Ads Right Header

CA 2022 - நடப்பு நிகழ்வுகள் (பிப்ரவரி & மார்ச்)


நடப்பு நிகழ்வுகள்

📢 8K Ultra HD தொழில்நுட்பத்துடன் காட்சிகளைத் துல்லியமாக ஒளிபரப்பும் சேனலை எந்த நாட்டினுடைய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது? சீனா

📢 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இணை எது?இவான்/கிறிஸ்டினா

📢 இந்தியாவில் தயாரிக்கப்படும் அதிநவீன பிரமோஸ் ஏவுகணைகள் எந்த நாட்டிற்கு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட உள்ளது? பிலிப்பைன்ஸ்

📢 மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்ற எத்தனையாவது தமிழர் அனந்த நாகேஸ்வரன் ஆவார்?4-வது

📢"A Little Book of India:Celebrating 75 years of Independence" என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? ரஸ்கின் பாண்ட்

📢 2022 ஆம் ஆண்டில் உலக தொழுநோய் ஒழிப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? ஜனவரி 30

📢 காஷ்மீரின் ஸ்ரீநகரில் லால் சவுக் மணிக் கூண்டில் எத்தனை ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது?30

📢 டெல்லியில் நடந்த 73 வது குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானத்தில் இடம் பெற்ற முதல் பெண் விமானி யார்?சிவாங்கி சிங்

📢2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிர்மலா சீதாராமன் எத்தனையாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்? 4-வது

📢 சர்வதேச அளவில் அதிக அளவிலான ட்ரோன்களை பறக்க விடுவதில் இந்தியா எத்தனையாவது நாடாக உள்ளது?04-வது நாடு

📢 மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டவர் யார்?ஜியோமாரா காஸ்ட்ரோ

📢 செவ்வாய் கிரகத்தில் எத்தனை ஆண்டுகள் வரை தண்ணீர் பாய்ந்து உள்ளதாக நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரிலிருந்து வந்த தகவலின் படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?2 முதல் 2.5 பில்லியன்

நடப்பு நிகழ்வுகள்

🎉எந்த மாநிலத்தில் பெண் காவலர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது? மகாராஷ்டிரா

🎉தற்போது, ஆப்பிரிக்க கூட்டமைப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள நாடு எது? புர்கினா ஃபாசோ

🎉 இந்தியாவில் 29 வேளாண்மை திறன் மையங்களை சுற்றியுள்ள 150 கிராமங்களுக்கு எந்த நாட்டின் தொழில் நுட்ப உதவிகள் வழங்கப்பட உள்ளன? இஸ்ரேல்

🎉 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ALH MK 3 முன்னேறிய இலகுரக _ இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது? ஹெலிகாப்டர்கள்

🎉 தற்போது நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியானது எந்த நகரத்தில் நடைபெற்று வருகிறது? மஸ்கட்

🎉 மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக எந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது? டாடா குழுமம்

🎉 ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ள இந்திய ஒழுங்குமுறை அமைப்பு எது?TRAI

🎉 1944 ஆம் ஆண்டு ஜப்பானுக்கு எதிரான போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் எந்த போர்க்கப்பல் அதிக ஆழத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?யுஎஸ்எஸ் ஜான்ஸ்டன்

🎉 சமீபத்தில் சித்தூர் அகில பாரத தெலுங்கு புரோகிதர் சங்க தலைவர் சீனிவாச சர்மாவுக்கு வழங்கப்பட்ட விருதின் பெயர் என்ன? உலக சாஸ்திர விருது

🎉 ஜனாதிபதியின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த __ என்னும் குதிரை பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது? விராட்

🎉 தீண்டாமை ஒழிப்பு தினம் (மகாத்மா காந்தி நினைவு தினம்) ஒவ்வொரு ஆண்டும் எந்நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது? ஜனவரி 30

🎉 சமீபத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் பறக்கும் படகு முதல் முறையாக எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? துபாய்

🎉 2017 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையை சோதனை செய்து உள்ள நாடு எது? வடகொரியா

🎉தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை விரைந்து  செயல்படுத்தும் புதிய திட்டத்திற்கான தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?மங்கத்ராம் சர்மா

நடப்பு நிகழ்வுகள்

👉எந்த ஆண்டு முதல் "சர்வதேச மனித சகோதரத்துவ தினம்" பிப்ரவரி 4-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது?2021

👉சமீபத்தில் சிறுகதை எழுத்தாளரான யாருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது? கார்த்திக் பாலசுப்ரமணியன்

👉 சர்வதேச விண்வெளி மையத்தை _____ ஆம் ஆண்டு பசுபிக் பெருங்கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டுள்ளது?2031

👉 1 கோடி சப்ஸ்கிரைபர்களைப் பெற்று, யூடியூப் தளத்தில் அதிக சப்ஸ்கிரிபர்களை பெற்ற அரசியல் தலைவராக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருபவர் யார்? நரேந்திர மோடி

👉 எந்த நாட்டிற்கு எரிபொருள் வாங்குவதற்காக ரூ.3,700 கோடி கடன் உதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது? இலங்கை

👉 மத்திய அரசின் 2022-2023 காலகட்டத்துக்கான நிதிநிலை அறிக்கையில் விளையாட்டுத் துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?ரூ.3,062.60

👉 சுகாதாரத்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக எந்த செயலிக்கு அமெரிக்காவின் குளோபல் விருது வழங்கப்பட்டுள்ளது?அல் ஹொசன்

👉 இந்தியாவில் இஸ்ரேல் தூதர் _____ இலங்கைக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?நயோர் கிலான்

👉சமீபத்தில் காலமான இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்படும் லதா மங்கேஷ்கருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?2001

👉பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்றுள்ள தெரசெ ஜோஹாக் எந்த நாட்டை சேர்ந்த வீராங்கனை? நார்வே

நடப்பு நிகழ்வுகள்(Current affairs)

🕊️That Year at Manikoil என்ற நூலின் ஆசிரியர் யார்?அதிதி கிருஷ்ணகுமார்

🕊️ இந்தியாவில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மூன்றாவது கரோனா தடுப்பூசி எது?CORBEVAX

🕊️அமெரிக்காவுக்கான எந்த நாட்டின் தூதராக சர்தார் மசூத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்? பாகிஸ்தான்

🕊️ ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், தமிழக ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வாங்க வெளி மாநிலத்தவருக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலியின் பெயர் என்ன?மேரா ரேஷன்

🕊️ அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கான தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்? மங்கத்ராம் சர்மா

🕊️ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப தேசிய நிறுவனத்தின் தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?மதன் மோகன் திரிபாதி

🕊️ PVSM,AVSM,VSM ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்று உள்ளவர் யார்? மனோஜ் பாண்டே

🕊️ மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்க அப்பல்லோ டயர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் எது?டாடா பவர் நிறுவனம்

🕊️ எந்த நாட்டுடனான பொருளாதார வழித்தடத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டது? சீனா

🕊️ சமீபத்தில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனையின் பெயர் என்ன?தெரேஸ் ஜோஹாக்

🕊️ சமீபத்தில் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியும் இலங்கை அரசாங்கமும் எத்தனை மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்?500 மில்லியன் 

🕊️ஆசிய பேட்மிண்டன் அணிகள் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது? மலேசியா

🕊️ The $10 Trillion Dream நூலின் ஆசிரியர் யார்? சுபாஷ் சந்திர கார்க்

நடப்பு நிகழ்வுகள்

🎉 சௌரி சௌரா சம்பவத்தின் 100-வது ஆண்டு நிறைவு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? பிப்ரவரி 04

🎉சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்டு இணைந்திருக்கும் புதிய அணிக்கு ____ என பெயரிடப்பட்டுள்ளது? குஜராத் டைட்டன்ஸ்

🎉 டிவிஎஸ் மோட்டார்ஸ் இன் துணை நிறுவனமான சுந்தரம் கிளேட்டன் லிமிடெட்டின் இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?கே.கோபால தேசிகன்

🎉 மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 143 கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்க எந்த மாவட்ட சிறு தொழிலாளர்கள் சங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது?கோவை

🎉 சமீபத்தில் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக _____ நியமன பரிந்துரைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது? சர்தார் மசூத் கான்

🎉 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய நார்வே வீராங்கனை யார்?தெரஸே ஜோஹாக்

🎉 2021 ஆம் ஆண்டுக்கான ESPN Cricinfo விருதுகளில் சிறந்த பேட்டிங் விருது பெற்றுள்ள இந்திய வீரர் யார்?ரிஷப் பந்த்

🎉 இஸ்ரோ அமைப்பு எந்த ராக்கெட் மூலமாக EOS-04 எனப்படும் ரிசாட் -1A புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளது? PSLV-C52

🎉Atal Bihari Vajpayee என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?சாகரிகா கோஸ்

🎉 சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சிலின் The Voice of The Customer அங்கீகாரம் எந்த விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது? சென்னை விமான நிலையம்

🎉 94 வது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள Writing with Fire என்ற இந்திய ஆவணப் படத்தை இயக்கியவர் யார்? ரிந்து தாமஸ் & ஸ்மித் கோஷ்

🎉 இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க எந்த வங்கி "ஜிவா" திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?NABARD

🎉 India-Africa Relations Changing Horizons என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? ராஜீவ் பாட்டியா

நடப்பு நிகழ்வுகள்

📢சமீபத்தில் ஈரான் நாட்டின் கைபர் பஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை எத்தனை மைல் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது?900

📢 எந்த மாநில அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 50 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி திட்டத்தை ஒபவ்வா கலை தற்காப்பு பயிற்சி தொடங்கியுள்ளது? கர்நாடகா

📢 சமீபத்தில், வெளிநாடுகளில் இருந்து _ இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது? ட்ரோன்

📢 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எந்த நாளில் "தேசிய மாணவர் தினம்" கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்? நவம்பர் 7

📢 இந்திய இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?எல்.பி தங்கவேலு

📢 ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள 120 கிலோ தங்க ராமானுஜர் சிலையை நாட்டிற்கு அர்பணித்தவர் யார்? ராம்நாத் கோவிந்த்

📢 எந்த நாட்டில் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் காட்சிப்படுத்தப்பட்டது? சிங்கப்பூர்

📢 இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகளை அடைவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்கு குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?ஆர்.கே சிங்

📢 மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய தர்பார் மண்டபத்தை திறந்து வைத்தவர் யார்? ராம்நாத் கோவிந்த்

📢 சமீபத்தில் நிதி ஆயோக் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ள மாநிலம் எது? தமிழ்நாடு

📢பபாசி சார்பில் எத்தனையாவது சென்னை புத்தகக்காட்சியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்?45-வது

📢 சுதந்திர இந்தியாவில் எத்தனையாவது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வரர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார்?32-வது

 📢 சமீபத்தில் மத்திய அரசு எத்தனை சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது?54

📢 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கம் வென்றுள்ள முதல் கருப்பின பெண் யார்?எரின் ஜாக்சன்

நடப்பு நிகழ்வுகள்

🎉 நாட்டின் எத்தனை இடங்களில் விவசாய ட்ரோன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்?100 இடங்கள்

🎉 ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இதுவரை 9 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சகம் எது? மத்திய ஜல் சக்தி அமைச்சகம்

🎉 தைவானியே எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான ஹான் ஹை டெக்னாலஜி குழுமத்துடன் இந்தியாவில் செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்வதற்கான கூட்டு முயற்சியை உருவாக்கியுள்ள நிறுவனம் எது? வேதாந்தா

🎉 செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் 17-வது நிறுவன தினத்தை முன்னிட்டு முதல் வண்ண நினைவு பரிசு நாணயத்தை வெளியிட்டவர் யார்? நிர்மலா சீதாராமன்

🎉 இந்தியா ஃபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் 21 சதவீத பங்குகளை எந்த வங்கி வாங்குகிறது? பேங்க் ஆஃப் பரோடா

🎉 நாட்டின் முதல் "டெக் ஸ்டார்ட்-அப் கான்க்ளேவ் அன்ட் அவார்ட்ஸ் சமிட்" எந்த நகரில் நடைபெற்றது? டெல்லி

🎉A Nation To Product என்ற நூலின் ஆசிரியர் யார்?பிரியம் காந்தி மோடி

🎉செயற்கைக்கோள் மூலமாக இணைய சேவை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் எந்த நிறுவனம் லக்ஸம்பர்க்கைச் சேர்ந்த எஸ்இஎஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?ஜியோ

🎉 "எக்ஸ் கோப்ரா வாரியர் 22" என்ற பன்னாட்டு விமானப் படை பயிற்சி எங்கு நடைபெற உள்ளது? பிரிட்டன்

🎉 சர்வதேச அறிவுசார் சொத்து குறியீடு 2022 பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? 43-வது இடம்

நடப்பு நிகழ்வுகள்

🎉உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான பிரபல மெல்போர்ன் கிரிக்கெட் மைதான ஸ்டேடியத்தின் புதிய பெயர் என்ன?ஷேன் வார்ன்

🎉எந்த நாட்டில் உள்ள அடர்மழைக்காடுகளில் மந்தாரை பூக்களின் புதிய இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்? வடக்கு ஈக்வடார்

🎉சமீபத்தில்,பார்தி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? வித்யா பாலன்

🎉இந்தியா எந்த நாட்டிற்கு இடையேயான 75-ஆவது ஆண்டு இராஜதந்திர உறவுக்கான நினைவு தினம் சிறப்பு லோகோவை வெளியிட்டது? நெதர்லாந்து

🎉சமீபத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 130 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் மூழ்கிய கப்பலின் பெயர் என்ன? அட்லாண்டா
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY