Ads Right Header

ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 1.2. தமிழ்க்கும்மி.


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தாய் மொழியில் படித்தால் …………. அடையலாம்.
அ) பன்மை
ஆ) மேன்மை
இ) பொறுமை
ஈ) சிறுமை
Answer:
(விடை: ஆ) மேன்மை)

Question 2.
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் …………… சுருங்கிவிட்டது.
அ) மேதினி
ஆ) நிலா
இ) வானம்
ஈ) காற்று
Answer:
(விடை:  அ) மேதினி )

Question 3.
‘செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
Answer:
(விடை: ஈ) செம்மை + தமிழ்)


Question 4.
பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………..
அ) பொய் + அகற்றும்
ஆ) பொய் + கற்றும்
இ) பொய்ய + கற்றும்
ஈ) பொய் + யகற்றும்
Answer:
(விடை: அ) பொய் + அகற்றும்)

Question 5.
பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) பாட்டிருக்கும்
ஆ) பாட்டுருக்கும்
இ) பாடிருக்கும்
ஈ) பாடியிருக்கும்
Answer:
(விடை: அ) பாட்டிருக்கும்)

Question 6.
எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) எட்டுத்திசை
ஆ) எட்டிதிசை
இ) எட்டுதிசை
ஈ) எட்டிஇசை
Answer:
(விடை: அ) எட்டுத்திசை)

நயம் உணர்ந்து எழுதுக

Question 1.
பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து
Answer:
சீர்மோனை :
கொட்டுங்கடி – கோதையரே
ட்டுத்திசை – ட்டிடவே
ழி – ற்று
ழிப் – ழியாமல்
பொய் – பூண்டவரின்
மெய்புகட்டும் – மேதினி

Question 2.
பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
அடிஎதுகை :
கொட்டுங்கடி – எட்டு
ழி – ஆழி
பொய் – மெய்

சீர் எதுகை :
ட்டுங்கடி – எட்டிடவே
ஆழி – அழியாமலே

Question 3.
பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
இயைபு :
கொட்டுங்கடி – கொட்டுங்கடி,
கொண்டதுவாம் – நின்றதுவாம்,
பாட்டிருக்கும் – காட்டிருக்கும்.

குறுவினா

Question 1.
தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
தமிழ் மொழியின் செயல்கள் :
(i) பொய்மை அகற்றும், மனதில் உள்ள அறியாமை என்ற இருளை நீக்கும்.
(ii) அன்பு உடையவருக்கு இன்பம் தரும். பாடல்கள் நிறைந்த மொழி. உயிர் போன்ற உண்மையைக் கற்பித்து அறத்தின் உயர்வை உணர்த்தும். இவ்வுலக மக்கள்
வாழ்வதற்கு வழிகாட்டும்.


Question 2.
செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன ?
Answer:
(i) நம் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி, அறிவைப் பெருக்கும் விதமாகப் பல சிறந்த நூல்களைப் பெற்றுள்ள மொழி.
(ii) இப்புகழ் பெற்ற மொழி இயற்கை மாற்றங்களான கடல் சீற்றங்களினாலும் கால மாற்றங்களினாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும். இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழி.

Question 2.
தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொண்டவற்றை உம் சொந்த நடையில் தருக.
Answer:
(i) நம் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி, அறிவைப் பெருக்கும் விதமாகப் பல சிறந்த நூல்களைப் பெற்றுள்ள மொழி.
(ii) இப்புகழ் பெற்ற மொழி இயற்கை மாற்றங்களான கடல் சீற்றங்களினாலும் கால மாற்றங்களினாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும்.

சிந்தனை வினா

Question 1.
தமிழ்மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?
Answer:
பொய்மை அகற்றி மனதில் உள்ள அறியாமையை அகற்றும் அன்புடைய பலரின் இன்பம் நிறைந்த மொழி, உயிர்போன்ற உண்மையை ஊட்டி உயர்ந்த அறத்தைத் தந்து, இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழியாக தமிழ்மொழி விளங்குகிறது.

கூடுதல் வினாக்கள்

எதிர்சொல் தருக.
1. பல × சில
2. முற்றும் × தொடரும்
3. பொய் × மெய்
4. அழிவு × ஆக்கம்

வினா

Question 1.
பெருஞ்சித்திரனார் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : பெருஞ்சித்திரனார்
இயற்பெயர் : மாணிக்கம்
ஊர் : சேலம் மாவட்டம் – சமுத்திரம்
பெற்றோர் : துரைசாமி – குஞ்சம்மாள்
மனைவி : தாமரை அம்மையார்
காலம். : 10-03-1933 முதல் 11-06-1995 வரை
சிறப்புப் பட்டம் : “பாவலரேறு”
இயற்றிய நூல்கள் : கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம்
இதழ்கள் : தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.


நூல் வெளி
இப்பாடல் “கனிச்சாறு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது, இந்நூல் எட்டுத் தொகுதிகளைக் கொண்டது. இது தமிழுணர்வு செறிந்த பாடல்களைக் கொண்டது.

பொருளுரை
இளம்பெண்களே! எட்டுத் திசைகளிலும் தமிழின் புகழ் பரவவிடுமாறு கைகளைக் கொட்டிக் கும்மியடிப்போம்.
பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவைப் பெருக்கும் பல நூல்களைப் பெற்றுள்ள மொழி. பெரும் கடல் சீற்றங்களினாலும், கால மாற்றங்களினாலும் அழியாமல் நிலை பெற்ற மொழி.
தமிழ் பொய்யை அகற்றும் மொழி; தமிழ் மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்பு உடையவருக்கு இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி. உயிர் போன்ற உண்மையைப் புகட்டி அறத்தின் உயர்வை உணர்த்தும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழி தமிழ்மொழி.

விளக்கவுரை
தமிழ் இளம் பெண்கள் விரும்பிப் பாடியப் பாடல் கும்மிப்பாடல்.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு என எட்டுத் திசைகளிலும் தமிழ் மற்றும் தமிழரின் புகழ் உலகம் முழுக்க பரவுமாறு கைகொட்டிக் கும்மியடித்தனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி. அறிவைப் பெருக்க இலக்கண, இலக்கியம் எனப் பல நூல்களைப் பெற்றுள்ள மொழி நம் தமிழ்மொழி. பல பெரும் கடல் சீற்றங்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் அழியாமல் நிலை பெற்ற மொழி.
பொய்மைகளை அகற்றி மனத்தின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் மொழி. அன்புள்ளம் கொண்டவர்களுக்கு இன்பம் தரும் மொழி. உயிர்போன்ற உண்மையைப் புகட்டி ஒழுக்கம் தவறாமல் அறத்தோடுநின்று உயர்வை உணர்த்தும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.

சொல்லும் பொருளும்

1. ஆழிப்பெருக்கு – கடல் கோள்
2. ஊழி – நீண்டதொருகாலப்பகுதி
3. மேதினி – உலகம்
4. உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY