Ads Right Header

வினாக்கள் - ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 8.

  • ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 8.

1.       “வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் …………………”   என்னும் குறளில் எவ்அணி பயின்று வந்துள்ளது?
A) எடுத்துக்காட்டு உவமையணி
B) உவமைஅணி
C)வேற்றுமை அணி
D) வஞ்சப்புகழ்ச்சி அணி

2.  எந்நாடு சிறந்த நாடாகும் என வள்ளுவர் கூறுகிறார்
A) செல்வ வளம் உடைய நாடு
B) படையெடுப்பில் சிறந்த மன்னனை உடையநாடு
C) பெரிய அளவில் முயற்சி செய்யாமல் வளம் தரும் நாடு
D) முயற்சி செய்து சேரும் வளத்தை உடைய நாடு

3. “Courtesy”  என்னும் சொல்லின் பொருள்
A) நற்பண்பு
B) ஒப்புரவு நெறி
C) கடமை
D) லட்சியம்

4. “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” “என்னும் குறளில் எவ்வணி வந்துள்ளது?
A) உவமை அணி
B)உருவக அணி
C) இல்பொருள் உருவக அணி
D) ஏகதேச உருவக அணி
 
5. “ஜென்” என்ற ஜப்பானிய மொழிச் சொல்லின் பொருள் என்ன?
A) கடமை
B) கடவுள்
C) முனிவர்
D) தியானம் செய்

6. கீழ்க்கண்டவற்றில் குன்றக்குடி அடிகளார் நடத்திய எது?
1.  காடு
2. அருளோசை
3. குறள்விளக்கம்
4. அறிக அறிவியல்
A) 2,3
B) 2,4
C) 1,3
D) 1,4

7. “உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) முடியரசன்
D) கண்ணதாசன்

8. உலகினர் விரும்புமாறு உதவிசெய்து வாழ்பவரது செல்வமானது எதில் நிரம்பிய நீர்ப் போல பலருக்கும் பயன்படும் என வள்ளுவர் கூறுகிறார்?
A) அட்சயபாத்திரம்
B) கிணறு
c) ஓடை
D) ஊருணி

9. “செல்வத்துப் பயனே ஈதல்” என்னும் வரி இடம் பெறும் நூல் எது
A) புறநானூறு
B) நற்றிணை
C) பரிபாடல்
D) அகநானூறு

10. அறநெறிச்சாரம் எனும் நூல் எத்தனை பாடல்களைக் கொண்டது?
A) 220
B) 225
C) 100
D) 255

11. அறநெறிச்சாரம் -என்னும் நூலின் ஆசிரியர் வாழ்ந்த காலம்
A) கி.பி 14- ம் நூற்றாண்டு
B) கி.பி 13-ம் நூற்றாண்டு
C) கிபி 12 -ம் நூற்றாண்டு
D) கி.பி 10- ம் நூற்றாண்டு
 
12. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?
A) பூதத்தாழ்வார்
B) திருமங்கை ஆழ்வார்
C) பொய்கை ஆழ்வார்
D) பெரியாழ்வார்

13. நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
A) குருமுனி
B) நாதமுனி
C) பெருந்தேவனார்
D) நம்பியாண்டார் நம்பி

14. “அந்தம்”-என்னும் சொல்லின் பொருள்?
A) முதல்
B) தொடர்
C) தொகுதி
D) முடிவு

15. மாமல்லபுரத்தில் பிறந்த ஆழ்வார் யார்?
A) பொய்கை ஆழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) தொண்டரடிப்பொடி ஆழ்வார்
D) பெரியாழ்வார்
 
16. பொருத்துக
1) வையம் –(1) வெப்பக் கதிர் வீசம்
2) வெய்ய -(2) துன்பக்கடல்
3) இடர்ஆழி –(3) அறிவு
4) ஞானம் -(4) உலகம்
A) 1-4,2-1,3-2,4-3
B)1-4,2-3,3-2,4-1
C) 1-4,2-3,3-4,4-1
D)1-2,2-3,3-4,4-1

17. நாலாயிரத் திவ்ய பிரபந்ததின் இரண்டாம் திருவந்தாதி யாரால் பாடப்பட்டது?
A) பூதத்தாழ்வார்
B) ஆண்டாள்
C) பொய்கை ஆழ்வார்
D) பெரியாழ்வார்

18. “வையம் தகளியா கடலே நெய்யாக”-என்று பாடிய ஆழ்வார் யார்?
A) பூதத்தாழ்வார்
B) ஆண்டாள்
C) பொய்கை ஆழ்வார்
D) பெரியாழ்வார்

19. திருமாலை போற்றிப் பாடிய ஆழ்வார்கள் எத்தனை பேர்?
A) 10
B) 12
C) 11
D) 22

20. பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்களில் வராதவர் யார்?
A) ஆண்டாள்
B) பொய்கை ஆழ்வார்
C) பூதத்தாழ்வார்
D) பேயாழ்வார்

21) “....................சேராது இயல்வது நாடு”-என்னும் குறளில் விடுபட்டவற்றை நிரப்புக .
A) கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
B) உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
C) பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
D)எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி

22) “கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்”-என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம் என்ன?
A)     அவை அஞ்சாமை
B)      பெருமை
C)       அரண்
D)     வினைசெயல்வகை

23.   எத்தனை செயல்களை ஆராய்ந்து ஒரு செயலை செய்ய வேண்டும் என திருவள்ளுவர் கூறுகிறார்?
A)     இரண்டு
B)      மூன்று
C)      நான்கு
D)     ஐந்து
 
24.   அரண் எவ்வளவு பெருமையுடையதாக இருந்தாலும்…………. இல்லாத இடத்தில் அது பயனில்லாதது ஆகும் என வள்ளுவர் கூறுகிறார்.
A) பெருமை
B) நாடு
C) வீரம்
D)செயல்
 
25. யார் செய்வதற்கும் அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர் என வள்ளுவர் கூறுகிறார்?
A) மன்னன்
B) படைத்தளபதி
C) கல்விகற்றவன்
D) உயர்ந்த பண்பு உடையவர்

26. கீழ்க்கண்டவற்றில் சந்திப்பிழையுள்ள தொடர் எது?
A) என் வாழ்வில் எளிமையைக் கடைப்பிடிப்பேன்
B)திருக்குறள் கூறும் ஒப்புரவு நெறியைப் பின்பற்றி நடப்பேன்
C) எந்த சூழ்நிலையிலும் இனிய சொற்களையே பேசுவேன்
D)தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்
 
27. “Reciprocity”-என்பதன் பொருள்?
A) வழி
B) நற்பண்பு
C) ஒப்புரவு நெறி
D) கடமை

28. பொருந்தாத ஒன்று எது?
 A) எப்படி
B) கம்பர்
C) எப்பொழுது
D) எதற்கு

29. குன்றக்குடி அடிகளார் இயற்றாத நூல் எது?
A) நாயன்மார் அடிச்சுவட்டில்
B) பொருட்செல்வம்
C) வாழும்
D)ஆலயங்கள் சமுதாய மையங்கள்

30. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்கு என்பது யாருடைய வாழும் நெறியாகும்?
A) கம்பர்
B) ஒளவையார்
C) பூதத்தாழ்வார்
D)திருவள்ளுவர்

31. அறநெறிச்சாரம் என்னும் ஆசிரியர் யார்?
A) நக்கீரர்
B) முனைப்பாடியார்
C) குன்றூர்கிழார்
D) உருத்திரன் கண்ணனார்

32. பொருத்துக
1) ஈன-(1) வேண்டாத செடி
2) களை-(2)நிலம்
3) வன்சொல்-(3)விதை
4) நிலன்-(4)கடுஞ்சொல்
5) வித்து-(5)பெற
A) 1-5,2-1,3-4,4-2,5-3
B) 1-5,2-4,3-3,4-2,5-1
C) 1-5,2-3,3-3,4-2,5-1
D)1-5,2-3,3-1,4-2,5-4
 
33. “ஞானச்சுடர்”- என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
A) ஞான+சுடர்
B)ஞானச்+சுடர்
C)ஞானம்+ சுடர்
D) ஞானி + சுடர்
 
34. “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக”- என்று பாடிய ஆழ்வார் யார்?
A) பூதத்தாழ்வார்
B) பொய்கையாழ்வார்
C) பேயாழ்வார்
D) பெரியாழ்வார்

35. பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது?
A)மாமல்லபுரம்
B)திருவெஃகா
C) குன்றத்தூர்
D) தேரழுந்தூர்

36. பூதத்தாழ்வார் ஞானத்தமிழ் பயின்ற அன்பை  எதாக உருவகித்து பாடியுள்ளார்? 
A) நெய்யாக
B) திரியாக
C) கடலாக
D)  அகல்விளக்காக

37. பொய்கையாழ்வார் ஒலிக்கின்ற கடலை எதாக உருவகித்துப் பாடியுள்ளார்? 
A) நெய்யாக
B) கடலாக
C) அகல் விளக்காக
D) திரியாக

38. முனைப்பாடியார் எவ்வூரைச் சார்ந்தவர்?
A) திருமுனைப்பாடி
B) திருவெஃகா
C) மாமல்லபுரம்
D) குறிஞ்சிப்பாடி

39. முனைப்பாடியார் எச்சமயத்தைச் சார்ந்தவர்?
A) சமணம்
B)சைவம்
C)வைணவம்
D)பௌத்தம்

40. “இளமை”- என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
A) புதுமை
B) தனிமை
C) முதுமை
D) இனிமை

41. அந்தாதி _________ வகைகளுள் ஒன்று
A) உலா
B) சிற்றிலக்கிய
C) காப்பிய
D)பேரிலக்கிய

42. இளம் வயதிலேயே விதைக்க வேண்டும் பண்பாக அறநெறிச்சாரம் எதைக் குறிப்பிடுகிறது
A)அன்பு
B)ஈகை
C)இன்சொல்
D)உண்மை பேசுதல்

43. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது_________ நெறி
A)தனியுடைமை
B) பொதுவுடைமை
C) பொருளுடைமை
D) ஒழுக்கமுடைமை

44. ஒப்புரவு நெறியை அறி செய்த நூல் எது?
A) திருக்குறள்
B) நாலடியார்
C) புறநானூறு
D) பதிற்றுப்பத்து

45. ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது_________
A) உவமை அணி
B) உருவக அணி
C) ஏகதேச உருவக அணி
D)  எடுத்துக்காட்டு உவமையணி

46. கண்+இல்லது என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்__________
A) கணிஇல்லது
B)கணில்லது
C)கண்ணில்லாது
D)கண்ணில்லது

47. ஒரு செயலைச் செய்யும் போது மற்றொரு செயலைச் செய்வதற்கு வள்ளுவர் கூறிய உவமை எது?
A) யானை
B) புலி
C) மான்
D) கொக்கு

48. மக்கள் அனைவரும்__________ ஒத்த இயல்பு உடையவர்கள் என வள்ளுவர் கூறுகிறார்.
A)  பிறப்பால்
B)  நிறத்தால்
C) குணத்தால்
D) பணத்தால்

49. இரு பொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் வருவது எது?
A) உவமை அணி
B)உருவக அணி
C)ஏகதேச உருவக அணி
D) எடுத்துக்காட்டு உவமையணி

50. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை_________ என்றும் கூறுவர்.
A) மருந்து
B) அரண்
C) மாத்திரை
D) வனம்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY