Ads Right Header

Food Corporation of India - Manager தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?




உங்களுக்கு மத்திய அரசு பணியாளராக விருப்பமா?

இதோ ஓர் வாய்ப்பு!

Food Corporation of India (FCI) மேலாளர் (Manager) பதவிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வுக்கு இணைய வழி விண்ணப்பங்களை (On-line Application) வரவேற்கிறது.

சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

யார் விண்ணப்பிக்கலாம்?

கல்வி தகுதி:

ஏதேனும் ஓர் பாடத்தில் இளங்கலை பட்டம் பயின்று, குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 28 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்

குறிப்பு:

நீங்கள் பட்டியலினத்தவர்/பழங்குடியினராய் இருந்தால் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராய் இருந்தால் 31 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

FCI-யின் அதிகார பூர்வ இணையத்தளத்திற்கு சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.800/-

குறிப்பு:
நீங்கள் பெண்பாலினத்தவர்/பட்டியலினத்தவர்/பழங்குடியினராய் இருந்தால் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை

நீங்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை

தேர்வு முறை: 

1. ஆன்லைன் தேர்வு 
2. நேர்முகத் தேர்வு

இன்னும் என்ன யோசனை?

இன்றே உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பியுங்கள்!

முயற்சி திருவினையாக்கும்!

முக்கிய விவரங்கள்:

அதிகாரபூர்வ அறிவிப்பு: 
https://www.recruitmentfci.in/assets/current_category_II/Advt.%20No.02-2022-FCI%20Category-II.pdf

அதிகாரபூர்வ இணையதளம்:
https://www.recruitmentfci.in/current_category_two_main_page.php?lang=en

ஆன்லைன் விண்ணப்ப படிவம்:
https://ibpsonline.ibps.in/fcimtmaug22/

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.09.2022


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY