Ads Right Header

Jan 2021 CA & Gr4 Model QA.

 

Telegram link
Touch Here

உள்நாட்டு பொம்மைகளின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் மத்திய மகளிர் மற்றம் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியும் ' Toycathon 2021 ' எனும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் . 

நடப்பு நிதியாண்டில் , இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 9.6 சதவீதமாக இருக்கும் என , உலக வங்கி தெரிவித்துள்ளது . மேலும் , 2021 ம் ஆண்டில் வளர்ச்சி 5.4 சதவீதமாக உயரும் என்றும் கணித்துள்ளது . 

சுதான்சு துலியா கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் , ஹேமா கோஹ்லி தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் ( தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ) , பங்கஜ் மித்தல் ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் , முரளிதர் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் , ஏ.கே.கோஸ்வாமி ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் . 

ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையை கிளேர் போலோசாக் பெற்றுள்ளார் .

இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் அம்மாநிலத்தின் முதல் ஆன்லைன் இளைஞர் வானொலி நிலையத்தை ' Radio Hills Youngistan Ka Dil " தொடங்கி வைத்தார் .

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் டிராகன் பழத்துக்கு கமலம் எனப் பெயர் மாற்றம் செய்து குஜராத் அரசு அறிவித்துள்ளது . 

இந்திய விமானப்படையும் , பிரான்ஸ் நாட்டின் விமானப்படையும் இணைந்து Desert Knight - 21 எனும் பெயரில் விமான போர்ப்பயிற்சியை இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடத்தியுள்ளன . 

 ஐசிஐசிஐ வங்கி InstaFX எனும் மொபைல் அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ளது . 

புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி ஆயோக் தரப் பட்டியலில் தமிழகம் 3 வது இடம்பெற்றுள்ளது . முதலிடத்தில் கர்நாடகாவும் , இரண்டாமிடத்தில் மகராஷ்டிராவும் உள்ளன . 

 இந்திய ராணுவம் , கடற்படை விமானப்படை மற்றும் கடலோர காவல் ஆகியவை இணைந்து , அந்தமான் கடல் பகுதியில் ' கவாச் எனும் பெயரில் மிகப் பெரியளவிலான கூட்டு பயிற்சியை மேற்கொள்கின்றன .


Jan  2021 CA

Touch Here

Gr4 Radian Model QA

Touch Here

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY