Ads Right Header

ஏழாம் வகுப்பு தமிழ் இயல் - 3.

 


3.1. புலி தங்கிய குகை

I. சொல்லும் பொருளும்

  1. சிற்றில் – சிறு வீடு
  2. யாண்டு – எங்கே
  3. கல் அளை – கற்குகை
  4. ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள் __________________

  1. எனது
  2. எங்கு
  3. எவ்வளவு
  4. எது

2. ‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது __________________

  1. யாண்டு + உளனோ?
  2. யாண் + உளனோ?
  3. யா + உளனோ?
  4. யாண்டு + உனோ?

3. ‘கல் + அளை என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________

  1. கல்லளை 
  2. கல்அளை
  3. கலலளை
  4. கல்லுளை

3.2. பாஞ்சை வளம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஊர்வலத்தின் முன்னால் _____ அசைந்து வந்தது.

  1. தோரணம்
  2. வானரம்
  3. வாரணம்
  4. சந்தனம்

2. பாஞ்சாலங்குறிச்சியில் _____ நாயை விரட்டிடும்,

  1. முயல்
  2. நரி
  3. பரி
  4. புலி

3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது _____.

  1. மெத்தை விரிக்கப்பட்ட வீடு
  2. படுக்கையறை உள்ள வீடு
  3. மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
  4. மாடி வீடு

4. ‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. பூட்டு + கதவுகள்
  2. பூட்டும் + கதவுகள்
  3. பூட்டின் + கதவுகள்
  4. பூட்டிய + கதவுகள்

5. ‘தோணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. தோரணம் + மேடை
  2. தோரண + மேடை
  3. தோரணம் + ஒடை
  4. தோரணம் + ஓடை

6. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. வாசல்அலங்காரம்
  2. வாசலங்காரம்
  3. வாசலலங்காரம்
  4. வாசலிங்காரம்

II. பொருத்துக.

  1. பொக்கிஷம் – அழகு
  2. சாஸ்தி – செல்வம்
  3. விஸ்தாரம் – மிகுதி
  4. சிங்காரம் – பெரும் பரப்பு

விடை : 1-அ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

3.3 தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்)

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.

  1. தூத்துக்குடி
  2. காரைக்குடி
  3. சாயல்குடி
  4. மன்னார்குடி

2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் _____.

  1. இராஜாஜி
  2. நேதாஜி
  3. காந்திஜி
  4. நேருஜி

3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப்
பாராட்டியவர் _____.

  1. இராஜாஜி
  2. பெரியார்
  3. திரு.வி.க
  4. நேதாஜி

3.5. வழக்கு

I. பொருத்துக.

  1. பந்தர் – முதற்போலி
  2. மைஞ்சு – முற்றுப்போலி
  3. அஞ்சு – இடைப்போலி
  4. அரையர் – கடைப்போலி

விடை – 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

II. பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.

  1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
  2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
  3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.
  4. திருக்குறளை எழுதியவர் யார்?
  5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.
எழுவாய்பயனிலைசெயப்படுபொருள்
வீரர்கள்நாட்டைக்காத்தனர்
பொதுமக்கள்அந்நியத்துணிகளைத்தீயிட்டு எரித்தனர்
கொற்கைத் துறைமுகத்திலேபாண்டியனுடைய மீனக்கொடிபறந்தது
திருக்குறளைஎழுதியவர்யார்?
கபிலர்குறிஞ்சிப்பாட்டைஎழுதிய புலவர்

III. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

  1. கம்பர் இராமாயணத்தை எழுதினார்
  2. ராமு கவிதை எழுதினான்
  3. கீதா ஓவியம் வரைந்தாள்
  4. ஒளவையார் ஆத்திசூடி இயற்றினார்
  5. வீரர்கள் நாட்டைக் காத்தனர்

IV. இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.

(எ.கா.) வீடு சென்றான் – வீடு+கு+சென்றான் – வீட்டுக்குச் சென்றான்

  1. மாடு புல் கொடுத்தார்  – மாடுக்குப் புல் கொடுத்தார்
  2. பாட்டு பொருள் எழுது – பாட்டுக்குப் பொருள் எழுது
  3. செடி பாய்ந்த நீர்  –  செடிக்குப் பாய்ந்த நீர்
  4. முல்லை தேர் தந்தான் பாரி  –  முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
  5. சுவர் சாந்து பூசினாள்  –  சுவர்க்குச் சாந்து பூசினாள்

V. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

கண்அழகுகண்ணழகுகண்ணுண்டு
மண்மண்ணழகுமண்ணுண்டு
விண்உண்டுவிண்ணழகுவிண்ணுண்டு
பண்பண்ணழழுபண்ணுண்டு

VI. அகம் என முடியும் சொற்களை எழுதுக.

(எ.கா.) நூலகம்

மருந்தகம், தலைமையகம், எழிலகம், அலுவலகம், செயலகம்

VII. கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.

(எ.கா.) திருக்குறள் ௩ (3) பால்களைக் கொண்டது.

  1. எனது வயது க௩ (13)
  2. நான் படிக்கும் வகுப்பு எ (7)
  3. தமிழ் இலக்கணம் ரு (5)  வகைப்படும்.
  4. திருக்குறளில் க௩௩ (133) அதிகாரங்கள் உள்ளன.
  5. இந்தியா ௪எ (1947) ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

VIII. குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

  1.  மூதறிஞர் இராஜாஜி
  2. வீரமங்கை வேலுநாச்சியார்
  3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் கட்டபொம்மன்
  4. வெள்ளையரை எதிர்த்த தீரன் சின்னமலை
  5. கொடிகாத்தவர் திருப்பூர் குமரன்
  6. எளிமையின் இலக்கணம் கக்கன்
  7. தில்லையாடியின் பெருமை வள்ளியம்மை
  8. கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார்
  9. பாட்டுக்கொரு புலவன் பாரதியார்
  10. விருதுப்பட்டி வீரர் காமராஜர்
  11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி நாகம்மை
  12. மணியாட்சியின் தியாகி வாஞ்சிநாதன்

IX. கலைச்சொல் அறிவோம்.

  1. கதைப்பாடல் – Ballad
  2. பேச்சாற்றல் – Elocution
  3. துணிவு – Courage
  4. ஒற்றுமை – Unity
  5. தியாகம் – Sacrifice
  6. முழக்கம் – Slogan
  7. அரசியல் மேதை – Political Genius
  8. சமத்துவம் – Equality.


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY