Ads Right Header

TNPSC GROUP - II MAINS - 2022. தேர்வில் வெற்றி பெற பயிற்சி வினாக்கள்!


TNPSC GROUP - II MAINS - 2016 
அசல் வினாத்தாள் 

1. வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலும் , விரிவாக விடையளிக்கும் வகையிலும் உள்ளது . 

2. இத்தேர்வை பொறுத்தவரை அழகாக எழுதுவதற்கோ , பிழையில்லாமல் எழுதியதற்காகவோ தனியாக மதிப்பெண்கள் ஒதுக்கப்படவில்லை . மொத்த மதிப்பெண்கள் : 300 

பிரிவு - அ ( மிகச்சிறிய அளவில் விடையளிக்கும் வினாவகை ) ஒவ்வொன்றிற்கும் 30 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும் . 

ஒவ்வொரு வினாவிற்கும் 3 மதிப்பெண்கள் . 
( 30 × 3 = 90 ) 

கொடுக்கப்பட்டுள்ள 35 வினாக்களில் எவையேனும் 30 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் . 

1. ஜெட் - உந்தல் ஆகாய ஊர்தி வளிமண்டல பகுதியில் மட்டுமே வேலை செய்யும் . ஏன் ? 
2. நீரானது கண்ணாடி தகடுடன் ஒட்டுவது போன்று பாதரசம் ஏன் ஒட்டுவதில்லை ? 
3. கண்களின் பொதுவான குறைபாடுகளை எழுதுக . மேலும் அவற்றை நிவர்த்தி செய்யும் வில்லைகளையும் கூறுக . 
4. உலோகவியியலில் பார்க்ஸ் முறையை பற்றி குறிப்பு எழுது . 
5. லூயி அமிலம் மற்றும் காரம் வரையறு . 6. செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் பாகம் எது ? 
அது அவ்வாறு அழைக்கப்படும் 
காரணம் யாது ? 
7 . “ இன்டிரான்ஸ் ” -இன் உயிரியல் முக்கியத்துவம் என்ன ? 
8. வறண்ட நிலத் தாவரங்கள் தங்களை எவ்வாறு வறட்சிக்கு தகவமைத்துக் கொள்கின்றன ? 
9. இதயத்தில் சைனு - ஆரிக்குலர் கணு எங்கு உள்ளது ? அது இதயத்தின் இயக்கி என்று ஏன் அழைக்கப்படுகிறது ? 
10. மனிதனின் இரத்தத் திசுவினை வகைப்படுத்துக . 
11. B2B என்றால் என்ன ? 
12. கணினி மென்பொருள் என்றால் என்ன ? சுருக்கமாக எழுதுக . 
13. சிறுபான்மையினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரதம மந்திரியின் புதிய 15 அம்ச திட்டத்தின் ஏதேனும் மூன்று குறிக்கோள்களை குறிப்பிடுக .
14. சேன்ட் கல்யாணி திட்டத்தின் குறிக்கோள் யாது ? 
15. உணர்வுபூர்வமான வகை என்றால் என்ன ? 
16.சுவவாவ்லம்பன் அபியான் ' 
( சுயநம்பிக்கை இயக்கம் ) - என்பதின் குறிக்கோள்கள் யாவை ? 
17. உணவு பாதுகாப்பு உரிமைச் சட்டம் 2013 - இன் முக்கிய சிறப்பியல்புகள் யாவை ? 
18. ' மித்ரா செயலியின் முக்கியத்துவத்தை பற்றி விவாதிக்க . 
19. E- அரசின் ஏதேனும் மூன்று பயன்களைப் பட்டியலிடுக . 
20. தமிழ்நாட்டில் பல்வேறு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நேரடியாக பயன் அடைபவர்கள் யாவர் ? 
21. மிதவைக் கடன் என்றால் என்ன ? 
22. தமிழ்நாட்டில் செயல்படும் முக்கிய பெரிய அளவிலான தொழிற்சாலைகளின் பெயர்களை குறிப்பிடவும் . 
23.2015-16 இல் சிவகங்கை மாவட்டத்தின் ' பள்ளிச்சந்தைத் திடல் செய்திகளில் வெளிவந்தது ஏன் ? 
24.தமிழ்நாட்டின் ( THAI ) திட்டம் கோடிட்டு காட்டு . 
25. டாக்டர் சாரதா மேனன் என்பவர் யார் ? சமீபத்தில் இவர் பெற்ற அங்கீகாரம் என்ன ? 
26. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றி எழுதுக . 
27. கெப்ளர் 452 பி என்றால் என்ன ? 
28. ' பரத்வானி ' போர்டலின் அம்சங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக . 
29. அறிவியல் அறிஞர்களுக்காக பாரதப் பிரதமரால் கூறப்பட்ட 5Es என்னென்ன ? 30. இருதயநாத் மங்கேஷ்கர் விருது 2016 ஐப் பெற்றது யார் ? எதற்காக இது வழங்கப்பட்டது ? 
31. ஏப்ரல் 2016 - இல் குர்கான் பெயர் மாற்றம் பெற்றது குறித்து எழுதுக . 
32. கீழ்க்கண்ட மூன்றினை விரிவுப்படுத்துக : ( அ ) AERB NPCIL 
33.2016 - ஆம் ஆண்டு மத்திய அரசால் துவங்கப்பட்ட " சூர்ய ஜோதி ” திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாக விவரி . 34. ' டோகிரி ' என்பது என்ன ? 
35. ' உமாங்க் பற்றி சிறுகுறிப்பு எழுதுக . 

பிரிவு - ஆ ( 15 × 8 = 120 )
( சுருக்கமாக விடையளிக்கும் 
வினாவகை ) 

1. ஒவ்வொன்றிற்கும் 120 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும் . 
2. ஒவ்வொரு வினாவிற்கும் 8 மதிப்பெண்கள் . 
3. கொடுக்கப்பட்டுள்ள 18 வினாக்களில் எவையேனும் 15 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

36. மின்மாற்றியில் ஏற்படும் ஆற்றல் இழப்புகளை விளக்குக . 
37. கீழ்க்கண்ட கார்பைடுகளை விளக்கி உதாரணம் தருக . 
( அ ) அசிட்டிலைடு ( ஆ ) மீத்தனைடு 
( இ ) அலிலைடு ( ஈ ) கலப்பின கார்பைடு . 38. " உயிர்புவி இரசாயன சுழற்சி ” என்றால் என்ன ? கார்பன் சுழற்சியை விளக்குக . 
39. ' உயிர் பல்லுயிர் தன்மைமிக்க இடம் ' என்றால் என்ன ? அவற்றை பாதுகாக்கும் முறைகள் யாவை ? 
40. போதைக்கு அடிமையாதலை சமாளிக்க உளவியல் சிகிச்சை மற்றும் ‘ ஆற்றுப்படுத்துதல் ' முறையின் பங்களிப்பை விளக்குக . 
41. இயந்திர மனிதவியல் என்றால் என்ன ? அதன் பயன்பாடுகளை பட்டியலிடவும் . 
42. தொலையுணர் ஆய்வில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகை பண்பறி திறன்களை விளக்குக . 
43. சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசால் வழங்கப்படும் வெல்வேய உதவித் தொகை திட்டங்களை விளக்குக . 44. பாலின சமத்துவம் என்றால் என்ன ? பாலின சமத்துவத்தை எவ்வாறு அடைவது ? 
45. இந்தியாவில் இனவாதத்தை கட்டுப்படுத்துவதில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவின் பங்கினை மதிப்பிடுக . 
46. பள்ளிகளில் செய்தி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் தமிழக அரசில முயற்சிகளை விளக்குக . 
47. தமிழ்நாடு அரசு , சுகாதார துறையின் “ பார்வை 2023 " என்பது பற்றி குறிப்பு எழுதுக . 
48. இந்தியா ஜெர்மனி இடையே கையெழுத்தான நமாமி கங்கை திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை எழுது 
49. தமிழ்நாடு அரசின் சிமெண்ட் மானியத் திட்டம் பற்றி எழுதுக . 
50. ஏப்ரல் 5 , 2016 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட காட்டிமான் விரைவு வண்டி பற்றி எழுதுக . 
51. தமிழக சட்டமன்றத் தேர்தல் , 2016 - இல் நோட்டாவின் பங்கினை விவாதி . 
52.2016 - இல் MOEFCC அறிவித்த e- கழிவு மேலாண்மை சட்டத்தின் முக்கியத்துவத்தை பட்டியலிடுக . 
53.இந்தியாவில் முதல் கடற்சார் உச்சி மாநாடு எங்கு , எப்போது நடைபெற்றது ? அதில் விவாதிக்கப்பட்ட கருப்பொருள் மற்றும் திட்டங்கள் பற்றி விவாதி .

பிரிவு - இ 
( விரிவாக விடையளிக்கும் வினாவகை ) 1. ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும் . 
2. ஒவ்வொரு வினாவிற்கும் 15 மதிப்பெண்கள் . 
3. கொடுக்கப்பட்டுள்ள 3 வினாக்களில் எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 

54. போலியோமைலிட்டிஸ் உண்டாக்கும் கிருமி , பரவும் முறை , அறிகுறிகள் மற்றும் தவிர்க்கும் முறை பற்றி விளக்குக
55. மனித உரிமைகள் பிரச்சனை தொடர்பாக , ஐக்கிய நாடுகளின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் பங்கு பணியினை ஆராய்க.
56. 2016 - இல் மூன்றாவது புலி பாதுகாப்புக்கான ஆசியா நாடுகளின் அமைச்சக கூட்டத்தின் முடிவுகள் என்ன ? 

பிரிவு - ஈ 
( கட்டுரை வினாவகை ) 
1. 500 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும் . 
2. ஒவ்வொரு வினாவிற்கும் 
30 மதிப்பெண்கள். 
3. கொடுக்கப்பட்டுள்ள 4 வினாக்களில் எவையேனும் 2 வினாக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வினாவை ஒவ்வொரு பிரிவிலிருந்து தேர்ந்தெடுத்து விடையளிக்கவும் . 

PART - A 
57. இந்தியாவில் பெண்களின் நிலை உயர உதவும் அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் அரசு கொள்கைகளை பற்றி விளக்குக . 

அல்லது 

58 . கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் நாட்டில் மின்துறை எதிர்கொள்ளும் சவால்களை விவரி . 

PART -B 
59. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் பற்றி விவரிக்கவும் . 

அல்லது 

60. தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ( SEZs ) பற்றி சிறப்பு குறிப்புடன் ஒரு கட்டுரை வரைக .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY