Ads Right Header

இனி என்ன செய்யும் TNPSC ?

 


தமிழக அரசின் பெண்களுக்கான இட ஒதுக்கீடு முறை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு வழங்கிய நிலையில் TNPSC இவ்வளவு காலமாக அதற்கு முட்டு கொடுத்து வந்ததும் அது முற்றிலும் தவறு என்று வெட்ட வெளிச்சாமன நிலையில் TNPSC இனி இதை தான் செய்யும்..

1. இந்த தீர்ப்புக்கு அரசின் கருத்து என்ன என்று மனித வள நிர்வாகத் (Human Resources Management) துறைக்கு கருத்து கேட்கும்.. 

2. இவ்வளவு காலமாக நடந்த தேர்வில் துணை ஆட்சியர்,DSP முதல் VAO வரை தேர்ந்தெடுத்த முறையே தவறு என்பதால் இதை அரசு கவனமாக பரிசீலனை செய்யும்.. 

3.ஏற்கனவே அவர்கள் பணியில் சேர்ந்து விட்டதால் அதை ரத்து செய்ய மாட்டோம் என்று தீர்ப்பே  கூறிவிட்டதால் அதை பற்றி அரசுக்கு கவலை இல்லை. ஆனால் மேற்கொண்டு மேல் முறையீடு செய்தால் அதே சென்னை உயர்நீதிமன்றம் அல்லது  உச்சநீதிமன்றம் தான் செல்ல வேண்டும். 

4.இந்த தீர்ப்பே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி இருப்பதால் அதே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது வீண் என்று தான் சட்ட ஆலோசகர்கள் அரசுக்கு கூறுவார்கள். 

5. அப்படியே தொடருங்கள் பார்த்து கொள்ளலாம் என்று அரசு கூறுவதற்கும் வாய்ப்பில்லை. ஏனெனில் அதே தவறான முறையை பின்பற்றினால் அந்த தேர்வு முறை அனைத்தும் ரத்து செய்யப்படும் என தீர்ப்பில் கூறி இருக்கிறார்கள்.அது மேலும் பல சட்ட சிக்கல்கள் க்கு கொண்டு விட்டுவிடும். எனவே இங்கேயும் கதவு அடைக்கப்பட்டு விட்டது. 

6.எனவே அரசின் முன்பு இருக்கும் ஒரே தீர்வு..தீர்ப்பில் கூறிய படி தமிழ்நாடு அரசு பணியாளர் பணி நடைமுறை விதிகளை மாற்றுவது தான்..

1970 கால கட்டத்தில் இந்த இட ஒதுக்கீடு நடைமுறை சரியானதாக இருந்து இருக்கலாம்.. ஆனால் 2022 ல் இந்த இட ஒதுக்கீடு முறை அனாவசியமானது. சமூக நீதிக்கு முரணானது. 

எனவே பழைய விதிகளை CUT COPY PASTE செய்யாமல் சட்ட நிபுணர்கள் அரசுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

எனவே TNPSC யும் அரசின் கருத்துக்களை கேட்காமல் இனி வரும் தேர்வு முடிவுகளை வெளியிட வாய்ப்பில்லை..

நேரத்தை வீணடிக்காமல் பழைய பஞ்சாங்க விதிகளை பிடித்து கொண்டு தொங்காமல் நியாயமான நேர்மையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி உண்மையான சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY