Ads Right Header

விடைகள் - பதினோறாம் வகுப்பு – இயல் - 8

பதினோறாம் வகுப்பு – இயல் - 8

 1.முந்நீர் மடு-என்பதன் பொருள் யாது?

A) மேகக்கூட்டம்

B)நுண்ணிய மணல்

C)கடலாகிய நீர்நிலை

D)ஏரி நீர்நிலை

 

2.கீதாஞ்சலி என்னும் கவிதை நூலிற்காக தாகூர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு என்ன?

A) 1911

B) 1912

C)1913

D) 1915

 

3.இன்குலாப்பின் இயற்பெயர் என்ன ?

A)ஞாநி

B)அய்யாசாமி

C)முகமது அலி

D)சாகுல் அமீது

 

4.தவறாக பொருந்தியுள்ளது எது?

A)      காண்டி காண்க

B)       ஆசு இலா- குற்றம் இலாத

C)       தோட்டி துறட்டி

D)      அயம்-யானை

 

5.தமிழ் நாடக நூல் அல்லாதது எது?

A)      அகத்தியம்

B)       செயன்முறை

C)       செயிற்றியம்

D)      கலித்தொகை

 

6.தவறாக பொருந்தியுள்ளது எது?

A)ஜாதீ முல்லை வகையில் ஒரு பூ

B)கபோதாக்ஷி வெட்சிப்பூ

C)மயூராக்ஷி மயில்விழியாள்

D)இச்சாமதி விருப்புடையவள்

 

7.தமிழின் முதல் பாவடிவ நாடக நூல் எது?

A)மதிவாணர் நாடகத் இலக்கண நூல்

B)நாடகவியல்

C)குணநூல்

D)மனோன்மணியம்

 

8.நர்த்தகி நடராஜ் பெறாத விருது எது?

A)கலைமாமணி விருது

B)இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது

C)பெரியார் விருது

D)இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர் விருது

 

9.திரு.வி.கல்யாண சுந்தரனார் வாழ்ந்த காலம் என்ன?

A) 1883-1953

B) 1883-1943

C)1883-1955

D)1883-1951

 

10.தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு திங்கள் நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர் யார்?

A)பாரதிதாசன்

B)பாரதியார்

C)திரு.வி.க

D)அண்ணா

 

11.தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை தொடங்கிய ஆண்டு என்ன?

A)1921

B) 1922

C) 1925

D) 1919

 

12.காக்கை குருவிஎங்கள் ஜாதி என்ற பாடியவர் யார்?

A)இன்குலாப்

B)த.நா.குமாரசுவாமி

C)மகாகவி பாரதியார்

D)தாகூர்

 

13.முளைத்த என்பதை பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்து எழுதுக?

A)முளைத்து.அ

B)முளை-த்+த்+அ

C)முளை-த்+அ

D)முளை-ந்த்)-த்-அ

 

14.பொருத்துக?

1)கடிநகர் – (1)பெயரெச்சம்

2)உருட்டி - (2)உரிச்சொற்றொடர்

3)பின்னிய – (3)இருபெயரொட்டுப்பண்புத்தொகை

4)தேன்துளி-(4) வினையெச்சம்

A)1-2,2-4,3-1,4-3

B)1-2,2-1,3-4,4-3

C)1-3,2-2,3-1,4-4

D)1-4,2-3,3-1,4-2

 

15.த.நா.குமாரகவாமிக்கு நேதாஜி இலக்கிய விருதை வழங்கிய அரசு எது?

A)தமிழ்நாடு அரசு

B)வங்க அரசு

C)மத்திய அரசு

D)புதுச்சேரி அரசு

 

16.சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?

A)சாகுல் அமீது

B)இன்குலாப்

C)த.நா.குமாரசுவாமி

D)திரு.வி.க

 

17.அமரசோனார் பங்களா- என்பது எந்த நாட்டின் தேசிய பாடலாகும்?

A) இலங்கை

B)அஇந்தியா

C)பூட்டான்

D)வங்கதேசம்

 

 

18.தவறாக பொருந்தியுள்ளது எது?

A)நாங்கூழ்ப்புழு - மண்புழு

B)பாடு - உழைப்பு

C)ஒவா-ஓயாத

D)வேதித்து - உதித்து

 

19.குருதேவ்-என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) இன்குலாப்

B)பிரமிள்

C)தாகூர்

D)மகாத்மா காந்தி

 

20.மரணத்திற்குப் பிறகு இன்குலாபின் உடல் அவர் விரும்பியபடி எந்த மருத்துவக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது?

A) செங்கை

B)மதுரை

C)சென்னை

D)திருநெல்வேலி

 

21.பிழைகள் உள்ள அச்சுப்படியைத் திருத்துவதற்குக் கையாளப்படும் திருத்தக் குறியீடுகளை வகைகளாகப் பிரிக்கின்றனர்.

A)இரண்டு

B)மூன்று

C)நான்கு

D)ஜந்து

 

22.இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் யார்?

A) ஜோயிதா மோண்டல்

B)தாரிகா

C)பிரித்திகாயாஷினி

D)கார்த்திகா

 

23.கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) நேதாஜி

B)த.நா.குமாரசுவாமி

C)தாகூர்

D)மகாத்மாகாந்தி

 

24.சிலப்பதிகாரத்தில் எத்தனை ஆடற்கலைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன?

A)10

B)11

C)15

D)36

 

25.திரு.வி.க யாரிடம் தமிழோடு சைவநூல்களைப் பயின்றார்?

A) சோமசுந்தர பாரதியார்

B)சபாபதி

C)மயிலை தணிகாசலம்

D)உவே.சா

 

26.கல்வியின் சிறப்பை"கல்வி அழகே அழகு எனக் குறிப்பிடும் நூல் எது?

A) திருக்குறள்

B)மூதுரை

C)நன்னூல்

D)நாலடியார்

 

27.பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் நூலை எழுதிய ஆண்டு என்ன? 

A) 1881

B)1880

C)1882

D)1884

 

28.தாகூர் இயற்றிய நாவல்கள் எத்தனை?

A) 8

B) 20

C) 25

D) 15

 

29.திரு.வி.க பற்றி கொடுக்கப்பட்டனவைகளில் தவறானது எது?

A) தமிழ்க் கவிஞர்களின் வரிசையில் அரசியல் இயக்கங்களில் குறைவான ஈடுபாடு கொண்டிருந்தார்.

B)இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்

C)தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்து தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்

D)சென்னை ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழ் ஆசிரியராக இருந்தார்.

 

30.மனோன்மணியத்தில் உள்ள கிளைக்கதை என்ன?

A) சந்திரிகையின் கதை

B) நத்தைக்கு சொன்ன கதை

C) ஆண்டாள் சரித்திரம்

D) சிவகாமியின் சரிதம்

 

31.சரியாக பொருந்தியுள்ளது எது?

A)புல்புழு - உருவகம்

B)தாங்குதல் - வினைத்தொகை

C)நெறுநெறு -இரட்டைக் கிளவி

D)ஆசிலா- வியங்கோள் வினைமுற்று

 

32.பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்-என அழைக்கப்பட்டவர் யார்?

A)சாகுல் அமீது

B) இன்குலாப்

C)திரு.வி.க

D) தாகூர்

 

33.லிட்டன் பிரபு இரகசிய வழி(The secret way) என்ற நூலை எழுதிய ஆண்டு என்ன?

A) 1866

B) 1862

C) 1876

D) 1891

 

34.பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பிறந்த ஆண்டு என்ன?

A)1855

B)1860

C)1870

D)1875

 

 

 

 

35.இளமை விருந்து - என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A)திரு.வி.க

B)இன்குலாப்

C)அகிலன்

D)அண்ணா

 

36.திரு.வி.க இயற்றாத நூல் எது?

A) பெண்ணின்பெருமை

B)முருகன் அல்லது அழகு

C)சமணத்துறவு

D)திருக்குறள் விரிவுரை

 

37.கூற்று:- தமிழ் தென்றல் என திரு.வி.க அழைக்கப்படுகிறார்

காரணம்:- இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார் A)கூற்று சரி காரணம் தவறு

B)கூற்றும் காரணமும் சரி

C)கூற்று தவறு காரணம் சரி

D)கூற்றும் காரணமும் தவறு

 

38.திரு.வி.க ஆசிரியராக பணியாற்றிய இதழ் எது?

A)விடுதலை

B)நியூ இந்தியா

C)எழுத்து

D)நவசக்தி

 

39.நர்த்தகி நடராஜ் பகுதியைச் சேர்ந்தவர்?

A)திருநெல்வேலி

B)சென்னை

C) திருச்சி

D) மதுரை

 

40.மனோன்மணியம் எப்பாவால் அமைந்த நூல்?

A) வெண்பா

B)கலிப்பா

C)ஆசிரியப்பா

D) வஞ்சிப்பா

 

41.மனோன்மணியம் எத்தனை அங்கங்களையும் களங்களையும் கொண்டது?

A) 5,20

B) 10,20

C) 7,22

D) 3,15

 

42.பேராசிரியர் சுந்தரனாருக்கு ராவ் பகதூர்-பட்டத்தை வழங்கிய பல்கலைக்கழகம் எது? A)விசுவபாரதி பல்கலைக்கழகம்

B)சென்னைப் பல்கலைக்கழகம்

C)அண்ணாமலை பல்கலைக்கழகம்

D)திருவனந்தபுரம் பல்கலைக்கழகம்

 

43.பேராசிரியர் சுந்தரனார் பிறந்த ஊர் எது?

A) கொச்சி

B)கண்ணனூர்

C)ஆலப்புழை

D)நாகர்கோயில்

 

44.பேராசிரியர் சுந்தரனார் பெயரில் தமிழக அரசு எங்கு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது?

A)சென்னை

B)மதுரை 

C)திருச்சி

D)திருநெல்வேலி

 

45.கேலிச்சித்திரத்தை விகடச்சித்திரம் எனக் குறிப்பிட்டவர் யார்?

A)பாரதிதாசன்

B)இன்குலாப்

C)பெரியார்

D)பாரதியார்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY