Ads Right Header

25 + 25 - ஒன்பதாம் வகுப்பு திருக்குறள் வினாவிடை!




தலைப்பு - பொதுத் தமிழ் 
(9 ஆம் வகுப்பு - திருக்குறள் )

1/50
இகழ்வார் பொறுத்தல் தலை - என்ற வரியில் இடம்பெற்றுள்ள தலை என்னும் சொல்லின் பொருள் யாது?
A) சிரம்
B) சிறந்த பண்பு✔
C) ஓர் உருப்பு
D) மனிதன்

2/50
வள்ளுவர் வலிமையுள் சிறந்த வலிமை என்று கீழ்க்கண்டவற்றில் எவற்றை குறிப்பிடுகிறார்?
A) விருந்தினரை வரவேற்க இயலாது தவிர்க்கும் நிலை
B) விருந்தினருக்கு உபசரிக்க இயலாத நிலை
C)அறிவற்றார் செய்யும் தீங்குகளைபொறுத்துக் கொள்வது✔
D) அறிவுடையார் செய்யும் நன்மைகளை பொறுத்துக் கொள்வது

3/50
நல்ல குணங்கள் நம்மை விட்டு நீங்காமல் இருக்க எவற்றை நாம் போற்றி கடைபிடிக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?
A) பொறுமை✔
B) வலிமை
C) வறுமை
D) பெருமை

4/50
சான்றோர்கள் யாரை பொன்போல் மதித்து மனதுக்குள் வைத்துக் கொள்வர் என வள்ளுவர் கூறுகிறார்?
A) பிறர் செய்யும் தீங்கை மன்னிப்பவர்
B) பிறர் செய்யும் தீங்கை தண்டிப்பவர்
C) பிறர் செய்யும் தீங்கை ஆதரிப்பவர்
D) பிறர் செய்யும் தீங்கை பொறுப்பவர்✔

5/50
பொன்றும் துணையும் - என்பதன் பொருள் யாது?
A) தீமைகளை பொறுப்பவர்
B) ஒரு நாள்
C) உலகம் உள்ளவரை✔
D) தண்டித்தவர்

6/50
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள தற்பிறர் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A) ஏழாம் வேற்றுமைத் தொகை✔
B) நான்காம் வேற்றுமைத் தொகை
C) ஆறாம் வேற்றுமைத் தொகை.
D) வினையாலணையும் பெயர்

7/50
கீழ்க்கண்டவற்றில் யார் பற்றற்ற துறவியரினும் மேலானவர் யார் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
A) பிறர் செய்யும் தீங்கை பொறுப்பவர்
B) வரம்பு கடந்து பேசுவோரின் தீயசொற்களை பொறுத்துக் கொள்பவர்✔
C) அறிவற்றார் செய்யும் தீக்குகளை பொறுத்துக் கொள்வது
D) விருந்தினரை வரவேற்க இயலாது தவிர்க்கும் நிலை

8/50
உண்ணாது - என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது ?
A) வினைமுற்று
B) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
C) வினையாலணையும் பெயர்
D) வினையெச்சம்✔

9/50
அனைத்து நாட்டினரும் இனத்தினரும் தமக்கே உரியெதெனக் கொண்டாடும் வகையில் பொதுவுடமைக் கருத்துகளைப் கொண்ட நூலை படைத்தவர் - என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
A) வள்ளுவர்✔
B) தொல்காப்பியர்
C) கம்பர்
D) வள்ளலார்

10/50
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று திருவள்ளுவரை புகழ்ந்தவர் யார்?
A) பாரதியார்✔
B) பாரதிதாசன்
C) ஜி.யூ.போப்
D) பரிமேலழகர்

11/50
'வள்ளுவனை பெற்றதால் புகழ் பெற்றதே புகழ் வையகமே என்று திருவள்ளுவரை புகழந்தவர் யார்?
A) பாரதியார்✔
B) பாரதிதாசன்
C) ஜி.யூ.போப்
D) பரிமேலழகர்

12/50
திருக்குறள் நூலின் சிறப்பு பெயர்களில் தவறானது எது?
A) உலகப் பொதுமறை
B) வாயுறை வாழ்த்து
C) தமிழ்மறை✔
D) தெய்வ நூல்

13/50
வள்ளுவரின் சிறப்பு பெயர்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A) பொய்யா புலவர்✔
B) முதற்பாவலர்
C) பெருநாவலர்
D) செந்நாப்போதார்

14/50
திருக்குறள் நூலில் முதல் பிரிவான அறத்துப்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
A) 3 இயல்கள் + 38 அதிகாரங்கள்
B) 2 இயல்கள் - 25 அதிகாரங்கள்
C) 4 இயல்கள் + 38 அதிகாரங்கள்✔
D) 3 இயல்கள் +25 அதிகாரங்கள்

15/50
இரண்டாம் பிரிவான பொருட்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
A) 2 இயல்கள் +25 அதிகாரங்கள்
B) 3 இயல்கள் + 38 அதிகாரங்கள்
C) 4 இயல்கள் + 70 அதிகாரங்கள்
D) 3 இயல்கள் + 70 அதிகாரங்கள்✔

16/50
திருக்குறளின் கடைசி பிரிவான காமத்துப்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
A) 3 இயல்கள் 25 அதிகாரங்கள்
B) 2 இயல்கள் 25 அதிகாரங்கள்✔
C) 4 இயல்கள் + 38 அதிகாரங்கள்
D) 3 இயல்கள் + 70 அதிகாரங்கள்

17/50
அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இயல்களில் தவறானது எது?
A) பாயிரவியல்
B) இல்லறவியல்
C) அரசியல்✔
D) துறவறவியல்

18/50
பொருட்பாலில் இடம்பெற்றுள்ள இயல்களில் தவறானது எது?
A) களவியல்✔
B) அரசியல்
C) அங்கவியல்
D) ஒழிபியல்

19/50
திருக்குறளில் உள்ள பாடல்களை போற்றி பாராட்டிய பாடல்களின் தொகுப்பு எது?
A) திருவள்ளுவர்மாலை
B) திருக்குறள்மாலை
C) திருவள்ளுவமாலை✔
D) திருக்குறள்பாமாலை

20/50
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் யார் உரை சிறந்தது என்று தமிழ்ச் சான்றோர்களால் கூறப்படுகிறது?
A) திருமலையர்
B) மணக்குடவர்
C) தாமத்தர்
D) பரிமேலழகர்✔

21/50
இங்கிலாந்து மகாராணியார் காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் எது?
A) திருக்குறள்✔
B) பைபிள்
C) இலியட்
D) தேம்பாவணி

22/50
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் -எனத் தொடங்கும் குறளில் அமைந்துள்ள அணியிலக்கணம் எது?
A) எடுத்துக்காட்டு உவமையணி
B) பிரிதுமொழிதல் அணி
C) உவமையணி✔
D) வஞ்சிப்புகழ்ச்சியணி

23/50
இன்மையுள் இன்மை விருந்தொரால் -எனத் தொடங்கும் குறளில் அமைந்துள்ள அணி எது?
A) எடுத்துக்காட்டு உவமையணி✔
B) பிரிதுமொழிதல் அணி
C) உவமையணி
D)வஞ்சிப்புகழ்ச்சியணி

24/50
கீழ்க்கண்ட எந்தப் பகுதியில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் நூலானது இடம்பெற்றுள்ளது?
A) எட்டுத்தொகை
B) பத்துப்பாட்டு
C) பதினெண்மேற்கணக்கு
D) பதினெண்கீழ்க்கணக்கு✔

25/50
செல்வத்துள் எந்த செல்வமானது மிகச் சிறந்தது என்று வள்ளுவர் கூறுகிறார்?
A) கல்விச்செல்வம்
B) கேள்விச்செல்வம்✔
C) கொடைச்செல்வம்
D) படைச்செல்வம்

26/50
செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் யாருடன் ஒப்பப்படுவர் என்று வள்ளுவர் கூறுகிறார்?
A) தேவர்கள்✔
B) அந்தணர்கள்
C) மன்னர்கள்
D) முனிவர்கள்

27/50
கீழ்க்கண்டவற்றில் யார் அவி உணவை உட்கொள்வர் என்று வள்ளுவர் கூறுகிறார்?
A) முனிவர்கள்
B) தேவர்கள்✔
C) மன்னர்கள்
D) மக்கள்

28/50
கல்வி, கேள்வி, பண்பு ஆகியவற்றில் சிறந்தவர்கள் கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
A) சான்றோர்
B) பெரியோர்
C) ஆன்றோர்✔
D) கலைஞர்

29/50
அவியுணவு என்பதன் இலக்கண குறிப்பு யாது?
A) வினைத்தொகை
B) பண்புத்தொகை
C) உருவகத்தொடர்
D) இருபெயரொட்டுப் பண்புத்தொகை✔

30/50
ஒற்கத்தின் ஊற்றாந் துணை என்ற குறளில் அமைந்துள்ள ஒற்கம் என்ற சொல்லின் பொருள் யாது?
A) தளர்ச்சி✔
B) வளர்ச்சி
C) வேகம்
D) தவிப்பு

31/50
எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள எனைத்தானும் என்ற சொல்லின் பொருள் யாது?
A) எவ்வளவு பெரியதாயினும்
B) கேட்ட அளவிற்கும்
C) எவ்வளவு சிறிதாயினும்✔
D) எந்த அளவிற்கும்

32/50
இழைத்துணர்ந்து - என்ற சொல்லின் பொருள் யாது?
A) தவறாக ஆராய்ந்து
B) நுட்பமாக ஆராய்ந்து✔
C) மேலோட்டமாக ஆராய்ந்து
D) அறியாமையில் ஆராய்ந்து

33/50
இழுக்கல் உடையிழி ஊற்றுக்கொல் அற்றே எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணியிலக்கணம் எது?
A) எடுத்துக்காட்டு உவமையணி
B) பிரிதுமொழிதல் அணி
C) உவமையணி✔
D) வஞ்சிப்புகழ்ச்சியணி

34/50
செவிக்குணவானது எதுவென்று வள்ளுவர் கூறுகிறார்?
A) புகழ்
B) கேள்வி✔
C) மகிழ்ச்சி
D) வருத்தம்

35/50
ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் குறிப்பதாக வள்ளுவர் கூறுகிறார்?
A) ஊற்றுக்கோல்✔
B) அளவுக்கோல்
C) துலாக்கோல்
D) ஆன்றுக்கோல்

36/50
திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்களில் உடைமை என்னும் பெயரில் அமைந்துள்ளது?
A) ஒன்பது
B) எட்டு
C) ஏழு
D) பத்து✔

37/50
ஏழு என்னும் பெயரானது எத்தனை குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது?
A) ஒன்பது
B) எட்டு✔
C) ஏழு
D) பத்து

38/50
கீழ்க்கண்டவற்றில் எது சான்றோற்களின் பெருமை என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
A) நற்குணங்களில் சிறந்திருத்தல்✔
B) கடமையை ஆற்றுதல்
C) நாட்டை பேணிக்காத்தல்
D) ஆன்றோரை பேச்சைக் கேட்டல்

39/50
எந்நத் துள்ளதூஉ மன்று என்ற குறட்பாவில் இடம்பெற்றுள்ள உள்ளதுஉம் என்னும் சொல்லின் பொருள் யாது?
A) சொல்லிசையளபெடை
B) நிறையிசையளபெடை
C) இன்னிசையளபெடை✔
D) செய்யுளிசையளபெடை

40/50
வள்ளுவர் கூறிய சான்றான்மைக்கான தூண்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A) அன்புடைமை
B) புறம் பேசுதல்✔
C) உயிர்களிடத்து இரக்கம்
D) பிறர்க்கு உதவுதல்

41/50
அன்புநாண் ஒப்பரவு கண்ணோட்டம் வாய்மையொடு எனத் தொடங்கும் குறளில்இடம்பெற்றுள்ள கண்ணோட்டம் என்னும் சொல்லின் பொருள் யாது?
A) உண்மை பேசுதல்
B) நாணம்
C) அன்புடைமை
D) உயிர்களிடத்து இரக்கம்✔

42/50
பிற உயிர்களை கொல்லைமையை வள்ளுவர் கீழ்க்கண்டவற்றில் எந்த பொருளாக கூறுகிறார்?
A) ஒப்புரவு
B) சால்பு
C) தவம்✔
D) உண்மை

43/50
மாற்றார் என்னும் சொல்லின் பொருள் யாது?
A) பகைவர்✔
B) நன்பர்
C) வலிமையானவர்
D) செயல் செய்பவர்

44/50
இன்மை - என்னும் சொல்லின் பொருள். யாது?
A) தீமை
B) நன்மை
C) வலிமை
D) வறுமை✔

45/50
இருநிலம் என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A) உருவகம்
B) உரிச்சொற்றொடர்✔
C) உவமையாகுபெயர்
D) அன்மொழித்தொகை

46/50
தோல்வியை ஒப்புக்கொள்வதே சான்றாண்மையை அளந்தறியும்.......... ஆகும்?
A) திண்மை
B) சான்றோர்
C) உரைகல்✔
D) இனிமை

47/50
சான்றவர் - என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A) வினையாலணையும் பெயர்✔
B) வினைத்தொகை
C) இருபெயரொட்டு பண்புத்தொகை
D) பண்புத்தொகை

48/50
அன்புநாண் ஒப்பரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு) - எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
A )பிறிதுமொழிதல் அணி
B) ஏகதேச உருவக அணி✔
C) எடுத்துக்காட்டு உவமையணி
D) வஞ்சிப்புகழ்ச்சி அணி

49/50
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
A) எடுத்துக்காட்டு உவமையணி
B) உவமை அணி
C) எடுத்துக்காட்டு உவமையணி✔
D) இல்பொருள் உவமையணி

50/50
வள்ளுவர் கூறிய சான்றாண்மை தூண்கள் மொத்தம் எத்தனை?
A) 7
B) 8
C) 5✔
D) 6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY