Ads Right Header

பெரியார் _ 25 முக்கிய வினாவிடை !


 பெரியார் 
                  
1) பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கத்திற்குத் தலைமை ஏற்றவர் யார்?

அ) அண்ணாதுரை
ஆ) குத்தூசி குருசாமி
இ)கி. வீரமணி      
ஈ)மணியம்மையார்👍

2) 1958 ல் பெரியார் உரையாற்றிய வட இந்திய பல்கலைக்கழகம் எது?

அ) நாளந்தா பல்கலைக்கழகம் 
ஆ)கல்கத்தா பல்கலைக்கழகம் 
இ)லக்னோ பல்கலைக்கழகம்👍
ஈ) காசி பல்கலைக்கழகம்

3) பெரியார் அவர்கள் தமது சொற்பொழிவுகளில் திருக்குறளை மேற்க்கோள்களாக கையாண்டதற்குக் காரணம்?

அ) அது உலகப் பொதுமறை என்பதால் 
ஆ) அவருடைய சொற்பொழிவு ஆதாரம் சேர்க்க 
இ) பெரியாருடைய கருத்துக்கள் திருக்குறளில் இருந்தமையால்👍 
ஈ)திருக்குறள் எல்லோருக்கும் புரியும் என்பதால்

4) எனக்கு பெண்டு பிள்ளை இல்லை நான் செத்தால் எனக்காக அழக்கூடியவர் பெரியார் மட்டும் என்று கூறியவர் யார்?

அ)காமராசர் 
ஆ)இமயவரம்பன் 
இ) திரு.வி.க👍 
ஈ)இளங்கோவன்

5) விடுதலையும் பெரியாரும் எனது அன்பார்ந்த எதிரிகள் என எழுதியவர் யார்?

அ) காந்தியடிகள் 
ஆ) இராஜாஜி👍
இ)நேரு 
ஈ)அண்ணாதுரை

6) சமதர்ம சமுதாயத்தைப் படைக்கப் பெரியார் அவர்கள் தம் வாழ்நாளில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை?

அ) 9989
ஆ) 3074
இ) 10700👍
ஈ) 10600

7) சிறைக்கஞ்சாச் சிங்கம் தந்தை பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை முறை சிறைக்குச் சென்றார்?

அ) 15
ஆ) 19👍
இ) 5
ஈ) 17

8) மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களால் பெரியாரின் பிள்ளை என்றும் பாராட்டப் பட்டவர் யார்?

அ) கலைஞர் கருணாநிதி 
ஆ)பேரறிஞர் அண்ணா 
இ)கி. வீரமணி 👍
ஈ) சிந்தாமணி

9) பெரியாரின் 78ஆம் பிறந்த நாளில் குன்றக்குடி அடிகளரால் வழங்கப்பட்ட சிறப்பு பெயர் யாது?

அ) தன்மான வீரர்👍 ஆ)பொன்மனச்செம்மல் 
இ)பகுத்தறிவுப் பகலவன் 
ஈ)தந்தை பெரியார்

10) பெரியார் தமது இந்தி எதிர்ப்புக் கருத்துக்களை எழுதிய பத்திரிக்கை?

அ) குடிஅரசு👍
ஆ) புரட்சி 
இ)விடுதலை
ஈ) பகுத்தறிவு 

11) சாதி அமைப்பின் அடித்தளம் என்ன?

அ) பிறப்பினால் உயர்வு தாழ்வு 👍
ஆ) பணிச்சிறப்பால் உயர்வு தாழ்வு 
இ)பொருட்சிறப்பால் உயர்வு தாழ்வு
ஈ) தோற்றப் பொலிவுனால் உயர்வு தாழ்வு 

12) மனிதருக்கு அழகு எது என்கிறார், பெரியார்?

அ)  எளிய உடை 
ஆ)உடல் தூய்மை
இ) மானமும் அறிவும்👍 
ஈ)ஒற்றுமை

13) மக்கள் தங்கள் உயிருக்கு நிகராக எதைக் கருத வேண்டும் என்கிறார் 
பெரியார்?

அ) தாய்நாட்டின் விடுதலை 
ஆ)குடும்பப் பெருமை 
இ)சுயமரியாதை 👍
ஈ) பகுத்தறிவு 

14) பிள்ளையார் உருவப் பொம்மையை உடைக்கும் போராட்டத்தை பெரியார் நடத்திய ஆண்டு?

அ) 1951
ஆ) 1953👍
இ) 1955
ஈ) 1957

15) நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார் என கூறியவர்
 யார்? 

அ) பட்டுக்கோட்டை அழகிரிசாமி
ஆ)அறிஞர்அண்ணாதுரை👍 
இ) குத்தூசி குருசாமி 
ஈ)அய்யாமுத்து

16)  ஒரு குடும்பத் தலைவியின் சிறப்புகளை பற்றிய தந்தை பெரியாரின் நூல்? 

அ)வாழ்க்கையும் பெண்மையும்
ஆ) குடும்பச் சுடர்
இ) வாழ்க்கை நலம் 
ஈ)வாழ்கைத் துணைநலம்👍

17) தந்தை பெரியார் குறித்து சர்.ஏ இராமசாமி முதலியார் இவ்வாறு கூறினார்?

அ) தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் 
ஆ)  தமிழ்நாட்டின் ரூசோ👍 
இ) தமிழ்நாட்டின் இங்கர்சால்
 ஈ)தமிழ்நாட்டின் லெனின் 

18) கருப்புடை போர்த்த சிவப்பு ஞாயிறு என பெரியாரைப் பாராட்டிப் பாடிய பாவலர்?

அ) பெருஞ்சித்திரனார் 
ஆ)ஆடலரசன் 
இ)புலமைப்பித்தன்👍
ஈ) கவிஞர் சுரதா

19) முற்றும் உணர்ந்த பேராசிரியர் எனப் பெரியார் பற்றி எழுதியவர்?

அ) எஸ். இராமன் 
ஆ) கல்கி 👍
இ) சொக்கலிங்கம் 
ஈ)சிவராமன்

20)  பெரியாரின் புகழ்வாய்ந்த புனைபெயர் இது ?

அ) இந்திர சித்தன்
ஆ) சித்திர புத்திரன்👍 
இ)இரணியன் 
ஈ) மித்ரன்

21) விபச்சாரத்தில் தொடங்கி, கற்பில் வளர்ந்து, முட்டாள்தனத்தில் முடிகிறது என்று எந்த காப்பியத்தைக் கணித்தார் பெரியார்?

அ) சிலப்பதிகாரம்👍 
ஆ)சீவகசிந்தாமணி 
இ)இராமாயணம் 
ஈ)மகாபாரதம் 

22) தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தைத் தோற்றுவித்தவர் யார்?

அ) கி. வீரமணி 👍
ஆ) கருணாநிதி 
இ)மணியம்மை
ஈ) அண்ணா 

23) வைக்கம் பெரியார் நினைவகம் எந்த ஆண்டு திறக்கப்பட்டது?

அ) 1924
ஆ) 1994👍
இ) 1971
ஈ) 1997

24) பெரியார் அவர்களை என்னுடைய நாத்திக ஆசான் என்று குறிப்பிட்ட வங்காளப் பேரறிஞர்?

அ) தார்குண்டே
ஆ)கோரா கோவூர்
இ) எம்.ஏன். ராய்👍
ஈ) பகத்சிங் 

25) தந்தை பெரியார் இராமசாமி அவர்களை தோழர் என்று விழித்த பெண்மணி யார்?

அ) நாகம்மையார்👍 
ஆ)சின்னத்தாய் அம்மாள் 
இ) கண்ணம்மாள் 
ஈ)மணியம்மையார்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY