Ads Right Header

50 + 50 - இலக்கணக் குறிப்புகள்!!


1 ) யாவையும் உம் 
முற்றும்மை 

2 ) ஆக்கல் , நீக்கல் , விளையாட்டு - தொழிற்பெயர்கள் 

3 ) அலகிலா விளையாட்டு - 
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

4 ) பொறுத்தல் - 
தொழிற்பெயர் 

5 ) அகழ்வார் , இகழ்வார் - வினையாலணையும் பெயர்கள் 

6 ) மறத்தல் , பொறுத்தல் - தொழிற்பெயர்கள் 

7 ) நன்று - 
குறிப்பு வினைமுற்று . 

8 ) விருந்து 
பண்பாகு பெயர் 

9 ) ஒரால் , பொறை - 
தொழிற்பெயர்கள்

10 ) நீங்காமை - 
எதிர்மறைத் தொழிற்பெயர் 

11 ) போற்றி - 
வினையெச்சம்

12 ) ஒறுத்தார் - 
வினையாலணையும் பெயர் 

13 ) பொதிந்து - 
வினையெச்சம் 

14 ) ஒறுத்தார் , பொறுத்தார் - வினையாலணையும் பெயர்கள் 

15 ) தற்பிறர் - 
ஏழாம் வேற்றுமைத் தொகை 

16 ) செய்யினும் - 
இழிவுச் சிறப்பும்மை 

17 ) நொந்து - 
வினையெச்சம் 

18 ) அறன் , திறன் - 
ஈற்றுப்போலிகள் 

19 ) செய்தாரை - 
வினையாலணையும் பெயர் . 

20 ) விடல் - 
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

21 ) இறந்தார் , துறந்தார் , நோற்கிற்பவர் - வினையாலணையும்பெயர்கள்  .

22 ) இன்னாச்சொல் - 
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . 

23 ) உண்ணாது 
வினையெச்சம் . 

24 ) கண்ணோட்டம் , செல்லாமை , உரைத்தல் , என்றல் - 
தொழிற்பெயர்கள் 

25 ) கேட்டார் , வாட்டான் - வினையாலணையும் பெயர்கள் . 

26 ) மாநகர் - 
உரிச்சொற்றொடர் 

27 ) சார்ந்தவர் 
வினையாலணையும் பெயர் . 

28 ) நுந்தை 
நும் தந்தை என்பதன் மரூஉ . 

29 ) அடவிமலையாறு - 
உம்மைத்தொகை 

30 ) கடந்து - 
வினையெச்சம் 

31 ) தடந்தோள் - 
உரிச்சொற்றொடர் . 

32 ) பாலடையும் நறுநெய்யும் தேனும் - எண்ணும்மை . 

33 ) நீலமுடி , நன்செய் , புன்செய் - பண்புத்தொகைகள் - 

34 ) பாய்ந்து , செறிந்து - வினையெச்சங்கள் 

35 ) ஞாலமெலாம் , மக்களெலாம் - எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்

36 ) காத்தல் 
தொழிற்பெயர் . 

37 ) தொல்லுலகு 
பண்புத்தொகை . 

38 ) தாளமும் மேளமும் - 
எண்ணும்மை 

39 ) பதமலர் - 
உருவகம் . 

40 ) உரைத்து , இரந்து - வினையெச்சங்கள் 

41 ) சொல்லி , இறைஞ்சி - வினையெச்சங்கள் 

42 ) விளக்கி , சிறந்து - வினையெச்சங்கள் 

43 ) மகிழ்ச்சி 
தொழிற்பெயர் 

44 ) ஆய்ந்த பொற்கிழி - 
பெயரெச்சம்

45 ) நோக்கி - 
வினையெச்சம் 

46 ) கிளத்தினேன் - 
தன்மை ஒருமை வினைமுற்று 

47 ) தேராக் கீரன் 
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . 

48 ) புனைமலர்   
வினைத்தொகை

49 ) பற்றுவான் , அஞ்சான் - வினையாலணையும் பெயர்கள் 

50 ) குற்றம் 
தொழிற்பெயர்

51 ) தேய்ந்த , பாய்ந்த , ஆய்ந்த , காய்ந்த - பெயரெச்சங்கள் 

52 ) விழுந்து 
வினையெச்சம் 

53 ) செந்தீ , வெம்மை - பண்புத்தொகைகள் 

54 ) வயிற்றுக்கும் 
இழிவுச்சிறப்பும்மை

55 ) ஊற்று 
ஊன்று என்பதன் வலித்தல் விகாரம் 

56 ) இழுக்கல் , ஒழுக்கம் · தொழிற்பெயர்கள் 

57 ) ஆன்றபெருமை 
பெயரெச்சம்

58 ) கேளாத்தகையவே - 
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் . 

59 ) அவியினும் வாழினும் - 
எண்ணும்மை 

60 ) தளிர்க்கை 
உவமைத்தொகை 

61 ) பழந்தமிழ் , சிற்றினம் , பெருங்குணம் பண்புத்தொகைகள் 

 62 ) வழங்கி 
  வினையெச்சம்

64 ) மல்லல் நெடுமதில்- உரிச்சொற்றொடர் 

65 ) நெடுமதில் - 
பண்புத்தொகை 

66 ) வாங்குவில் - 
வினைத்தொகை . 

67 ) உயர்துலை - 
வினைத்தொகை 

68 ) குறையா வன்கண் - 
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . 

69 ) இலைவேல் - 
உவமைத்தொகை 

70 ) மருப்பூசி , மார்போலை - 
உருவகங்கள் 

71 ) மாறன்களிறு - 
ஆறாம் வேற்றுமைத்தொகை

72 ) வெந்து , உலர்ந்து , எனா , கூர - வினையெச்சங்கள் 

73 ) செந்நாய் - 
பண்புத்தொகை

74 ) கருமுகிலும் வெண்மதியும் - எண்ணும்மை 

75 ) கருமுகில் , வெண்மதி - பண்புத்தொகைகள் 

76 ) கடக்க , ஓடி , இளைத்து - வினையெச்சங்கள் 

77 ) வியர்த்த வியர்வன்றோ - 
பெயரெச்சம் . 

78 ) நோக்கி - 
வினையெச்சம் 

79 ) துவ்வா விடம் - 
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் . 

80 ) தேவியும் ஆயமும் 
எண்ணும்மை . 

81 ) அருந்தவர் , நல்வினை - பண்புத்தொகைகள் . 

82 ) வாழ்கவியங்கோள் 
வினைமுற்று 

83 ) செய்தவம் , வீழ்கதிர் - வினைத்தொகைகள் . 

84 ) பெரும்பேறு - 
பண்புத்தொகை 

85 ) ஆழ்நரகு - 
வினைத்தொகை 

86 ) தெளிதல் - 
தொழிற்பெயர் . 

87 ) பல்லுயிர் , நல்வினை , தீவினை , பேரின்பம் - பண்புத்தொகைகள் . 

88 ) ஆய்தொடி நல்லாய் - 
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை 

89 ) காமத்தீ - 
உருவகம் 

90 ) கடுஞ்சொல் - 
பண்புத்தொகை . 

91 ) பொல்லாக் காட்சி - 
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . 

92 ) பயன் தெரிபுலவர் - 
வினைத்தொகை . 

93 ) அரைசன் - 
இடைப்போலி 

94 ) நல்லறம் - 
பண்புத்தொகை . 

95 ) என்ப - 
பலர்பால் வினைமுற்று 

96 ) மேற்கொள்பவர் - வினையாலணையும் பெயர் . 

97 ) உள்ளதூஉம் - 
இன்னிசையளபெடை 

98 ) அன்று - 
குறிப்புவினைமுற்று

99 ) கண்ணோட்டம் - 
தொழிற்பெயர்

100 ) கொல்லா நலத்தது , 
சொல்லா நலத்தது - 
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் .












Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY