Ads Right Header

Group 4 - தமிழ் 50 + 50 வினாவிடை!

1.
ஈன்று புறந் தருதல் என் தலைக் கடனை சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே” இப்பாடலில் அமைந்துள்ள தொடைகளின்படி சரியான விடையை சுட்டுக
அடி எதுகை வந்துள்ளது
சீர் எதுகை வந்துள்ளது
அடி இயைபு வந்துள்ளது
அடி. எதுகையும் அடி இயைபும் வந்துள்ளது ✔
2.
உவமையாய் விளக்கப் பெறும் பொருள் அறிக. புனை ஓவியம் போல
சிரிப்பு.
அழகு ✔
மகிழ்ச்சி
சோகம்
3.
வள்ளி தேர்வு எழுதுதினாள்- பிறவினையாக்குக.
வள்ளி தேர்வு எழுதுகின்றாள்
வள்ளி தேர்வு எழுதுவிப்பாள்
வள்ளி தேர்வு எழுதுவிப்பாள் ✔
வள்ளி தேர்வு எழுதுவாள்
4.
பூங்கோதை நேற்று கோவிலுக்கு சென்றாள் இவ்விடைக் குறிய சரியான வினாவைத் தேர்க.
கோயிலுக்குச் சென்றாளா பூங்கோதை?
பூங்கோதை எப்போது சென்றாள்.
பூங்கோதை நேற்று எங்குச் சென்றாள்? ✔
பூங்கோதை எங்கு சென்றாள்.
5.
தெள்ளமுது இலக்கணக் குறிப்பு கூறுக.
பண்புத்தொகை ✔
வினைத்தொகை
முற்றெச்சம்
வினைமுற்று
6.
சொற்களை அழகுப்படுத்தி சொற்றொடர் ஆக்குக.
பெருமை உடையவர் ஆற்றுவர் ஆற்றின் ✔
ஆற்றுவார் பெருமை உடையவர் ஆற்றின்
ஆற்றுவார் ஆற்றின் பெருமை உடையவர்
பெருமை ஆற்றுவார் ஆற்றின் உடையவர்
7.
அகரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளதை எழுதுக
உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில்
உடுக்கை, உறுமி, தவண்டை, பிடில் ✔
பிடில், தவண்டை, உறுமி, உடுக்கை
உடுக்கை, உறுமி, பிடில், தவண்டை
8.
மருட்கை இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
மருள் ✔
மறு
மருட்டு
மருட்கை
9.
மீ என்பதன் சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு.
வறுமை
வான் ✔
அன்பு
புல்
10.
பிரித்து+எழுதுக. கோட்டோவியம்
கோடு+ஓவியம் ✔
கோட்டு+ஓவியம்
கோட்+டோவியம்
கோடி+ஓவியம்
11.
தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று தமிழ்ப் போற்றப்படுபவர்
அ உ. வோ. சா
ஆறுமுக நாவலர்
சி. வை. தாமோதரனார் ✔
ந. மு. வெங்கடாசாமி
12.
ஓங்கு என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் எது
புறநானூறு
கலித்தொகை
திருக்குறள்
பரிபாடல் ✔
13.
பகுத்தறிவுக் கவிராயர் எனப் போற்றப்படுபவர் யார்
பெரியார்
உடுமலை நாராயண கவி. ✔
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாரதிதாசன்
14.
இராவண காவியம் என்னும் நூலின் ஆசிரியர் யார்
பேரறிஞர் அண்ணா
புலவன் குழந்தை ✔
பாரதிதாசன்
கவிஞர் தமிழ்ஒளி
15.
ஓளடதம் என்னும் சொல்லின் பொருள் என்ன
இனிப்பு
உணவு
மருந்து ✔
உடை
16.
தேன் மழை என்னும் நூலின் ஆசிரியர் யார்
சுரதா ✔
கண்ணதாசன்
மருதகாசி
வாணிதாசன்
17.
புல்லின் இதழ்கள் என்ற உலகப்புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் யார்
வால்ட் விட்மன் ✔
பாப்லோ நெரூ
ஸ்டெஃபான் மல்லார்மே
எர்னஸ்ட் காசிரர்
18.
முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது
செலுத்தினான்
நிறுத்தினான் ✔
வளைத்தான்
முரித்தான்
19.
பொருத்துக. Comphor -1.பொய்க்கதை Chide-2.கலவரம் Chaos-3.சலசலப்பு Canard-4.கற்பூரம்
1 4 2 3
3 1 4 2
2 4 1 3
4 3 2 1 ✔
20.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது..... நூலின் புகழ்பெற்ற தொடர்
திருமந்திரம் ✔
திருவாசகம்
திருக்குறள்
தேம்பாவணி
21.
சந்தி பிழையற்ற வாக்கியத்தை கண்டறிக
பண்டை தமிழ் நாகரிகம் தனி பெரும் நாகரிகம்
பண்டைத் தமிழ் நாகரிகம் தனிப்பெரும் நாகரிகம் ✔
பண்டைத் தமிழ் நாகரிகம் தனிபெரும் நாகரிகம்
பண்டை தமிழ் நாகரிகம் தனிப்பெரும் நாகரிகம்
22.
பினவருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்
செல்க
ஓடு ✔
வாழிய
வாழ்க
23.
பொருத்துக ஒற்றளப்படை-1.குடிதழீஇ செய்யுளிசை அளபெடை-2. அரங்கம் இன்னிசை அளபெடை-3.உழாஅர் சொல்லிசை அளபெடை-4.உடுப்பதூஉம்
2 3 1 4
3 2 4 1
3 2 1 4
2 3 4 1 ✔
24.
கீழ்கண்ட கூற்றை கவனி கூற்று.(A) :யாப்பு என்பது கட்டுதல் என்று பொருள் காரணம் (R) :எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என ஆறும் செய்யுளின் உறுப்புகளாகும்
A மற்றும்R இரண்டும் சரி ✔
A சரி ஆனால்R தவறு
A தவறு ஆனால்R சரி
A மற்றும்R இரண்டும் தவறானவை
25.
து என்னும் சொல்லின் பொருள் என்ன
அரசன்
சிவன்
தட்டு
உணவு ✔
26.
திருக்குறளை திருவள்ளுவர் இயற்றினார்
செய்வினைத் தொடர் ✔
தொடர்நிலைத் தொடர்
செய்தித்தொடர்
கலவைத்தொடர்
27.
கடிகை என்னும் சொல்லின் பொருள் என்ன
கடித்துரைத்தல்
நகை ✔
புன்னகை
உடம்பு
28.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது
காற்று வீசின, மரங்கள் அசைந்தது
தங்கப்பனும் செல்லப்பனும் பள்ளிக்குச் சென்றான்
பறவைகள் பறந்தது, மயில்கள் ஆடியது
மாடு மேய்ந்தது,காடுகள் செழித்தன. ✔
29.
அன்பிலார் எல்லாம் தமக்கு ரியர் அன்புடையார் எண்பும் உரியர் பிறர்க்கு. இக்குறட்பாவில் உள்ள நயத்தைக் சுட்டிக் காட்டுக. 1.அடி எதுகை வந்துள்ளது 2.ஒரூஉ மோனை வந்துள்ளது 3 பொழிப்பு எதுகை வந்துள்ளது 4.ஒரூஉ எதுகை வந்துள்ளது 5.இனை மோனை வந்துள்ளது
1,3,4 மட்டும் சரியானவை
2,3,5 மட்டும் சரியானவை
1,2,4 மட்டும் சரியானவை ✔
3,4,5 மட்டும் சரியானவை
30.
பலரில் இதில் இல் என்னும் சொல் குறிப்பது
இல்லை
இன்று
வீடு ✔
காடு
31.
எழுத்து என்பது எவ்வகை பெயர் என தேர்க
கிளைப் பெயர்
இடுகுறிப் பெயர்
குடிப்பெயர்
காரணப் பெயர் ✔
32.
நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை
கொண்டு, உடன்
பொருட்டு, நிமித்தம் ✔
இருந்து, நின்று
உடைய
33.
தமிழ் ..... ஒசை மொழி
செப்பல்
தூங்கல்
மெல் ✔
துள்ளல்
34.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் எண்பும் உரியர் பிறர்க்கு இக்குறள் உணர்த்தும் அன்பிலார் செயல் யாது.
பிறர்க்கு எல்லாம் கொடுத்தல்
பிறர் துன்பம் கண்டு கண்ணீர் விடுதல்
எல்லாம் தமக்குரியதாக்குதல் ✔
இவை அனைத்தும்
35.
பாரதியார் வெளியிட்ட மாத இதழ் பெயர் என்ன?
பாலபாரத்
விவேக பானு
சுதேசமித்திரன்
சக்ரவர்த்தினி ✔
36.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே..............எல்லாம் மழை
உடுப்பதூஉம்
எடுப்பதூஉம் ✔
கடுப்பதூஉம்
மடுப்பதூஉம்
37.
விண் இன்று பொய்பபின் விரிநீர் வியனுலகத்து உள் நின்று உடற்றும்… .. … .. …
பசி ✔
நட்பு
தாகம்
பஞ்சம்
38.
பொருளில் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்... இக்குறட்பாவில் பயின்று வரும்அணி
சொற்பொருள் பின்வரு நிலையணி
பொருள் பின்வரு நிலையணி
உவமையணி
சொற் பின்வரு நிலையணி ✔
39.
அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை..
38 ✔
36
25
70
40.
பொருந்தும் இணையைக் கண்டறிக..
சிறுபஞ்சமூலம்- 97 வெண்பாக்கள் ✔
இனியவைநாற்பது- 40 வெண்பாக்கள்
இனியவைநாற்பது. - 40 வெண்பாக்கள்
ஆத்திசூடி-100 வெண்பாக்கள்
41.
உத்திரவேதம் என்ற சிறப்புக்குரிய நூல் எது
திருக்குறள் ✔
திருவருட்பா
திருவாசகம்
நாலடி நானூறு
42.
கீழ்வரும் எந் நூல்களைத் “தமிழுக்கு கதி” என்பர்
திருக்குறள், நாலடியார்
கம்பராமாயணம் திருக்குறள் ✔
தொல்காப்பியம், நன்னூல்
திருக்குறள், திருவாசகம்
43.
கம்பரின் எந்தப் படலம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை
குகப்படலம்
மாயாசனகப் படலம் ✔
வாலி விதைப்படலம்
இவற்றில் எதுவுமில்லை
44.
அகநானூற்றைத் தொகுத்தவர்
மதுரை உப்பூரிகுடிகிழார்
பூதஞ்சேந்தனார்
உருத்திரசன்மனார் ✔
காரியாகன்
45.
நெய்தலுக்குரிய உரிப்பொருள் எது
இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ✔
இருந்தலும் இருத்தல் நிமித்தமும்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
கூடலும் கூடல் நிமித்தமும்
46.
மண்ணுயிரிக்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையளும் அல்லது கண்டதில்லை எனும் பாடலை பாடியவர் யார்
சீத்தலைச் சாத்தானார் ✔
இளங்கோவடிகள்
மாணிக்கவாசகர்
திருமூலர்
47.
பொருத்துக. பெருமாள் திருமொழி- 1.குலசேகராழ்வார் திருமாலை-2 தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருநெடுஞ் தாண்டகம்-3திருமங்கை ஆழ்வார் திருப்பாவை -4.ஆண்டாள்
2 4 3 1
4 1 2 3
1 3 2 4
1 2 3 4 ✔
48.
உத்தம சோழப் பல்லவர் எனப் போற்றப்படுபவர் யார்
இளங்கோவடிகள்
சேக்கிழார் ✔
குமரகுருபரர்
பரணர்
49.
ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பெயர்
உலா
தூது
புராணம்
பரணி ✔
50.
கவிச்சக்கரவர்த்தி என்று சிறப்பு பெயர் பெற்றவர் யார்
கபிலர்
நக்கீரர்
ஒட்டக்கூத்தர் ✔
இளங்கோவடிகள்
51.
பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும்- என்று கூறியவர்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர் ✔
கவிமணி
கண்ணதாசன்
52.
என்கடன் பணி செய்து கிடப்பதே என்றவர்
அப்பர் ✔
ஞானசம்பந்தர்
மாணிக்கவாசகர்
சுந்தரர்
53.
திராவிட சிசு என்று அழைக்கப்பட்டவர்
திருஞானசம்பந்தர் ✔
சுந்தரர்
திருநாவுக்கரசர்
உமறுப்புலவர்
54.
ஆழ்வார்கள் திருமாலை போற்றிய பாசுரங்களின் தொகுப்பு
தேவாரம்
நாலாயிர திவ்விய பிரபந்தம் ✔
திருவாசகம்
திருப்பதிகம்
55.
கடல் நீர் ஆவியாகி மேகமாகும் பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் இந்த அறிவியல் செய்தி இடம் பெறும் நூல் எது
முல்லைப்பாட்டு
திருக்குறள்
திருக்குறள்
மேற்கண்ட அனைத்தும் ✔
56.
உலகம் உண்ண உண் உடுக்க உடுப்பாய்”யார் கூறியது
பாரதிதாசன் ✔
சீத்தலைச் சாத்தனார்
இளங்கோவடிகள்
பாண்டியன் அறிவுடை நம்பி
57.
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு எனக் கூறும் நூல்
சிலப்பதிகாரம்
தொல்காப்பியம் ✔
புறநானூறு
அகநானூறு
58.
புனையா ஒவியம் கடுப்பப் புனைவில்” இடம் பெறும் நூல்
மணிமேகலை
நெடுநல்வாடை ✔
சிலப்பதிகாரம்
குறுந்தொகை
59.
ராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி புரட்சிப்பொறி உண்மையை உணர்ந்து வைக்கும் உன்னத நூல் எனக் கூறியவர்.
பெரியார்
அண்ணாதுரை ✔
பிச்சமூர்த்தி
கண்ணதாசன்
60.
சரியற்ற இணை எது.
1, 2,3 ம் முறைகள் -திருஞானசம்பந்தர்
8ம் திருமுறை- சுந்தரர் ✔
10 ம் திருமுறை- திருமூலர்
12 ம் திருமுறை-சேக்கிழார்
61.
பரணிக்கோர் செயங்கொண்டார் எனப் பாடியவர்
ஒட்டக்கூத்தர்
புலவர் புகழேந்தி
பலபட்டடை சொக்கநாதப் புலவர் ✔
கருணாகரத் தொண்டைமான்
62.
தேசம் உடுத்திய நூலாடை எனக் குறிப்பிடும் நூல் எது
திருவாசகம்
திருக்குறள் ✔
திரிகடுகம்
கம்பராமாயணம்
63.
இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று தன் கல்லறையில் எழுத சொன்னவர் யார்
கால்டுவெல்
ஜி. யு. போப் ✔
வீரமாமுனிவர்
ஷெல்லி
64.
பண்ணோடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது
நாடகக்கலை
நாட்டியக்கலை
இசைக்கலை ✔
ஓவியக்கலை
65.
ஏர்முனைக்கு நேரிங்கே எதுவும் இல்லே ! என்று நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! என்ற பாடலின் ஆசிரியர் யார்
பட்டினத்தார்
மருதகாசி ✔
உடுமலை நாராயண கவி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
66.
எட்டுத்தொகை நூல்களில் நாடகப் பாங்கில் அமைந்துள்ள நூலினை தேர்ந்தெடுத்து எழுதுக
குறுந்தொகை
அகநானூறு
கலித்தொகை ✔
ஐங்குறுநூறு
67.
திருவிளையாடற்புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
மதுரை காண்டம்
கூடற்காண்டம்
வஞ்சிக் காண்டம் ✔
திருவாலவாய்க் காண்டம்
68.
இந்திய நூலகத் தந்தை எனப் பேற்றப்படுவர்
சி. இராமநாதன்
சி. இரா. அரங்கநாதன் ✔
ப. கமலநாதன்
வீரமாமுனிவர்
69.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கிய அடியவர் யார்
வள்ளலார் ✔
திருமூலர்
திருஞானசம்பந்தர்
தாயுமானவர்
70.
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் எனும் நூலை எழுதியவர் யார்?
நாமக்கல் கவிஞர்
திரு. வி. க ✔
சுத்தானந்த பாரதி
ஈரோடு தமிழன்பன்
71.
கையாந்தகரை என்ற பெயரில் அழைக்கப்படும் மூலிகை எது?
கரிசலாங்கண்ணி ✔
துளசி
அகத்தி
வேம்பு
72.
முந்நீர் வழக்கம் என்ற தொடரை முதன் முதலாக குறிப்பிடும் நூல் எது?
சிலப்பதிகாரம்
நன்னூல்
மணிமேகலை
தொல்காப்பியம் ✔
73.
மனித நாகரிக தொட்டில் எனப்படுவது… .. …
இலெமூரியா ✔
நாவந்தீவு
குமரிக்கோடு
பரதக் கண்டம்
74.
தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று அழைக்கப்படுபவர்
ராணி மங்கம்மாள்
மூவலூர் இராமாமிர்தம் ✔
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்
தில்லையாடி வள்ளியம்மை
75.
ஔவை இல்லம் அமைத்தவர் யார்?
ராணி மங்கம்மாள்
மூவலூர் இராமாமிர்தம்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ✔
தில்லையாடி வள்ளியம்மை
76.
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்ற பாடலடி இடம்பெறும் நூல்
திருமந்திரம்
திருவாசகம் ✔
தேவாரம்
நாலடியார்
77.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்று பாடியவர் யார்?
திருமூலர் ✔
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
மாணிக்கவாசகர்
78.
ஜார்ஜ் எல் ஹார்ட் எந்நாட்டுப் பேராசிரியர்
இங்கிலாந்து
அமெரிக்கா ✔
ரஷ்யா
சீனா
79.
திரைகடலோடியம் திரவியம் தேடு என்று பாடியவர் யார்
கபிலர்
ஔவையார் ✔
திருவள்ளுவர்
கம்பர்
80.
யாருடைய பிறந்த நாளை தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம்?
இராதாகிருஷ்ணன்
பெரியார்
காமராஜர் ✔
அறிஞர் அண்ணா
81.
தமிழ் அகராதியின் தந்தை எனப்படுபவர் யார்
வீரமாமுனிவர் ✔
கால்டுவெல்
ஜி. யூ. போப்
பரிதிமாற் கலைஞர்
82.
பாவலரேறு நடத்திய சிறுவர் இதழ் எது?
தமிழ் நிலம்
தமிழ் சிட்டு ✔
தென்றல்
தென்மொழி
83.
உ. வே. சாமிநாதர் அவர்களின் நினைவில்லம் அமைந்துள்ள இடம்
மருவூர்
பெசண்ட் நகர்
வேதபுரி
உத்தமதானபுரம் ✔
84.
நவசக்தி இதழை நடத்தியவர்
பாரதி
பாரதிதாசன்
கண்ணதாசன்
திரு. வி. க ✔
85.
தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
மு. வரதராசனார்
மறைமலையடிகள் ✔
பரிதிமாற் கலைஞர்
உ. வே. சா
86.
சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் எத்தனை
13,470
14,535
15.,576
26,350 ✔
87.
திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?
குமரிலப்பட்டர் ✔
கால்டுவெல்
அகத்தியர்
தொல்காப்பியர்
88.
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் என்று அழைக்கப்படுபவர் யார்?
ஜெயகாந்தன்
கல்கி ✔
புதுமைப்பித்தன்
ஆர். சூடாமணி
89.
தமிழ்நாடக வரலாற்றில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது
கதரின் வெற்றி ✔
சுதேச கீதம்
சுதந்திரம்
சுதந்திர நாடு
90.
பொருத்துக 
மகேந்திர வர்மன்-
1. இராசராசேச்சுவர நாடகம் 
இராசராச சோழன்-
2. மத்தவிலாசம் 
நாயக்க மன்னர்கள்-
3. இராமநாடகம் 
அருணாச்சல கவிராயர்-
4. குறிஞ்சி நாடகம்
3,1,4,2
2,1,4,3 ✔
4,1,2,3
1,2,3,4
91.
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர் யார்
ஆனந்தரங்கர்
சாமுவேல். பெப்பிசு ✔
கால்டுவெல்
ஆபிரகாம்
92.
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் என்ன?
குமாரசுவாமி
சுப்பிரமணியம்
ஜெகதீசன் ✔
பாலகுமாரன்
93.
பொருத்துக 
சி. மணி- 
1. ஆங்கில இலக்கிய நூற்பரிசு 
கவிஞர் சிற்பி-
2. தமிழ் அன்னை விருது 
அப்துல் ரகுமான்-
3. பாவேந்தர் விருது 
சாலை இளந்திரையன்-
4. சிற்பியின் இலக்கிய விருது
2,4,3,1
1,3,2,4
4,1,2,3 ✔
1,2,3,4
94.
கண்ணதாசனின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது
அர்த்தமுள்ள இந்துமதம்
இயேசு காவியம்
ஆட்டனத்தி ஆதிமந்தி
சேரமான் காதலி ✔
95.
உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
சிற்பி
சுரதா ✔
மீரா
மு. மேத்தா
96.
பாரதிதாசன் எந்த நூலுக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது
குடும்ப விளக்கு
கண்ணகி புரட்சி காப்பியம்
பாண்டியன் பரிசு
பிசிராந்தையார் நாடகம் ✔
97.
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்கொரு குணமுண்டு- என்று கூறியவர்
நாமக்கல் கவிஞர் ✔
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
98.
உமர் கய்யாம் பாடல்களை பாடியவர்
நாமக்கல் கவிஞர்
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி ✔
99.
தேசியக் கவி என்று போற்றப்படுபவர் யார்
பாரதிதாசன்
பாரதியார் ✔
நாமக்கல் கவிஞர்
கவிமணி
100.
வான் தவழும் வெண்மேக தாடி ஆடும் வளமான சிந்தனைக்கு ஆட்டம் இல்லை “ எனப் பெரியாரை புகழ்ந்து பாடியவர் யார்?
பாரதிதாசன் ✔
வாணிதாசன்
கண்ணதாசன்
நாமக்கல் கவிஞர்.


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY