Ads Right Header

ANSWER KEY!1. மண்டையோடற்ற உயிரி எது?

 A.ஏகார்னியா🤣
 B.ஏசெபாலியா
 C.ஏப்டீரியா
 D.ஏசிலோமேட்டா

2. தோலுரித்தலின்(எக்டைசிஸ்) போது பின்வருவனவற்றில் எது நீக்கப்படுகிறது?

 A.கைட்டின்😍
 B.மேன்டில்
 C.செதில்கள்
 D.செவுள் உறை

3. நத்தையின் அறிவியல் பெயர்?

A.பைலா குளோபோசா😍
B.அஸ்டிரியஸ் ருபென்ஸ்
C.பிங்க்டேடா ஃபியுகேட்டா
D.பொடார்சிஸ் மியுராலிஸ்

4. I.இதன் முதுகில் நத்தை போன்ற அமைப்பு உள்ளது.
II.இது குளிர்விப்பான் போன்று செயல்பட்டு உடலை குளிர்விக்கிறது.
 கீழ்க்கண்ட எந்த ஊர்வன.

A.எக்ஸோசீட்டஸ்
B.புளூவியலிஸ் டோமினிக்கா
C.டைமெட்ரோடான்😍
D.ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ்

5. நீர் வாழ் உயிரி வளர்ப்பு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A.ஹைட்ரோபோனாலஜி
B.அக்வா கல்ச்சர்😎
C.பியர்ல் கல்ச்சர்
D. போமாலஜி

6.கூற்று: முதிர்ந்த நாடாப்புழுக்களால் பாலூட்டிகளில் ஏற்படும் தொற்று நிலை டீனியாசிஸ் எனப்படும்.
 காரணம்:இது சரியாக சமைக்கப்படாத பன்றி இறைச்சியினை உண்ணுவதால் ஏற்படுகிறது.

A. கூற்று சரி காரணம் தவறு
B. கூற்று தவறு காரணம் சரி
C. கூற்று காரணம் இரண்டும் தவறு
D. கூற்று காரணம் இரண்டும் சரி😎

7. உண்மையான உடற்குழி அமைப்பை உடையவை?

 A.மண்புழு😍
 B.தட்டை புழுக்கள்
 C.உருளைப் புழுக்கள்
 D.நாடாப்புழுக்கள்

8. வெஸ்பா ஓரியன்டலாசிஸ்  என்ற உயிரினத்தின் வயிற்றுப் பகுதியில் மஞ்சள் திட்டுகள் மற்றும் அசாதாரண மேல் தோல் அமைப்பு போன்ற பகுதியானது எத்தனை அடுக்குகளை கொண்டு தடித்து காணப்படுகிறது?

A.28
B.30😄
C.35
D.40

9. தனது வாழ்நாளில் 54 கேலன் நீரை நீராவியாக வெளியேற்றும் தாவரம் எது?

 A.மக்காச்சோளம்🙄
 B.கரும்பு
 C.சூரியகாந்தி
 D.உருளைக்கிழங்கு

10.பொதுவாக தாவரம் உறிஞ்சும் நீரில் எத்தனை சதவிகிதம் மட்டுமே கார்போஹைட்ரேட் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது?

A.0.1😆
B.0.5
C.1
D.1.5

11.I.எலிசியா குளோரோட்டிகா  என்ற கடல் அட்டை வௌச்சீரியா லிட்டோரியா என்ற பாசியை உட்கொள்கின்றன.
 II.உட்கொள்ளப்பட்ட பாசி கடல் அட்டை உடலில் முழுமையாக ஜீரணம் அடையாமல் அட்டையின் உடலில் தங்கி இருந்து தொடர்ந்து ஒளிச்சேர்க்கை மூலமாக அட்டைக்குத் தேவையான உணவை அளிக்கின்றது.
சரியானதை தேர்ந்தெடு.

A. I
B.II
C.இரண்டுமில்லை
D. இரண்டும்😗

12. I.தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் மட்டுமே காரணம் என்று ஜோசப்  பிரஸ்ட்லி விளக்கினார்.
  II.தாவரங்கள் உணவு உற்பத்தியில் ஈடுபடுவதை ஒரு சோதனையின் மூலம் வான் ஹெல்மான்ட் நிருபித்தார்.
 III.வளைதலை நிகழ்த்தும் வேதிப்பொருளானது  நீரில் கரையும் தன்மையுடையது என்று பீட்டர் பாய்சன் விளக்கினார்.
சரியானதை தேர்ந்தெடு.

A. I
B. II
C. III😆
D. எதுவுமில்லை

13. அறிவியல் அறிஞரான ஜெகதீஸ் சந்திரபோஸ் தனது ஆய்விற்கு பயன்படுத்திய தாவரம் எது?

A.மைமோசா புடிகா
B.புருனிச்சியா ஓவேட்டா
C.ஹீலியாந்தஸ் அன்னுவஸ்
D.டெஸ்மோடியம் கைரான்ஸ்😗

14. தவறானதை தேர்ந்தெடு.
 1.இந்தியாவில் குடற்புழு நீக்க விழிப்புணர்வு நாள்- டிசம்பர் 10
 2.உலக அயோடின் குறைபாடு தினம்- ஆகஸ்ட் 21
 3.உலக உணவு தினம்- நவம்பர் 16

A. இவை அனைத்தும்😗
B. 1 மற்றும் 2
C. 2 மட்டும்
D. 3 மட்டும்

15. கீலியாசிஸ் நோயை உண்டுபண்ணும் வைட்டமின் எது?

A.B1
B.B2😗
C.B6
D.B12

16. தவறானது தேர்ந்தெடு.

 A.மருத்துவத்துறை ஆராய்ச்சி மற்றும் தடய அறிவியல் ஆய்வு கூடங்களில் பலவகையான கலவைகளை பிரித்தெடுப்பதில் வண்ணப்பிரிகை முறை விரிவான பயனை கொண்டுள்ளது.
 B.மருத்துவ ஆய்வுக்கூடங்களில் புரத மாதிரிகள் மின்னாற்கூழ்ம நகர்வு என்ற தத்துவத்தின் அடிப்படையில் பிரித்தெடுக்கப்படுகின்றன.
 C.வண்ணப்பிரிகை வரைபடத்தில் பொருட்களின் இருப்பிடத்தை புற ஊதாக் கதிர்களைக் கொண்டு கண்டறியலாம்
 D.வாசனை திரவியங்கள் தயாரித்தல் மற்றும் பல்வேறு மூலங்களில் இருந்து சாயங்கள் தயாரித்தல் கரைபொருள் சாறு இறக்கல் பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது.😙

17.Rf அளவீடு என்பது?

 A.கரைப்பான் நகரும் தொலைவு/ கரைபொருள் நகரும் தொலைவு
 B.கரைபொருள் நகரும் தொலைவு/ கரைதிறன் நகரும் தொலைவு
 C.கரைப்பான் நகரும் தொலைவு/ கரைதிறன் நகரும் தொலைவு
 D.கரை பொருள் நகரும் தொலைவு/ கரைப்பான் நகரும் தொலைவு🤗

18. டின்டால் விளைவு கீழ்க்கண்ட எந்த கரைசலுக்கு உட்படுவதில்லை?

 A.தொங்கல் கரைசல்
 B.கூழ்மக் கரைசல்
 C.உண்மை கரைசல்😍
 D.சாதாரண கரைசல்

19. மாறா வெப்பநிலையில  நிறையுள்ள ஒரு நல்லியல்பு வாயுவின் அழுத்தமானது அதன் கன  அளவிற்கு எதிர் விகிதத் தொடர்புடையது.
         கீழ்க்கண்ட எந்த விதி?

A.நல்லியல்பு விதி
B.பாயில் விதி😍
C.பாஸ்கல் விதி
D.லாரன்ஸின் விதி

20. ஒரு பொருள் அதன் கொதி நிலையில் திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் செயலுக்கு-----------என்று பெயர்?

 A.ஆவியாதல்
 B.கொதித்தல்🙂
 C.உறைதல்
 D.உருகுதல்

21. வைரத்தின் உருகுநிலை/0℃?

A.4832
B.3550😆
C.1540
D.2900

22.
I.ராபர்ட் பிரவுன் மகரந்தத் துகள்கள் நீரில் வளைந்து நெளிந்து ஊசலாடுவது கண்டார்.
II. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மகரந்தத் துகள்களானது தனியாக நீர் துகள்கள் அல்லது மூலக்கூறுகளால் நகர்கின்றன என்பதை விளக்கினார்.
III. ரிச்சர்ட் ஃபெயின்மெனின்  மிக முக்கியமான கண்டுபிடிப்பு அணுவிடைய நிலைப்பாடு.

சரியானவற்றை தேர்ந்தெடு.
A.I
B.II
C.III
D.அனைத்தும்😆

23. ஆட்டோமஸ் (Automus)ன் மதிப்பு?

A.150 ms
B.160 ms😗
C.170ms
D.1/6.25 s

24. உந்தத்தின் வாய்ப்பாடு?

 A.இடப்பெயர்ச்சி/ காலம்
 B.நிறை× முடுக்கம்
 C.திசைவேகம்/ காலம்
 D.நிறை× திசைவேகம்😐

25.10⁹ ன் முன்னீடு?

A.ஜிகா🙂
B.டெரா
C.மெகா
D.நானோ

26. எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடாரியில் உள்ள குறியீடுகள் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டவையில் உள்ள குறியீடுகளை ஒத்திருக்கின்றன என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்?

A. காலிபங்கன்
B. லோத்தல்
C. மயிலாடுதுறை😏
D. மெஹெர்கர்

27. சிந்துவெளி எழுத்து முறையின் பொருளை இன்னும் கண்டுபிடிக்கப்படாத காரணம் என்ன?

A. எழுத்துப் பொறிப்புகள் மிகவும் நீண்டு இருந்ததன் காரணமாக.
B. சிந்துவெளி எழுத்துக்களில் மும்மொழிகள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக.
C. எழுத்துப் பொறிப்புகள் மிகவும் குறுகிய வை மற்றும் தொடர்கள் சரியாக ஐந்துக்கும் குறைவான குறியீடுகளை கொண்டிருந்ததன் காரணமாக.😋
D.  எழுத்துக்கள் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்டிருந்ததன் காரணமாக.

28. சிந்துவெளி எழுத்துகளின் குறியீடுகள் திராவிட ஒற்றை குறிப்புகளுடன் ஒத்துப்போகின்றன என்று கூறிய வரலாற்று அறிஞர்?

 A.பர்போலா🙂
 B.ஐராவதம் மகாதேவன்
 C.யூரி நோரோசோவ்
 D.அலெக்சாண்டர் கன்னிங்காம்

 29.மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ள சான்றுகளில் பொருந்தாதது எது?

 A.பூசாரி அரசன்
 B.நடன மாது
 C.மதகுரு
 D.நெருப்புக் குண்டம்😛

 30.ஹைரோகிளிபிக் எனப்படும் சித்திர எழுத்து முறை?

 A.எகிப்திய எழுத்து முறை😛
 B.சீன எழுத்துமுறை
 C.மெசபடோமியா எழுத்துமுறை
 D.சிந்து சமவெளி  எழுத்து முறை

31.1863ல் ராபர்ட் புரூஸ் பூட் என்ற இங்கிலாந்து நிலவிய லாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் எந்த காலத்தை சேர்ந்த  கருவிகளை கண்டுபிடித்தார்?

A. புதிய கற்காலம்
B. பழங் கற்காலம் 😜
C. இரும்பு காலம்
D. இடை கற்காலம்

32.பொருத்துக.
டோல்மென்.      1.கல்லறைகள்
சிஸ்ட்.                 2.ஈமத்தொட்டிகள்   
மென்ஹிர்.        3.கற்திட்டை
சார்கோபேகஸ் 4.நடுகற்கள்

A.3124
B.1234
C.2341
D.3142🙁

33. ஹரப்பா காலகட்டத்தில் ரோஹரி செர்ட்  பிளேடுகள் குஜராத்தின் எந்த பகுதியில் கிடைத்தன?

A.லோத்தல்
B.ஷிகர்புர் 🤑
C.டோலா விரா
D.சூர்கோடா

34. சிந்துவெளியின் எல்லைகளில் பொருந்தாதது எது?

A.மேற்கு -(பாகிஸ்தான்)-சுர்கொடா😟
B.வடக்கு  -(ஆப்கானிஸ்தான் )ஷார்ட்டுகை
C.கிழக்கு-(உத்திரபிரதேசம்)-ஆலம்கிர்புர்
D.தெற்கு -(மகாராஷ்டிரா )-டைமாபாத்

35.  சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ராகிகரி எந்த மாநிலத்தைச் சார்ந்தது?

 A.குஜராத்
 B.ராஜஸ்தான்
 C.ஹரியானா😯
 D.பஞ்சாப்

36." ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்த்திருத்தப்பட்டால் அவரது குடும்ப வாழ்க்கை முறை படுத்தப்படும் குடும்பம் முறைப்படுத்தப்பட்டு விட்டால் தேச வாழ்வு முறைப்படுத்தப்பட்டு விடும் "என்று கூறியவர்?

A.குவின் சி சுவாங்
B.லாவோட்சு
C.கன்பூசியஸ் 🤓
D.தாவோசின்

37.கூற்றுகளை கவனி
1.பாறைக்கோளம் மற்றும் புவி மேலோடு இரண்டும் வெவ்வேறானவை அல்ல.
2.பாறைக்கோளம்=புவி மேலோடு +மேல் கவசம்
3.புதன் வெள்ளி செவ்வாய் கோள்களின் பாறைக்கோளம் புவியின் பாறைக்கோளத்தை விட தடிமனாக உள்ளது.
தவறான கூற்று எது?

A.1மட்டும் 😛
B.2மட்டும்
C.3மட்டும்
D.1 2 மட்டும்

38.உருமாரிய பாறைகள் மாறுவதை பொருத்துக.
1.பசால்ட்               -நீஸ்
2.சுண்ணாம்பு பாறை -குவர்ட்ஸைட்
3.கிரானைட்               -சலவை கல்
4.மணற்பாறை        -சிஸ்ட்

A.4321
B.4312🐍
C.4231
D.4123

39. உறங்கும் எரிமலைகளில்  பொருந்தாதது எது?

A.ஹீட் மலை
B.மௌனகியா
C.எட்ஜிசா
D.எட்னா 😇

40.2004 dec 26 ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை இதுவரை உலகில் பேரழிவை ஏற்படுத்திய இயற்கை பேரிடர்களில்  எத்தனையாவது இடத்தைப் பெறுகிறது?

A.4வது
B.6வது 😻
C.5வது
D.8வது

41. 2012ல் மிக ஆழமான பகுதி என்ற அந்தஸ்தைப் பெற்ற z-44 சாவியோ கிணறு( ரஷ்யா )ஆழம்?

A.12262
B.12367
C.12376👨
D.12382

42.பொறுத்துக.
1.முடியாட்சி            -வெனிசுலா
2.தனி நபர் ஆட்சி -ஸ்பெயின்
3.உயர் குடியாட்சி -கத்தார்
4.சிறுகுழு ஆட்சி -சவுதி அரேபியா

A.4321
B.3214
C.4213
D.3421🐍

43.கூற்றுகளை கவனி
1. வேத காலத்திற்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது.
2. 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏதன்ஸ் போன்ற நாடுகளில் மக்களாட்சி முறை தோன்றியது
3. உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக நகர குழுக்கள்  இருந்தது.
4. சோழர்கள் காலத்தில் குடவோலை முறை இருந்தது.

A.அனைத்தும் சரி 🙈
B.1 3 தவறு
C.3 தவறு
D.1 4சரி

44. இந்திய வரலாற்றின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற வருடம்?

A.1952
B.1951
C.1920👩‍🏫
D.1921

45.1952 ல் நடந்த பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட்டது?

A.364👩‍🚒
B.489
C.362
D.589

46. பொருளாதார மேம்பாட்டுக்கான குறியீடுகளும் பொருந்தாதது எது?

A.NNP
B.HDI
C.PPP
D.NDP👱

47. வாங்கும் திறன் சமநிலையில்
 முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகளை சரியாக வரிசைப்படுத்துக.
1.அமெரிக்கா 2.இந்தியா 3.சீனா

A.123
B.312🐠
C.132
D.321

48. உலகின் மனித வளர்ச்சி அறிக்கை ஐநாவின் எந்த  அமைப்பால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது?

A.UNESCO
B.UNICEF
C.UNDP🤶
D.UN பொது sசபை

49. 2011 கணக்கீட்டின்படி தமிழ்நாடு பாலின விகித  எண்ணிக்கையை விட  மூன்று குறைவாக உள்ள மாநிலம்?

A.கர்நாடகா
B.தெலுங்கானா
C.குஜராத்
D.ஆந்திரா 🤶

50. காடுகள் ,ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிர்கள் மற்றும் இயற்கை சூழலை பேணுதல் அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்தல் இந்தக் கடமை அடிப்படை கடமைகளில் எத்தனையாவது கடமை?

A.ஏழாவது 🤰
B.ஆறாவது
C.ஒன்பதாவது
D நான்காவது

51. தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றி அமர்த்தியா சென் எழுதிய  புத்தகத்தில் தமிழகமும் கீழ்க்கண்ட எந்த மாநிலமும் சமத்துவமின்மையை களைவதில் அரும்பாடுபட்டு வெற்றி அடைந்தன என்று குறிப்பிடுகிறார்?

 A.கர்நாடகா
 B.கேரளா🎅
 C.ஆந்திர பிரதேசம்
 D.இமாச்சலப் பிரதேசம்

52. நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

A.1972
B.1974👫
C.1980
D.1986

53. மனிதவள மேம்பாடு குறியீடு(HDI) கணக்கில் பின்வரும் எந்த பரிமாணத்தை எடுத்துக்கொள்ளவில்லை?

 A.பாலினம்🕺
 B.உடல்நலம்
 C.கல்வி
 D.வருமானம்

54. எந்த நாட்டில் முதன் முதலில் குடியரசு எனும் சொல் வடிவமைக்கப்பட்டது?

 A.பிரான்ஸ்
 B.அமெரிக்க ஐக்கிய நாடுகள்
 C.ரோம்😆
 D.கிரேக்கம்

55. மதகுருமார்களின் ஆட்சி அரசாங்கத்தை பின்பற்றும் நாடு எது?

 A.முன்னாள் சோவியத் யூனியன்
 B.வடகொரியா
 C.வாட்டிகன்😆
 D.சவுதி அரேபியா

56. ஒரு உண்மையான மக்களாட்சியை 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது. இது கீழ்நிலையிலுள்ள ஒவ்வொரு கிராம மக்களால் செயல்படுத்தப்படுவதாகவும் என்று கூறியவர்?

 A.ஆபிரகாம் லிங்கன்
 B.மகாத்மா காந்தி😆
 C.ஜவஹர்லால் நேரு
 D.பி ஆர் அம்பேத்கார்

57. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்ற நூல் உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக பண்டைய காலத்தில் எந்த அமைப்பு இருந்தது என்று குறிப்பிடுகிறது?

 A.கிராமசபை
 B.கிராம குழுக்கள்🙂
 C.கிராமம்
 D.கிராம பஞ்சாயத்து

58. இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள்?

A.ஜார்ஜ் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர்
B. ஹெர்பர்ட் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர்
C.எட்வர்ட் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர்
D.எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர்😍

59.  மக்களாட்சியின் தலையாயக் கொள்கைகளுடன் பொருந்தி செயல்படவேண்டியதில் பொருந்தாததை தேர்ந்தெடு.

 A.மக்களின் எண்ணங்கள்
 B.சிந்தனைகள்
 C.பேச்சாளர் தன்மை😍
 D.நடத்தைகள்

60. எந்த மொழியிலிருந்து டெமாகிரஸி என்ற வார்த்தை பெறப்பட்டது

 A.கிரேக்கம்😋
 B.லத்தின்
 C.பாரசீகம்
 D.அரபு

61.மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்?

 A.நாடாளுமன்றம்
 B.மக்கள்
 C.அமைச்சரவை😀
 D.குடியரசுத் தலைவர்

62. I.எரிமலையில் இருந்து வெளிப்படும் பொருட்கள் மண்ணை வளமற்ற தாக்குகிறது
 II.அதனால் வேளாண் தொழில் தடைபடுகிறது
 III.எரிமலைகளில் இருந்து வெளிவரும் பொருட்கள் கட்டிட தொழிலுக்கு பயன்படுகிறது
 IV.உறங்கும் எரிமலையும் செயல்படும் எரிமலையும் உலகின் சிறந்த சுற்றுலா தளங்களாக உள்ளன.
 சரியானதை தேர்ந்தெடு.

A.I II IV
B.III IV😀
C.I III IV
D.II III IV

63. புவியின் உருகிய இரும்பை கொண்ட அடுக்கை----------- என்று அழைக்கின்றோம்?

 A.கருவம்
 B.வெளிக்கரு😍
 C.கவசம்
 D.மேலோடு

 64.பாறைக் குழம்பு--------- காணப்படுகிறது?

 A.புவி மேலோடு
 B.கவசம்😍
 C.கருவம்
 D.மேற்கண்ட எதுவுமில்லை

 65.டையஸ்ட்ரோபிசம் ---------உடன் தொடர்புடையது?

 A.எரிமலைகள்
 B.புவி அதிர்ச்சி
 C.புவித்தட்டு நகர்வு
 D.மடிப்புகள் மற்றும் பிளவுகள்😍

 66.புவி அதிர்வு உருவாகும் புள்ளி என்று அழைக்கப்படுகிறது?

 A.மேல் மையம்
 B.கீழ் மையம்😍
 C.புவி அதிர்வு அலைகள்
 D.புவி அதிர்வின் தீவிரம்

67. வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு?

A.0.01 mm
B.0.1 mm👾
C.0.1 cm
D.0.001 mm

68. இவற்றில் செயல்படும் எரிமலை எது?

அ)மௌனகியா
ஆ) மாயன்😹
இ)எட்ஜிசா
ஈ)ஹீட்

68. S அலையின் சராசரி வேகம் ?(வினாடிக்கு) (km)

அ)1 to 8👶
ஆ)5.6 to 10.6
இ)1 to 5
ஈ)1 to 6

70) பாரிக்கியூட்டின் எரிமலை எங்கு உள்ளது?

அ) அமெரிக்கா
ஆ) ஜப்பான்
இ) மெக்சிகோ👩‍🏫
ஈ) தான்சானியா

71. கிரிடேசியஸ் நிலத்தோற்றம் எத்தனை வருடங்களுக்கு முன் காணப்பட்டது?

அ)250 மில்லியன் ஆண்டுகள்
ஆ)140 மில்லியன் ஆண்டுகள்
இ) 75 மில்லியன் ஆண்டுகள்
ஈ) 65 மில்லியன் ஆண்டுகள்🦍

72.இதுவரை ரிக்டர் அளவில் பதிவான மிக உயர்ந்த புவிஅதிர்ச்சி
எந்த ஆண்டு நடந்தது?

அ)1972
ஆ)1965
இ)1960👱
ஈ) 1952

73) சரியானதை கண்டறிக
1. P அலை அனைத்து பொருட்கள் வழியாகவும்
பயணிக்கும்
2. S அலை திட, திரவம் வழியே பயணிக்கும்

அ) 1 மட்டும் சரி👩‍🏫
ஆ)2மட்டும் சரி
இ) இரண்டுமே சரி
ஈ) இரண்டுமே தவறு

74) பளிங்கு கல் என்பது

அ)தாய்பாறை
ஆ) படிவுப் பாறை
இ) உருமாறிய பாறை👮
ஈ)தீப்பாறை

75) புவியின் மேற்பரப்பின் மொத்த பரப்பளவு (ச.km)?

அ)650 மில்லியன்
ஆ)510 மில்லியன்👮
இ)472 மில்லியன்
ஈ)643 மில்லியன்

76) அரசாங்க முறையில் வேறுபட்டவை எது?

அ) கத்தார்🐥
ஆ) முன்னால் சோவியத் யூனியன்
இ) வெனிசுவேலா
ஈ) சீனா

77) குடியரசு என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

அ) கிரேக்கம்
ஆ) லத்தீன்🐹
இ) எகிப்து
ஈ) ஜெர்மன்

78) இந்திய நாடாளுமன்றம் கட்ட தொடங்கிய வருடம்

அ)1913
ஆ)1921🐦
இ)1927
ஈ)1929

79) சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் மொத்தம் எத்தனை இடங்கள் போட்டியிட்டன?

அ)489🐥
ஆ)378
இ)364
ஈ)432

80) சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் முடிந்த நாள்?

அ) 1952 அக்டோபர் 25
ஆ)1952 மார்ச் 23
இ) 1952 பிப்ரவரி 21🐧
ஈ) 1952 ஜனவரி 22

81.
அமேசான்:
1)பல்லுயிர்த்தன்மையுடைய நிலஅமைப்பை பெற்ற இடமாகும்.
2)அதிக அளவுஊடுருவும்
வேர்களைக்கொண்ட தாவரங்கள் அக்குறிப்பிட்ட இடத்தில் அதிக அளவு நீராவிப்போக்கினை
அதிகரிப்பதோடு, அப்போது நீராவியாகும் நீரினை அங்குள்ள அதிக உயரமுடைய மரங்கள்
அந்நீரினை இடையில் மறித்து விடுகின்றன.
3)அதிகரிக்கப்படும் நீராவியாதலை
இளகச்செய்து அக்காடுகளில் நேர்மறை விளைவுகளை உண்டாக்குகின்றன.
காரணம்:

A) அதிக அளவு மழை🐤
B)நீராவிப் போக்கு அதிகரிப்பு
C)வெப்பச்சலனம் குறைவு
D)ஈரப்பதம் அதிகரிப்பு

82.ஊசியிகைத் தாவரங்கள்
பிரமிடு வடிவங்களில்
காணப்படுகி்றது இவை
1)ஸ்புருஸ்
2)பைனஸ்
3)ஃபிர்
4)ஸ்பேர்

A)அனைத்தும்
B)2 3 4
C)1 2 3🐤
D)1 3 4

83.நீராவிபோக்கு ஒரு அவசியமான கேடு ஏனெனில்
1)தாவரத்தின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
2) இலை, தண்டு, வேர்களில் இழுவிசையை ஏற்படுத்தி அதிக நீரினை உறிஞ்ச உதவுகிறது.
3) தொடர்ந்து கனிமங்களை அளிக்க அவசியமானதில் வேர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
சரியான கூற்று:

A)1 மற்றும் 2🐤
B)2 மற்றும் 3
C)1 மற்றும் 3
D)ஏதுமில்லை

84.உயிரினங்களுக்கு இருபெயரிடும் முறை அறிமுகப்படுத்திய கரோலஸ் லின்னேயஸ் எந்த மொழியை பயன்படுத்தினார்?

A )கிரேக்கம்
B)லத்தீன்🐥
C)ஆங்கிலம்
D)ஐரோப்பியம்

85.பொருத்துக.
1)ஆரச்சமசீர்-அ)உருளைப்புழுக்கள்
2)உடற்குழியற்றவை-ஆ)கணுக்காலிகள்
3)போலிஉடற்குழியுடையவை-இ)நிடேரியா
4)உண்மையான உடற்குழியுடையவை-ஈ)தட்டைப்புழுக்கள்

A)ஈ ஆ இ அ
B )இ ஆ ஈ அ
C)ஆ ஈ அ இ
D)இ ஈ அ ஆ🐡

86.முதுகு நாணற்றவை பற்றிய கூற்றுகளில் பொருத்தமானதை தேர்ந்தெடு.
1)ஒரு செல் உயிரிகள்
2)குறுயிழைகள் அல்லது
நீளியிழையினால் இடப்
பெயர்ச்சி மேற்கொள்கி
ன்ற யூகேரியோட்டுகள் ஆகும்.
3)அமீபிக் சீதபேதி எனும் நோயை தோற்றுவிக்கி
றது.

A)புரோட்டாசோவா🐣
B)குழியுடலிகள்
C)துளையுடலிகள்
D)நுண்ணுடலிகள்

87.  கீழ்க்கண்ட எது ஹீமோகுளோபினை மூலக்கூறு அமைப்பில் ஒத்திருக்கும் ஆனால் மைய மூலக்கூறு மட்டும் வேறுபட்டிருக்கும்?

A. சுவாசம்
B. ஒளி
C. ஒளிச்சேர்க்கை
D. பச்சையம்🐋

88. நிலவு மலர்(Moon Flower) என்று அழைக்கப்படுவது எது?

A.டாராக்சம் அஃபிசினேல்
B.ஐபோமியா ஆல்பா🐠
C.சாமானியா சாமான்
D.புருனிச்சியா ஓவேட்டா

89.கூற்றுகளை கவனி
1. இரு தட்டு தராசு மூலம் குறைந்த பட்சமாக 5 கிலோகிராம் வரை நிறையை துல்லியமாக அளவிடலாம்.
2. இயற்பியல் தராசு இதை பயன்படுத்தி மில்லிகிராம் அளவில் துல்லியமாக அளவிட முடியும்(5மில்லி கிராம்)
3. சுருள் வில் தராசு பொருளின் நிறையை கணக்கிட பயன்படுகிறது. இது ஹுக்ஸ் விதிப்படி இயங்குகிறது.

A. அனைத்தும் தவறு
B. 2 3 தவறு 🦋
C. 1 2 தவறு
D. 3மட்டும் தவறு


90. ஒரு மில்லினியம் என்பது( S)?

A. 3.26ஒளி ஆண்டு
B. 3.08×10¹⁴
C. 3.08×10¹⁶
D. 3.16×10⁹🦀

91. வைரத்தின் கொதிநிலை என்ன?

A. 3550
B.4832🐠
C.1540
D.2900

92.கூற்று: கலவை என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட தனிமம் அல்லது சேர்மம் அல்லது இரண்டும் கலந்த பொருட்களால் ஆனது.
காரணம்: கலவையானது குறிப்பிட்ட கொதிநிலை மற்றும் உருகு நிலையைப் பெற்று இருப்பதில்லை.

A.கூற்று காரணம் சரி.காரணம் கூற்றை விளக்குகிக்றது🐬
B.கூற்று சரி காரணம் தவறு
C.கூற்று தவறு காரணம் சரி
D.கூற்று காரணம் சரி ஆனால் கூற்றை காரணம்
விளக்க வில்லை.

93.கூற்றுகளை கவனி
1. பெட்ரோலிய பொருட்கள் பின்னக் காய்ச்சி வடித்தல் முறையில் சுத்திகரிக்கப்படுகிறது
2. எளிய காய்ச்சி வடித்தல் மூலம் கடல் நீரை காய்ச்சி வடிக்கலாம்.
3. ஒன்றா கலவா இரு திரவங்களின் கலவை பிரிபுனல்  மூலம் பிரிக்கப்படுகிறது.

A.அனைத்தும் சரி 🦐
B.1 2 சரி
C.1மட்டும் சரி
D.அனைத்தும் தவறு.

94. தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் பல மக்கள் குழுக்கள் தொடர்ச்சியாக வசித்து வந்ததை காட்டும் தொல்லியல் சான்று என்று காலகட்டத்தைச் சார்ந்தது?

 A.பழங்கற்காலம்
 B.இடைக்கற்காலம்🐠
 C.புதிய கற்காலம்
 D.பண்டைய வரலாற்று மற்றும் சங்க காலம்

95. தமிழ்நாட்டின் எந்த காலத்தைச் சேர்ந்த அகழ்வாய்வுப் பகுதிகளில் கிடைத்துள்ள கார்னிலியன் பாசிமணிகள், சங்கு வளையல்கள், செம்பு முகம் பார்க்கும் கண்ணாடிகள்  ஆகியவை முதலில் சிந்துவெளி மக்கள் அறிமுகம் செய்யப்பட்டவை என கருதப்படுகிறது?

 A.இடைக்கற்காலம்
 B.பெருங்கற்காலம்🦈
 C.தொல்பழங்காலம்
 D.புதிய கற்காலம்

96. சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்த ஆண்டு?

A.1700
B.1900🐳
C.2900
D.2600

97. ஹரப்பன் பகுதிகளிலிருந்து சுமார் எத்தனை எழுத்துடைய சிறு எழுத்துத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

A.5000🦋
B.5500
C.6500
D.7000

98.
1)அலகீட்டு மின்னணு நுண்ணொக்கி மூலம் ஃஸ்ர்ப்பாரான் அணுக்கள் மேற்பரப்பில் பார்க்கப்படுகிறது.
2)பொட்டாசியம்
பெர்மாங்கனேட் துகள்கள் நீரில் கரையும் போது , இளஞ்சிவப்பு  நிறமாக மாறுகிறது.
3)ஒரு நெல் மணியளவு
எளிய உப்பில் 1.2 ×10^18
துகள்கள் உள்ளன
சரியானவை:

A)1 2 3
B)1 2
C)2 3🐝
D)1 3

99.திண்மங்கள் ஏன் நிலையான கனஅளவைப் பெற்றுள்ளன?
1)துகள்களுக்கிடையேயுள்ள இடைவெளியானது குறைவாக இருப்பதால்
திண்மங்களை அழுத்த முடியாது.
2)துகள்களுக்கிடையே உள்ள இடைவெளி
குறைவு
3)வலிமை குறைந்த கவர்ச்சி விசையால்
இணைக்கப்பட்டுள்ளது.
4)அதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது மற்றும் தன்னிச்சையாகஎல்லா திசைகளிலும் நகர முடியும்.
தவறானவை:

A)2 3
B)1 3
C)3 4🦑
D)2 4

100. நீங்கள் ஒரு பனிக்குழைவை(Ice cream) சுவைக்கும் போது உங்கள் உடலில் நிகழ்வது என்ன?

 A.பனிக்குழைவைக்கு வெப்பம் பரிமாறப்படுவதால் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுகிறது
 B.பனிக்குழைவைக்கு வெப்பம் பரிமாறப்படுவதால் திட நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுகிறது
 C.பனிக்குழைவைக்கு வெப்பம் பரிமாறப்படுவதால் வாயு நிலையை அடைகிறது.
 D.பனிக்குழைவைக்கு வெப்பம் பரிமாறப்படுவதால் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுகிறது🐠
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY