Ads Right Header

விடைகள் - எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 .


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 .

1 ) கூற்று ( 1 ) - தே + ஆரம் இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்று பொருள் . கூற்று ( 2 ) தே + வாரம் - இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் . கூற்று ( 3 ) -பதிகம் என்பது நூறு பாடல்களைக் கொண்டது . 
A ) கூற்று 1,2,3 சரி 
B ) கூற்று 1 சரி , 2,3 தவறு 
C ) கூற்று 1,2 சரி 3 தவறு 👍
D ) கூற்று 1,2 தவறு 3 சரி 

2 ) கலித்தொகை ...... பாடல்களைக் கொண்டது . 
A ) 110 
B ) 102 
C ) 150 👍
D ) 200 

3 ) " கூம்பொடு மீப்பாய் களையாது " - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? A ) புறநானூறு 👍
B ) அகநானூறு 
C ) பட்டினப்பாலை 
D ) பரிபாடல் 

4 ) " தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் " -என்று பாடியவர் யார் ? 
A ) திருநாவுக்கரசர் 
B ) சுந்தார் 
C ) திருஞானசம்பந்தர் 👍
D ] மாணிக்கவாசகர் 

5 ) இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும் ? 
A ) 3 
B ) 4 👍
C ) 5  
D ) 6 

6 பரிவாதினி என்னும் வீணை எந்த மன்னனுடைய காலத்தில் வழக்கில் இருந்ததாகக் கூறப்படுகிறது ? 
A ) பாபர் 
B ) சாஜராஜ சோழன் 
C ) மகேந்திரவர்மன் 👍
D ) நெடுஞ்செழியன்


7 ) தமிழ் மக்களிடம் முப்பத்தியாறு வகையான முரசுகள் முரசுகள் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது ? 
A ) மணிமேகலை 
B ) புறநானூறு 
C ) பெட்டினப்பாலை 
D ) சிலப்பதிகாரம் 👍

8 ) தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் ? 
A ) 5 
B ) 6 👍
C ) 7 
D ) 9 

9 ) " காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை " என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 
A ) தொல்காப்பியம் 
B ) நன்னூல் 👍
C ) கொடுந்தமிழ் 
D ) இலக்கணம் 

10 ) கீழ்க்கண்டவற்றில் 
எண்ணும்மை எது ? 
A ) இரவுபகல் 
B ) மலர்விழி 
C } வரைந்த ஓவியம் 
D ) இரவும் பகலும் 👍

11 ) " Rite " - என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன ? 
A ) கொம்பு 
B ) சடங்கு 👍
C ) பின்னுதல் 
D ] கூடை முடைதல் 

12 ) " அவை , அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் .. " - என்னும் குறளில் விடுபட்ட வற்றை நிரப்புக ? 
A ) வேட்ப மொழிவதாம் சொல் 
B ) வெல்லும்சொல் இன்மை அறிந்து 
C ) தொகைஅறிந்த தூய்மை யவர் 👍
D ] சொல்தெரிதல் வல்லார் அகத்து 

13 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது ? 
A ) வேப்ப மரம் 
B ) பனை மரம் 👍
C ) அரச மரம் 
D ) ஆல மரம்

14 ) அரசரை எது காப்பாற்றும் என வள்ளுவர் கூறுகிறார் ? 
A ) படைபலம் 
B ) குற்றமற்ற ஆட்சி 👍
C ) செல்வம் 
D ) யானைப்படை 

15 ) " இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் " - என்னும் குறள் இடம் பெறும் அதிகாரம் என்ன ? 
A ) அவையறிதல் 
B ) செங்கோன்மை 👍
C ) வெருவந்தசெய்யாமை 
D ) தெரிந்துவினையாடல் 

16 ) கீழ்க்கண்டவற்றில் வள்ளுவர் குறிப்பிடாதது எது ? 
A ) இச்செயலை இந்த வகையால் இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் . 
B ) எதையும் நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவு நிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும் . 
C ) ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவர் கொடிய தண்டனை வழங்குவது அரசின் கடமை 👍
D ) கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும் 

17 ) இணைச் சொற்கள் எத்தனை வகைப்படும் ? 
A ) 3 👍
B ) 2 
C ) 4 
D ) 5 

18 ) கீழ்க்கண்டவற்றில் 
செறியிணை எது ? 
A ) சீரும் சிறப்பும்     
B ) உயர்வும் தாழ்வும் 
C ) பச்சைப்பசேல்👍
D ) சீராட்டி பாராட்டி 

19 ) " சாலவும் நன்று " - என்பது எவ்வகை தொடர் ? 
A ] உரிச்சொல் தொடர் 👍
B ) வினையெச்சத் தொடர் 
C ) இடைச்சொல் தொடர் 
D ) பெயரெச்சத் தொடர் 

20 ) தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் ? 
A ) 3
B ) 6 
C ) 7
D ) 9 👍

21 ) கீழ்க்கண்டவற்றில் 
தவறானது எது ? 
A ) ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் , 
B ) சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர் எனப்படும் . 
c ) இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அது வினைத்தொகை எனப்படும் 👍
D ) பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையே ஆன ஆகிய எனும் பண்புகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும் . 

22 ) " மண்ணமை முழவு " - என்று முழவு பற்றி குறிப்பிடும் நூல் எது ? 
A ) சிலப்பதிகாரம் 
B ) புறநானூறு 
C ) பொருநராற்றுப்படை👍
D ) பெரும்பாணாற்றுப்படை 

23 ) " மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் " - என்னும் வரி இடம்பெற்றது?
A ) நாச்சியார் திருமொழி 👍
B ) புறநானூறு 
C ) பரிபாடல் 
D ) சிலப்பதிகாரம் 

24 ) " பாணி " -என்னும் பெயரால் அழைக்கப்படும் இசைக்கருவி எது ? 
A ) சேகண்டி 
B ) திமிலை 👍
C ) பறை 
D ) சங்கு 

25 ) இசையை எத்தனை வகையாகப் பிரிப்பர் ?
A ) 3 
B ) 4
C ) 5  
D ) 2 👍

26 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) தோல்கருவி -சேகண்டி 👍
B ) கஞ்சக்கருவி - சாலரா 
C ) காற்றுக் கருவி- குழல் 
D ) நரம்புக் கருவி- யாழ்

27 ) " நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியார் " -என்னும் பாடல் வரி இடம்பெறும் நூல் எது ? 
A ) சிலப்பதிகாரம் 
B ) மணிமேகலை 
C ) புறநானூறு 👍
D ) மத்த விலாச பிரகசனம்

28 ) ..... _வகையான மூங்கில்கள் உண்டு . 

A ) 3 👍
B ) 2 
C ) 4 
D ) 5 

29 ) கலித்தொகையை தொகுத்தவர் யார் ? A ) பெருங்குன்றூர் கிழார் 
B } பேயனார் 
C } ஓதலாந்தையார் 
D ) நல்லத்துவனார் 👍

30 ) " நம்பியாரூரர் " -என்று அழைக்கப்படுபவர் யார் ? 
A ) மாணிக்கவாசகர் 
B ) சுந்தரர் 👍
C } திருநாவுக்கரசர் 
D ) திருஞாசம்பந்தர் 

31 ) பொருத்துக . 
1 ) முரலும் - ( 1 ) முதிர்ந்த மூங்கில் 
2 ) பழவெய்- ( 2 ) பகைவர் 
3 ) போற்றார் - ( 3 ) உறவினர் 
4 ) கிளை - ( 4 ) முழங்கும் 
A ) 1-3,2-4,3-2,4-1 
B ) 1-4,2-1,3-2,4-3 
C ) 1-4,2-3,3-2,4-1 
D ) 1-4,2-1,3-2,4- 3 👍

32 ) சுந்தரரின் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக இடம்பெற்றுள்ளது ? 
A ) முதல் திருமுறை 
B ) ஏழாம் திருமுறை 👍
C ) எட்டாம் திருமுறை 
D ] பத்தாம் திருமுறை 

33 ) தேவாரத்தை தொகுத்தவர் யார் ? 
A ) நம்பியாண்டார் நம்பி 👍
B ) நாதமணி 
C ) நல்லத்துவனார் 
D ] பாரதம் பாடிய பெருந்தேவனார் 

34 ) " ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் " - என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ? 
A ) திருக்கேதாரம் 
B ) திருமந்திரம் 
C ) தேவாரம் 
D } கலிதொகை👍

35 ) இசைக் கருவிகளை இசைத்துப் பாடுபவர் யார் ? 
A ) பாடகர் 
B ) வித்துவான் 
C ] பாணர் 👍
D ] வேளிர் 

36 ) " குடமுழா " எந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது ? 
A ) தஞ்சை சரஸ்வதி மஹால் அருங்காட்சியகம் 
B ) சென்னை அருங்காட்சியகம் 👍
C ) மதுரை அருங்காட்சியகம் 
D ) பூம்புகார் அருங்காட்சியகம் 

37 ) பல வகையான குழல்கள் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது ? 
A ) பரிபாடல் 
B ) பட்டினப்பாலை 
C ) சிலப்பதிகாரம் 👍
D ) பெரியபுராணம் 

38 ) ' பணிலம் ' என்று இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட இசைக்கருவி எது ? 
A ) பறை 
B ) திமிலை 
C ) சேகண்டி 
D ) சங்கு 👍

39 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ? 
A ) விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி பறையாகும் . 
B ) வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்தது சேகண்டி . 
C ) சேகண்டி இசைக்கருவி திருமண விழாவின்போது இசைக்கப்படுகிறது .👍 
D ] பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத்தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும் . 

40 ) மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்று கூறியவர் யார் ? 
A ) ஆண்டாள் 
B ) அடியார்க்கு நல்லார் 👍
C ) இளங்கோவடிகள் 
D ) சுந்தரர் 

41 ) " கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம் " - என்னும் வரி இடம்பெற்ற நூல் எது ? 
A ) புறநானூறு 👍
B ) பொருநராற்றுப்படை 
C ) சிலப்பதிகாரம் 
D ) பரிபாடல்

42 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) வீணை -6 நரம்புகள் 👍
B ) பேரியாழ் -21 நரம்புகள் 
C ) மகரயாழ் -19 நரம்புகள் 
D ) சகோடயாழ் -14 நரம்புகள் 

43 ) கீழ்க்கண்டவற்றில் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எது ? 
A ) பால்குடம் 👍
B ) பொற்சிலை 
C ) மாட்டுக்கொட்டகை 
D ) தலைவணங்கு 

44 ) " தொடி " -என்பதன் பொருள் ? 
A ) சங்கு 
B ) வளையல் 👍
C ) தங்கம் 
D ) பாறை 

45 ) பொருத்துக : 
1 ) மல்லிகை மலர்ந்தது . ( 1 ) விளித்தொடர் 
2 ) நண்பா படி- ( 2 ) பெயரெச்சத்தொடர்
3 ) வரைந்த ஓவியம்- ( 3 ) வினையெச்சத் தொடர் 
4 ) தேடிப்பார்த்தேன்- ( 4 ) எழுவாய் தொடர் A ) 1-2,2-3,3-3,4-4 
B ) 1-4,2-2,3-3,4-1 
C ) 1-4,2-3,3-2,4-1 
D ) 1-4,2-1,3-2,4-3 👍

46 ) முழவு + அதிர என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் 
A ) முழவுதிர 
B ) முழவுதிரை 
C ) முழவதிர 👍
D ) முழவுஅதிர 

47 ) பதிகம் என்பது .......... பாடல்களைக் கொண்டது .
A ) 6 
B ) 100 
C ) 10 👍
D ) 20 

48 ) " பாடறிந்து “ -என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது ? 
A ] பாட் + அறிந்து 
B ] பா + அறிந்து 
C ) பாட்டு + அறிந்து 
D ] பாடு + அறிந்து👍

49 ) முதுமக்கள் தாழி கிடைத்துள்ள தமிழக இடம் எது ? 
A ) ஆதிச்சநல்லூர் 👍
B ) அரச்சலூர் 
C ) செம்பியன் கண்டியூர் 
D ) கீழடி 

50 ) ........ நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும் . 
A ) காலம் 
B ) நடுவுநிலைமை 👍
C ) முறையாக ஆராய்ந்து 
D ) உயிர்களை காப்பாற்றுமாறு 










Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY