Ads Right Header

வினாக்கள் - சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு.

 

சந்தை 

1) கூற்று 1: பொருட்கள் சேவைகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்பு சந்தை எனப்படும்.
கூற்று 2: பொருளாதாரத்தில் சந்தை என்ற சொல் பண்டத்திற்கான கடைகளையும் அல்லது பொருட்களின் தொகுப்பையும் குறிக்கிறது.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 
இ) 1  மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

2) ______ என்பது நிலம், மூலதனம், உழைப்பு போன்ற உற்பத்தி காரணிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தையை குறிப்பதாகும்?

அ) தயாரிப்புச் சந்தை
ஆ) பிராந்திய சந்தை
இ) காரணி சந்தை 
ஈ) உடனடிச் சந்தை

3) கூற்று 1: பொருளாதாரத்தில் சந்தை என்பது இயற்பியல் அல்லது இயற்கை இடம் சார்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 கூற்று 2: சந்தையை உருவாக்குவதற்கு பொருட்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஒரு குழுவாக இருக்க வேண்டும்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி 

4) பூக்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றுக்கான சந்தை?

அ) உடனடிச் சந்தை
ஆ) குறுகிய காலச் சந்தை
இ) உள்ளூர்ச் சந்தை 
ஈ) மிகக் குறுகிய காலச் சந்தை

5)______ என்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் இல்லை என்பதை உறுதி செய்கிறது மற்றும் உற்பத்திகளின் குழுவைக் குறிக்கிறது?

அ) எதிர்காலச் சந்தை
ஆ) கட்டுப்பாடற்ற சந்தை
இ) ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை
ஈ) நீண்டகாலச் சந்தை

6) பங்குச் சந்தை எதற்கு எடுத்துக்காட்டு?

அ) எதிர்காலச் சந்தை
ஆ) கட்டுப்பாடற்ற சந்தை
இ) ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை 
ஈ) நீண்ட காலச் சந்தை

7) இவற்றுள் ஒழுங்கற்ற போட்டியின் வகைகள் எவை?

அ) குத்தகை, முற்றுரிமைப் போட்டி 
ஆ) முற்றுரிமைப் போட்டி, குழு உரிமை, குத்தகை
இ) குழு உரிமை, குத்தகை, முறையற்றப் போட்டிச் சந்தை 
ஈ) இவை அனைத்தும்

8)  ஏகபோக போட்டி என்ற சொல்லினை_____ என்பவர் தனது "ஏகபோக போட்டியின் கோட்பாடு" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்?

அ) ரால்ப் நாடார் 
ஆ) எல். மெஸ்ஸி
இ) ஃபிலிப் கோட்லர்
ஈ) எட்வர்ட் சேம்பர்லின்

9) "ஏகபோக போட்டியின் கோட்பாடு" என்ற நூல் எப்போது வெளியிடப்பட்டது?

அ) 1933
ஆ) 1934
இ) 1935
ஈ) 1936

10) ஒலிகோபோலி என்ற சொல் ஒலிகோய்+பாலி என்ற இரண்டு _____சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும்?

அ) இலத்தீன் 
ஆ) எகிப்திய
இ) பிரெஞ்சு
ஈ) கிரேக்க

 11) ஏகபோக போட்டி என்ற சொல் _____ஐக் குறிக்கிறது?

அ) ஏகபோக
ஆ) சரியான போட்டி
இ) இரண்டும்
ஈ) இரண்டும் அல்ல

12) ஒலிகோய் என்ற சொல்லின் பொருள் என்ன?

அ) போட்டி
ஆ) சில
இ) ஒரே மாதிரி
ஈ) கட்டுப்பாடற்ற

13) பாலி என்ற சொல்லின் பொருள் என்ன?

அ) கட்டுப்பாடு 
ஆ) சந்தை 
இ) இரண்டு 
ஈ) வெவ்வேறு

14)  நுகர்வோர் என்பவர் யார்?

1) பணம் செலுத்தியவர்
2) ஓரளவு பணம் செலுத்தியவர் 
3) வாக்குறுதி பெற்றவர்
4) ஓரளவு வாக்குறுதி பெற்றவர்

அ) 1,3 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு
இ 2,4 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி

15)  நுகர்வோர் இல்லாதவர் யார் ?

1) ஒப்பந்த அடிப்படையில் ஒரு சேவையை பெறுபவர்

2) எந்த ஒரு பொருளையோ அல்லது சேவையையோ இலவசமாக பெறுபவர்

3) வணிக நோக்கத்திற்காக ஒரு சேவையை அமர்த்துவது அல்லது ஒரு பொருளை வாங்குவது

அ) 2, 3 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு 

16) சரியா? தவறா?

 நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்பது ஒரு வர்த்தக நடைமுறை அல்லது எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் விற்பனை, பயன்பாடு அல்லது வினியோகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக நியாயமற்ற துறையை அல்லது நியாயமற்ற அல்லது ஏமாற்றும் நடைமுறை பின்பற்ற படுவதாகும்.

அ) சரி 
ஆ) தவறு

17) IRDAI என்பது என்ன?

அ)  இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
ஆ) இந்தியா ஆயுள் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்
இ) இந்தியாவின் மேம்பாட்டு ஆணையம்
ஈ) மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்

18)  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 எப்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது?

அ) 1986, ஜூலை 
ஆ) 1986, அக்டோபர்
இ) 1986, ஆகஸ்ட் 
ஈ) 1986, டிசம்பர்

19) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 எப்போது இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது?

அ) 1986, ஜூலை 15
ஆ) 1986, அக்டோபர் 21
இ) 1986,  ஆகஸ்ட் 18
ஈ) 1986, டிசம்பர் 24

20)  நுகர்வோரின் அடிப்படை உரிமைகள் எத்தனை?

அ) 8
ஆ) 9
இ) 10 
ஈ) 7 

21) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்_____ க்கும் அதிகமாக மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளைத் தீர்க்க முயல்கிறது?

அ) 25 + லட்சம்
ஆ) 50 + லட்சம்
இ) 75 + லட்சம்
ஈ) 100 + லட்சம்

22) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்____ மதிப்புமிக்க அளவிலான நுகர்வோர் குறைதீர்க்கும் மாவட்ட நீதிமன்றமாகும்.

அ) 10 லட்சம்
ஆ) 15 லட்சம் 
இ) 20 லட்சம்
ஈ)  25 லட்சம்

23) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 எப்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது?

அ) 2019, ஜனவரி
ஆ) 2019, ஆகஸ்ட் 
இ) 2019,ஜூன் 
ஈ) 2019, நவம்பர்

24) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்____ மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என அழைக்கப்படும் ஒரு ஒழுங்குமுறை அதிகாரத்தை நிறுவுவதற்கு முன்மொழிகிறது?

அ) 1980
ஆ) 1986
இ) 2015
ஈ) 2019 

25) தவறான விளம்பரத்திற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உற்பத்தியாளர் அல்லது ஒப்புதல் அளிப்பது ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்?

அ) 5 லட்சம் 
ஆ) 10 லட்சம் 
இ) 15 லட்சம்
ஈ)  20 லட்சம் 

26) மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தவறான விளம்பரத்திற்கு____ காலம் வரை சிறை தண்டனை விதிக்கலாம்?

அ) 6 மாதங்கள்
ஆ) 12 மாதங்கள் 
இ) 24 மாதங்கள்
ஈ) 48 மாதங்கள் 

27) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்____ ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.

அ)1980
ஆ) 1986
இ) 2015
ஈ) 2009 

28) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

அ) மும்பை 
ஆ) சென்னை
இ) பெங்களூரு 
ஈ) புதுடெல்லி 

29) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்____ தலைமையின் கீழ் செயல்படுகிறது?

அ) ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி
ஆ) குடியரசு துணைத் தலைவர் 
இ) ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
ஈ) குடியரசுத் தலைவர்

30) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?

அ) 1986
ஆ) 1987
இ) 1988
ஈ) 1989

31) பொருத்துக.

1955 - அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 
1980 - கருப்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பராமரிப்பு சட்டம் 
1986 - இந்திய தர நிர்ணயப் பணியகம் 
2009 - சட்ட அளவீட்டுச் சட்டம் 

32) கூற்று1 :தவறான விளம்பரத்திற்கு ஒப்புதல் அளிப்பவர் குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவையை ஒரு வருடம் வரை ஒப்புதல் அளிப்பதை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை செய்யலாம்.
 கூற்று 2: தவறான விளம்பரத்திற்கு உற்பத்தியாளருக்கு அடுத்தடுத்த குற்றத்தில் அபராதம் 50 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 
இ) 1மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

நுகர்வோர் பாதுகாப்பு

1) வணிக உலகில் அதிக சுரண்டலுக்கு உள்ளாவது யார்?

அ) வணிகர்கள்
ஆ) உற்பத்தியாளர்கள்
இ) நுகர்வோர்கள் 
ஈ) விற்பனையாளர்கள்

2) வணிகத்தின் மூன்று முக்கிய கூறுகள் யாவை?

அ) உற்பத்தியாளர், நுகர்வோர், அரசாங்கம்
ஆ) உற்பத்தியாளர், விற்பனையாளர், அரசாங்கம் 
இ) அரசாங்கம், நுகர்வோர், விற்பனையாளர்
ஈ) விற்பனையாளர், உற்பத்தியாளர், நுகர்வோர்

3) வங்கிகள், போக்குவரத்து நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை வழங்கும் சேவைகளை ஏற்போர்_____ என அழைக்கப்படுகின்றனர்?

அ) உற்பத்தியாளர்
ஆ) விற்பனையாளர்
இ) நுகர்வோர்
ஈ) உபயோகிப்பவர்

4) முழுமையாக அல்லது பகுதியாக செலுத்தப்பட்டு அல்லது செலுத்துவதாக உறுதியளிக்கப்பட்டு அல்லது நீள்பயன் செலுத்தப்பட்டு மறு பயனடையும் வகையில் சேவைகளை வாங்கும் நபர்_____ என அழைக்கப்படுகிறார்?

அ) உற்பத்தியாளர்
ஆ) விற்பனையாளர்
இ) நுகர்வோர்
ஈ) உபயோகிப்பவர்

5) கூற்று 1 :மறு விற்பனை செய்வதற்கோ அல்லது வணிக நோக்கத்திற்காகவோ பொருட்களை வாங்குபவரும் நுகர்வோராகவே கருதப்படுவர்.
  கூற்று 2: சுய வேலை வாய்ப்பின் மூலம் தனது வாழ்வாதாரத்திற்கு பொருளீட்டும் நோக்கத்திற்காக மட்டுமே ஒரு நபர் பொருட்களை வாங்கியிருந்தாலும் அவர் நுகர்வோராகவே கருதப்படுவர்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

6) சரியா? தவறா?

 சுதந்திரமான பொருளாதாரத்தில் நுகர்வோர் மையப்புள்ளியாக திகழ்ந்தாலும் அவர்களின் தகுதியை எப்பொழுதும் நுகர்வோர்கள் பெறுவதில்லை.

அ) சரி
ஆ) தவறு

7) பின்வருவனவற்றில் நுகர்வோர்கள் எந்தெந்த வழிகளில் சுரண்டப்படுகின்றனர்?

1) அதிக விலைக்கு விற்றல்
2) கலப்படம்
3) செயற்கையான பற்றாக்குறை
4) தரக்குறைவு 
5) போலியான பொருட்கள்

அ) 3, 5 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1,2,4 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

8) பாலின் அடர்தன்மை மற்றும் வெளிர் நிறம் அதிகரிப்பதற்காக_____ சேர்க்கப்படுகிறது?

அ) சுண்ணாம்பு
ஆ) யூரியா 
இ) காஸ்டிக் சோடா 
ஈ) இவை அனைத்தும்

9) தேங்காய் எண்ணெயில்_____ கலக்கப்படுகிறது?

அ) என்ஜின் ஆயில்
ஆ) கிரீஸ் ஆயில் 
இ) பாமாயில் 
ஈ) ஆமணக்கு எண்ணெய்

10) மஞ்சள் தூள் போன்ற மசாலாக்களுடன்_____ சேர்க்கப்படுகிறது?

அ)  எத்தனால்
ஆ) மெத்தனால்
இ) எத்தில் ஆல்கஹால்
ஈ) மெத்தில் ஆல்கஹால்

11) கருப்பு மிளகுடன்_____ சேர்க்கப்படுகிறது?

அ) நெருஞ்சி விதை
ஆ) கருப்பு சோளம்
இ) பப்பாளி விதை
ஈ) முருங்கை விதை

 12) இவற்றுள் நுகர்வோர்கள் எந்தெந்த வழிகளில் சுரண்டப்படுகின்றனர்?

1) தகுதியற்ற பொருட்கள்
2) பொய் விளம்பரங்கள்
3) இடர்பாடு கொண்ட பொருட்கள்

அ) 1,3 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு
இ) 2 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி

13) நுகர்வோரியல் என்னும் சொல் எப்போது தோன்றியது?

அ) 1960
ஆ) 1961 
இ) 1962 
ஈ)இ1963

14) நுகர்வோரியல் எனும் சொல் எங்கு தோன்றியது?

அ) இங்கிலாந்து 
ஆ) பிரான்ஸ் 
இ) அமெரிக்கா
ஈ) ரஷ்யா 

15) "நுகர்வோரியல் என்பது விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குபவர் தங்களது உரிமைகளையும் அதிகாரங்களையும் மேம்படுத்தும் முயற்சியாகும்" என்று கூறியவர் யார்?

அ) ஜான் எஃப் கென்னடி
ஆ) ரால்ப் நேடர் 
இ) எல்.மெஸ்ஸி
ஈ) பிலிப் கோட்லர்

16)  "நுகர்வோரியல் என்பது ஒருங்கிணைந்த முயற்சிகள் மட்டுமல்லாது விற்பனையாளருக்கு எதிரான வாங்குபவர்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் மேம்படுத்தும் ஒரு சமூக இயக்கமாகும்" என்று கூறியவர் யார்?

அ) ஜான் எஃப் கென்னடி
ஆ) ரால்ப் வேடர்
இ) எல். மெஸ்ஸி 
ஈ) பிலிப் கோட்லர்

17) ஒரு குயர் நோட்டுப் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் இருக்கும்?

அ) 165 பக்கங்கள் 
ஆ) 176 பக்கங்கள்
இ) 170 பக்கங்கள் 
ஈ) 192 பக்கங்கள்

18) கூற்று 1: நுகர்வோர் சுரண்டல்கள், நுகர்வோர் இன்னல்கள் போன்றவற்றின் வெளிப்பாடே நுகர்வோரியல் ஆகும்.
கூற்று 2: வணிக அநீதிகளுக்கு எதிராகவும் அத்தகைய அநீதிகளை சரிசெய்யும் முயற்சிகள் நுகர்வோரியல் ஆகும்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 
இ)  1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

19) இவற்றுள் நுகர்வோரியலின் முக்கியத்துவம் என்ன?

1) சுரண்டளிலிருந்து பாதுகாத்தல் 
2) நியாயமற்ற வணிக நடைமுறைகள் எதிர்த்தல்
3) சமூக விரோத நடவடிக்கைகளை எதிர்த்தல்
4) நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
5) நுகர்வோர்களை ஒருங்கிணைத்தல்

அ) அனைத்தும் சரி
ஆ) 1,3,5 மட்டும் சரி
இ) அனைத்தும் தவறு
ஈ) 2,4 மட்டும் சரி

20) பொருளாதார அதிருப்தி_____ உருவாக்குகின்றது?

அ) வருமான இழப்பை
ஆ) உரிமை பறிப்பை
இ) பணவீக்கத்தை 
ஈ) விலை உயர்வை

21) நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?

அ) ஜான் எஃப் கென்னடி
ஆ) ரால்ப் நாடர்
இ) எல்.மெஸ்ஸி 
ஈ) பிலிப் கோட்லர்

22) அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள்_____ உருவாக்கி ஆபத்தை விளைவிக்கும் உணவு மற்றும் இதர பொருட்களின் விலை ஆகியவற்றிலிருந்து நுகர்வோரை பாதுகாக்க போராடினார்?

அ) தேசிய நுகர்வோர் அமைப்பு
ஆ) நுகர்வோரியல்
இ) இரண்டும் 
ஈ) இரண்டும் அல்ல

 23) Caveat Emptor- Let the Buyer Beware - என்பதன் தமிழாக்கம் என்ன?

அ) வாங்குவோர் ஜாக்கிரதை- விற்பனையாளர் கவனம்
ஆ) விற்பனையாளர் ஜாக்கிரதை- விற்பனையாளர் கவனம்
இ) வாங்குவோர் ஜாக்கிரதை- வாங்குவோர் கவனம் 
ஈ) விற்பனையாளர் ஜாக்கிரதை- வாங்குவோர் கவனம்

24) Caveat Venditor - Let the Seller Beware - என்பதன் தமிழாக்கம் என்ன?

அ) வாங்குவோர் ஜாக்கிரதை- விற்பனையாளர் கவனம்
ஆ) விற்பனையாளர் ஜாக்கிரதை- விற்பனையாளர் கவனம்
இ) வாங்குவோர் ஜாக்கிரதை -வாங்குவோர் கவனம் 
ஈ) விற்பனையாளர் ஜாக்கிரதை - வாங்குவோர் கவனம் 

25) இவற்றுள் நுகர்வோர் பாதுகாப்பிற்கான வழிமுறைகள் என்னென்ன?

அ) சுயகட்டுப்பாடு மற்றும் அரசின் ஆதரவு
ஆ) நுகர்வோர் அமைப்புகள்
இ) நுகர்வோரை விழிப்புணர்வுடன் இருக்க செய்தல்
ஈ)  இவை அனைத்தும்

26) திரு. ரால்ப் நாடர் அவர்கள் தொடக்கத்தில் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட____ நிறுவனத்தினைப் எதிர்த்து போராடினார்?

அ) நிலக்கரி நிறுவனத்தை
ஆ) மருந்து பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை
இ) மோட்டார் வாகன நிறுவனத்தை
ஈ) எரிபொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை 

27) ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபை___ அன்று அதன் உறுப்பு நாடுகள் நுகர்வோர் நலன் பாதுகாப்பில் பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை உள்ளடக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது?

அ) 1967, ஜூலை 15
ஆ)  1985, ஏப்ரல் 9
இ) 1976, அக்டோபர் 10
ஈ) 1990, ஆகஸ்ட் 12

28) நுகர்வோர் நலன் பாதுகாப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள் எவை?

1) நுகர்வோருக்கு போதிய பாதுகாப்பை வழங்குவதில் உறுப்பு நாடுகளுக்கு உதவுவது
2) நுகர்வோர் பாதுகாப்பின் சர்வதேச கூட்டுறவினை செயல்படுதல்
3) சுதந்திரமான நுகர்வோர் குழுக்களின் மேம்படுத்த உதவுதல்
4) நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை பெரிய அளவில் தேர்ந்தெடுத்து வாங்கும் வகையில் சந்தைகளை ஊக்குவித்தல் 

அ) 2,4 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு 
இ) 1,3 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி

29) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 எப்போது நடைமுறைக்கு வந்தது?

அ) ஏப்ரல் 15
ஆ) நவம்பர் 7
இ) ஆகஸ்ட் 22
ஈ) ஜூலை 10 

30) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 எந்த ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது?

அ) 1999
ஆ) 1996
இ) 1993
ஈ) 1990 

31) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்____ எனவும் அழைக்கப்படுகிறது?

அ) CPA
ஆ) COPRA
இ) CPIA
ஈ) CPIRA

32) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986______ நிறுவனத்திற்கும் பொருந்தும்?

அ) பொதுத்துறை நிறுவனங்கள்
ஆ)  நீதித்துறை நிறுவனங்கள் 
இ) கூட்டுறவு நிறுவனங்கள்
ஈ) இவை அனைத்தும்

 33) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (1986)____அடுக்கு நுகர்வோர் சச்சரவு தீர்வுக் குழுமத்தை ஏற்படுத்தியது?

அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5

34) கூற்று 1: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 நுகர்வோர்களுக்கு எந்தவித உரிமைகளையும் பொறுப்புகளையும் உருவாக்கவில்லை.
கூற்று 2: மாறாக பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் சேவைகள் தொடர்பான அனைத்து சச்சரவுகளையும் தீர்த்து வைக்கும் குழுக்களை மட்டுமே ஏற்படுத்தியது.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி

35) கூற்று 1: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1956 நுகர்வோர் நலனைப் பாதுகாக்க நீதித்துறை அமைப்பை உருவாக்கியது.

 கூற்று 2 : இச்சட்டம் மாவட்ட மற்றும் மாநில அளவில், உயர்மட்ட அளவில் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்களை ஏற்படுத்தியது.

அ) அனைத்தும் சரி 
ஆ) 2 மட்டும் சரி
இ) அனைத்தும் தவறு
ஈ) 1 மட்டும் சரி

36)  "வாங்குவோர் ஜாக்கிரதை" என்னும் சொல் _____மொழியிலிருந்து பிறந்ததாகும்.

அ) கிரேக்கம்
ஆ) பிரெஞ்சு 
இ) இலத்தின்
ஈ) பாரசீகம் 

37) "வாங்குவோர் ஜாக்கிரதை" என்னும் சொல்______ சொல்லிலிருந்து பிறந்ததாகும்?

அ) கேவியட் எம்ப்டர்
ஆ) வென்டிடர் கேவியட்
இ) கேவியட் வென்டிடர் 
ஈ) எம்ப்டர் கேவியட்

38) பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்களில் ஒவ்வொரு மாதத்தின் முதல்____ பள்ளி வேலை நேரத்திக்ற்குப் பிறகு ஒரு மணிநேரம் கூட்டங்கள் நடத்துதல் மற்றும் செயல் விளக்கமளித்தல் வேண்டும்?

 அ) புதன்கிழமை
ஆ) செவ்வாய்க்கிழமை
இ) வியாழக்கிழமை
ஈ) வெள்ளிக்கிழமை 

39) "தான் விற்பனை செய்யும் பொருளின் விலையை எவ்வளவு உயர்த்தி விற்கும் முடியுமோ அவ்வளவு உயர்த்தி விற்கும் திருடன் ஒரு மனிதனா?" என்று கூறியவர் யார்?

அ)  காந்தியடிகள்
ஆ) ஜவகர்லால் நேரு
இ) அம்பேத்கர் 
ஈ) காமராஜர்

40) பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்களில் வருடத்திற்கு குறைந்தபட்சம்_____ நாட்களாவது உள்ளூர் சந்தைக்கு சென்று கள ஆய்வு செய்தல் அருகில் உள்ள நுகர்வோர் நீதி மன்றங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை காண வேண்டும் ?

அ) 7 நாட்கள்
ஆ) 4 நாட்கள் 
இ) 5 நாட்கள்
ஈ)  10  நாட்கள்

41) இந்திய ஒப்பந்தச் சட்டம்____ மக்கள் ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை உறுதி செய்கின்றது?

அ) 1856
ஆ) 1872
இ) 1880
ஈ) 1897 

42) பொருட்கள் விற்பனைச் சட்டம் ____விற்பனை ஒப்பந்தத்தில் வெளிப்படையான மற்றும் உட்கிடையான உத்தரவாதங்களை விற்பனையாளர்கள் செயல்படுத்த மறுப்பதிலிருந்து நுகர்வோர்களைப் பாதுகாக்கின்றது?

அ) 1922
ஆ) 1941
இ) 1930
ஈ) 1915 

43) அத்தியாவசியப் பொருட்களை விற்பனையாளர்கள் செயற்கையாக விலையேற்றம் செய்யும் நோக்குடன் பதுக்கி வைத்தல், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றல் போன்றவற்றை தடைசெய்ய அத்தியாவசிய பொருட்கள் சட்டம்_____ல் உருவாக்கப்பட்டது?

அ) 1955
ஆ) 1962
இ) 1970
ஈ) 1948

44) வேளாண் பொருட்கள் தரப்படுத்துதல் மற்றும் விற்பனைச் சட்டம்
_____ வேளாண்மை உற்பத்திப் பொருட்களை நல்ல தரத்துடன் வழங்குவதை உறுதி செய்கின்றது?

அ) 1922
ஆ) 1915
இ) 1943
ஈ) 1937

45) உணவுப் பொருட்கள் கலப்பட தடைச் சட்டம்____ உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை பரிசோதித்து தரமான உணவுப் பொருட்களை வழங்குவதன் மூலம் நுகர்வோர் உடல் நலத்தை பாதுகாக்கின்றது?

அ) 1952
ஆ) 1954
இ) 1956
ஈ) 1958

46)  எடை மற்றும் அளவுகள் சட்டம் ______எடை குறைவு மற்றும் அளவுக் குறைபாடுகளைப் போக்கி நுகர்வோரைப் பாதுகாக்கின்றது?

அ) 1970
ஆ) 1973
இ) 1976
ஈ) 1978

 47) வணிகக்குறிகள் சட்டம்____ பொருட்களின் மோசடியான வணிகக் குறிகளிடுவதை  தடை செய்கின்றது?

அ) 1996
ஆ) 1997
இ) 1998
ஈ) 1999 

48) போட்டிச் சட்டம்_____ ஆரோக்கியமற்ற வணிக போட்டிகளிலிருந்து நுகர்வோரை பாதுகாக்கின்றது?

அ) 2000
ஆ) 2001
இ) 2002
ஈ) 2003 

49) இந்திய தர நிறுவனச் சட்டம் (சான்றுக் குறிகள்) உற்பத்திப் பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்த பட்ச தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்கின்றது?

அ) 1944
ஆ) 1952
இ) 1967
ஈ) 1970

 50) மருந்துப் பொருட்கள் மற்றும் மாயச் சிகிச்சைகள் (விளம்பரங்கள்) சட்டம்____ மாயச் சிகிச்சைகள் குறித்து விளம்பரப்படுத்துவது தடை செய்கின்றது மற்றும் அதனால் விளைந்த தீங்கு களுக்கு தீர்வுகளைக் காண வகை செய்கிறது?

அ) 1925
ஆ) 1931
இ) 1946
ஈ) 1954

51) மருந்து மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டம்___ இந்தியாவில் தரமான மற்றும் பாதுகாப்பான மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்வதை உறுதி செய்கின்றது?

அ) 1940
ஆ) 1950
இ)1960
ஈ) 1970 

52) உணவுப் பாதுகாப்பு தரச் சட்டம்_____ உணவுப் பொருட்களை பாதுகாப்பாக மற்றும் முழுமையான நிலையில் உற்பத்தி செய்வது, பாதுகாப்பது மற்றும் விநியோகம் செய்வதை ஒழுங்குபடுத்துகிறது?

அ) 2001 
ஆ) 2003
இ) 2006
ஈ) 2008

53) காற்று மாசுபடுதல் தடைச் சட்டம் ____இந்தியாவில் காற்று மாசடைவதைத் தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றது?

அ) 1980
ஆ) 1981
இ) 1982
ஈ) 1983

54) பொது பொறுப்புக் காப்பீட்டு சட்டம்_____ஊறு விளைவிக்கும் பொருட்களை கையாளும் போது ஏற்படும் விபத்துகளுக்கு உடனடி நிவாரணம் பெறுவதை உறுதி செய்கின்றது?

அ) 1991
ஆ) 1992
இ) 1993
ஈ) 1994 

55) போதைப் பொருட்கள் மற்றும் மனவியல் பொருட்கள் சட்டம்___ போதைப் பொருட்களை தயாரிப்பதைத் தடைசெய்கிறது?

அ) 1972
ஆ) 1961
இ) 1998
ஈ) 1985

56) எடை மற்றும் அளவுகள் சட்டம் 1976 எந்த ஆண்டு அளவியல் சட்டமாக திருத்தியமைக்கப்பட்டது?

அ) 2004
ஆ) 2007
இ) 2009
ஈ) 2005

57) நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும்_____ ஆம் நாள் நுகர்வோர் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது?

அ) ஆகஸ்ட் 20 
ஆ) ஏப்ரல் 7 
இ) செப்டம்பர் 27
ஈ) மார்ச் 15 

58) "சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் 
காலத்துல்நீர் பெய்திரீஇ யற்று" - இது எத்தனையாவது குரள்?

அ) குரள் 527 
ஆ) குரள் 660 
இ) குரள் 745 
ஈ) குரள் 584 

59) " அடிப்படையான நுகர்வோர் உரிமை என்பது, பாதுகாப்பில் உரிமை, தகவல் பெரும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் கேட்கும் உரிமை" என்று கூறுபவர் யார்?

அ) ஜான் எஃப் கென்னடி
ஆ) ரால்ப் வேடர்
இ) எல். மெஸ்ஸி
ஈ) பிலிப் கோட்லர்

60) பொருட்களை உற்பத்தி செய்பவரும் வினியோகிப்பவரும் போன்ற விவரங்களை கண்டிப்பாக அதன் கட்டுமம் மீது காட்ட வேண்டும்?

1)  பொருட்களின் விலை, தயாரிப்பாளர் பெயர்
2) வரியுடன் அல்லது வரியில்லாத விலை
3) பொருட்களின் பெயர், பயன்படுத்தும் அளவு
4) உற்பத்தி செய்த நாள், காலாவதியாகும் நாள்
5) தயாரிப்புப் பிரிவு எண், எச்சரிக்கை விவரங்கள்

அ) அனைத்தும் தவறு
ஆ) 1,2,4 மட்டும் சரி
இ) அனைத்தும் சரி
ஈ) 3,5 மட்டும் சரி 

61) கூற்று 1: ஒவ்வொரு நுகர்வோருக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் சுத்தமான நீர் மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கான அடிப்படைகளை பெறுவதற்கு உரிமை உண்டு.

 கூற்று 2 :ரசீது இல்லாமல் வாங்கப்பட்ட பொருட்களில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அக்குறைகளைக் களைய நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக முடியாது.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு
இ) 1 மட்டும் சரி
ஈ)  அனைத்தும் சரி

62)  கூற்று 1: நுகர்வோர் தனது உரிமைகளை திறமையாகப் பாதுகாக்கவில்லையென்றால் தனது நோக்கத்தை அடைய முடியாது.

 கூற்று 2: நுகர்வோர் தனது பொறுப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையென்றால் தனது நோக்கத்தை உரிய முறையில் அடைய இயலாது.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

63) " பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் 
அணியென்ப நாட்டிவ் வைந்து" இது எத்தனையாவது குறள்

அ) குரள் 683 
ஆ) குரள் 810 
இ) குறள் 738 
ஈ) குரள் 584

64) "ஒரு வாடிக்கையாளர் நம் வளாகத்தில் மிக முக்கியமான பார்வையாளராக ஆவார்.  நம்மை சார்ந்து இருக்கவில்லை. நாம் அவரை சார்ந்து இருக்கிறோம். அவர் நம் வேலையின் குறுக்கீடு அல்ல. அவர் நம்முடைய வியாபாரத்தின் வெளிப்பாடு அல்ல. அவர் அதில் ஒரு பகுதியாக இருக்கிறார். அவரை சேமிப்பதன் மூலம் நாம் அவருக்கு உதவி செய்யவில்லை.  அவ்வாறு செய்ய நமக்கு வாய்ப்பளித்தது மூலம் அவர் நமக்கு உதவி செய்கிறார்" என்று கூறியவர் யார்?

அ) ஜவஹர்லால் நேரு
ஆ) அறிஞர் அண்ணா
இ) ராஜீவ் காந்தி
ஈ) மகாத்மா காந்தி

65) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நுகர்வோர் விழிப்புணர்வு பரப்புவதற்காக______ அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தை நிறுவ வகை செய்துள்ளது?

அ) மத்திய அளவில் 
ஆ) மாநில அளவில்
இ) மாவட்ட அளவில்
ஈ) இவை அனைத்தும்

66) நுகர்வோர் மன்றத்தின் தலையாய நோக்கம் நுகர்வோர் உரிமைகளை____ ஆகும்?

அ) மேம்படுத்துவது
ஆ) பாதுகாப்பது 
இ) இரண்டும் 
ஈ) இரண்டும் அல்ல 

67) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,1986 நுகர்வோர்களுக்குத் தீர்வு வழங்கி___ அடுக்கு தீர்வு மான்றத்தை ஏற்படுத்த வகை செய்துள்ளது?

அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5 

68) 1986 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதன் பிரிவு____ ஆகியவற்றின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட மன்றத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நுகர்வோர் நலனைப் பாதுகாப்பது அவசியமாகும்?

அ) பிரிவு 9
ஆ) பிரிவு 5
இ) பிரிவு 3 
ஈ) பிரிவு 7 

69) மாவட்ட மன்றத்திற்கு தலைவராக நியமிக்கப்படுவது யார்?

அ) உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது அதற்கு இணையான நபர் 
ஆ) உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது அதற்கு இணையான நபர்
இ) மாவட்ட நீதிபதி அல்லது அதற்கு இணையான நபர் 
ஈ) மாநில அரசின் தலைமை வழக்கறிஞர்

70) சரக்குகள் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை____மிகையாக நட்ட ஈடுகோரும் கோரிக்கைகளை மட்டுமே மாவட்ட மன்றம் கையாளவேண்டும்?

அ) 15 லட்சம்
ஆ) 20 லட்சம் 
இ) 25 லட்சம்
ஈ) 30 லட்சம்

71) மாவட்ட மன்றத்தில் ஒவ்வொரு வழக்குகளும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு_____ன் உட்பிரிவுக்கு உட்பட்ட நீதிமன்றம் நடவடிக்கைகளாக கருதப்படும் மற்றும் அந்த மாவட்ட மன்றங்கள் உரிமையியல் நீதிமன்றங்களாக கருதப்படும்?

அ) சட்டப்பிரிவு 185
ஆ) சட்டப்பிரிவு 193
இ) சட்டப்பிரிவு 210
ஈ) சட்டப்பிரிவு 228

72) இந்தியாவில் தற்போது____க்கும் மேற்பட்ட மாவட்ட மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன?

அ) 620+
ஆ) 750+
இ) 700+
ஈ) 680+

73) இந்தியாவில் தற்போது ______க்கும் மேற்பட்ட மாநில ஆணையம் செயல்பட்டு வருகின்றது?

அ) 45 +
ஆ) 30+ 
இ) 60 +
ஈ) 75+

 74) தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் எங்கு அமைந்துள்ளது?

அ) பெங்களூரு
ஆ) அகமதாபாத்
இ) புதுடெல்லி 
ஈ) ஹைதராபாத்

75) நுகர்வோர் குறைபாட்டு ஆணையம் என_____ அழைக்கப்படுகிறது?

அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றம்
ஆ) மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்
இ) தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்

76) மாநில ஆணையத்தின் அதிகார எல்லை என்ன?

அ) 10 லட்சத்திற்கு மேல் 3 கோடிக்குள்ளாக 
ஆ) 20 லட்சத்திற்கு மேல் 1 கோடிக்குள்ளாக
இ) 30 லட்சத்திற்கு மேல் 4 கோடிக்குள்ளாக
ஈ) 40 லட்சத்திற்கும் மேல் 2 கோடிக்குள்ளாக 

77) மாநில ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவது யார்?

அ) உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது அதற்கு இணையான நபர் 
ஆ) உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது அதற்கு இணையான நபர்
இ) இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர்
ஈ) மாநில ஆளுநர் அல்லது அதற்கு இணையான நபர்

78) மாநில நுகர்வோர் தீர்ப்பாணையம் அறிவித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத நபர் தேசிய தீர்ப்பாணையத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளிலிருந்து____ காலத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்?

அ) 15 நாட்களுக்குள்
ஆ) 30 நாட்களுக்குள் 
இ) 60 நாட்களுக்குள் 
ஈ) 90 நாட்களுக்குள் 

79) தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?

அ) 1986 
ஆ) 1987 
இ) 1988
ஈ) 1989

80) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்____ தலைமையின் கீழ் செயல்படுகிறது?

அ) ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி
ஆ) குடியரசு துணைத் தலைவர் 
இ) ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
ஈ)  குடியரசு தலைவர்

81) தேசிய குறைதீர்ப்பு ஆணையத்தில் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்?

அ)  2
ஆ) 3
இ) 4
ஈ) 5

82) தேசிய குறைதீர்ப்பு ஆணையம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 பிரிவு _____இன் கீழ் அதிகாரம் பெற்றுள்ளது?

அ) பிரிவு 25 
ஆ) பிரிவு 21 
இ) பிரிவு 23
ஈ)  பிரிவு 27

83) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 ____பிரிவு கீழ் தேசிய தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பினை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபர் தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்?

அ) பிரிவு 25 
ஆ) பிரிவு 21
இ) பிரிவு 23
ஈ) பிரிவு 27

84) சரியா? தவறா?

 நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன்பாக பொருள் தயாரித்த  நிறுவனத்திற்கு அல்லது பொருள் விற்பனை செய்த நிறுவனத்திற்கு சட்டப்படி அறிவிப்பை பாதிக்கப்பட்ட நுகர்வோர் அனுப்பத் தேவையில்லை.

அ)  சரி 
ஆ)  தவறு

85)  நுகர்வோர் நீதிமன்றத்தில் யார் யார் புகார் தெரிவிக்கலாம்?

அ) பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் சங்கம் 
ஆ) மத்திய அரசு, மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசம்
இ) பல நுகர்வோர் சார்பாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நுகர்வோர்
ஈ) இவர்கள் அனைவரும்

86) கூற்று 1: நுகர்வோர் நீதிமன்றத்தில் புகாரளிக்க முத்திரைத்தாளில் புகார் மனு அளிக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் புகாரளிக்க வழக்கறிஞர்களை ஈடுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

 கூற்று 2 : பொருளின் மீது குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட மிகையான ஒரு விலையை நுகர்வோர் செலுத்தியிருந்தால் அல்லது சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலையை நுகர்வோர் செலுத்தியிருந்தால் புகார் அளிக்கலாம்.

அ)  2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 
இ)  1 மட்டும் சரி
ஈ)  அனைத்தும் தவறு

87)  நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு எப்போது நிறுவப்பட்டது?

அ) 1960
ஆ) 1961
இ) 1962
ஈ) 1963 

88) நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது?

அ) சான்பிரான்சிஸ்கோ
ஆ) வாஷிங்டன்
இ)  லண்டன்
ஈ) மாஸ்கோ 

89) நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு _____நாடுகளில் 250க்கும் மேற்பட்ட உறுப்பினர் அமைப்புகளைக் கொண்டுள்ளது?

அ)  85 நாடுகள்
ஆ) 97 நாடுகள் 
இ) 109 நாடுகள்
ஈ) 120 நாடுகள்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY