Ads Right Header

New Book 6th to 12th History Important Notes! (125 Pages pdf)


குப்தர்கள்

மௌரியப் பேரரசிற்குப் பின்னர் , பல சிறு அரசுகள் தோன்றியவாறும் வீழ்ந்தவாறும் இருந்தன . குப்தர் அரசுதான் ஒரு பெரும் சக்தியாக உருவாகி , துணைக்கண்டத்தின் பெரிய பகுதியை அரசியல்ரீதியாக ஒன்றிணைத்தது . மத்தியில் ஒரு வலுவான அரசாக வலுப்பெற்றதால் , பல அரசுகள் அதன் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன .

இக்காலகட்டத்தில் சமஸ்கிருதத்தில் பல பெரிய படைப்புகள் தோன்றின . நுண்கலை , சிற்பம் , கட்டிடக்கலை ஆகியவற்றில் பண்பாட்டு முதிர்ச்சி காணப்பட்டது . குப்தர்காலம் பொற்காலம் இந்தியா வரலாற்றில் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிறது .

இலக்கியச் சான்றுகள் : நாரதர் , விஷ்ணு , பிருகஸ்பதி , காத்யாயனர் ஸ்மிருதிகள் . அரசருக்குக் கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதிசாரம் என்ற தரும் சாத்திரம் ( பொ.ஆ .400 ) . விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம் , முத்ராராட்சகம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன .

காளிதாசரின் படைப்புகள் , இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப் பயணி பாஹியான் குறிப்புகள் .

கல்வெட்டுச் சான்றுகள் : மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு- முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது . அலகபாத்தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் ஆட்சி அவரது ஆளுமை , சாதனைகள் ஆகியவற்றை இது விளக்குகிறது . இதனைப் பொறித்தவர் ஹரிசேனர் . இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது .

நாணய ஆதாரங்கள் : குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன . இந்த நாணயங்கள் குப்த அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன . தோற்றம் குப்த வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரான முதலாம் சந்திர குப்தர் குமாரதேவி என்ற லிச்சாவி இளவரசியை மணந்தார் .

லிச்சாவி என்பது வடக்கு பிகாரில் இருந்த பழமையான கணசங்கமாகும் . அது கங்ககைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதியாகும் . சந்திர குப்தரின் ஒப்பற்ற புதல்வரான் சமுத்திரகுப்தரின் பிரயாகை
( அலகாபாத் ) துாண் கல்வெட்டின்படி , அவர் பிரயாகைக்கு மேற்கே மதுரா வரையுள்ள செழிப்பான நிலங்கள் முழுவதையும் கைப்பற்றினார் .

கலிங்கம் வழியாகத் தெற்கே , பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரம் வரை வெற்றிகரமான படையெடுப்பை நடத்தினார் . மகதம் , அலகாபாத் , அவுத் ஆகியவற்றை குப்தர்களின் பகுதிகளாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன .

குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர்
( பொ.ஆ. 240-280 ) . இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜர்
( பொ.ஆ.280-319 ) ஆட்சிக்கு வந்தார் . கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தர் , கடோத்கஜர் ஆகிய இருவரும் மகாராஜா என்று குறிக்கப்படுகிறார்கள் . கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ. 319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார் . இவர் குப்த பேரரசின் முதல் பேரரராகக் கருதப்படுகிறார் .
சந்திரப்குப்தர் மகாராஜா - ஆதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார் .

முழுமையாகக் காண
Click here to view pdf

Whatsappல் இணைந்திட
Click here to join tnkural.com
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY