Ads Right Header

நடப்பு நிகழ்வுகள்! (01/05/2020)



தமிழ்நாடு

வெளிநாடுவாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப தனி இணையதளம்

* வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையதள முகப்பில் பதிவுகள் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு

* கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

 * தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு , விருப்பாட்சி வாழைப்பழம் , கொடைக்கானல் மலை பூண்டு , ஈரோடு மஞ்சள் , பழனி பஞ்சாமிர்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

 * இந்நிலையில் 34 - வது பொருளாக கோவில்பட்டி கடலைமிட்டாய் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களை ஈர்க்க
சிறப்பு குழு

 * கரோணா நோய் தாக்குதலுக்கு பிறகு குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ஏற்கனவே அதிக முதலீடுகளை செய்துள்ள நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை :

பிற நாடுகளில் இடம் பெற வாய்ப்புள்ள நிறுவனங்களை கண்டறிதல்.
அவர்களை தமிழகத்துக்கு ஈர்க்க வழங்க வேண்டிய விரைவான ஒற்றைச்சாளர் அனுமதிக்கான வழிமுறைகள் ,  சிறப்பு சலுகைகள் , அவர்களை ஈர்க்க வாய்ப்புள்ள தொழில் பூங்காக்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் கண்டறிந்து விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளை இந்த சிறப்புக்குழு மேற்கொள்ளும்.

தேசிய நிகழ்வுகள்

மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தல்

 மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு தேர்தல் நடத்த மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு சிவசேனை தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். கூட்டணி அரசின் முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி பதவியேற்றார் .

அவர் மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாததால் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினராக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார் .

அவருக்கான கால அவகாசம் மே 28 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது .

 சர்வதேச மத சுதந்திரம் 2020

சர்வதேச மத சுதந்திரத்திற்கான 2020ஆம் ஆண்டு அறிக்கையை அமெரிக்கா ஆணையம் வெளியிட்டது. மத சுதந்திர விவகாரத்தில் கவலைப்பட வேண்டிய நாடாக இந்தியா உள்ளது.

மத சுதந்திரத்தை நசுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.கடந்த 2004 முதல் இந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இருந்து வந்தாலும் சமீப காலமாக இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில் அதிகரித்து இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

India solar market leaderboard 2020

 India solar market lenderboard 2020 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி இந்தியா கடந்த 2019ஆம் ஆண்டு வரை சூரிய ஒளி மூலம் 73 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.

இந்த அறிக்கையை பெர்கோம் இந்தியா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.

 உலக நாடுகள் பொருத்தவரை சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த மெர்கோம் இந்தியா ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்காவின் மெர்கோம் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமாகும்.

பொருளாதாரம்

பட்ஜட் வெளிப்படைத்தன்மை

இந்த கணக்கெடுப்பை சர்வதேச பட்ஜெட் கூட்டமைப்பு மேற்கொண்டது. இந்தியா 100க்கு 49 புள்ளிகள் எடுத்து 53 ஆவது இடத்தில் உள்ளது.இதில் நியூசிலாந்து நாடு 87 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.உலக அளவில் சராசரி வெளிப்படைத்தன்மை கணக்கெடுப்பின்படி 45 புள்ளிகள் பெற்றுள்ளது.

அறிவியல்மற்றும் தொழில்நுட்பம்

இன்ஜெனியூயிட்டி அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி மாணவி வனிஷா ரூபானி பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பறக்கும் ஹெலிகாப்டருக்கு இன்ஜெனியூயிட்டி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் வேற்றுகிரகத்தில் முதன்முறையாக பறக்க இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

சர்வதேச நிகழ்வுகள்

ஐநா தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை

கரோணா நோய்த்தொற்றும் தொழிலாளர் உலகமும் என்ற தலைப்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

 அறிக்கையில் கரோணா நோய் தொற்று பாதிப்பு காரணமாக உலகின் 160 கோடி முறைசாரா தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

 மே தினம்

மே - 1 சர்வதேச தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது .

இது மே தினம் என்றும் அழைக்கப்படுகிறது .இந்த தினம் தொழிலாளர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களை கொண்டாடுகிறது.

 இந்தியாவின் முதலாவது தொழிலாளர் தினமானது எம் சிங்காரவேலர் என்பவரால் சென்னையில் 1923ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

 இந்தியாவின் முதலாவது வர்த்தக கூட்டினை சிங்காரவேலர் தொடங்கினார் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கிவர்களில் சிங்காரவேலரும் ஒருவராவார்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர் .

 இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது . இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் ( chartists ) ஆகும் . சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது . அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ' ' சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது . 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர் . பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும் , சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு , 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது . இந்த அறைகூவலே மே முதல் நாளை , சர்வதேச தொழிலாளர் தினமாக , மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY