C ) 2004 
D ) 2001 

58. எந்நகரோடு அதிக தொடர்புடையதாக இந்திரவிழா திகழ்ந்தது ? 
A ) உறையூர் 
B ) புகார் 👍
C ) மதுரை 
D ) வஞ்சி 

59. திருக்குறளில் இடம்பெறும் மரங்கள் எத்தனை ? 
A ) 3 
B ) 2 👍
C ) 4 
D ) 5 

60. கீழ்க்கண்டவற்றில் மரபு இணைச் சொல் அல்லாதது எது ? 
A ) தமிழ் மக்கள்  👍
B ) மேடும் பள்ளமும் 
C ) முதலும் முடிவும்
D ) கண்ணும் கருத்தும்

61. வல்லெழுத்துகளில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும் ? 
A ) 3 
B ) 4 👍
C ) 5 
D ) 6 

62. சீத்தலைச்சாத்தனார் எந்நகரில் வாழ்ந்தவர் ? 
A ) திருச்சி 
B ) தஞ்சாவூர்
C ) மதுரை 👍
D ) புகார்

63. மணிமேகலை எத்தனை காதைகளாக பகுக்கப்பட்டுள்ளது ? 
A ) 30 👍
B ) 20 
C ) 27 
D ) 37 

64. ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் எது ? 
A ) பரிபாடல் 
B ) பட்டினப்பாலை 
C ) கலித்தொகை 👍
D ) மதுரைக்காஞ்சி 

65. " Epigraphy " - என்பதன் பொருள் ? 
A ) பொறிப்பு 
B ) நடுகல் 
C ) கல்வெட்டியல் 👍
D ) பண்பாட்டு குறியீடு 

66. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார் ? 
A ) தருமர் 
B ) மணக்குடவர் 👍
C  பெரிமேலழகர் 
D ) தச்சர் 

67. " பாங்கறிந்து " -என்பதன் இலக்கணக்குறிப்பு யாது ? 
A ) உரிச்சொல் தொடர் 
B ) வினைத்தொகை 
C ) இரண்டாம் வேற்றுமைத்தொக👍
D ) பண்புத்தொகை 

68. திருக்குறளில் இடம்பெறும் 
ஒரே பழம் எது ? 
A ) பலாப்பழம் 
B ) அனிச்சம் பழம் 
C ) பனம் பழம் 
D ) நெருஞ்சிப்பழம்👍

69. " தமிழர் சால்பு " -என்ற நூலின் ஆசிரியர் யார் ? 
A ) கா . ராஜன் 
B ) சு.வித்தியானந்தன் 👍
C ) க.ரத்தினம் 
D ) மா.ராசமாணிக்கனார்

70. மல்லல் -எனும் சொல்லின் பொருள் ? 
A ) மறுமை 
B ) பூவரசமரம் 
C ) வளம் 👍
D ) பெரிய 
 
71. ' மிசை ' - என்பதன் 
எதிர்ச்சொல் என்ன ? 
A ) கீழே 👍
B ) மேலே 
C ) இசை 
D ) வசை 

72. திருத்தொண்டத்தொகை- என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 
A ) சேக்கிழார் 
B ) சுந்தரர் 👍
C ) ஒட்டக்கூத்தர் 
D ) புகழேந்தி

73. " வாவி " - என்னும் சொல்லின் 
பொருள் ? 
A ) வண்டு 
B ) நெற்பயிர் 
C ) முத்து 
D ) பொய்கை 👍

74. கந்தர்வனின் இயற்பெயர் என்ன ? 
A ) இறையரசன் 
B ) விருத்தாச்சலம் 
C ) நாகலிங்கம் 👍
D ) முத்தையா 

75. தமிழில் எத்தனை துணைவினைகள் உள்ளன ? 
A ) 20 
B ) 40 👍
C ) 35 
D ) 42

76. ஒரு ஆப்பிளை உற்பத்தி செய்ய தேவைப்படும் தண்ணீரின் அளவு என்ன? 
A ) 2500 லிட்டர் 
B ) 250 லிட்டர் 
C ) 822 லிட்டர் 👍
D ) 1780 லிட்டர் 

77. கவிஞர் தமிழ்ஒளி வாழ்ந்த காலம் ? 
A ) 1920-1965 
B ) 1924-1965 👍
C ) 1934-1965 
D ) 1914-1965 

78. தமிழ்விடு தூது ........ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது ? 
A ) தொடர்நிலைச் செய்யுள் 
B ) புதுக்கவிதை 
C ) சிற்றிலக்கியம் 👍
D ) தனிப்பாடல் 

79. " சந்து இலக்கியம் " -என்று அழைக்கப்படுவது எது ? 
A ) பள்ளு 
B ) தூது 👍
C ) அந்தாதி 
D ) தனிப்பாடல் திரட்டு

80. கீழ்கண்டவற்றில் உருவகம் எது ? 
A ) தெள்ளமுது 
B ) முத்திக்கனி 👍
C ) குற்றமில்லா 
D ) சிந்தாமணி 

81. ' ஏந்தி ' என்பதன் 
இலக்கணக் குறிப்பு யாது ? 
A ) முற்றுமை  
B ) வினையெச்சம் 👍
C ) வேற்றுமை
D ) குறிப்புப் பெயரெச்சம் 

82. திராவிட மொழி குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ? 
A ) 2 
B ) 3 👍
C ) 4 
D ) 5

83. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை கால்டுவெல் வெளியிட்ட ஆண்டு ? 
A ) 1850 
B ) 1856 👍
C ) 1876 
D ) 1854 

84. புகுவான்
A ) எதிர்மறை இடைநிலை
B ) எதிர்கால இடைநிலை👍
C ) இறந்தகால இடைநிலை
D ) நிகழ்கால இடைநிலை

85. உலகத் தாய்மொழி நாள் ? 
A ) மார்ச் 21 
B ) பிப்ரவரி 15 
C ) பிப்ரவரி 20 
D ) பிப்ரவரி 21👍

86. கீழ்க்கண்டவற்றில் தன்வினைத் தொடர் எது ? 
A ) ஆட்டினான் 
B ) செய்வித்தான் 
C ) செய்தான் 👍
D ) ஆட்டு 

87. கீழ்க்கண்டவற்றுள் வினைமுற்றுத்தொடர் எது ? 
A ) மன்னன் வந்தான் 
B ) அப்பா சொன்னார் 
C ) தோசை வைக்கப்பட்டது 
D ) வந்தான் மன்னன் 👍

88. சரியாக பொருந்தியுள்ளது எது ? 
A ) ஒரு மா - 1/10 
B ) அரை மா -2/20 
C ) அரை வீசம் -2/40 
D ) முக்காணி- 3/80 👍

89. " தமிழ் விடு தூது " - என்னும் நூலை 
உவேசா பதிப்பித்த ஆண்டு?
A ) 1925 
B ) 1910 
C ) 1920 
D ) 1930 👍

90. தஞ்சாவூரில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
A) 1970
B) 1981
C) 1995👍
D) 1968 

91. " நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் " -என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 
A ) புறநானூறு 
B ) நற்றிணை 
C ) குறுந்தொகை 👍
D ) அகநானூறு

92. சு . சமுத்திரத்தின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் எது ? 
A ) வாடாமல்லி 
B ) வேரில் பழுத்த பலா 👍
C ) குற்றம் பார்க்கில் 
D ) பாலைப்புறா 

93. " இனிய உளவாக இன்னாத கூறல் ... " - என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ? 
A ) உவமை அணி 👍
B ) உருவக அணி 
C ) எடுத்துக்காட்டு உவமையணி 
D ) சொற்பொருள் பின்வருநிலையணி 

94. அகமும் புறமும்
அ) கடிதத்தொகுப்பு 
ஆ) கட்டுரைத் தொகுப்பு👍
இ) சிறுகதைத் தொகுப்பு
ஈ) கவிதைத் தொகுப்பு

95. சு . சமுத்திரத்தின் தமிழக அரசின் விருது பெற்ற நூல் எது ? 
A ) வேரில் பழுத்த பலா 
B ) குற்றம் பார்க்கில் 👍
C ) வாடாமல்லி 
D ) பாலைப்புறா

96. " குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் " - என்று கூறியவர்? 
A ) கூடலூர்கிழார் 
B ) ஆலந்தூர் கிழார் 👍
C ) ஆலந்தூர் மோகனரங்கன் 
D ) கபிலர் 

97. சில இறகுகள் சில பறவைகள்
அ) கடிதத்தொகுப்பு 👍
ஆ) கட்டுரைத் தொகுப்பு
இ) சிறுகதைத் தொகுப்பு
ஈ) கவிதைத் தொகுப்பு

98. " உயரப் பறத்தல் " -என்னும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார் ? A ) ந.பிச்சமூர்த்தி  
B ) வண்ணதாசன் 👍
C ) தனிநாயகம் அடிகள் 
D ) பாரதியார்
 
99. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) வள்ளுவர்
இ) கணியன் பூங்குன்றனார்👍
ஈ) ஔவையார்

100. தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – இக்குறட்பாவில் வரும் அணி ……..
அ) உருவகம்
ஆ) உவமை
இ) வஞ்சப்புகழ்ச்சி👍
ஈ) தற்குறிப்பேற்றம்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY