Ads Right Header

ஒன்பதாம் வகுப்பு இயல் 7.


ஒன்பதாம் வகுப்பு  இயல் 7.
                        
1) "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" - என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ) கி. வா ஜகந்நாதன் 
ஆ) மு மேத்தா🌹
இ)  ச. தமிழ்ச்செல்வன்
 ஈ) மூ.வ

2) "கார் அறுத்தான்" - என்பது எவ்வகை ஆகுபெயர்?
அ) பொருளாகுபெயர் 
ஆ) இடவாகுபெயர் 
இ) காலவாகு பெயர் 🌹
ஈ) பண்பாகு பெயர்

3) மஞ்சள் பூசினாள்
அ) தொழிலாகு பெயர் 
ஆ) பண்பாகு பெயர்👍
இ) சினையாகு பெயர் 
ஈ) காரியவாகுபெயர்

4) தொல்காப்பியர் 
ஆகுபெயர்களை எத்தனை வகையாக வகைப்படுத்தியுள்ளார்?
அ) 7 🌹
ஆ) 15 
இ) 16 
ஈ) 18 

5) "பொறிமயிர்" வாரணம்_____
 கூட்டுறை வயமாப் புலியொடு குழும" - என்னும் வரி இடம் பெற்ற நூல் எது?
அ) பட்டினப்பாலை 
ஆ) பரிபாடல்
 இ) மதுரைக்காஞ்சி🌹
 ஈ) புறநானூறு

6) அணங்கு
அ) சாளரம்
ஆ) தெய்வம்👍
இ) நீர்நிலை
ஈ) முரசு

7) "புரிசை" என்னும் சொல்லின் பொருள் யாது?
அ) அங்காடி 
ஆ) மதில் 🌹
இ) மேடை 
ஈ) காடு

8)" ஆழ்ந்த" என்னும் சொல்லைப் பகுபத உறுப்பிலக்கணப் படி பிரித்து எழுதுக?
அ) ஆழ்+த்+ந்+அ
ஆ) ஆழ்+ந்+த்+அ
இ) ஆழ்+ந்+அ 
ஈ) ஆழ்+த்(ந்)+த்+அ🌹

9) மாங்குடி மருதனார் பாடிய எத்தனை பாடல்கள் எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ளன?
அ) 8 
ஆ) 11
இ) 10
ஈ) 13🌹

10) மாங்குடி மருதனார் பிறந்த மாங்குடி எம் மாவட்டத்தில் உள்ளது?
அ) கன்னியாகுமரி 
ஆ) திருநெல்வேலி🌹
இ) தூத்துக்குடி 
ஈ) மதுரை 

11) தவறாக பொருந்தியுள்ளது எது?
அ) நிலைஇய - சொல்லிசை அளபெடை 
ஆ) முழங்கிசை -  வினைத்தொகை 
இ) ஓங்கிய - வினையெச்சம்🌹 
ஈ) முந்நீர் - பண்புத்தொகை

12) சரியாக பொருந்துவது எது?
அ) மணப்பாறை- மாட்டுச்சந்தை 🌹
ஆ) ஒட்டன்சத்திரம்- ஆட்டுச் சந்தை
இ) காராமணி குப்பம்- மீன் சந்தை 
ஈ) நாகப்பட்டினம்-  கருவாட்டு சந்தை

13) கீழ்கண்டவற்றில் தவறானது எது?
அ) தாவணின்னா  சந்தைன்னு  பொருள்
ஆ) நாள் என்றால் பகல் 
இ) அல் என்றால் இரவு
ஈ) கரூர் மாவட்டத்தில் பேச்சம்பள்ளி சந்தை 8 ஆயிரம் கடைகளுடன் திங்கள்கிழமைகளில்  கூடுகிறது.🌹

14) நன்னூலார் ஆகுபெயரை எத்தனை வகையாக வகைப்படுத்தியுள்ளார்?
அ) 7 
ஆ) 10 
இ) 15👍
ஈ) 16 

15) "அறிஞர் அண்ணாவைப் படிக்கிறேன்" எவ்வகை ஆகுபெயர்?
அ) காரியவாகு பெயர் 
ஆ) கருத்தாவாகு பெயர் 🌹
இ) கருவியாகு பெயர் 
ஈ) பொருளாகுபெயர்

16)"மகிழ்ந்தோர்"-என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை 
ஆ) வினையாலணையும் பெயர்🌹
இ) வினைத்தொகை 
ஈ) பெயரெச்சம்

17) மதுரைக்காஞ்சியில்  மதுரையை சிறப்பித்துக் கூறும் அடிகள் எத்தனை?
அ) 782
ஆ) 352
இ) 354🌹
ஈ) 254

18) குழாஅத்து – எவ்வகை அளபெடை?
அ) சொல்லிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) செய்யுளிசை அளபெடை👍
ஈ) இயற்கை அளபெடை


19) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
அ) பத்துபாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.
ஆ) காஞ்சி என்றால் அறியாமை என்பது பொருள்.🌹
இ) மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது.
ஈ) மதுரைக்காஞ்சியை பாடியவர் மாங்குடி மருதனார்.

20) "அங்காடி" - என்பதைக் குறிக்கக்கூடிய சொல் எது?
அ) கயம்
ஆ) அணங்கு 
இ) நியமம்🌹
ஈ) அகமாணம்

21) ஐம்பெரும் காப்பியங்களில் அடங்காதது எது?
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி 
ஈ) யசோதர காவியம்🌹

22) "செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்தநூல் 
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்ந்தவே"- எனும் வரி இடம் பெற்ற நூல் எது?
அ) மதுரைக்காஞ்சி
ஆ) முத்தொள்ளாயிரம்
இ) யசோதரகாவியம்
ஈ) சீவகசிந்தாமணி🌹

23) தவறானது எது?
அ) வருக்கை - பலாப்பழம்
ஆ) நெற்றி - உச்சி
இ) மால்வரை - பெரிய மலை
ஈ) மருப்பு - மறுத்தல்🌹

24) விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட தமிழின் முதல் காப்பியம் எது?
அ)  நரிவிருத்தம்
ஆ) சீவகசிந்தாமணி🌹
இ) சிலப்பதிகாரம்
ஈ) முத்தொள்ளாயிரம்

25)"கமுகு"- என்னும் சொல்லின் பொருள் யாது?
அ) சங்கு
ஆ) சேறு 
இ) பாக்கு🌹 
ஈ) முத்து

26) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
அ) வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்.
ஆ) மன்னர்களின் பெயர்களை குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர்  என்ற பொதுவாக குறிப்பிடுகிறது முத்தொள்ளாயிரம்.
இ) முத்தொள்ளாயிரம் 600 பாடல்களைக் கொண்டது.🌹
ஈ) முத்தொள்ளாயிரம் நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.

27) புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து _______செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்ற பெயரில் பதிக்கப்பட்டுள்ளன.
அ) 110
ஆ) 108 🌹
இ) 190 
ஈ) 202

28) ஜப்பானியர்கள்_____ என்பவரின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கினர்.
அ) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
ஆ) மோகன் சிங்🌹
இ) தில்லான்
ஈ) ராஷ் பிகாரி போஸ்

29) "இந்திய தேசிய ராணுவம் - தமிழர் பங்கு"  என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ) ராசையா 
ஆ) மோகன்சிங் 
இ) மா.சு. அண்ணாமலை🌹
ஈ) முத்துராமலிங்கம்

30)" இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்"- என்றவர் யார்?
அ) தில்லான் 🌹
ஆ) நேதாஜி
இ) லட்சுமி 
ஈ) ராஜாமணி

31)சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?
அ) மனநூல்
ஆ) மணநூல்👍
இ) மங்கல நூல்
ஈ) சமண நூல்

32) சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?
அ) பதினான்கு
ஆ) பதினைந்து
இ) பதினாறு
ஈ) பதின்மூன்று👍

33) சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைசாத்தனார்
இ) திருத்தக்கத்தேவர்👍
ஈ) கணிமேதாவியர்

34) சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?
அ) நரிவெண்பா
ஆ) நரிவிருத்தம்👍
இ) சிந்தாமணிமாலை
ஈ) காவடிச்சிந்து

35) “ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
அ) விமலையார்
ஆ) சுரமஞ்சரி
இ) காந்தருவதத்தை
ஈ) நாமகள்👍

36) நெறி மருப்பு எருமை – வெறி கமழ் கழனி இத்தொடரின் கோடிட்ட சொற்களின் பொருள் யாது?
அ) கொம்பு, மணம்👍
ஆ) வயல், மலை
இ) தேங்காய், புகழ்
ஈ) சோறு, எல்லை

37) வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள நயம் …………
அ) எதுகை👍
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி

38) திருத்தக்கத்தேவரின் காலம் ……………..
அ) எட்டாம் நூற்றாண்டு
ஆ) ஒன்பதாம் நூற்றாண்டு👍
இ) ஆறாம் நூற்றாண்டு
ஈ) ஏழாம் நூற்றாண்டு

39) பைங்கூழ் வளர்ந்தது
அ) தொழிலாகு பெயர் 
ஆ) பண்பாகு பெயர்👍
இ) சினையாகு பெயர் 
ஈ) காரியவாகுபெயர்

40) கயம்
அ) சாளரம்
ஆ) தெய்வம்
இ) நீர்நிலை👍
ஈ) முரசு






Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY