Ads Right Header

Box Questions - ஆறாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்!


6 ஆம் வகுப்பு

முதல் பருவம்

1 . அளவீடுகள்

1 . பூமியின் பரப்பில் எடை என்பது நிறைக்கு நேர்தகவில் இருக்கும் . பயியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு என்ற போதிலும் இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும் . ஆனால் எடை குறையும் .

2 . நிலவில் ஈர்ப்புவிசை புவியை போல ஆறில் ஒரு பங்கு தான் . ஆகவே நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில் ஆறில் ஒரு பங்கு ஆகும் .

3 . முற்காலத்தில் மக்கள் பகல் நேரத்தைக் கணக்கிட , மணல் கடிகாரம் மற்றும் சூரியக்கடிகாரத்தைப் பயன்படுத்தி நேரத்தை அளவிட்டனர் . தரையில் நடப்பட்ட ஒரு குச்சியின் நிழலினைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட முடியும்.

4 . ஒரு சிறிய துளை உள்ள பாத்திரத்தைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டனர் . நீர் நிரம்பிய ஒரு பெரிய கலனில் , துளையுள்ள இப்பாத்திரத்தை வைத்து அது மூழ்கும் நேரத்தைக் கணக்கிட்டனர் . பின் இதளைக் கணக்கிடும் கருவியாகப் பயன்படுத்தினர் . மேற்கண்ட கடிகாரங்கள் நேரத்தைத் தோராயமாக அளவிட உதவின .

5 . நவீன காலத்தில் மின்னணு கடிகாரங்கள் , நிறுத்துக் கடிகாரம் போன்ற உபகரணங்கள் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகின்றன.

6 . ஓடோமீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும் .

7 . மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் , 1790ல் ஃபிரெஞ்சுக்காரர்களால் உருவாக்கப்ட்டது .

8 . நீளத்தை அளக்கத் தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் , பதினாநாம் ( 16 ) நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் என்ற அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது .

9 . பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான ஒரு படித்தரமீட்டர் கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது . இந்த மீட்டர் கம்பியின் நகல் ஒன்று டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது .

10 . 1 கிலோகிராம் என்பது ஃபிரான்ஸில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேர எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால் 1839ல் நிறுவப்பட்ட , பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையால் ஆன ஒரு உலோக தண்டின் நிறைக்கு சமம் .

6 ஆம் வகுப்பு

முதல் பருவம்

2 . விசையும் இயக்கமும்

1 . இந்தியாவின் பழங்கால வானியலாளர் ஆரிய பட்டா , எவ்வாறு நீங்கள் ஆற்றில் ஒரு படகில் செல்லும் போது ஆற்றின் கரையானது உங்களுக்குப் பின்புறம் எதிர்த்திசையில் செல்வது போலத் தோன்றுகிறதோ , அதுபோலவே வானில் உள்ள நட்சத்திரங்களை நாம் காணும்போது அது கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாகத் தோன்றுவதால் , நிச்சயம்  நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகத்தானே சுற்ற வேண்டும் என்று அனுமானித்தார் .

2 . பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது.

3 . நேர்க்கோட்டு இயக்கம் - பொருளானாது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும் . ( எ . கா ) நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன் , தானாக கீழே விழும் பொருள்

4 . தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் ( எ . கா . பந்தினை வீசுதல் )

5 . வட்டப்பாதை இயக்கம் - ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கும் ( எ . கா . கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல்.

6 . தற்சுழற்சிய இயக்கம் - ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் ( எ . கா , பம்பரத்தின் இயக்கம் )

7 . அலைவு இயக்கம் - ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகர்தல்
எ . கா . தனிமாசல்

8 . ஒழுங்கற்ற இயக்கம் - ஒரு சயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்

9 . அதிவேகத்தில் இயங்கும் அலைவு இயக்கம் - அலைவானது அதிவேகமாக நடைபெறும் போது நாம் அவ்வியக்கத்தினை அதிர்வுறுதல் என அழைக்கிறோம் .

10 . அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும் , ஆனால் அனைத்துக் கால ஒழுங்கு இயக்கங்களும் அலைவு இயக்கமாகக் காணப்படாது .

11 . ஓரலகு காலத்தில் ஒரு பொருள் எவ்வளவு தூரம் கடந்தது என்று கூறுவதே சராசரி வேகமாகும் . அதாவது ஒரு பொருளானது d தொலைவினை ( கால இடைவெளியில் கடந்தால் அதன் சராசரி வேகம் ( s ) = ( கடந்த தொலைவு ( d ) / ( எடுத்துக்கொண்ட காலம் ( 1 ) = dT

12 . தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக 112 கிமீ / மணி என்ற வேகத்தில் ஓடும் மிக வேகமான விலங்காகும் .

13 . குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை நாம் சீரான இயக்கம் என்றும் , மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை நாம் சீரற்ற இயக்கம் என்றும் கூறுகிறோம் .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY