Ads Right Header

வினாக்கள் - சமையச்சார்பின்மையை புரிந்து கொள்ளுதல்.


சமையச்சார்பின்மையை புரிந்து கொள்ளுதல்

1) "இந்தியா பல்வேறு நம்பிக்கைகளை சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசிய கண்ணோட்டத்தை கொண்டிருக்கும்"- இக்கூற்று யாருடையது?

அ) காந்தியடிகள்
ஆ) ஜவகர்லால் நேரு
இ) அம்பேத்கர் 
ஈ) ராஜேந்திர பிரசாத்

2) இவற்றுள் இந்தியா எந்தெந்த சமயங்களின் பிறப்பிடமாகும்?

அ) இந்து, சமணம்
ஆ) இந்து, சமணம், புத்தம்
இ) இந்து, சமணம், புத்தம், சீக்கியம் 
ஈ) இந்து, சமணம், சீக்கியம்

3) சமயசார்பின்மை என்ற சொல் ______வார்த்தையான செகுலம்  என்பதிலிருந்து  பெறப்பட்டது ?

அ) லத்தீன் 
ஆ) பிரெஞ்சு 
இ) பாரசீக
ஈ) அரேபிய

4) செகுலம் என்ற சொல்லின் பொருள் என்ன?

அ) காலம்
ஆ) உள்ளுணர்வு காலம்
இ) இரண்டும்
ஈ) இரண்டும் அல்ல 

5) Secularism என்ற பதத்தை உருவாக்கியவர் யார்?

அ) ஏ.வி.டைசி 
ஆ) பேராசிரியர் லாஸ்கி
இ) ஜான் ஹார்டி
ஈ) ஜார்ஜ் ஜேக்கப்  ஹோல்யோக்

6) கூற்று 1: ஆத்திகம் என்பது கடவுள் மீது நம்பிக்கையற்றிருத்தல் ஆகும்.

 கூற்று 2: சமய சார்பின்மை என்பது அரசோ, சமயமோ ஒன்று மற்றொன்றின் விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகும்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

7)  "சமயம் நமக்குப் பகைமையை போதிக்கவில்லை.  நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு" என்று கூறியவர் யார்?

அ) ராஜாராம் மோகன்ராய்
ஆ) தயானந்த சரஸ்வதி
இ) கவிஞர் இக்பால்
ஈ) மகாதேவ் கோவிந்தரானடே

8) அரசானது எந்த ஒரு மதத்தைத் சார்ந்த பிரிவினருக்கு எதிராக குற்றம் சாட்டுவது என்று கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே அறிவித்த முதல் பேரரசர் யார்?

அ) அசோகர்
ஆ)  கனிஷ்கர்
இ)  அக்பர்
ஈ)  சந்திரகுப்தர் 

9) _____என்பது எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதி அளித்தலாகும்?

அ) சமயசார்பின்மை கோட்பாடு
ஆ) சுதந்திரக் கோட்பாடு
இ) சமத்துவக் கோட்பாடு
ஈ) நடுநிலைமைக் கோட்பாடு 

10) தீன்-இலாஹி மற்றும் சுல்-ல்-குல் - இவற்றோடு தொடர்புடையவர் யார்?

அ) அசோகர்
ஆ) கனிஷ்கர்
இ) அக்பர் 
ஈ) சந்திரகுப்தர் 

11) தீன்-இலாஹி இதன் பொருள் என்ன?

அ) கடவுள் நம்பிக்கையற்றிருப்பது
ஆ) தெய்வீக நம்பிக்கை
இ) அனைத்து சமயத்தினரிடையே அமைதி மற்றும் நல்லிணக்கம்
ஈ) சமய சகிப்புத்தன்மை

12) அசோகர் தனது எத்தனையாவது பாறை அரசாணையில் அனைத்து மதப்பிரிவினருடன் சகிப்புத்தன்மையோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது மிகுந்த மரியாதைக்குரிய மனநிலையை வளர்த்துக் கொள்ளவும்  தம்மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்?

அ) 18வது அரசாணை
ஆ)16வது அரசாணை
இ) 14வது அரசாணை
ஈ) 12வது அரசாணை 

13) கூற்று1 :சமத்துவக் கோட்பாடு என்பது அரசு எந்த ஒரு சமயத்திலும் மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காது இருத்தலாகும்.

 கூற்று 2 :நடுநிலைமை கோட்பாடு என்பது சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருக்கும்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

14) சரியா? தவறா?

 சமயசார்பற்ற ஒரு நாட்டில் எவருக்கும் தனிப்பட்ட முறையில் சலுகை அளிப்பதில்லை என்பதோடு சமய நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுவதில்லை.

அ) சரி
ஆ) தவறு

15) சுல்-ல்-குல் என்பதன் பொருள் என்ன?

அ) கடவுள் நம்பிக்கையற்றிருப்பது
ஆ) தெய்வீக நம்பிக்கை
இ) அனைத்து சமயத்தினரிடையே அமைதி மற்றும் நல்லிணக்கம்
ஈ) சமய சகிப்புத்தன்மை

16)  "சமயசார்பற்ற" என்ற சொல்லானது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது?

அ) 1956
ஆ) 1976
இ) 1966
ஈ) 1986

17)  "சமயசார்பற்ற" என்ற சொல் இந்திய அரசமைப்பில் எத்தனையாவது சட்டத் திருத்தத்தின் மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்டது?

அ) 42 -வது
ஆ) 27 -வது
இ) 35 -வது 
ஈ) 52 -வது

18) அக்பரின் கல்லறை எங்கு அமைந்துள்ளது?

அ) புலந்தர்வாசா
ஆ) பதேபூர் சிக்ரி
இ) சிக்கந்தரா 
ஈ) ஜாமா மஸ்ஜித்

19) பொருத்துக.

 கஜுராஹோவில் உள்ள இந்துக்கோவில் 

அ) விதானம்- சமணம்
 ஆ) குவிமாடம்- இஸ்லாமியம் 
இ) கோபுரம்- இந்து 
ஈ) ஸ்தூபி- புத்தம்

20) கூற்று1 :இந்திய அரசியலமைப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் நாட்டு குடிமக்கள் மட்டுமின்றி இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கும் வழங்கப்படுகிறது.

கூற்று 2 :சமயசார்பற்ற இந்திய நாடானது அனைத்து சமய விழாக்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கிறது.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

21) சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை சட்டப்பிரிவு_____ தடை செய்கிறது?

அ) சட்ட பிரிவு 24
ஆ) சட்டபிரிவு 18 
இ) சட்ட பிரிவு 21
ஈ) சட்டப்பிரிவு 15 

22) பொது வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்புகளை சட்டப்பிரிவு_____ உறுதி செய்கிறது?

அ) சட்டப்பிரிவு 16
ஆ) சட்டப்பிரிவு 17
இ) சட்டப்பிரிவு 25
ஈ) சட்டப்பிரிவு 12 

23) எந்த ஒரு  சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் சட்டப்பிரிவு ______உரிமை வழங்குகிறது?

அ) சட்டப்பிரிவை 22(2)
ஆ) சட்டப்பிரிவு 25(1)
இ) சட்டப்பிரிவு 21(1)
ஈ) சட்ட பிரிவு 23(2)

24) சமய விவகாரங்களை நிர்வாகிக்கும் சுதந்திரத்தை சட்டப்பிரிவு_____ வழங்குகிறது?

அ) சட்டப்பிரிவு 23 
ஆ) சட்ட பிரிவு 24
இ)  சட்ட பிரிவு 25
ஈ)  சட்டப்பிரிவு 26

25) எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என்பதை சட்டப்பிரிவு_____ உறுதி செய்கிறது?

அ) சட்ட பிரிவு 25
ஆ) சட்டப்பிரிவு 28
இ) சட்டப்பிரிவு 26
ஈ) சட்டப்பிரிவு 27

28) சில கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்து நடைபெறும் சமய போதனைகள் அல்லது சமய வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமையை சட்டப்பிரிவு____ வழங்குகிறது?

அ) சட்டப்பிரிவு 35
ஆ) சட்டப்பிரிவு 28
இ) சட்டப்பிரிவு 32
ஈ) சட்டப் பிரிவு 25 

27) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட சட்டப்பிரிவு_____ தடை செய்கிறது?

அ) சட்டப்பிரிவு 29(2)
ஆ) சட்டப்பிரிவு 27(3)
இ) சட்டப்பிரிவு 24(1)
ஈ) சட்டப்பிரிவு 30(2)

28) தனது கல்லறையில் இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களை சார்ந்த கூறுகள் இடம் பெற வேண்டும் என வலியுறுத்திய அரசர் யார்?

அ) ஷாஜஹான்
ஆ) ஔரங்கசீப் 
இ) அக்பர் 
ஈ) அசோகர்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY