Ads Right Header

ஏழாம் வகுப்பு இயல் 2 .

 


2.1. காடு

I. சொல்லும் பொருளும்

  1. ஈனறு – பெற்று
  2. களித்திட – மகிழ்ந்திட
  3. கொம்பு – கிளை
  4. நச்சரவம் – விடமுள்ள பாம்பு
  5. அதிமதுரம் – மிகுந்த சுவை
  6. விடுதி – தங்கும் இடம்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வாழை, கன்றை ________.

  1. ஈன்றது
  2. வழங்கியது
  3. கொடுத்தது
  4. தந்தது

2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. காடு + டெல்லாம்
  2. காடு + எல்லாம்
  3. கா + டெல்லாம்
  4. கான் + எல்லாம்

3. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

  1. கிழங்குஎடுக்கும்
  2. கிழங்கெடுக்கும்
  3. கிழங்குடுக்கும்
  4. கிழங்கொடுக்கும்

2.2. அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

I. சொல்லும் பொருளும்

  1. பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
  2. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்

 

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.

  1. பச்சை இலை
  2. கோலிக்குண்டு
  3. பச்சைக்காய்
  4. செங்காய்

2. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _____.

  1. ஒட்டிய பழங்கள்
  2. சூடான பழங்கள்
  3. வேகவைத்த பழங்கள்
  4. சுடப்பட்ட பழங்கள்

3. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. பெயர + றியா
  2. பெயர் + ரறியா
  3. பெயர் + அறியா
  4. பெயர + அறியா

4. ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. மன + மில்லை
  2. மனமி + இல்லை
  3.  மனம் + மில்லை
  4. மனம் + இல்லை

5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. நேற்றுஇரவு
  2. நேற்றிரவு
  3. நேற்றுரவு
  4. நேற்இரவு

2.3. விலங்குகள் உலகம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ____.

  1. காது
  2. தந்தம் 
  3. கண்
  4. கால்நகம்

2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.

  1. வேடந்தாங்கல்
  2. கோடியக்கரை
  3. முண்டந்துறை
  4. கூந்தன்குளம்

3. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. காடு + ஆறு
  2. காட்டு + ஆறு
  3. காட் + ஆறு
  4. காட் + டாறு

4. ‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. அனைத்து + துண்ணி
  2. அனை + உண்ணி
  3. அனைத் + துண்ணி
  4. அனைத்து + உண்ணி

5. ‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. நேரமாகி
  2. நேராகி
  3. நேரம்ஆகி
  4. நேர்ஆகி

6. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. வேட்டைஆடிய
  2. வேட்டையாடிய
  3. வேட்டாடிய
  4. வேடாடிய

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ – என்று அழைக்கப்படும் விலங்கு புலி.

2. யானைக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.

3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் உடலைப் போர்த்தியிருக்கும் அடர்ந்த முடிகள்

...

2.5. நால்வகைக் குறுக்கங்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______.

  1. அரை
  2. ஒன்று
  3. ஒன்றரை
  4. இரண்டு

2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________.

  1. போன்ம்
  2. மருண்ம்
  3. பழம் விழுந்தது
  4. பணம் கிடைத்தது

3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______.

  1. ஐகாரக் குறுக்கம்
  2. ஔகாரக் குறுக்கம்
  3.  மகரக் குறுக்கம்
  4. ஆய்தக் குறுக்கம

II. எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.

  1. மகளிர் X ஆடவர்
  2. அரசன் X அரசி
  3. பெண் X ஆண்
  4. மாணவன் X மாணவி
  5. சிறுவன் X சிறுமி
  6. தோழி X தோழன்

III. படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக.

 

ஒன்றன்பால்                                       ஆண்பால்                                        ஒன்றன்பால்

 

பெண்பால்                                            பலர்பால்                                        பலவின்பால்

IV. பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.

(எ.கா.) கண்ணகி சிலம்பு அணிந்தான்.
கண்ணகி சிலம்பு அணிந்தாள்.

1. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.
   கோவலன் சிலம்பு விற்கப் போனான்

2. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.
  அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.

3. பசு கன்றை ஈன்றன.
   பசு கன்றை ஈன்றது.

4. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
   மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

5. குழலி நடனம் ஆடியது.
  குழலி நடனம் ஆடினார்

V. வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க.

கல், புதையல், இலை, கடலை, கடல், கதை, புல், இயல், தையல், கலை, இல்லை,

VI. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.

வாழைதயிர்கூடுதிடல்பாட்டு
குருவிகொய்யாசோறுபழம்பறவை
விளையாட்டுகூட்டம்அவரைபோட்டிகாய
  1. வாழை + காய் = வாழைக்காய்
  2. வாழை + பழம் = வாழைப்பழம்
  3. குருவி + கூடு = குருவிக்கூடு
  4. குருவி +  கூட்டம் = குருவிக்கூட்டம்
  5. விளையாட்டு + திடல்= விளையாட்டுத்திடல்
  6. விளையாட்டு + போட்டி = விளையாட்டுப்போட்டி
  7. தயிர் + கூடு = தயிரக்கூடு
  8. தயிர் + சோறு = தயிர்ச்சோறு
  9. கொய்யா + காய் = கொய்யாக்காய்
  10. கொய்யா + பழம் = கொய்யாப்பழம்
  11. அவரை +காய் = அவரைக்காய்
  12. பாட்டு + போட்டி = பாட்டுப்போட்டி
  13. பறவை + கூடு = பறைவக்கூடு
  14. பறவை + கூட்டம் = பறவைக்கூட்டம்

VIII. கலைச்சொல் அறிவோம்.

  1. தீவு – Island
  2. உவமை – Parable
  3. இயற்கை வளம் – Natural Resource
  4. காடு – Jungle
  5. வன விலங்குகள் – Wild Animals
  6. வனவியல் – Forestry
  7. வனப் பாதுகாவலர் – Forest Conservator
  8. பல்லுயிர் மண்டலம் – Bio Diversity

2.6. திருக்குறள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வாய்மை எனப்படுவது __________________

  1. அன்பாகப் பேசுதல்
  2. தீங்குதராத சொற்களைப் பேசுதல்
  3. தமிழ்ல் பேசுதல்
  4. சத்தமா பேசுதல்

2. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும் __________________

  1. மன்னன்
  2. பொறாமை இல்லாதவன்
  3. பொறாமை உள்ளவன்
  4. செல்வந்தன்

3. பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________

  1. பொரு + செல்வம்
  2. பொருட் + செல்வம்
  3. பொருள் + செல்வம்
  4. பொரும் + செல்வம்

4. யாதனில் என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது __________________

  1. யா + எனில்
  2. யாது + தெனில்
  3. யா + தெனில்
  4. யாது + எனில்

5. தன் + நெஞ்சம் என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________

  1. தன்நெஞ்சு
  2. தன்னெஞ்சு
  3. தானெஞ்சு
  4. தனெஞ்சு

6. தீது + உண்டோ என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________

  1. தீதுண்டோ
  2. தீதுஉண்டோ
  3. தீதிண்டோ
  4. தீயுண்டோ

II. சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்தி எழுதுக.

அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.

விடை

அ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
ஆ) பொருள்களைச் சேர்த்தல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
ஈ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.

III. கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க.



பொருட்செல்வம்எல்லாம்பூரியார்செல்வத்துள்
கண்ணும்அருட்செல்வம்உளசெவிச்செல்வம்
அச்செல்வம்தலைசெல்வம்

1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY