Ads Right Header

வினாக்கள் - ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 9.


1 )தஞ்சாவூரில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
A) 1970
B) 1981
C) 1995
D) 1968

2 ) " இம்மை செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன் " எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 
A ) புறநானூறு 
B ) அகநானூறு 
C ) பரிபாடல் 
D ) திருக்குறள் 

3 ) " தமிழ் பண்பாடு " -என்னும் இதழைத் தொடங்கியவர் யார் ? 
A ) ஆலந்தூர் கிழார்
B ) தனிநாயகம் அடிகள் 
C ) ராமகிருஷ்ணன் 
D ) ஜெயமோகன் 

4 ) " ஒரு சிறு இ " என்னும் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?
A) 2010
B) 2014
C) 2016
D) 2018

5 ) " நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் " -என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 
A ) புறநானூறு 
B ) நற்றிணை 
C ) குறுந்தொகை 
D ) அகநானூறு

6 ) " வேழம் " -என்னும் சொல்லின் 
பொருள் யாது ? 
A ) விருப்பம் 
B ) பெண் யானை 
C ) அரசன் 
D ) ஆண் யானை 

7 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) நசை- விருப்பம் 
B ) நல்கல் - வாங்குதல் 
C ) பொளிக்கும் - உரிக்கும் 
D ) யா - ஒருவகை மரம் 

8 ) சரியாக பொருந்தியுள்ளது எது ? 
A ) நல்கலும் நல்குவர் எச்சவும்மை 
B ) களைஇய -இன்னிசை அளபடை 
C ) அனைவருக்கும் எண்ணும்மை 
D ) சரிந்து -பெயரெச்சம் 

9 ) சு . சமுத்திரத்தின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் எது ? 
A ) வாடாமல்லி 
B ) வேரில் பழுத்த பலா 
C ) குற்றம் பார்க்கில் 
D ) பாலைப்புறா 

10 ) " இனிய உளவாக இன்னாத கூறல் ... " - என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ? 
A ) உவமை அணி 
B ) உருவக அணி 
C ) எடுத்துக்காட்டு உவமையணி 
D ) சொற்பொருள் பின்வருநிலையணி 

11 ) " யா " மரம் என்பது எந்நிலத்தில் வளரும் ? 
A ) குறிஞ்சி 
B ) மருதம் 
C ) பாலை 
D ) நெய்தல் 

12 ) " எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி " -என்னும் பாடல் வரியின்ஆசிரியர் யார் ? 
A ) பாரதியார் 
B ) பாரதிதாசன் 
C ) வள்ளலார்
D ) தனிநாயகம் அடிகள்

13 )  அகமும் புறமும்
அ) கடிதத்தொகுப்பு 
ஆ) கட்டுரைத் தொகுப்பு
இ) சிறுகதைத் தொகுப்பு
ஈ) கவிதைத் தொகுப்பு

14 ) " சிற்பியின் மகள் " - என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 
A ) முகமது செரிபூ 
B ) பூவண்ணன் 
C ) சி.மணி 
D ) தனிநாயகம் அடிகள் 

15 ) குறுந்தொகை முதன்முதலாக பதிப்பிக்கப்பட்ட ஆண்டு ? 
A ) 1912 
B ) 1914 
C ) 1911 
D ) 1915 

16 ) " பிடிபசி " - என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு யாது ? 
A ) பண்புத்தொகை 
B ) வினைத்தொகை 
c ) ஆறாம் வேற்றுமைத்தொகை 
D ) நான்காம் வேற்றுமைத்தொகை 

17 ) சு . சமுத்திரத்தின் தமிழக அரசின் விருது பெற்ற நூல் எது ? 
A ) வேரில் பழுத்த பலா 
B ) குற்றம் பார்க்கில் 
C ) வாடாமல்லி 
D ) பாலைப்புறா

18 ) குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் யார் ? 
A ) உ.வே.சா 
B ) சௌரிப்பெருமாள் 
C ) தனிநாயகம் அடிகள் 
D ) ஆறுமுகநாவலர்

19 ) சு . சமுத்திரம் எம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ? 
A ) தூத்துக்குடி 
B ) கன்னியாகுமரி 
C ) திருநெல்வேலி
D ) தென்காசி

20 ) கடவுள் வாழ்த்து நீங்கலாக குறுந்தொகையில் அமைந்த பாடல்களின் எண்ணிக்கை?
A ) 401 
B ) 400 
C ) 402 
D ) 404 

21 ) " குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் " - என்று கூறியவர்? 
A ) கூடலூர்கிழார் 
B ) ஆலந்தூர் கிழார் 
C ) ஆலந்தூர் மோகனரங்கன் 
D ) கபிலர் 

22 ) " sapens " - என்பதன் பொருள் யாது ? 
A ) அறிவற்றவன் 
B ) புத்தியில்லாதவன் 
C ) முட்டாள் 
D ) அறிவுடையோன் 

23 ) " உள்ளற்க உள்ளம் சிறுகுவ " - 
என்று கூறும் நூல் ? 
A ) நாலடியார் 
B ) திருக்குறள் 
c ) பழமொழி நானூறு 
D ) புறநானூறு 

24 ) கல்யாண்ஜியின் புனைபெயர் யாது 
A ) வாணிதாசன் 
B) வண்ணதாசன்
C ) ரேவதி 
D) கவிதாசன்

25 ) சில இறகுகள் சில பறவைகள்
அ) கடிதத்தொகுப்பு 
ஆ) கட்டுரைத் தொகுப்பு
இ) சிறுகதைத் தொகுப்பு
ஈ) கவிதைத் தொகுப்பு

26 ) குறுந்தொகையின் 
அடிவரையறை என்ன ? 
A ) 4-8   
B ) 3-6 
C ) 4-41
D ) 9-12

27 ) " பாலை பாடிய பெருங்கடுங்கோ " -
எம் மரபைச் சேர்ந்த மன்னர் ? 
A ) சேர 
B ) சோழ 
C ) பாண்டிய 
D ) வேளிர் 

28 ) சு.சமுத்திரம் எழுதாத நூல் எது ? 
A ) மண் சுமை 
B ) தலைப்பாகை 
C ) காகித உறவு 
D ) வாடிவாசல் 

29 ) வண்ணதாசனின் கட்டுரைத் தொகுப்பு எது ? 
A ) அகமும் புறமும் 
B ) புலரி 
C ) முன்பின் 
D ) ஆதி 

30 ) முதலாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்ட ஆண்டு ? 
A ) 1965 
B ) 1966 
C ) 1967 
D ) 1968 

31 ) " படுதிரை வையம் பாத்திய பண்பே " - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்?
A ) புறநானூறு 
B ) பரிபாடல் 
C ) அகநானூறு 
D ) தொல்காப்பியம் 

32 ) உலகத் தமிழ் மாநாடு இருமுறை எந்நகரில் நடத்தப்பட்டுள்ளது ? 
A ) மதுரை 
B ) யாழ்ப்பாணம் 
C ) கோலாலம்பூர் 
D ) சென்னை 

33 ) " உயரப் பறத்தல் " -என்னும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார் ? A ) ந.பிச்சமூர்த்தி  
B ) வண்ணதாசன் 
C ) தனிநாயகம் அடிகள் 
D ) பாரதியார்

34 ) கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியவர் யார் ? 
A ) கபிலர் 
B ) அம்மூவனார் 
C ) நல்லத்துவனார் 
D ) பெருங்கடுங்கோ 

35 ) " எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு " என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ? 
A ) சொற்பொருள் பின்வருநிலையணி 
B ) வஞ்சப்புகழ்ச்சி அணி 
C ) பொருள் பின்வருநிலையணி 
D ) சொல் பின்வருநிலையணி

36) இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
அ) கொம்பு
ஆ) மலையுச்சி
இ) சங்கு
ஈ) மேடு

37) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) வள்ளுவர்
இ) கணியன் பூங்குன்றனார்
ஈ) ஔவையார்

38) நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று – என்ற கூற்றை கூறியவர்
அ) ஹாக்கின்ஸ்
ஆ) ரஷல்லி
இ) வேட்ஸ்வொர்த்
ஈ) தெறென்ஸ்

39) முதிர்ந்த ஆளுமைக்கான இலக்கணம் கூறியவர் யார்?
அ) ஹாக்கின்ஸ்
ஆ) கோர்டன் ஆல்போர்ட்
இ) தெறென்ஸ்
ஈ) ஷெல்லி

40) “பூட்கையில்லோன் யாக்கை போல” இத்தொடரில் ‘பூட்கை’ என்பதன் பொருள் யாது?
அ) எல்லை
ஆ) வாழ்க்கை
இ) நட்பு
ஈ) குறிக்கோள்

41) தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – இக்குறட்பாவில் வரும் அணி ……..
அ) உருவகம்
ஆ) உவமை
இ) வஞ்சப்புகழ்ச்சி
ஈ) தற்குறிப்பேற்றம்


42) ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை யார்?
அ) ஆல்பர்ட் சுவைட்சர்
ஆ)கோர்டன் ஆல்போர்ட்
இ) தெறென்ஸ்
ஈ) ஹாக்கின்ஸ்

43) கங்கையையும், இமயத்தில் பெய்யும் மழையையும் உவமைகளாக எடுத்துக் கூறும் நூல் எது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்

44) தனிநாயக அடிகள் தொடங்கி நடத்திய இதழ் எது?
அ) தென்றல்
ஆ) குயில்
இ) தமிழ்ப்பண்பாடு
ஈ) தமிழ்க்கலச்சாரம்

45) உலகத்தமிழாய்வு மன்றம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?
அ) அமுதன் அடிகள்
ஆ) குன்றக்குடிகள் அடிகள்
இ) தனிநாயக அடிகள்
ஈ) ஞானியாரடிகள்

46) மார்க்ஸ் அரேலியஸ் என்பவர் ……………….
அ) தத்துவஞானி
ஆ) பேரரசர்
இ) விஞ்ஞானி
ஈ) கவிஞர்

47) செனக்கா என்பவர் ……………….
அ) தத்துவஞானி
ஆ) பேரரசர்
இ) விஞ்ஞானி
ஈ) கவிஞர்

48) கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
அ) சொல் பின்வருநிலையணி
ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி




















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY