Ads Right Header

Tnpsc Important Notes...

நடுகல் வழிபாடு நடுகல் வழிபாட்டில் இரண்டு நிலைகளை இலக்கியங்கள் கூறுகின்றன . 

1. நடுகல் எடுத்தல் 

2. நடுகல் வழிபாடு . 

இவை நடுகல் எடுக்கும் முறைகளைப் பற்றியும் நடுகல் வழிபாடு பற்றியும் தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் , புறப்பொருள் வெண்பாமாலை ஆகியன பேசுகின்றன . தொல்காப்பியம் கல் எடுக்கும் நிகழ்வை ஆறு வகையாக வகைப்படுத்தி உள்ளது . 

அவை , 1. காட்சி 2. கால்கோள் 3. நீர்ப்படை 4. நடுகல் 5. பெரும்படை 6. வாழ்த்து என்பவையாகும் . காட்சி என்பது கணியன் அல்லது சோதிடனைக் கொண்டு கல்லை அறிந்து எடுத்து வருவதைக் குறிக்கின்றது . 

குறிப்பிட்ட தன்மையை உடைய கல்லைக் கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானித்துக்கொண்டு வருவது முதல் இரண்டு நிகழ்வுகள் . இரண்டாவது நிலையான நீர்ப்படை என்பது நீராட்டுதல் ஆகும் . நீரினால் பொருள்களைப் புனிதமடையச் செய்யலாம் என்று பண்டைய மக்கள் நம்பினர் . இதற்குப் பல சக்திகள் உண்டு என்றும் நம்பினர் .

உங்களுக்குத் தெரியுமா ? 

கொடையும் அரசியலும்

 சங்ககால வேளிரும் வேந்தரும் கொடை அளிப்பதில் முனைந்து நின்றனர் . கொடை பாணர் கடன் ஆகிய சொற்கள் பரிசு என்ற பொருளில் ஆளப்பெற்றது . பண்டைய நாளைய தொல்குடி வாழ்க்கையிலும் , வேளிர் வாழ்க்கையிலும் வேந்தர் வாழ்க்கையிலும் பரிசு இரண்டறக் கலந்து நின்றது . பரிசு , அதனை அளிப்பவனின் செல்வச் செழிப்பை எடுத்துக்காட்டுகின்றது , பரிசைப் பெறுபவனிடம் பரிசு அளிப்பவன் கைம்மாறு எதையும் எதிர்பார்க்கவில்லையானாலும் பரிசு பெற்றவன் கொடையாளிக்கு கைம்மாறு அளிக்கும் நிலைக்குத் தள்ளப் பெறுகின்றான் . கிழார் , வேளிர் , வேந்தர் ஆகியோர் வணிக வளத்தினாலும் , பிற வழிகளினாலும் கிடைத்த செல்வத்தைப் பாணர்களுக்கும் , புலவர்களுக்கும் , குடியிலுள்ளோர்க்கும் அளித்து , அதனால் புகழ் ஈட்டினர் . அப்புகழ் அவர்களை சமூகத்தில் உயர்ந்தவர்களாகச் செய்தது , கிழார் , வேளிர் , வேந்தர் ஆகியோர் பாணர்களுக்கும் , புலவர்களுக்கும் மட்டுமின்றிச் சமயத்தலைவர்களுக்கும் கொடையளித்தனர் .





























































Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY