Ads Right Header

CA 2022 - நடப்பு நிகழ்வுகள் (ஜனவரி)


நடப்பு நிகழ்வுகள்

💥ஹரியானா மாநிலத்தில் கருனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை (ஐசிசிசி) திறந்து வைத்தவர் யார்? மனோகர் லால் கட்டார்

💥 சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருதை (2021) வென்ற உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் யார்?ரித்திமா பாண்டே

💥 ஐரோப்பிய யூனியனில் வீடுகளிலும்  தனிப்பட்ட பயன்பாட்டிலும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கி முதல் மாநிலம் எது? மால்டா

💥 தற்போது பிரதமரின் இளம் எழுத்தாளர்கள் வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் நேஷனல் புக் டிரஸ்ட் தேர்வு செய்துள்ள எழுத்தாளர்களில் எத்தனை பெண் எழுத்தாளர்கள் உள்ளனர்? 37 பெண்கள்

💥 அமெரிக்க ஆலோசனை நிறுவனமான எனர்ஜி இன்டலிஜென்ஸின் வெளியிட்டுள்ள உலகளாவிய பசுமை பயன்பாடுகளின் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய நிறுவனம் எது?கிரீன்கோ

💥 தற்போது பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் எத்தனை மாநிலங்களில் 1.07 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?4 மாநிலங்கள்

💥 ஆன்லைன் உணர்வாளர்களுக்கு எத்தனை சதவீதம் ஜிஎஸ்டி வரி ஜனவரி 1 (2022) முதல் அமலுக்கு வந்துள்ளது?5%

💥சிபிர் என்ற அணு சக்தியால் இயங்கக்கூடிய புதிய கப்பலை எந்த நாடு உருவாக்கியுள்ளது? ரஷ்யா

💥2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எந்த மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் பதிவாகியுள்ளது? உத்தரப்பிரதேசம்

💥 பிரிக்ஸ் வங்கியின் நான்காவது புதிய உறுப்பினராக எந்த நாடு இணைந்துள்ளது? எகிப்து

நடப்பு நிகழ்வுகள்

🕊️எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு எங்கு நடைபெற்றது? சென்னை

🕊️18 ஆண்டுகளுக்கு முன் அழிந்து  விட்டதாக அறிவிக்கப்பட்ட டக்யூலா ஸ்பிளிட்ஃபின்  என்ற 3 அங்குல மீன் மெக்சிகோவின் எந்த ஆற்றல் இருந்து விஞ்ஞானிகள் மீட்டெடுத்து சாதனை படைத்துள்ளனர்?ட்யூசிட்லன்

🕊️ சிக்கிமில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் புதிய சாலை ஒன்றை அம்மாநில ஆளுநர் ____ என்பவர் திறந்து வைத்தார்?கங்கா பிரசாத்

🕊️ தேசிய அளவில் தலைசிறந்து விளங்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ள உயர்கல்வி நிறுவனம் எது? சென்னை ஐஐடி

🕊️ இங்கிலாந்து கடற்கரையின் பாறைகளில் பதிவாகியிருந்த டைனோசர்களின் கால்தடம் ___ வகை டைனோசரின் கால்தடம் என லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு உறுதி செய்துள்ளது?சரோபோடோமார்ப்

🕊️ தற்போது துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தின் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் யார்?ராஜா

🕊️ பஞ்சாபில் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கமலி என்ற சிறுமி தமிழகத்தின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? செங்கல்பட்டு

🕊️ தமிழ்நாடு சுற்றுலா ஆலோசனைக் குழுவானது தற்போது ____ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது? தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சிக் குழு

🕊️ தற்போது எந்த மாநிலத்தின் மோவ் பகுதியில் ராணுவ பொறியியல் நிறுவனத்தின் குவாண்டம் சோதனை கூடத்தையும், செயற்கை நுண்ணறிவு மையத்தையும் இந்திய ராணுவம் அமைத்துள்ளது? மத்தியப் பிரதேசம்

🕊️ தற்போது இன்மார்சாட்-6 F1 என்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய நாடு எது? ஜப்பான்

நடப்பு நிகழ்வுகள்

♻️தூய்மை கங்கை தேசிய திட்டத்தின்  புதிய பொது இயக்குனராகப் பொறுப்பேற்றவர் யார்? அசோக்குமார்

♻️ இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அதிகரிக்க ஆப்லைன் பரிவர்த்தனைக்கான அனுமதியை வழங்கிய உள்ள வங்கி எது? ரிசர்வ் வங்கி

♻️ உலக அளவில் பெரிய விமான நிலையங்களில் ஒருமுறை செயல்திறனைக்கான நிறுவன தரவரிசையில் சென்னை விமான நிலையம் எத்தனையாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது?8 வது

♻️ உத்தரபிரதேசத்தில் ரூபாய் 26 ஆயிரத்து 778 கோடி மதிப்பில் 821  கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தவர் யார்? நிதின் கட்கரி

♻️ தெற்கு ரயில்வேயில் பகல் நேர எரிசக்தித் தேவையை 1.5 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின் சக்தி தகடுகள் மூலம் 100% ஈடு செய்த முதலாவது ரயில் நிலையம் எது? டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

♻️ உலக அளவில் பங்குச் சந்தையில் 3 லட்சம் கோடி டாலர் மதிப்பை பெற்று புதிய சாதனையை படைத்த நிறுவனம் எது? ஆப்பிள்

♻️ ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தின் இடைக்கால தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற முதல் பெண் யார்?அல்கா மிட்டல்

♻️ 2022 என்சிசி குடியரசு தின முகாமை டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன் ஜெனரல் ___ என்பவர் முறைப்படி தொடங்கி வைத்தார்?குர்பீர்பால் சிங்

♻️ உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை ஹம்பி எத்தனையாவது இடம் பிடித்தார்? ஐந்தாவது இடம்

♻️ 2021 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வசூலில் 4080.14 கோடி வசூலைத் தொட்டு முதலிடம் பிடித்த மாநிலம் எது? ஒடிசா

நடப்பு நிகழ்வுகள்

📌2020 ஆம் ஆண்டுக்கான நீர் பராமரிப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது? உத்தரப்பிரதேசம்

📌பிரிட்டனின் தென் துருவப் பகுதிக்கு தனியாக சென்ற வந்துள்ள வெள்ளை இனத்தைச் சாராத முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ள இந்திய வம்சாவளி நபர் யார்? ஹர்பிரீத் சிங்

📌தற்போது 2025 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ரோபோட்டிக்ஸ் கண்டுபிடிப்பு மையமாக மாறுவதற்கான தனது இலக்கை அடைய ஐந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு எது? சீனா

📌தற்போது 2022 குளிர்கால ஒலிம்பிக்கின் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளவர் யார்? ஆரிப் முகமது கான்

📌தற்போது வாசியுங்கள் எங்கள் இந்தியா (பதே பாரத்) என்ற 100 நாள் வாசிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தவர் யார்? தர்மேந்திர பிரதான்

📌 சிரியம் நிறுவனம் வெளியிட்ட,குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்படுவதை உறுதிசெய்யும் தரவரிசையில் சென்னை சர்வதேச விமான நிலையம் உலக அளவில் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது? 8

📌 உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டியவர் யார்? நரேந்திர மோடி

📌 மின்சார வாகனம் தொடர்பான புதிய முதுநிலை பட்டப்படிப்பு தற்போது எந்த தொழில்நுட்ப கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? சென்னை ஐஐடி

📌 இப்சாஸ் என்ற நிறுவனம் நம்பகத்தன்மை குறித்து சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் முதலிடம் பிடித்தவர்கள் யார்? மருத்துவர்கள்

📌 பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ஆய்வு செய்யும் 31 எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் எம்.பி யார்? சுஷ்மிதா தேவ்

📌 பல்ராஜ் என்ற 50 டன் இழுவை படகை விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்திற்கு வழங்கிய நிறுவனம் எது? இந்துஸ்தான் ஷிப்யார்டு

📌 கேரள அரசு நடத்திய சர்வதேச தண்ணீர் திருவிழாவில் பங்கேற்ற இந்திய கடற்படையின் போர்க்கப்பல் எது? ஐஎன்எஸ் சர்தா மற்றும் ஐஎன்எஸ் கப்ரா

📌ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மத்திய அரசு யாரை நியமித்துள்ளது? வினய் குமார் திரிபாதி

📌 இந்திய கடலோர காவல்படையின் 24வது தலைவராக பதவியேற்ற இயக்குனர் ஜெனரல் யார்?வி.எஸ் பதானியா

📌 சண்டிகர் பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்பனா சாவ்லா ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தவர் யார்? ராஜ்நாத் சிங்

📌 நாட்டில் உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப தேர்வுகள் தொடர்பான பாடப்பிரிவுகளை வழங்க தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வி கூட்டணி 3.0 என்ற தளத்தை தொடங்கி வைத்தவர் யார்? தர்மேந்திர பிரதான்

📌 நியூஸ்ஆன்ஏர் செயலி வெளியிட்ட மிகவும் பிரபலமாக உள்ள உலகின் முதல் 10 நாடுகளுக்கான சமீபத்திய தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது? ஃபிஜி

நடப்பு நிகழ்வுகள்

📢உலகில் அதிவேக எடை குறைப்பு நிபுணராக உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் யார்? பிரதேக்ஷா பரத்வாஜ்

📢 எல்லைகளில்லா நிருபர்கள் என்ற சர்வதேச அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் கடந்த 2021ஆம் ஆண்டில் எத்தனை பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்?488

📢 19வது சர்வதேச திரைப்பட விழா எங்கு நடைபெற்றது? சென்னை

📢 உலகின் மூத்த வயதுடைய மூதாட்டி (119 வயது) கேன் டனாகா என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? ஜப்பான்

📢 பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணப் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரிக்க யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது? சுதிர் குமார் சக்சேனா

 📢 வடகொரியாவில் இரண்டாவது முறையாக சோதிக்கப்பட்டு உள்ள ஹைபர் சோனிக் ஏவுகணை ஒலியைவிட எத்தனை மடங்கு வேகமானது?5 மடங்கு

📢 தேசிய இளைஞர் விழா 2022 எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது? புதுச்சேரி

📢 சர்வதேச சூரிய கூட்டணி கட்டமைப்பில் 102வது உறுப்பினராக இணைந்து உள்ள நாடு எது? ஆன்டிகுவா (ம) பார்புடா

📢 எங்கு அமைக்கப்பட்டுள்ள சித்தரஞ்சன் புற்றுநோய் ஆய்வு மையத்தின் இரண்டாவது வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்? கொல்கத்தா

📢 மகளிருக்கான ஒன்டே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது? நியூசிலாந்து

📢 பிரிட்டனின் தென் துருவப் பகுதிக்கு தனியாக சென்று வந்துள்ள வெள்ளை இனத்தைச் சேராத முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ள இந்திய வம்சாவளி நபர் யார்? ஹர்பிரீத் சாண்டி

📢 உலக பிரெய்லி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? ஜனவரி 04

📢 இந்தியாவில் 73-ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளவர் யார்? பரத் சுப்பிரமணியம்

📢உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மூன்றாவது சோதனை ஓட்டம் எங்கு விடப்பட்டுள்ளது? கொச்சி

📢 உர்ஜித் படேல் எந்த வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?AIIB

நடப்பு நிகழ்வுகள்

🕊️ அனைத்து விமான வசதிகளையும் கொண்ட இந்தியாவின் முதல் ஹெலி மையம் எந்த நகரில் அமைக்கப்பட உள்ளது?குருகிராம்

🕊️ எந்த நாட்டிடமிருந்து 500 பேருந்துகள் 750 ஜீப்கள் வாங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது? இந்தியா

🕊️ நாட்டில் மேலும் எத்தனை இடங்களில் தேசிய புலனாய்வு முகமையின் கிளைகளை நிறுவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது?6 இடங்கள்

🕊️ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யும் ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனம் எது?அதானி என்டர்பிரைஸ் லிமிடெட்

🕊️ இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் வான் ரோந்து பணிகளில் எத்தனை அதிநவீன போர் விமானங்களை தற்போது இந்தியா சேர்த்துள்ளது? இரண்டு

🕊️ உத்தரப் பிரதேசம் அமேதி மாவட்டத்தில் உள்ள இந்திரா காந்தி ராஷ்டிரிய உரன் அகாடமி கடந்த ஆண்டில் எத்தனை மணி நேரம் விமான பயிற்சி அளித்து சாதனை படைத்துள்ளது?19,000 மணி நேரம்

🕊️ சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கு இந்தியா மற்றும் எந்த நாட்டின் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது? ஸ்பெயின்

🕊️ பேரிடர் மேலாண்மை துறையில் இந்தியா மற்றும் எந்த நாட்டின் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது? துர்க்மெனிஸ்தான்

🕊️ எந்த ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா)-தார்சுலா(நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா-நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?மஹாகாளி ஆறு

🕊️ தற்போது அமெரிக்க-இந்திய வணிக கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? அதுல் கேஷாப்

🕊️உலக ஹிந்தி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? ஜனவரி 10

🕊️ நிலவின் தரைப்பகுதியில் ஆய்வை மேற்கொள்ள எந்த நாட்டினால் சாங்கோ-5 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது? சீனா

🕊️ யாருடைய உயிர் தியாகத்தை போற்றும் வகையில் டிசம்பர் 26-ஆம் தேதி "வீர் பால் தினமாக" அனுசரிக்கப்படுமென பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்? சாகிப் சாதா ஸோராவர் சிங் & சாகிப் சாதா பத்தே சிங்

நடப்பு நிகழ்வுகள்

♻️சர்வதேச நிதியத்தின் அடுத்த தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? Pierre-Olivier Gourinchas

♻️2021 ஆம் ஆண்டிற்கான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?83-வது இடம்

♻️ அலிகான் ஸ்மைலோவ் எந்த நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்? கஜகஸ்தான்

♻️ஒலியை விட 5 மடங்கு வேகமான ஏவுகணையை மூன்றாவது முறையாக பரிசோதித்துள்ள நாடு எது? வடகொரியா

♻️ஆல்பைன் பனிச்சறுக்கு வீரர் ___ என்பவரை டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் (டாப்ஸ்) முதன்மை குழுவில் சேர்க்க விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது.முகமது ஆரிப் கான்

♻️ கடந்த 2018 முதல் 2021 வரை அதிக செல்வமகள் சேமிப்பு கணக்குகள் திறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது? இரண்டாவது

♻️ எந்த நகரத்தில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார்?கொல்கத்தா

♻️ கர்நாடக மாநிலம் பல்லூரியில் உள்ள ஜேஎஸ்டபிள்யூ விஜயநகர் எஃகு ஆலையில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் எஃகு தயாரிக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?ராம் சந்திர பிரசாத் சிங்

♻️ உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் ரூ.14169 கோடி மதிப்பிலான 336 கிமீ நீளம் கொண்ட 10 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியவர் யார்? நிதின் கட்கரி

♻️ டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு எந்த மாநில அரசு காவல் கண்காணிப்பாளராக பதவி வழங்கியுள்ளது? அசாம்

♻️ தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 19-வது கூட்டம் யாருடைய தலைமையில் நடைபெற்றது? பூவேந்தர் யாதவ்

♻️உலக இந்தி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? ஜனவரி 10

♻️ஊதிய உச்சவரம்பின்றி அனைத்து பத்திரிக்கையாளர்களையும் அரசின் காப்பீட்டில் சேர்ப்பதற்கான திட்டம் தற்போது எந்த மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது? தமிழ்நாடு

நடப்பு நிகழ்வுகள்

📌இங்கிலாந்து நாட்டின் நார்த் லிசென்ஸ்டர்ஷுரே  பகுதியில் ருத்லேண்ட் என்ற இடத்தில் எத்தனை மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் டிராகனின் புதை படிமங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது?180 மில்லியன்

📌 அதிகளவிலான கார்பன் மற்றும் மீத்தேன் நச்சு உமிழ்வு,அதிக வெப்பம் நிலவிய ஆண்டுகளில் 2021 ஆம் ஆண்டு எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது?05-வது

📌 இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் எத்தனை கிலோமீட்டர் தூரத்திற்கு சொகுசு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது?386 கிலோமீட்டர்

📌 தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும்,  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் திறந்து வைத்தவர் யார்? நரேந்திர மோடி

📌 இந்திய நாடானது அரிஹந்த் ரக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை எந்த நாட்டு உதவியுடன் கட்டமைத்து வருகிறது? ரஷ்யா

📌 நிகரகுவாவின் அதிபராக எத்தனையாவது முறையாக டேனியல் ஒர்டேகா பதவியேற்றுள்ளார்?05-வது முறை

📌 கச்சாய் எலுமிச்சை திருவிழா எந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது? மணிப்பூர்

📌 2022 ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது? சுவிட்சர்லாந்து

📌 ஐரோப்பிய ஒன்றியத் திட்ட அமைப்பானது எந்த வருடத்தை புவியில் நிலவிய ஐந்தாவது மிக வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளது?2021

📌 பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரிக்க யாருடைய தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது?இந்து மல்ஹோத்ரா

📌 கஜகஸ்தானில் புதிய பிரதமராக யாரை நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது? அலிகான் ஸ்மைலோவ்

நடப்பு நிகழ்வுகள்

📌 மத்திய பிரதேசத்தில் இருந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அதிகம் அறியப்படாத நாயகர்கள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தவர் யார்? அருண் கோயல்

📌 துபாயில் நடைபெற்ற சர்வதேச நாட்டுப்புற கலை விழாவில் தங்கப்பதக்கம் வென்றுள்ள சுமித் பலே எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? மஹாராஷ்டிரா

📌Mrs World 2022 இல் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டவர் யார்?ஷைலின் ஃபோர்டு

📌 சமீபத்தில் காலமான சமூக ஆர்வலரான சாந்தி தேவிக்கு எந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது?2021

📌Mrs World 2022 போட்டியில் சிறந்த தேசிய ஆடை விருதை வென்றுள்ள இந்திய போட்டியாளர் யார்?நவ்தீப் கவுர்

📌 தற்போது ___  ராக்கெட் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் 105 சிறிய ரக சாட்டிலைட்டுகளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது? பால்கன் 9

📌 இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது அதிகாரபூர்வ குயின்ஸ் பேட்டன் தொடர் ஓட்டத்தின் மாற்றத்தை உருவாக்குபவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் யார்?வினிஷா உமாசங்கர்

📌சாஸ்த்ரா 2022 அறிவியல் தொழில்நுட்பத் திருவிழா எந்த இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்றது? சென்னை ஐஐடி

📌 ஒவ்வொரு ஆண்டும் ____ அன்று உலகத்தமிழர் புலம் பெயர்ந்தோர் நாளாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது? ஜனவரி 12

📌 ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு 2022 ஆம் ஆண்டில் எத்தனை நாடுகளில் நடத்தப்படுகிறது?143 நாடுகள்

நடப்பு நிகழ்வுகள்

💥 ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் (பிபிஎல்) டி20 போட்டியில் விளையாடிய முதல் இந்திய ஆடவர் என்கிற பெருமையை பெற்றுள்ளவர் யார்?உன்முக்த் சந்த்

💥புளும்பெர்க் பிலன்த்ரோபிஸ் நிறுவனம் நடத்திய நகர்ப்புறங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய நகரம் எது?ரூர்கேலா

💥 எந்த பெயர் கொண்ட பெருநகர காவல் துறையின் விடுப்புச் செயலியை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்?CLAPP

💥 இந்தியா கேட் பகுதியில் யாருடைய முழு உருவச்சிலை நிறுவப்படுமென பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்? சுபாஷ் சந்திர போஸ்

💥 ஆந்திர மாநில ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து எத்தனையாக உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் செய்துள்ளது?62

💥சக்கர நாற்காலி மூலம் 24 மணிநேரத்தில் 213 கிலோமீட்டர் பயணித்து புதிய உலக சாதனை படைத்துள்ள பாரா-தடகள வீரரின் பெயர் என்ன?கமலகாந்த் நாயக்

💥 ஆடைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவின் (ஏஈபிசி) புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் யார்? நரேந்திர குமார் கோயங்கா

💥 இந்தியாவின் ஆப்பிள் ஏற்றுமதி எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது?82 சதவீதம்

💥அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி பவர் லிமிடெட் இயக்குநர்கள் குழு, அதானி பவர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக யாரை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது?ஷெர்சிங் பி கியாலியா

💥2021 ஆம் ஆண்டிற்கான "தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தங்க விருது" எந்த அமைப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?ராம்கோ சிமெண்ட்ஸ்

நடப்பு நிகழ்வுகள்

♻️உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவையில் அதிக மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் TCS நிறுவனம் எந்த இடத்தில் உள்ளது?02-வது இடம் 

♻️ தொழில் முனைவோர் குழு ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள கனடா இந்து வர்த்தக சம்மேளனம் என்ற புதிய அமைப்பை வழி நடத்துபவர் யார்? நரேஷ் சாவ்தா

♻️ ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படைக் கப்பல்களுடன் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய போர்க்கப்பல்கள் எது?உரகா மற்றும் ஹிராடோ

♻️ தற்போது அரபிக்கடலில் நடைபெற்ற இந்திய ரஷ்ய கடற்படையினர் கூட்டு பயிற்சியில் இந்தியாவின் எந்த போர்க்கப்பல் ஈடுபட்டது? ஐ.என்.எஸ் கொச்சி

♻️கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தா "சபாகிரகம்" என்ற அவைக்கூடத்தை திறந்து வைத்தவர் யார்?ஆர்.என்.ரவி

♻️ இந்தியாவின் நிதியுதவியுடன் எந்த நாட்டிற்கு மலிவு விலையில் வீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்?மோரீஷஸ்

♻️ மிகச்சிறிய வயதில் விமானத்தில் தனியாக உலகை வலம்வந்து சாதனை படைத்துள்ள ஸாரோ ரூதர்ஃபோர்டு எந்த நாட்டைச் சேர்ந்த பெண்மணி? பெல்ஜியம்

♻️ எங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீமத் பஞ்சலோஹ ராமானுஜர் சமத்துவச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரியில் திறந்து வைக்க உள்ளார்? ஹைதராபாத்

♻️ 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய கலைத்திருவிழா போட்டிகளில் 7 பரிசுகளை வென்று எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது? தமிழ்நாடு

♻️ சமீபத்தில் காலமான உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சாடர்னினோ டிலா ப்யூன்டே எந்த நாட்டை சேர்ந்தவர்? ஸ்பெயின்

♻️ பங்குச் சந்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த பெயரில் செயலியை இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது?சார்தி

♻️ மொரீசியஸ் நாட்டின் வீட்டு வசதித் திட்டமானது எந்த நாட்டின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது? இந்தியா

♻️ பசிபிக் பெருங்கடலில் எந்த தீவுப் பகுதியில் பிரமாண்டமான பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?டஹிட்டி தீவு

♻️ மனிதர்களை நிலாவுக்கு அனுப்பும் சுகன்யா திட்டத்தில் ஒரு பகுதியாக விகாஸ் என்ஜினை எத்தனை வினாடிகள் இயக்கி வெற்றிகரமாக பரிசோதித்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது?25 வினாடிகள்

♻️ அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் எத்தனை சதுப்புநில மான்கள் இருப்பது தெரியவந்துள்ளது?868

♻️ இந்திய ராணுவத்துக்கு ஏடி4 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள ஸ்வீடன் நிறுவனம் எது? சாப் நிறுவனம்

நடப்பு நிகழ்வுகள்

📌 தமிழகத்தில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக பங்காற்றியதற்காக எத்தனை நபர்களுக்கு "காந்தியடிகள் காவலர் பதக்கம்" வழங்கப்பட்டுள்ளது?05 பேர்

📌 டெல்லி இந்தியா கேட் பகுதியில் யாருடைய ஹோலோகிராம் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

📌 உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச சங்கத்தின் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? சுஷ்மிதா சென்

📌உக்ரைன் ரஷ்யா பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஜெர்மன் கடற்படைத் தளபதி _ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்?கே அச்சிம் ஸ்கோன்பாக்

📌 தமிழ்நாடு அரசு,தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக யாரை நியமித்துள்ளது?காஜா முகைதீன்

📌 2021 ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் ___ என்பவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது? முகமது ரிஸ்வான்

📌 சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது 2022-க்கு தேர்வாகி உள்ளவர் யார்? வினோத் சர்மா

📌 நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கு ___ திட்டமிட்டுள்ளது?நிதி ஆயோக்

📌 இந்திய ராணுவத்தை சேர்ந்த ___ குழுக்கள் இத்தனை ஆண்டு காலத்தில் சீருடை, துப்பாக்கி ஆகியவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை காட்சிப்படுத்த உள்ளன?6 குழுக்கள்

📌2022 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார் விருதினை எத்தனை குழந்தைகள் பெற உள்ளனர்?29

📌 சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?பி.வி சிந்து

📌2022 ஆம் ஆண்டிற்கான நேதாஜி விருது ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான யாருக்கு வழங்கப்பட்டது?ஷின்ஜோ அபே

📌2021 ஆம் ஆண்டிற்கான "ஊழல் புலனாய்வு குறியீடு" பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?85-வது இடம்

📌 டாக்கா சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய திரைப்படப் போட்டிப் பிரிவில் சிறந்த திரைப்பட விருதை பெற்றுள்ள தமிழ் திரைப்படம் எது? கூழாங்கல்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY