Ads Right Header

வினாக்கள் - ஏழாம் வகுப்பு இயல் -5.


ஏழாம் வகுப்பு இயல் -5 
1.கீழ்க்கண்டவற்றில் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் எது ? 
A ) இசையமுது 
B ) இருண்டவீடு 
C ) பிசிராந்தையார் 
D ) கண்ணகி புரட்சிக்காப்பியம் 

2 ) " வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை " - என்னும் பாடல் இடம்பெற்ற நூல்?
 A ) நாலடியார் 
B ) திருக்குறள் 
C ) புறநானூறு 
D ) பரிபாடல் 

3 ) ' வாய்த்தீயின் " - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A ) வாய்த்து + ஈயின் 
B ) வாய் + தீயின் 
C ) வாய்த்து + தீயின் 
D ) வாய் + ஈயீன் 

4 ) " வேளாண் வேதம் " -என்று அழைக்கப்படும் நூல் ?
A ) திருக்குறள் 
B ) நாலடியார் 
c ) பழமொழி நானூறு 
D ) திரிகடுகம் 

5 ) 'விச்சை' என்பதன் பொருள்?
A ) கல்வி 
B ) பொருள் 
c ) களவு 
D ) அரசர் 

6 ) காலத்தின் அருமையை கூறும் திருக்குறள் இடம்பெறும் அதிகாரம் ? 
A ) கல்வி 
B ) காலமறிதல் 
C ) வினையறிதல் 
D ) மடியின்மை

7 ) திருக்குறளார்- என்று அழைக்கப்படுபவர் யார் ? 
A ) வீ . முனிசாமி 
B ) மு.வ 
C ) திரு.வி.க 
D ) கவிமணி 

8 ) " நன்றின்பால் உய்ப்பது அறிவு " என்று கூறியவர் யார் ? 
A ) வீ.முனிசாமி 
B ) திருவள்ளுவர் 
C ) திரு.வி.க 
D ) கவிமணி 

9 ) நன்னூலின் படி தமிழில் உள்ள ஓரெழுத்து மொழிகளின் எண்ணிக்கை ? 
A ) 40 
B ) 42 
C ) 44 
D ) 46 

10 ) பெயர்ப் பகுபதம் 
A ) நான்கு 
B ) ஐந்து 
C ) ஆறு 
D ) ஏழு 

11 ) காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு எது ? 
A ) பகுதி 
B ) விகுதி 
C ) இடைநிலை 
D ) சந்தி 

12 ) ஓரெழுத்து ஒரு மொழியில் உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை?
A. 1
B. 2
C. 3
D. 4

13 ) பசு என்னும் பொருள் தரும் சொல் 
A ) ஆ 
B ) ஈ   
C ) ஊ 
D ) ஏ

14 ) கொடு - என்னும் பொருள் தரும் சொல் எது ? 
A. ஆ
B. ஈ
C. ஊ
D. ஏ

15 ) நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார் ? 
A ) பவணந்தி முனிவர் 
B ) ஆறுமுகநாவலர் 
C ) அகத்தியர் 
D ) நல்லத்துவனார் 

16 ) பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ? 
A ) 6 
B ) 2 
C ) 5 
D ) 42 

17 ) பகாபதத்தின் வகைகள் எத்தனை ? 
A ) 3 
B ) 4 
C ) 6 
D ) 5 

18 ) சொல்லின் இறுதியில் நிற்கும் உறுப்பே ......... ஆகும்.

A. பகுதி
B. விகுதி
C. சந்தி
D.  இடைநிலை


19 ) அம்பு என்னும் பொருள் தரும் சொல் ? 
A ) ஆ 
B ) ஈ
C ) ஊ 
D ) ஏ

20 ) " ஊ " -என்னும் சொல்லின் பொருள் ? 
A ) கேடு  
B ) மரம் 
C ) இறைச்சி
D ) விலங்கு

21 ) பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……

A. மயில்
B. குயில்
C. கிளி
D. அன்னம்


22 ) " வெற்பு " -என்னும் சொல்லின் பொருள் யாது ? 
A ) ஏரி 
B ) சமுத்திரம் 
c ) மலை 
D ) காடு 

23 ) பாரதிதாசன் இயற்றாத நூல் எது ? 
A ) அழகின் சிரிப்பு 
B ) கண்ணகி புரட்சிக் காப்பியம் 
C ) தமிழின்பம் 
D ) இசையமுது 

24 ) நாலடியார் எத்தனை பகுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளது ? 
A ) 2 
B ) 3 
C ) 4 
D ) 5 

25 ) நாலடியார் ........... வெண்பாக்களால் ஆனது . 
A ) 100 
B ) 401 
C ) 400
D ) 150

26 ) ஒருவர் தன் குழந்தைக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வமாக 
A ) தங்கம்
B ) பொருள் 
D ) நிலம் 
C ) கல்வி 

27 ) எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
 A ) எவன் ஒருவன் 
B ) எவன்னொருவன் 
c ) எவனொருவன் 
D ) ஏன்னொருவன்

28 ) " பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் " - என்று பாடியவர் ?
 A ) பாரதிதாசன் 
B ) பாரதியார் 
C ) முனிசாமி 
D ) நாமக்கல் கவிஞர் 

29 ) திருக்குறளார் வீ . முனிசாமி இயற்றாத நூல் எது ? 
A ) வள்ளுவர் உள்ளம் 
B ) வாழும் வள்ளுவம் 
C ) வள்ளுவர் காட்டிய வழி 
D ) திருக்குறளில் நகைச்சுவை 

30 ) சுப்ரபாரதிமணியனின் இலக்கிய இதழ் எது ? 
A ) காடு 
B ) கனவு 
C ) சோலை 
D ) எழுத்து 

31 ) கழனி – பொருள் கூறுக.

A. மேகம்
B. வயல்
C. யானை
D. பழம்

32 ) வினைப் பகாப்பதம் அல்லாத சொல்?

A. நட
B. வா
C. படி
D. காற்று

33 ) தே என்பதன் பொருள் ………….. எனப்படும்.

A. தேடு
B. கடவுள்
C. தேர்
D. தேவர்கள்

34 ) கல்வி அறிவு இல்லாதவர்களை ........... ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

A. பறவையோடு
B. பாறையோடு
C. விலங்கோடு
D. இருளோடு

35 ) எழுதினான்’ என்பது ………………..
A. பெயர்ப் பகுபதம்
B. வினைப் பகுபதம் 
C. பெயர்ப் பகாப்பதம்
D.வினைப் பகாப்பதம்







Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY