Ads Right Header

புயல் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!!




புயலுக்கு பெயர் வைப்பது யார்?  புயலுக்கு பெயர் வைக்கும் விதிமுறைகள் குறித்து பார்ப்போம். 

புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். அப்போதுதான் அந்த புயல்கள் நமது நினைவில் எளிதாக இருக்கும்.  பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் அறிவியல் சார்ந்த விஞ்ஞானிகள், ஊடகங்கள், பேரிடர் மேலாண்மை துறை ஆகியவற்றுக்கும் இந்த பெயர் வைப்பு மிகவும் உதவுகிறது.புயல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். தயார் நிலையில் இருக்க முடியும். மேலும் குழப்பங்களை தவிர்க்கவும் இது வழிவகுக்கும்.

புயலுக்கு பெயர் வைக்கும் விதிமுறைகள்:

நமது உயிரியல் பாடத்தில் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு இருசொற்பெயர் அறிவியல் பெயர் வைப்பதற்கான விதிமுறைகளை படித்திருப்போம். அது போல புயலுக்கு பெயர் வைக்கவும் விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறையை பின்பற்றா விட்டால் அப்பெயர் நிராகரிக்கப்படும்.

1.மிக மோசமான பெயராகவோ யாருடைய மனதையும் புண்படுத்தும் பெயராக இருக்க கூடாது.

2.பாலினம் அரசியல் மதம் மற்றும் நம் நாட்டின் கலாச்சாரம் கொண்டதாக இருக்கலாம்.

3. எட்டு சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

4.பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.

5.பெயர் வைக்கும் நாடுகள் அதன் உச்சரிப்புடன் கொடுக்க வேண்டும்.

புயலுக்கு யார் பெயர் வைப்பார்கள்? (India vera level) 

உலகில் 15 நாடுகளில் உருவாகும் புயலுக்கு இந்திய வானிலை மையம் தான் பெயர் வைக்கும். 
புயல்கள் மற்றும் சூறாவளி உருவாதல் குறித்து 12 நாடுகளுக்கு இந்திய வானிலை மையம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இந்தியா  உட்பட வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, பாகிஸ்தான், ஓமன், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இந்த மண்டலத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.

அதன் பின்னர் 2018-ஆம் ஆண்டு ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரக நாடுகள், ஏமன் ஆகிய நாடுகளும் இந்திய வானிலை மைய மண்டலத்தில் இணைந்தது.

2004 ஆம் ஆண்டு இந்த எட்டு நாடுகளும் எட்டு பெயர்களை பரிந்துரை செய்தது அந்த பட்டியலை இந்திய வானிலை மையம் வைத்திருக்கும் .மொத்தம் 64 பெயர்கள் பட்டியலிடப்பட்டனர். இந்தியப்பெருங்கடல் பகுதியில் புயல்கள் உருவாகும்போது இந்த அட்டவணையிலிருந்துதான் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது புதிய பெயர் பட்டியலின் படி புயலுக்கு பெயர் வைத்து வருகிறோம்.  இதனை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணிக்கிறது. சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டு பெயரும் வைக்கப்படும். 

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன? இப்பதிவை விளக்கமாக விளக்கியுள்ளேன் பாருங்கள். இது எல்லாம் தெரிந்து கொள்வது கட்டாயம். இது எல்லாம் பள்ளி பாடங்களிலே உள்ளது. உங்கள் வீட்டில் மாணவர்கள் இருந்தால் கட்டாயம் படிக்க சொல்லுங்கள்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கும் . மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு நிலை

கடற்பரப்பில் 26 °C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது. 

அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது இதையே காற்றழுத்த தாழ்வு நிலை என்கிறோம்.

காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க காற்றழுத்த தாழ்வுநிலையானது படிப்படியாக  வலுவடைகிறது. 

காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

காற்றானது மணிக்கு 32 - 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

காற்றானது மணிக்கு 52 - 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.

காற்றானது மணிக்கு 63 - 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.

காற்றானது மணிக்கு 88 - 117 கி.மீ வேகத்தில் வீசினால்  தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 118 - 165 கி.மீ வேகத்தில் வீசினால்  மிகத் தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 165 - 221 கி.மீ வேகத்தில் வீசினால் கடும் தீவிர புயல்

காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால்  அதி தீவிர புயல். 

புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாகத் துறைமுகங்களில் 11 விதமான புயல் கூண்டுகள் ஏற்றப்படும் அதன் விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1ம் எண் கூண்டு: புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது.
 
2ம் எண் கூண்டு: புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக ஏற்றப்படுவது தான் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு. இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது.
 
3ம் எண் கூண்டு: திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
 
4ம் எண் கூண்டு: துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் இது கடற்கரையை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை
 
5ம் எண் கூண்டு: துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.
 
6ம் எண் கூண்டு: துறைமுகத்தில் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
 
7ம் எண் கூண்டு:  துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை

8ம் எண் கூண்டு: ஏற்றப்பட்டால், புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கரையைக் கடந்து செல்லும்

9ம் எண்  கூண்டு: புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
 
10ம் எண் கூண்டு: புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்துசெல்லும் புயலால் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
 
11ம்  எண் கூண்டு :11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள். எப்போதுமே அரபிக்கடலில் உருவாகுகிற புயலை விட வங்க கடலில் உருவாகுகிற புயலுக்கு பலம் அதிகம். 


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY