Ads Right Header

வினாக்கள் - உள்ளாட்சி அமைப்புகள் & சமத்துவம்.


உள்ளாட்சி அமைப்புகள்

1) தற்போது தமிழகத்தில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?

அ) 14
ஆ) 15 
இ) 12 
ஈ) 13 

2) சென்னை மாநகராட்சி எப்போது உருவாக்கப்பட்டது?

அ) 1858 
ஆ) 1688 
இ)  1755 
ஈ) 1947

3) அரசமைப்பின் படி நகர்புறம்_____ எனப் பிரிக்கப்பட்டுள்ளது?

அ) மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி
ஆ) மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி 
இ) மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி 
ஈ) இவை அனைத்தும்

4) தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் வருவாய் அதிகம் இருக்கும் ஊர்களை______எனப் பிரித்துள்ளனர்? 

அ) பேரூராட்சி 
ஆ) ஊராட்சி
இ) நகராட்சி
ஈ) மாவட்ட ஊராட்சி

5) இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்புகள் எது?

அ) மும்பை
ஆ) கொல்கத்தா 
இ) டெல்லி
ஈ) சென்னை 

6) தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி எது?

அ) ஆவடி
ஆ) ராணிப்பேட்டை
இ) வாலாஜாப் பேட்டை
ஈ) வேளச்சேரி

7) தமிழ்நாட்டில் நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது?

அ) சென்னை
ஆ) காஞ்சிபுரம் 
இ) மதுரை
ஈ) கோயம்புத்தூர் 

8) சரியாக வரிசைப்படுத்துக.

 அரசமைப்பின் படி கிராமப்புறம் ______எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

அ) பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம்
ஆ) மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி
இ) நகராட்சி, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம்
ஈ) ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி

9) இந்தியாவில் முதன்முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

அ) தமிழ்நாடு 
ஆ) மகாராஷ்டிரா
இ) கர்நாடகம்
ஈ) மேற்கு வங்கம்

10) மாநகராட்சிக்கு_____ ஆணையராக இருப்பார்?

அ) மாநகர மேயர்
ஆ) இந்திய ஆட்சிப்பணி அதிகாரி
இ) சட்டமன்ற உறுப்பினர்( MLA)
ஈ) செயல் அலுவலர்(EO)

11)  பேரூராட்சியின் நிர்வாக அலுவலர்_____ ஆவார்?

அ) இந்தியக் காவல்பணி அதிகாரி 
ஆ) இந்திய ஆட்சிப்பணி அதிகாரி
இ) வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO)
ஈ) செயல் அலுவலர்(EO)

12) பத்தாயிரம் பேர் வாழக்கூடிய ஊராக இருந்தால் அதுதான் ____ஆகும்?

அ) மாநகராட்சி 
ஆ) நகராட்சி 
இ) பேரூராட்சி 
ஈ) ஊராட்சி 

13) இவற்றுள் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யார்?

அ) ஊராட்சி மன்ற தலைவர்
ஆ)  பகுதி உறுப்பினர்கள்
இ) ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
ஈ) மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 
உ) இவர்கள்  அனைவரும்

14) ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாக அலுவலர் யார்?

அ) ஊராட்சி மன்றத் தலைவர் 
ஆ) ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
இ) வட்டார வளர்ச்சி
அலுவலர் (BDO)
ஈ) செயல் அலுவலர் (EO)

15) நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எத்தனை ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன?

அ) 4 
ஆ) 5
இ) 6
ஈ)  8 

16) விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன?

அ) 15 
ஆ) 22 
இ) 18 
ஈ) 20

17) தமிழ்நாட்டில் அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ள மாவட்டம் எது?

அ) திருச்சி
ஆ) கோவை 
இ) விழுப்புரம் 
ஈ) மதுரை 

18) DISTRICT PANCHAYAT WARD என்பது_____ மக்கள் தொகை என்ற அடிப்படையில் பிரிக்கப்படுகிறது?

அ) 50,000
ஆ) 1,00,000
இ) 25,000
ஈ) 75,000

19) மாநகராட்சித் தலைவரும், நகராட்சித் தலைவரும் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? 

அ) அந்தந்தப் பகுதி(ward) உறுப்பினர்களால்
ஆ) ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களால்
இ) மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களால்
 ஈ) மக்களால் நேரடியாக

20) மாநகராட்சித் துணைத் தலைவரும், நகராட்சித் துணைத் தலைவரும் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?

அ) அந்தந்தப் பகுதி(ward) உறுப்பினர்களால்
ஆ) ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களால் 
இ) மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களால்
ஈ) மக்களால் நேரடியாக

21) இவற்றுள் கிராம ஊராட்சியின் அவசியப் பணிகள் என்னென்ன?

அ) குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு அமைத்தல், ஊர்ச் சாலைகள் அமைத்தல்

ஆ) பூங்கா அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல் 

இ) விளையாட்டு மைதானம் அமைத்தல், பூங்கா அமைத்தல், நூலகம் அமைத்தல் 

ஈ) நூலகம் அமைத்தல், தெருக்களைத் தூய்மைப்படுத்துதல், அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துதல்

22) இவற்றுள் கிராம ஊராட்சியின் விருப்பப் பணிகள் என்னென்ன?

அ) குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு அமைத்தல், ஊர் சாலைகள் அமைத்தல்

ஆ) பூங்கா அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல் 

இ) விளையாட்டு மைதானம் அமைத்தல், பூங்கா அமைத்தல், நூலகம் அமைத்தல் 

ஈ) நூலகம் அமைத்தல், தெருக்களை தூய்மைப்படுத்துதல், அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துதல்

23) இவற்றுள் மாநகராட்சியின் வருவாய் என்னென்ன? 

1) வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி 
2) கடைகள் மீதான வரி, பொழுதுபோக்கு வரி
3) மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு

அ) 2 மட்டும் சரி 
ஆ) இவை அனைத்தும்
இ) 1,3 மட்டும் சரி 
ஈ) இவற்றில் எதுவுமில்லை

24) கிராம சபைக் கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை கூடும்?

அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4 

25) இவற்றுள் கிராமசபைக் கூட்டம் கூடும் நாட்களில் தவறானது எது?

1) ஜனவரி 26 
2) மே 1 
3) ஆகஸ்ட் 15 
4) அக்டோபர் 2

அ) 1 மட்டும் தவறு 
ஆ) இவை அனைத்தும் (அனைத்தும் தவறு)
இ) 4 மட்டும் தவறு
ஈ)  இவற்றில் எதுவுமில்லை (அனைத்தும் சரி)0

26) தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

அ) 1992 ஏப்ரல் 24 
ஆ) 1990 ஆகஸ்ட் 18 
இ) 1993 ஜூன் 5 
ஈ) 1994 ஜனவரி 15 

27) தேசிய பஞ்சாயத்து ராஜ் என பெயரிட்டவர் யார்?

அ) அம்பேத்கர்
ஆ) ஜவகர்லால் நேரு
இ) மகாத்மா காந்தி
ஈ) இந்திராகாந்தி 

28) தேசிய ஊராட்சி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

அ) மார்ச் 27 
ஆ) ஏப்ரல் 24 
இ) அக்டோபர் 12 
ஈ) நவம்பர் 8 

29) அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில்____ சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

அ) 24 சதவீதம்
ஆ) 27 சதவீதம்
இ) 30 சதவீதம்
ஈ) 33 சதவீதம்

30) 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள்___ சதவீத இடங்களில் வெற்றி பெற்றனர்?

அ) 57 சதவீதம்
ஆ) 38 சதவீதம்
இ) 45 சதவீதம்
ஈ) 29 சதவீதம்

 31) தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க _____ஆம் ஆண்டு சட்ட திருத்தம் செய்துள்ளது?

அ) 2016 
ஆ) 2015 
இ) 2014
ஈ)  2013

32) உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் என்ன?

அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
ஈ) 6 ஆண்டுகள்

33) தமிழகத்தின் மாநிலத் தேர்தல் ஆணையம் எங்கு அமைந்துள்ளது?

அ) சென்னை- அண்ணாநகர் 
ஆ) சென்னை- வேளச்சேரி
இ) சென்னை- கோயம்பேடு
ஈ) சென்னை- கிண்டி

34) பொருத்துக. தமிழ்நாட்டிலுள்ள

அ) 125- மாவட்ட ஊராட்சிகள் 
ஆ) 12 ,524- ஊராட்சி ஒன்றியங்கள் 
இ) 561- கிராம ஊராட்சிகள்
ஈ)  385- நகராட்சிகள்
உ) 31- பேரூராட்சிகள்

35) பொருத்துக.

 அ) Municipality-பேரூராட்சி
ஆ) Corporation-ஊராட்சி ஒன்றியம்
இ) Town Panchayat-மாநகராட்சி 
ஈ) Panchayat Union-நகராட்சி

சமத்துவம் 

1) "சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகவும் முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுவதும் ஆகும்" - இக்கூற்று யாருடையது?

அ) ஏ.வி. டைசி
ஆ) தாராபாய் ஷிண்டே
இ) பேராசிரியர் லாஸ்கி
ஈ) ஜார்ஜ் ஹார்டி

2) அனைத்து குடிமக்களும் சம தகுதியை அடைய உரிமை கொண்டவர்கள் என்பதே______ சமத்துவம் ஆகும்?

அ) குடிமை சமத்துவம்
ஆ) சமூக சமத்துவம்
இ) அரசியல் சமத்துவம்
ஈ) பாலின சமத்துவம்

3) அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே____ சமத்துவம் ஆகும்.

அ) குடிமை சமத்துவம் 
ஆ) சமூக சமத்துவம்
இ) அரசியல் சமத்துவம்
ஈ) பாலின சமத்துவம்

4) இவற்றுள் எந்த நாட்டில் "சட்டத்தின் ஆட்சி" என்ற கோட்பாடு பின்பற்றப்படுகிறது?

அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) இங்கிலாந்து
ஈ) ரஷ்யா

5) சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை ____என்ற பிரிட்டிஷ் சட்ட வல்லுனர் வாதுரைத்தார்?

அ) ஏ.வி. டைசி 
ஆ) தாராபாய் ஷிண்டே 
இ) பேராசிரியர் லாஸ்கி
ஈ) ஜார்ஜ் ஹார்டி

 6) இவற்றில் அரசியல் உரிமைகள் எவை?

அ) வாக்களிக்கும் உரிமை
ஆ) அரசை விமர்சனம் செய்யும் உரிமை
இ) பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை
ஈ) இவை அனைத்தும் 

7)இந்தியாவில் எந்த ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது?

அ) 1950
ஆ) 1952
இ) 1954
ஈ) 1956 

 8) ஸ்விட்சர்லாந்து நாட்டில் எப்போது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது?

அ) 1971
ஆ) 1972
இ) 1973
ஈ) 1974

9)  இந்தியாவில்___ வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்?

அ) 18 வயது
ஆ) 21 வயது
இ)  23 வயது
ஈ) 25 வயது

10) பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில்____ சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

அ) 33% 
ஆ) 50% 
இ) 18%
ஈ) 26% 

11) _____என்பது ஆண் பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களைப் பெறுதல் ஆகும்?

அ) குடிமை சமத்துவம்
ஆ) சமூக சமத்துவம்
இ) அரசியல் சமத்துவம்
ஈ) பாலின சமத்துவம்

 12) 2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான எத்தனை குறிக்கோள்கள் ஏற்படுத்தப்பட்டன?

அ) 17 குறிக்கோள்கள்
ஆ) 18 குறிக்கோள்கள்
இ) 19 குறிக்கோள்கள் 
ஈ) 20 குறிக்கோள்கள்

13) 2017 ஆம் ஆண்டின் நிலையான மேம்பாட்டிற்காக குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது____ குறிப்பிடப்பட்டுள்ளது?

அ) மூன்றாவதாக
ஆ) நான்காவதாக
இ) ஐந்தாவதாக
ஈ) ஆறாவதாக 

14) பொருத்துக.

அ) சட்ட பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்திரவாதம் அளிக்கிறது

 ஆ) சட்டப்பிரிவு 15 - பாகுபாட்டை தடை செய்கிறது 

இ) சட்டப்பிரிவு 16 - வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது

ஈ) சட்டப்பிரிவு 17 - தீண்டாமையை ஒழிப்பது

உ) சட்டப்பிரிவு 18 - பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதல் தடை செய்கிறது 

15) மனித மாண்பு என்பது____ ஆகும்?

அ) சமவாய்ப்பு 
 ஆ)சுயமரியாதை
இ) தனிமனித ஒழுக்கம்
ஈ) சமத்துவம்

16) இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் ____மூலம் சமத்துவத்தை அளிக்கிறது?

அ) சட்டப்பிரிவுகள் 14-18
ஆ) சட்டப்பிரிவுகள்15-19 
இ) சட்டப்பிரிவுகள் 16-20
ஈ) சட்டப்பிரிவுகள் 17-21

17) சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு_____ல் மேலும் வலிமை படுத்தப்பட்டுள்ளது?

அ) சட்ட பிரிவு 23
ஆ) சட்டப்பிரிவு 22 
இ) சட்டப் பிரிவு 21
ஈ) சட்டப்பிரிவு 20



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY